search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார்
    • மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வீரபோகம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி ராசக்கிளி(வயது 80). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த காயங்களுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் ராசக்கிளி நேற்று முன்தினம் இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த காட்டகரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், ராசக்கிளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மீன்சுருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து ராசக்கிளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்."

    • 1998-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
    • கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கோவை,

    கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் சுப்பிரமணியம் (வயது 55). இவர் கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு 11.45 மணியளவில் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுப்பிரமணியம் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பணியின் போது இறந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கடந்தூர். இவர் 1998 -ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவருக்கு அல்லிராணி என்ற மனைவியும் 1 மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் மாரடைப்பில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் உடலுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அஞ்சலி 

    • மரம் ஒன்று அன்பு மீது விழுந்து நசுக்கியது.
    • மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அன்பு உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருக்கு சொந்தமாக தோப்பு உள்ளது. இதில் உள்ள மரங்களை வெட்டி விற்க பழனி முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் தருமபுரியை அடுத்துள்ள வாணியகாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த மர வியாபாரி நடராஜன் என்பவர் பழனியிடம் பேசி மரங்களை வெட்டி வாங்க முடிவு செய்தார்.

    அதன்படி நடராஜன், அவரது மகன் அன்பு (வயது 28) மற்றும் மரம் வெட்டும் தொழிலாளர்களுடன் மஞ்சமேடு சென்றனர். அங்கு தொழிலாளிகள் மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். வெட்டப்பட்ட மரங்களை கயிறு கட்டி கீழே இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக வெட்டப்பட்ட மரம் ஒன்று அன்பு மீது விழுந்து நசுங்கியது. இதில் படுகாயம் அடைந்த அன்பை உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அன்பு உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து நடராஜன் தந்த புகாரின்பேரில் பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • விடுதியில் இருந்து வெளியேறிய மாணவர்கள்
    • பெற்றோர் அழைத்துச் சென்றதால் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுமித்திரன் (வயது 19). இவர் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியில் செயல்பட்டு வரும் கிரேஸ் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் விடுதியின் மேல் மாடியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவர் சுமித்திரன் உடலை களியக்காவிளை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் சுமித்திரன் சாவில் சந்தேகம் இருப்ப தாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் களியக்கா விளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதுகுறித்து போலீசார் கல்லூரி நிர்வாகத்திடமும் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலை யில் மாணவர் சுமித்திரன் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய ப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த சூழலில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர் திரண்டு வந்து கல்லூரி நிர்வாகத்திடம் தங்கள் பிள்ளைகளின் பாது காப்பு குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

    அதற்கு கல்லூரி நிர்வா கம் கொடுத்த விளக்கத்தால் திருப்தி அடையாத சில பெற்றோர், தங்கள் பிள்ளை களை வீட்டிற்கு அழைத்து சென்று வருகின்றனர்.மேலும் சில மாணவர்கள் தாங்களாகவே வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி வளாகத்தில் பர பரப்பு ஏற்பட்டது.

    • தா.பழூர் அருகே டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    அரியலூர்:

    கடலூர் மாவட்டம் மேல கஞ்சம் கொள்ளை பகுதியை சேர்ந்தவர் அருள்பாண்டியன் (வயது 28), பெயிண்டர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி அரசு டாஸ்மாக் மதுபான கடை அருேக மயங்கி கிடந்த அருள்பாண்டியனை மீட்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அருள்பாண்டியன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    கரூர்,

    உத்தர பிரதேச மாநிலம், மிர்சாபூர் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் அன்சாரி(24). இவர், கரூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப் பட்டி கோட்டையில் தனியார் மொபைல் நிறுவனத்தின் டவரில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆஷிக் அன்சாரி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் திடீர் பலியானார்
    • இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர் புகார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் ரங்க–சாமி. இவரது மனைவி வைரம் (வயது60). ரங்கசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் வைரம் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில மாதங்களா–கவே வைரம் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படு–கிறது.

    இதனால் அவருக்கு கிட்னி பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் வைரத்திற்கு கடந்த 27ந்தேதி இரவு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவரை அப்பகுதியில் உள்ள சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக வெளியூர் கொண்டு செல்லும் போது வழியிலேயே இறந்து விட்டார்.

    இதனால் தனது அத்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ் என்பவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்ப–திந்து விசாரித்து வருகின்ற–னர்.

    • மதுபோதையில் அந்தியூர் பஸ் நிலையத்திலேயே இருசப்பன் படுத்து தூங்கியுள்ளார்.
    • இந்த நிலையில் காலையில் பஸ் நிலையத்திலேயே இறந்து கிடந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் அருகே உள்ள விளாமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் இருசப்பன் (40). இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருசப்பன் விவசாய கூலி வேலைகள் செய்து வந்தார்.

    அதிக வயிற்று வலிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பப்பாளி பறிக்கும் வேலைக்காக உடுமலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு செல்ல அந்தியூர் வந்துள்ளார். இரவு மதுபோதையில் அந்தியூர் பஸ் நிலையத்திலேயே இருசப்பன் படுத்து தூங்கியுள்ளார்.

    இந்த நிலையில் காலையில் பஸ் நிலையத்திலேயே இறந்து கிடந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் வந்து இருசப்பனை ஆம்புலன்ஸ் மூலமாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இருசப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டாஸ்மாக் அருகே பரபரப்பு
    • போலீசார் விசாரணை

    திருச்சி, 

    திருச்சி காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 56). இவர் சில நாட்களாக தனது குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிக அளவு மது குடித்துவிட்டு திருச்சி பாலக்கரை பகுதி மணல்வாரித்துறை ரோடு டாஸ்மார்க் கடை அருகே மதுபோதையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்து பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மகன் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல திருச்சி உறையூர் பாளையம் பஜாரை சேர்ந்தவர் அப்துல் கிட்டு. இவரது மகன் ஜாகிர் உசேன்(39). இவர் திருச்சி மெயின் காட் பகுதியில் உள்ள டெக்ஸ்டைலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வீட்டை விட்டு வெளியே சென்று மது அதிகமாக குடித்து கோணகரை டாஸ்மார்க் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி நிஷா அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆடையில் தீப்பிடித்து அவரது உடல் முழுவதும் பரவியது.
    • இன்று அதிகாலை வரும் வழியிலேயே காளியம்மாள் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகேயுள்ள ஆல்ரபட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ரமேஷ் அப்பகுதி கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.

    இவரது மனைவி காளியம்மாள் (வயது 35). சம்பவத்தன்று காளியம்மாள் வீட்டில் அடுப்பு பற்ற வைத்தார். அப்போது அவரது ஆடையில் தீப்பிடித்து அவரது உடல் முழுவதும் பரவியது.

    காளியம்மாளின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு காளியம்மாளின் உடல் நிலை மேலும் மோசமானது. இதையடுத்து மீண்டும் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்க அழைத்து வந்தனர். இன்று அதிகாலை வரும் வழியிலேயே காளியம்மாள் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இறந்து போன காளியம்மளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • இன்று பிரேத பரிசோதனை

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 41) கொத்தனார். இவர் நேற்று இரவு குழித்துறை ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பால்ராஜ் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கல்குளம் காயக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரபு (33) லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று இரவு இரணியல் அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக வந்த ரெயில் மோதி பிரபு இறந்துள்ளார். இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகர்கோ வில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பிரபு, பால்ராஜ் இருவரது உடல்களும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படு கிறது.

    • குளித்தலை அருகே தொழிலாளி பலியானார்
    • வீட்டு வாசலில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்

    குளித்தலை:

    குளித்தலை அடுத்த, தோகைமலை அருகேயுள்ள டி.இடையப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (57) இவருக்கு இருதய நோய், சர்க்கரை நோய் மற்றும் வயிற்று வலி என பல்வேறு நோய்களுக்கு ஆளாகி தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகாததால் கடந்த, 19-ந்தேதி இரவு, வீட்டு வாசலில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரி–ழந்தார். இவரது மகன் தாமோ–தரன் கொடுத்த புகார்படி, தோகைமலை, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கின்றனர்.


    ×