என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆயுதங்கள்"
- ஆயுதங்களுடன் பதுங்கியவர் கைது செய்யப்பட்டனர்.
- அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
புதூர் போலீசார் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள புதர் அருகே வாலிபர் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் மேலமடை, ஆசாரி தெருவை சேர்ந்த கணேசன் மகன் பாலகுமார் என்ற தவளை பாலா (23) என்பது தெரிய வந்தது. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் உள்ளது.
சம்பந்தப்பட்ட நபரை கொலை செய்வதற்காக, தவளை பாலா, அரிவாளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவரை புதூர் போலீசார் கைது செய்தனர்.
- மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர்.
மதுரை
மதுரை கீரைத்துறை சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் அனுப்பானடி பொண்ணுதோப்பு அருகில் சென்றபோது சந்தேகத்துக் கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, அவர்களிடம் அரிவாள் மற்றும் ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் அனுப்பானடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அண்ணன்-தம்பியான போஸ் மகன்கள் பிரவீன் குமார் என்ற அய்யர் (வயது25), செந்தில்குமார் (19) என்று தெரியவந்தது. அவர்கள் தாக்குதலுக்கு பதுங்கியிருந்ததால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
திருநகர் சப்-இன்ஸ்பெக்டர் குமாரி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகில் சென்றபோது அவர்களை கண்டதும் 4 மர்ம நபர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர்களிடம் சோதனை செய்தபோது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் திருநகர் மெயின்ரோடு ஜோசப் நகர் சின்னசாமி மகன் சுந்தரமூர்த்தி (23), விளாச்சேரி ஆதி சிவன் நகர் உதயன் மகன் அலெக்ஸ் (23), திருநகர் ஜோசப் நகர் 3-வது தெரு பிச்சை மகன் சுரேஷ் (23), நெல்லையப்பபுரம் அருண் (41) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
- ரஷியா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறி உள்ளார்
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி ஓராண்டை நெருங்குகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி உள்ளனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ரஷியாவுக்கு அடிபணியாமல் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதற்கு ரஷியா கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளிக்கும் வகையில், உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்க மேற்கத்திய நாடுகள் ஆலோசித்து வருகின்றன. உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது ரஷியாவை மேலும் ஆத்திரமூட்டி உள்ளது. ரஷியாவை தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், போர் தீவிரமடையும் என ரஷியா எச்சரித்துள்ளது.
'இது மிகவும் ஆபத்தானது. இது மோதலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வருவதற்கு வழிவகுக்கும். உலகளாவிய மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பின் பார்வையில் இது நல்லதல்ல' என ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே உக்ரைனை ராணுவரீதியாக ஆதரிப்பது குறித்த புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ராம்ஸ்டீனில் உள்ள விமானத் தளத்தில் நாளை இந்த சந்திப்பு நடக்க உள்ளது.
ரஷியாவையோ அல்லது 2014இல் உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையோ குறிவைத்து மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ரஷியா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறியது குறிப்பிடத்தக்கது.
- மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
- தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரையில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த, அதில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
ரவுடி கும்பல்
அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.அந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜெய்ஹிந்த்புரம் முத்து பாலம் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்கள் யார்? என்று விசாரித்த போது மதுரை ஆண்டாள்புரம் பழைய மீனாட்சி காலனியை சேர்ந்த கலையரசன் என்பவரின் மகன் பிரவீன் (வயது22), சுந்தர்ராஜபுரம் வி.வி.கிரி சாலையை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் தமிழரசன் (21) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
அவர்கள் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, மிளகாய் பொடி, கயிறு உள்ளிட்டவைகளை வைத்திருந்தனர். அதுபற்றி விசாரித்த போது, அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் ஆயுதங்களுடன் அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் கைது செய்து போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பிரவீனும், தமிழரசனும் ரவுடிகள் ஆவர். பிரவீன் மீது கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், தமிழரசன் மீது கொள்ளை முயற்சி, தாக்குதல், ஆயுதங்களுடன் திரிந்தது உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவர்களுடன் சிக்கிய சிறுவன் மீது வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கு மட்டும் இருக்கிறது.
தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமானது.
மதுரை
மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் நேற்று மாலை கிருதுமால் நதி அருகே ரோந்து சென்றனர். அப்போது சில்வர் பட்டறை எதிரே தண்டவாளம் அருகே 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த கும்பல் தப்பி ஓடியது. இதில் 5 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் 5 பேர் தப்பிச்சென்று விட்டனர்.
பிடிபட்ட 5 பேரிடம் இருந்து கத்தி, அரிவாள், உருட்டுகட்டை, மிளகாய் பொடி பாக்கெட், கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அவர்கள் பண்ணியான் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் அஜய் (வயது 21), திருநகர் நாகராஜ் மகன் ஆகாஷ் (21), சமயநல்லூர் சுந்தரமூர்த்தி மகன் ராம்கிஷோர் (20), விக்ரமங்கலம், பெரியார் நகர் முத்தையா மகன் விஜய் (20) வில்லாபுரம், மணிகண்டன் நகர் முத்துவேல் மகன் சோலார் சரவணன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் சரியாக வேலைக்கு செல்லாமல் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க முடிவு செய்து பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர்.
- மதுரையில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர்.
மதுரை
மதுரையில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று கூடல் நகர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 10 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களில் 6 பேரை விரட்டி சென்று பிடித்தனர்.
அவர்களை சோதனை யிட்டபோது வாள், பெரிய கத்தி, உருட்டுகட்டை, கயிறு மற்றும் மிளகாய் பொடி ஆகியவை இருந்தது தெரியவந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் பெத்தா னியாபுரம், மேட்டு தெரு முருகன் மகன் சூர்யா (வயது 24), மேலவாசல் சிவகுமார் மகன் பிரகாஷ் (23), பெத்தானியாபுரம், திலீபன் தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார் (22), கரிசல்குளம், நேரு காலனி பாலகிருஷ்ணன் (25), கள்ளிக்குடி சுந்தர்ராஜன் மகன் அருண்குமார் (19), ஆரப்பாளையம், மஞ்சள் மேட்டு காலனி, அன்னை இந்திரா நகர், மெய்யப்பன் தெரு ஜெயக்குமார் மகன் மனோஜ்குமார் (22) என்பது தெரிய வந்தது.
இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர். இதற்காக ஆயுதங்கள் பாலத்தில் கீழ் பதுங்கி இருந்து உள்ளனர். இைதயடுத்து 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர். தப்பிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
- 7 வாலிபர்களை போலீசார் பிடித்து ஆயுதங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
- 48 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு.
வல்லம்:
தஞ்சை அருகே மாதாக்கோட்டை டான்போஸ்கோ தெருவை சேர்ந்தவர் செபஸ்டின்.
இவருடைய மகன் பிரின்ஸ்லாரா என்ற சின்னா(வயது28).
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
சம்பவத்தன்று திருக்கானூர்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மாதாகோட்டையில் இருந்து சின்னா மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இதனை அறிந்த ஒரு மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களில் சின்னாவை பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
சின்னாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் வல்லம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னா உயிரிழந்தார்.
இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொலையாளிகள் பதுங்கி இருந்த இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் வல்லம்- மருத்துவக்கல்லூரி சாலை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வளாக பகுதியில் மறைந்திருந்து அவ்வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 7 பேரையும் போலீசார் வல்லம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் தஞ்சை மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20), ராஜேஷ்(23), புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்த விஜய்(26), ஒரத்தநாட்டை சேர்ந்த விக்னேஸ்வரன்(21), நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த அஷ்ரப்அலி(19), கோரிகுளம் பகுதியை சேர்ந்த ஆகாஷ்(19), தஞ்சை விளார் ரோடு பகுதியை சேர்ந்த ஜெகதிஸ்வரன்( 28) என்றும் முன்விரோதம் காரணமாக இவர்கள் 7 பேரும் சேர்ந்து சின்னாவை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
இவர்களை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
பின்னர் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை நடந்த 48 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பாராட்டு தெரிவித்தார்.
- அவரது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் 3 அரிவாளுடன் வந்தபோது போலீசார் பிடித்தனர்.
- பைக் மற்றும் 3 அரிவாள்களை போட்டு விட்டு 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் கிருட்டி என்கிற சாந்தகுமார் (வயது19) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் 3 அரிவாளுடன் வந்தபோது போலீசார் பிடித்து விசாரிக்க முற்பட்டனர்.
அப்போது பைக் மற்றும் 3 அரிவாள்களை போட்டு விட்டு 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட கிருட்டி என்கிற சாந்தகுமாரை விசாரித்ததில் வாகன திருட்டு, ஆயுதங்களை வைத்து மிரட்டுதல் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பட்டுக்கோட்டை கிரைம் போலீசார் பிடித்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
- கொள்ளையடிக்க பதுங்கியிருந்தபோது அவர்கள் பிடிபட்டனர்.
மதுரை
மதுரையில் கடந்த சில மாதங்களாக நகை, பணம் பறிப்பு, கொள்ளை, கொலை போன்றவை அதிக அளவில் நடந்து வருகிறது. குற்றங்களில் பெரும்பாலும் சிறுவர்கள் ஈடுபடுவது கவலைக்குரியதாக உள்ளது.
மதுைர நகரில் குற்றங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டு ள்ளார். இதையடுத்து சமூக விரோதசெயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், முகமது இத்ரீஸ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படைபோலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் ேராந்து சுற்றி வந்த னர். எல்லீஸ் நகர் மேம்பால கீழ்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பதுங்கி இருந்த 10 பேர் திடீரென போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர்.
இதையடுத்து உஷாரான போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதில் 5 பேர் சிக்கினர். அவர்களை பரிசோதித்தபோது கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்வைத்திருப்பது தெரியவந்தது.
5 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள், மேலவாசல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி ராஜா மகன் ஜெயராஜ் பாலா (வயது 23), திடீர் நகர் சந்தனவேல் மகன் மண்ட மகேந்திரன் (18), ஹீரா நகர் சுந்தரம் மகன் பேய் மணிகண்டன் (19), சுப்ரமணியன் மகன் பெருமாள் (19), மேலவாசல் பேச்சிமுத்து (39) என்பது தெரிய வந்தது. இவர்கள் எல்லீஸ் நகர், அரசரடி, மகபூப்பாளையம், பை-பாஸ் ஆகிய பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை குறி வைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் பேலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி தப்பி ஓடிய மேலும் 5 பேரை ஆரப்பாளையம் வைைக தென்கரை பகுதியில் தனிப்படை போலீசார் சுற்ற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல்செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர்கள் திடீர் நகர் தக்காளி பாபு (42), வண்டியூர், பாண்டியன் நகர், திலகர் தெரு முருகன் மகன் அஞ்சான் சிவா (20), திடீர் நகர் காளிதாஸ் என்ற பல்லு காளி (28), மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த ஜோ திருமலை (25), ஹீரா நகர் சக்தி மகன் ஊமையன் செல்வராஜ் (19). என்பது தெரியவந்தது. இவர்களும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இவர்களை சேர்த்து ெமாத்தம் 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்