search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223974"

    • ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.
    • ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.

    இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வள்ளம் மற்றும் நாட்டு படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்களின் விலை"கிடுகிடு" வென கடுமையாக உயர்ந்து உள்ளது.

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆரோக்கியபுரம், கோவளம், கன்னியாகுமரி, வாவத்துறை, கீழ மணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நாட்டுப்படகு மற்றும் வள்ளங்களில் பிடித்து வரப்பட்ட மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

    கன்னியாகுமரி வாவத்துறை மீன் இறங்கு தளத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்கள் வாங்குவதற்காக குவிந்து இருந்தனர். மீன் வரத்து குறைவு காரணமாக இன்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    ரூ. 700 ஆக இருந்த ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1000-க்கும், ரூ.250 விலைபோன பாரை மீன் கிலோ ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்ற விள மீன் கிலோ ரூ.400-க்கும், ரூ.250க்கு விற்ற ஊலா மீன் கிலோ ரூ.350-க்கும், ரூ.250 ஆக இருந்த சங்கரா மீன் கிலோ ரூ.350-க்கும் விற்பனையானது.

    விசைப்படகுகள் மீன்பிடிதடை காலம் என்பதால் இன்னும் ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    • மீன்பிடி வலைகளையும் மீனவர்கள் தயார்படுத்துகிறார்கள்
    • விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் கால மாகும். இந்த காலங் களில் விசைப்படகு கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வரு கிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போ தும் பரபரப்பாக காணப் படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த மீன்பிடி தடை காலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த மீன்பிடி தடை காலம் முடிவடைய இன்னும் 1 ½ மாதமே உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். மீனவர்கள் தங்களது பழுதடைந்த விசைப்படகுகளை சின்ன முட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் கரையேற்றி படகுகளின் உடைந்த பகு தியை சீரமைப்பது, பச்சை நிற வர்ணம் தீட்டுவது, பழுதான எந்திரங்களை சீரமைப்பது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த தடைக்காலங்களில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்கள் இந்த தடைகாலம் என்று முடியுமோ என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    • வலையங்குளம் கண்மாயில் மீன்பிடி குத்தகையை ரத்து செய்ய வேண்டும்.
    • கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வலையங் குளத்தைச் சேர்ந்த தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு பேரவை பொது செயலாளர் சிங்கராசு, தமிழ் மாநில சிவசேனா கட்சி செயல் தலைவர் தூதை செல்வம் ஆகியோர் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாயை, அதே பகுதி யைச் சேர்ந்த 4 பேர் 2 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் இதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ4.10லட்சத்தை லஞ்சம் வாங்கிக் கொண்டு, மீன் குத்தகை ஏலம் விட்டுள்ள னர். கண்மாயில் தண்ணீர் நிறைந்துள்ளதால், மீன் களை பிடிக்க முடியவில்லை.

    அவர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி வருகின்றனர். ஆடு, மாடுகளை கூட தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. மேற்கண்ட 4 பேரும் அங்குள்ள கடைகளில் கட்டாய வசூல் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு பெரிய கண்மாய் குத்தகை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமேசுவரத்தில் 300 விசைப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்றனர்.
    • வருகிற 15-ந்தேதி தடைக்காலம் தொடங்குகிறது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்ப டகுகள் உள்ளன. கிறிஸ்த வர்களின் தவக்கா லத்தை யொட்டி ஏராளமான மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    மேலும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசு வரம் மீனவர்களுக்கு அடிக்கடி நெருக்கடி கொடுத்து வருவதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    தினமும் குறைவான அளவிலே மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். ராமேசு வரத்தில் இருந்து 300 விசைப்படகுகள் மட்டும் இன்று மீன் பிடிக்க சென்றன.

    இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதி க்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் வருகிற 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கு கிறது. ஏப்ரல் 15-ந்தேதி ஜூன் 15-ந் ேததி வரை மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போது ஆழ்கடல் சென்று மீன் பி டிக்க விசைப் படகு மீனவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    ஜூன் 16-ந்தேதிக்கு பிறகே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். அதுவரை நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலில் மீன்பிடித்து வருவார்கள். அந்த நேரத்திலும் மீனவர்க ளுக்கு வருவாய் இருக்காது.

    இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் தேவதாஸ் கூறும்போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு அதிக தொல்லை கொடுத்து வருவதாலும், மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதாலும் கடலுக்கு சென்று மீன்பிடிப்பது குறைந்துவிட்டது என்றார்.

    • தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
    • 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. துறைமுக வடிவமைப்பு தவறாக வடிவமைக்கப்பட்ட காரணத்தால் துறை முகத்தின் நுழைவு பகுதி யில் மணல்மேடு ஏற்பட்டு அதனால் அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் கட்டு மரங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.

    மேலும் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள மீன்பிடி கலன்க ளும் முழுமையாக சேத மடைந்துள்ளன. மேலும் துறைமுகத்தின் தவறான வடிவமைப்பின் காரணமாக அருகாமையிலுள்ள இறை யுமன்துறை மீனவ கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே துறைமுக பணியோடு இணைத்து இறையுமன் துறை மீனவ கிராமத்திலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் நிறை வேற்றப்படவில்லை.

    இந்த சூழலில் பல கட்ட போராட்டங்கள் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தியதின் விளைவாக கடந்த மாதம் தமிழக அரசால் ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது துறைமுக கட்டு மான பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் துறைமுக கட்டுமான பணிகளுக்கு தேவையான பாறாங்கற்கள் குமரி மாவட்டத்தில் கிடைக்கவில்லை எனவும் குமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் அரசால் மூடப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் கடந்த மாதம் தமிழக அரசால் குமரி மாவட்டத்தில் இரண்டு கல்குவாரிகளுக்கு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த இரண்டு கல்குவாரிகளிலிருந்து இதுவரை ஒரு லாரி கல்வரை தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணிகளுக்கு வரவில்லை.

    ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள சில குவாரிகளில் இருந்தும் வெளிமாவட்ட குவாரிகளிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான வாக னங்கள் மூலம் கேரள மாநிலம் விழிஞ்ஞம் தனியார் துறைமுகத்திற்கு பாறாங்கற்கள், எம் சாண்ட், பாறை பொடி போன்ற கட்டுமான பொருட்கள் எவ்வித தடையும் இன்றி சென்று கொண்டி ருக்கின்றது. குமரி மாவட் டத்தின் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் கிடைக்கப்பெறாத சூழலில் அண்டை மாநிலத்திற்கு அதுவும் தனியார் துறை முகத்திற்கு குமரி மாவட் டத்தில் இருந்து கட்டுமான பொருட்கள் செல்வதை தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு குமரி மாவட்டத்தில் தேங்காப் பட்டணம் மீன்பிடி துறை முகத்திற்கென்றே அனுமதி பெறப்பட்ட குமரி மாவட்டத்தின் குவாரிகளிலுள்ள கட்டுமான பொருட்களையும் துறை முக கட்டுமானத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    மேலும் உடனடியாக தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணி களை தொடங்கவில்லை எனில் வரும் 17-ந்தேதியில் இருந்து குமரி மாவட்டத்தின் சாலைகள் வழியாக விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் இணைந்து சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • அவரவர் கிராமங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பிற இடங்களில் இருந்தும் பாதுகாப்புடன் மீன்பிடிக்க செல்லுமாறு வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தொடர்ந்து கடல் அலை சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் துறைமுக முகத்துவாரத்தினை கடந்து செல்லும் படகுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 3 மாதங்களில் மீன்பிடித்துறைமுக முகத்து வாரத்தில் கடல் அலை சீற்றத்தால் படகுகளுக்கும் மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஆய்வு செய்ததில் எந்திரம் பொருத்திய வள்ளங்களும், எத்திரம் பொருத்தாத கட்டுமரங்களும் பாதிப்பு அடைந்து வருவது தெரி கிறது. இதனை கருத்தில் கொண்டு தற்பொ ழுது மீன்பிடிப்பு மற் றும் மீன்விற்பனை தொடர் பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூல மாக அறிவிப்பு வழங்கப்பட் டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தேங்காப்பட்டணம் முகத்துவாரத்தில் கடல் அலை சீற்றத்தின் பாதிப்பு உள்ளதாலும், பராமரிப்பு பணிகள் முடியும் வரை துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை.

    எனவே எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் அவரவர் கிரா மங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பிற இடங் களில் இருந்தும் பாது காப்புடன் மீன்பிடிக்க செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

    ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்லும் விசைப்படகுகள், வானிலை எச்சரிக்கை காலங்கள் தவிர இதர நாட்களில் உரிய மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடி தொழில் மேற் கொள்ளலாம். மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் படகு களின் பாதுகாப்பை கருத் தில் கொண்டு அறிவிக் கப்பட்டுள்ள வழிமுறைகளை அனைத்து படகு உரிமையாளர்களும், துறைமுக பயனீட்டாளர்களும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.253 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட தேங் காப்பட்டணம் துறைமுக கட்டுமானப் பணிகள்
    • இரையுமன் துறை மீனவர் கிராமத்தை கடலரிப்பிலிருந்து நிரந்தரமாக பாதுகாப்பதற்காக தொடர்தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.30 கோடி மதிப்பீட்டில் திட்டம்

    நாகர்கோவில் :

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரை விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோருடன் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, திருவனந்த புரம் மறை மாவட்டம் தூத்தூர் மண்டல முதன்மை தந்தை பெபின்சன், கோட்டாறு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமம் இயக்குனர் டன்ஸ்டன், தமிழ்நாடு மீனவர்காங்கிரஸ்தலைவர் ஜார்ஜ் ராபின்சன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், பாதிரியார்கள் கிளீட்டஸ், அம்புறோஸ் ஆகியோர் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    அப்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.253 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட தேங் காப்பட்டணம் துறைமுக கட்டுமானப் பணிகள் உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு தொடங்கப்படும் என உறுதி அளித்தார். அதேபோல், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தாமிரபரணி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் மணல் திட்டுக்கள் உருவா கிக்கொண்டே இருக்கின் றது. அடிக்கடி மணல் திட்டுக்களை அகற்ற ஏது வாக மணல் அள்ளும் எந்திரம் ஒன்று நிரந்தரமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருக்கும்படி ஆவன செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு முதல்-அமைச்சர் மணல் அள்ளும் எந்திரம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நிரந்தரமாக நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    மேலும், இரையுமன் துறை மீனவர் கிராமத்தை கடலரிப்பிலிருந்து நிரந்தரமாக பாதுகாப்பதற்காக தொடர்தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.30 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டுக்கு அனுப்பப்பட் டுள்ளது. அதனை துரிதப்படுத்தி பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என முதல்-அமைச்சர் உறுதி அளித்தார். மேலும் ஐ.ஆர். இ.எல். மீனவ கிராமங்களில் கனிம மணல் எடுப்பதற்கு வழங் கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

    • 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மீன்பிடித் திருவிழா
    • ஊரடங்கு காலகட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் ஊரணி குளத்தில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மீன்பிடித் திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்கள் திரண்டு வந்து பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்வர்.

    கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காலகட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மீன்பிடி திருவிழா தற்போது மீண்டும் நடைபெற்றது.

    இதில் பொதுமக்கள் திரண்டு வந்து ஊரணி குளத்தில் பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். எனினும் குறைவான எண்ணிக்கையில் மீன்கள் பிடிபட்டதால் ஊரணியை ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×