என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பருத்தி"
- பருத்தி குவிண்டால் ரூ.6,296 முதல் ரூ.7,296 வரையும், கொட்டு பருத்தி ரூ.4,219 முதல் 5,426 வரையும் ஏலம் போனது.
- இந்த ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் கச்சேரி மேட்டில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 800 மூட்டை பருத்தியை விற்ப னைக்கு கொண்டு வந்தனர்.
பருத்தி குவிண்டால் ரூ.6,296 முதல் ரூ.7,296 வரையும், கொட்டு பருத்தி ரூ.4,219 முதல் 5,426 வரையும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
- புதன்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.
- ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.14.18லட்சம்.இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
அவினாசி:
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரத்தில் புதன்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 5525 மூட்டைகள் பருத்தி வந்திருந்தது. இது கடந்த வாரத்தை காட்டிலும் 450 மூட்டைகள் குறைவு. இதில் ஆர்சிஎச்., ரக பருத்தி குவிண்டால் ரூ.6500 முதல் ரூ 7552 வரையிலும், மட்டரகப்பருத்தி குவிண்டால் ரூ.2000 முதல் ரூ.3500 வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.14.18லட்சம்.இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 99-க்கும் விலை போனது.
- ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.1.76 கோடி ஆகும்.
கும்பகோணம்:
கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விற்பனைக்கூட கண்காணி ப்பாளர் பிரியாமாலினி தலைமையில் நடந்த ஏலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பருத்தி விவசாயிகள் 2 ஆயிரத்து 400 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர்.
கும்பகோணம், பண்ரூட்டி, விழுப்புரம், சேலம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 689-க்கும், குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 99-க்கும் விலை போனது. இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.1.76 கோடி என ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் தெரிவித்தனர்.
- ஆா்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ. 7,539 வரை விற்பனையானது.
- மொத்தம் ரூ.22 லட்சத்து 29ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.22.29 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு, 970 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ. 7,539 வரையிலும், மட்டரக (கொட்டுரகம்) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ. 3,500 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்து 29ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.
- சராசரியாக 3 ஆயிரம் குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.
- சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 309-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்ப னைக்கூட கண்காணிப் பாளர் தாட்சாயினி தலைமையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1958 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 3000 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
பருத்தியின் மதிப்பு சராசரியாக 2 கோடி ரூபாய் ஆகும்.
இதில்தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7551/- குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7199/- சராசரி மதிப்பு குவிண்டா லுக்கு ரூ.7309/- என்ற விலைக்கு கொ ள்முதல் செய்யப்பட்டது.
- வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்கின்றனா்.
- 2,122 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
மூலனூர்:
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.
இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டுவருகின்றனா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்கின்றனா்.
இந்நிலையில் இந்தவாரம் நடைபெற்ற ஏலத்தில் 2,122 குவிண்டால் பருத்தி விற்னைக்கு கொண்டுவரப்பட்டது. குவிண்டால் ரூ.6,450 முதல் ரூ.7,828 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.1.50 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
இத்தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.
- பருத்தி 2022-23-ம் ஆண்டில் 1.62 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.56 லட்சம் பேல்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
- நல்ல விலையை எதிர்பார்த்து பருத்தி விவசாயிகள் வைத்திருந்த கையிருப்பு சமீபத்திய சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் பருத்திக்கான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த இழைப்பயிர் நுகர்வில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பங்களிப்பை வழங்குவதன் மூலம் இந்தியாவில் ஜவுளி தொழிலை பருத்தி நிலை நிறுத்துகிறது.
இந்திய ஜவுளி அமைச்சகத்தின்படி 2022-23-ம் ஆண்டில் பருத்தி 130.61 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 343.47 லட்சம் பேல்கன் (1 பேல்-170 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில், குறுராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பருத்தியை அதிகளவு உற்பத்தி செய்கின்றது.
பருத்தி 2022-23-ம் ஆண்டில் 1.62 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.56 லட்சம் பேல்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரம்பலூர், சேலம், தர்மபுரி, அரியலூர், திருச்சி, விருதுநகர், மதுரை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பருத்தி அதிகளவு பயிரிடப்படுகின்றது.
மாநிலத்தில் பருத்தி இறவை மற்றும் மானாவாரி விவசாய முறையில் பயிரிடப்படுகிறது. தென் மாவட்டங்களில் மானாவாரி விதைப்பு அக்டோபர் மாதம் வரை நீடிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கிடைத்த விலையின் அடிப்படையில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் இந்தியா முழுவதும் அதிக அளவில் பயிரிட்டனர்.
அதிக மகசூல் தரக்கூடிய குறுகிய கால ரகங்களை தேர்வு செய்ததன் மூலம் அதிகபட்ச லாபம் ஈட்ட பருத்தி விவசாயிகள் முயன்றதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாட்டின் மேற்கு மண்டல மாநிலங்களில் பருத்தி சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. நல்ல விலையை எதிர்பார்த்து பருத்தி விவசாயிகள் வைத்திருந்த கையிருப்பு சமீபத்திய சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் உபரி வரத்து காரணமாக பருத்தி விலை மேலும் சரிந்தது. கடந்த ஆண்டில் (2022) உணரப்பட்ட விலை உயர்வை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையாக 10 லட்சம் பேல்கள் பருத்தி இறக்குமதி செய்யப்பட்டது போன்றவற்றால், நடப்பு பருவத்தில் பருத்தியின் விலை உயர வாய்ப்பில்லை. எனவே, கோடை கால பாசன பருத்தியை விவசாயிகள் உடனடியாக விற்கலாம்.
இந்த சூழலில், விவசாயிகள் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம், கடந்த 26 ஆண்டுகளாக சேலம் பகுதியில் நிலவிய விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வுகளின் அடிப்படையில், பருத்தியின் சராசரி பண்ணை விலை அறுவடையின் போது குவிண்டாலுக்கு ரூ.6,500 முதல் ரூ.6,800 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் மானாவரி பருத்தியின் விதைப்பு முடிவுகளை எடுத்து கொள்ளலாம் என வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
- 726 விவசாயிகள் தங்களுடைய 8,051 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.
- விலை குவிண்டால் ரூ. 6,650 முதல் ரூ. 7,789 வரை விற்பனையானது.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ. 450 உயர்ந்தது.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வெள்ளிக்கிழமை காலை வரை ஏலம் நீடித்தது.
கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 726 விவசாயிகள் தங்களுடைய 8,051 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். மொத்த வரத்து 2,491 குவிண்டால்.
திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 25 வணிகர்கள் வந்திருந்தனர். விலை குவிண்டால் ரூ. 6,650 முதல் ரூ. 7,789 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,200. கடந்த வார சராசரி விலை ரூ. 6,750.விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தனர்.
- ஆர்சிஎச்., ரக பருத்தி குவிண்டால் ரூ.6000 முதல் ரூ. 7206 வரையிலும் ஏலம் போனது.
- மட்டரகப் பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
அவினாசி:
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரத்தில் புதன்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 747 மூட்டை பருத்தி வந்திருந்தது.
இதில் ஆர்சிஎச்., ரக பருத்தி குவிண்டால் ரூ.6000 முதல் ரூ. 7206 வரையிலும் ஏலம் போனது. மட்டரகப் பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.16லட்சம் ஆகும். இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- கூட்டுறவு சங்கம் மூலம் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
- விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தை விலையை விட கூடுதலாக விலை கிடைக்கிறது.
சீர்காழி:
சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள வின்சிட்டி நகரில் , சீர்காழி கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் வாரம்தோறும் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் உத்தரவுப்படி பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
இந்த பணிகளை பார்வையிட வந்த கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் நடராஜன் மற்றும் மேலாளர் சதீஷ் ஆகியோர் கூறுகையில்:-
கூட்டுறவு சங்கம் மூலம் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
இந்த ஏல நடவடிக்கையில் வியாபாரிகள் மற்றும் ஆலை அதிபர்கள் பலர் கலந்து கொள்வதால், விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தை விலையினை விட கூடுதலான விலை கிடைக்கிறது.
மேலும் பருத்திக்கு உரிய விற்பனை தொகை உடனுக்குடன் விவசாயிகளின் வங்கி கணக்கில் சங்கம் மூலம் வரவு வைக்கப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான சீர்காழி வட்ட பருத்தி விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர்.
இவ்வாறு சீர்காழி கூட்டுறவு விற்பனை சங்கம் தற்போது வரை ரூ1 கோடியே 31 லட்சம் அளவிற்கு பருத்தி ஏலப்பணியினை மேற்கொண்டு, பருத்தி விவசாயிகளின் பொரு ளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது என்றனர்.
- சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர்.
- இந்த ஏலத்தில் மொத்தம் 1029 பருத்தி மூட்டைகள் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் ஏலம் நடந்து வருவது வழக் கம். நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு முத்துக்காளிப் பட்டி, புதுச்சத்திரம், மசக் காளிப்பட்டி, குட்டலாடம் பட்டி, சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, கவுண்டம் பாளையம், அனைப்பாளை யம், வடுகம், குள்ளப்ப நாயக்கனூர், சிங்களாந்த புரம், தேங்கல்பாளையம், கரடியானூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.அதேபோல் ராசிபுரம், ஆத்தூர்,ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர். ஏலத்திற்கு ஆர்.சி. எச் ரக பருத்தி 960 மூட் டைகளும், சுரபி ரக பருத்தி 67 மூட்டை களும், கொட்டு ரக பருத்தி 2 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் ஆர்.சி.எச். பருத்தி 1 குவிண்டால் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்து 689 முதல் அதிகப்பட்சமாக 1 குவிண் டால் ரூ. 6 ஆயிரத்து 789-க்கும், சுரபி ரக பருத்தி 1 குவிண்டால் குறைந்த பட்சம் ரூ. 6 ஆயிரத்து 500-க்கும் அதிகப்பட்சமாக 1 குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 100-க்கும், கொட்டு ரக பருத்தி1குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயி ரத்து 200 முதல் அதிக பட்ச மாக 1 குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 800-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 1029 பருத்தி மூட்டைகள் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
- சுமார் 260 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
- தரமற்ற பருத்தி விதைகள் வழங்கியதால் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் சுமார் 260 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
பருத்தி விதைகளை பாபநாசத்தை சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களில் வாங்கி சாகுபடி செய்திருந்தனர்.
இந்நிலையில் தரமற்ற பருத்தி விதைகள் வழங்கியதால் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து பருத்தி சாகுபடி செய்த வயல்களுக்கு சென்று பருத்தி விதை வழங்கிய தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் வேப்ப பட்டை பருத்தி ஆராய்ச்சி உதவி பேராசிரியர் ஆனந்தராஜ், விதை ஆய்வு உதவி இயக்குனர் விநாயகமூர்த்தி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பருத்திச் செடிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பருத்தி விதைகள் தரம் குறித்தும் அதிகாரிடம் விளக்கம் கேட்டனர்.
ஆய்வின் போது பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், கோபுரராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், முன்னோடி விவசாயி நத்தம் சுப்பிரமணியன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்