search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • தீக்குளித்த விவசாயி உயிரிழந்தார்
    • மனவிரக்தியில் இருந்ததாக தெரிகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தெற்கு பொன்னன் விடுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48) விவசாயியான இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கினார். அதில் அவரது வலது கை பாதிப்பு அடைந்தது. இதனால் அவர் விரக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்துவிட்டார். தகவல் அறிந்த மலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மாடிபடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்
    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல். சாப்ட்வேர் இன்ஜினியர். சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன் உள்ளார். இவரது தந்தை சீனிவாசன் (வயது59.).இவர் புத்தூர் பாரதி நகரில் உள்ள வீட்டில் இருந்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்துவிட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மின்னல் தாக்கி மாடு உயிரிழந்தது
    • வேப்பமரத்தில் கட்டியிருந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தில் வசித்து வருபவர் மோகன்பாபு(வயது 44). விவசாயி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர் நேற்று கொட்டகையில் இருந்த பசுமாட்டை வெளியில் உள்ள வேப்பமரத்தில் கட்டிவிட்டு, வயல் வேலைக்கு சென்றார். அப்போது மதிய நேரத்தில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பசுமாடு செத்தது. இது குறித்து வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா, கால்நடை மருத்துவருடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    • டாஸ்மாக் பாரில் சலூன் கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
    • கொலையா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள கொத்தகம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சத்திய செல்வன் (வயது 35). சலூன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை கந்தர்வகோட்டை தஞ்சை சாலையில் உள்ள அரசு மதுபானக்கடைக்கு அருகிலுள்ள பாரில் சமையல் செய்யும் கூடத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இன்று காலை பாரில் வேலை செய்யும் ஊழியர் பணிக்கு வந்தபோது சத்தியசீலன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுபற்றி அவர் உடனடியாக கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த கந்தர்வகோட்டை போலீசார் பிணமாக கிடந்த சத்திய செல்வன் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அளவுக்கு அதிகமான மது போதையில் தவறி குப்புற விழுந்ததில் அவர் இறந்தாரா அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இறந்த சத்திய செல்வனுக்கு தேவி என்ற மனைவியும், கோபிகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். இந்த சம்பவம் கந்தர்வகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இறந்த கணவரின் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவியும் உயிரிழந்தார்.
    • இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள துவரவல் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 31). இவரது மனைவி வினிதா(25). 3 ஆண்டுகளுக்க முன் திருமணமான இவர்களுக்கு 2 வயது மகள், 7 மாத மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப த கராறு காரணமாக திருநாவுக்கரசு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருநாவுக்கரசை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்க பிறகு திருநாவுக்கரசு உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஊர் முச்சந்தியில் உடல் இறக்கிவைக்கப்பட்டபோது, அங்கு மனைவி வினிதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது வினிதா திடீரென மயங்கி விழுந்தார்.இதனை அடுத்து கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வினிதா, ஏற்கனே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவரின் உடலை பார்த்த மனைவியும் ம யங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • கோட்டார் போலீசார் சென்று விசாரணை நடத்தி தாஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் தாஸ் (40). நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மேலாளராக இருந்து வந்தார். சம்பவத்தன்று லாட்ஜில் பணியில் இருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்ப தாக கூறினார்.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில், தாஸ் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். தாஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாஸ் சகோதரர் கண்ணன், அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மாடிப்படியில் தவறி விழுந்து 2 பேர் இறந்தனர்.
    • கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 42). மாடிப்படியில் தவறி விழுந்து மயக்கம் அடைந்தார். அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக அவரது மகள் ஜோதிலட்சுமி அளித்த புகாரின்பேரில் கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகில் உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தகுமார் (41). மாடிப்படியில் தவறி விழுந்தவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.dwa

    • பெயிண்டர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • கொலையா போலீசார் விசாரணை

    கரூர்:

    கரூர் மாவட்டம், வெள்ளியணை தாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் அன்பு செல்வன் (வயது 40). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் காந்தி கிராமம், தமிழ்நகர் பகுதியில், கரூர் - திண்டுக்கல் ரெயில்வே வழித்தடத்தில் காயங்களுடன் அன்புசெல்வன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அன்புசெல்வன், ரெயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து வீசி சென்றிருப்பார்களா என்ற கோணத்தில்

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த அன்பு செல்வனுக்கு சாரதி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    • அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு
    • யார் இவர்? போலீசார் விசாரணை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு 108 மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் யார்? எதற்காக பஸ் நிலையத்திற்கு வந்தார்? எந்த ஊரைச் சார்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மூதாட்டியின் கையில் அமிர்தம் என்ற பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது.

    • மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்தார்
    • வேலியை அகற்ற முயன்றபோது சம்பவம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஆருகேயுள்ள குரும்பலூர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவர் அே பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சின்ன வெங்காம் சாகுபடி செய்துள்ளார். இப்பயிர்களை மான், காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வந்ததால் வயலை சுற்றி மின் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் வயலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை அகற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்
    • வயலுக்கு சென்ற போது சம்பவம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 42). விவசாயி. இவருக்கு சொந்தமான மாடுகளை அவரது வயலில் மேய்ச்சலில் விட்டுவிட்டு அதே வயலில் இருக்கும் கொட்டகையில் மாலை நேரத்தில் கட்டி வைப்பது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினமும் மேய்ச்சல் முடிந்து, மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டுவதற்கு ராமர் வயலுக்கு சென்றுள்ளார். மாடுகள் கட்டசென்ற ராமர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சுந்தரி வயல் பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது ராமர் அங்கு சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் உதவியுடன் ராமரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாம்பு கடித்து ராமர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து சுந்தரி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மதுரை அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஏ.தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்( வயது 47), ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு திருமேனி என்ற மனைவி யும், ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று மாரி யப்பன் மோட்டார் சைக்கி ளில் டி.கல்லுப் பட்டிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். டி.குன்னத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து ராஜ பாளையம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் தலையில் பலத்த காய மடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×