search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • திருவிழாவுக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மதுரை

    மதுரை மேல வெளி வீதி ெரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் முதியவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து மேலமதுரை கிராம உதவியாளர் பழனி கொடுத்த புகாரின்பேரில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். விசாரணையில் இறந்த முதியவர் சிவகாசி முஸ்லிம் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(63) என்பதும், சித்திரை திருவிழா பார்ப்பதற்காக மதுரைக்கு வந்திருந்தபோது ெரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்ததும் தெரியவந்தது.

    • சேர்ந்தவர் காசிவேல் (வயது 40). கொத்தனார். இவரது மகன் ருத்திரபதி (18) வீட்டில் இருந்த போது, பக்கத்து வீட்டிலுள்ள கருப்பன் மகன் பாலு, இந்திரா ஆகியோர் வந்து, எனது வாத்தினை கொன்று போட்டுவிட்டு, பணத்தை தி ருடிவி ட்டாய் என திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
    • அவர்கள் தொடர்ந்து, வாய்கூசாமல் திட்டியதால், வீட்டின் படுக்கை அறையில் புடவையின் மூலம் ருத்திரபதி தூக்கு மாட்டிகொண்டார்.

    கள்ளக்குறிச்சி, மே.5-

    தியாகதுருகம் அருகே குரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவேல் (வயது 40). கொத்தனார். இவரது மனைவி லட்சுமி அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் வேலைக்குச் சென்றார். அப்பொழுது இவரது மகன் ருத்திரபதி (18) வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள கருப்பன் மகன் பாலு, இவரது மனைவி இந்திரா ஆகியோர் மாட்டுக் கொட்டகையில் இருந்த ருத்திரபதியிடம் எனது வாத்தினை கொன்று போட்டுவிட்டு, பணத்தை திருடி சென்று விட்டதாக கூறி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்த லட்சுமி விரைந்து வந்து தனது மகனை சமாதானம் செய்ததாகவும், அப்போது பாலுவும் அவரது மனைவியும் ருத்திரபதியை பார்த்து வாய் கூசாமல் பொய் பேசுறியே, நீ எல்லாம் செத்து தொலைய வேண்டியது தானே என கூறி மீண்டும் திட்டியதாகவும் கூறப்படுகிறது.  இதனை கேட்ட ருத்திரபதி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து லட்சுமி மீண்டும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்குச் சென்று வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் புடவையின் மூலம் ருத்திரபதி தூக்கு மாட்டி தொங்கியபடி இருந்தார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் மாணவனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து அவரது தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் பாலு அவரது மனைவி இந்திரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த மாணவன் ருத்திரபதி விருகாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் - 2 படித்தார். வருகின்ற 8-ந் தேதி தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் மாணவன் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதனைக்கண்ட விக்னேஷும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதில் காதலி சுபலேகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த தூக்கியாம்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). கட்டிடத்தொழி லாளி யான இவரும், அதே பகுதி யைச் சேர்ந்த இளம்பெண் சுபலேகா(18) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவ ருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த சுபலேகா, நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக்கண்ட விக்னேஷும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதில் காதலி சுபலேகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    விக்னேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அருகே தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய்கள் துரத்தி கடித்ததில் மான் உயிரிழந்தது
    • வனத்துறையினர் மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தன

    பெரம்பலூர:

    பெரம்பலூர்-துறையூர் சாலையில் நேற்று வழித்தவறி வந்த ஒரு மானை அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த நாய்கள் சேர்ந்து துரத்தி சென்று கடித்தன. இதில் காயத்துடன் தப்பிய மான் பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் ஓடி வந்தது. இதனைக்கண்ட மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த மானை ஒரு மரத்தில் கட்டி வைத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் அந்த மான் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தனர். இறந்தது ஆண் மான் என்றும், அதற்கு 1 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • தீக்குளித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    • தாய் இறந்த சோகத்தில் சம்பவம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஆனந்தஜோதி. இவர்களுடைய மகள் செல்வி (வயது 17). இந்தநிலையில் உடல்நல கோளாறு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தஜோதி சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்வி கடந்த சில மாதங்களாக தாய் நினைவாக சோகத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செல்வி திடீரென வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    இதில், உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தாய் இறந்த சோகத்தில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு அருகில் உள்ள காத்திருப்போர் அறையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கி கிடந்தார்.
    • டாக்டர்கள் அந்த பெண்ணை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு அருகில் உள்ள காத்திருப்போர் அறையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கி கிடந்தார். அங்கு வந்த தூய்மை பணியாளர் சிவா என்பவர் அந்த பெண்ணை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். டாக்டர்கள் அந்த பெண்ணை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுபற்றி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரந்து வந்து அந்த பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போக்சோ வழக்கில் கைதாக திருச்சியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்
    • கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    திருச்சி,

    புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பாலநகர் கே.ஆர்.எஸ். வீதி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65). இவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2021 அக்டோபர் முதல் திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமச்சந்திரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே ஜெயில் அதிகாரிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராமச்சந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி மத்திய ஜெயில் அதிகாரி கண்ணன் கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த மாதம் 15-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர், மயங்கி கிடந்தார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில், கடந்த மாதம் 15-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர், மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள், முதியவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தனர். உயிரிழந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரி யவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாப சாவு
    • தொழிலாளர் தினத்தன்று சோகம்

    முசிறி,

    சேருகுடி கேனிப்பள்ளம் அருகே இயங்கி வரும் தனியார் கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவரும் அதே பகுதியை சேர்ந்த வெங்குடுசாமி மகன் சண்முகராஜ் (வயது 42). இவருக்கு கார்த்திக், கவின் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கோழிப்பண்ணையில் லாரியில் கோழிகளை ஏற்றும் பணி செய்து கொண்டிருந்த போது, லாரியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த அவருக்கு முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கே பணிபுரிந்த பணியாளர்கள், முசிறி கைகாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் ஈடுபட போவதாக முசிறி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முசிறி எஸ்.ஐ. நாகராஜ் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உறவினர்களிடம், பேச்சு வார்த்தை நடத்தி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மே தினத்தன்று கூலித்தொழிலாளி இறந்த போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 23-ந் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்து முருகன் குடித்துள்ளார்.
    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை முருகன் உயிரிழந்தார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த களர்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). விவசாயியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

    இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 23-ந் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்து முருகன் குடித்துள்ளார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை முருகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருண்பரசுராம் முக்தா அசைவற்று இருந்துள்ளார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள நேதாஜி சவுக் பகுதியை சேர்ந்தவர் விக்கிமுக்தா (32). இவரது தந்தை அருண்பரசுராம் முக்தா (62). ஜவுளி வியாபாரிகள்.

    இவர்கள் இருவரும் அடிக்கடி ஈரோடு வந்து ஜவுளி கொள்முதல் செய்து கொண்டு செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஜவுளி கொள்முதலுக்காக ஈரோடு வந்த இருவரும் பஸ் நிலையம் பின்புறம் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தனர்.

    இதில் அருண்பரசுராமுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்து ள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை விக்கிமுக்தா கண் விழித்து பார்த்த போது அவரது தந்தை அருண்பரசுராம் முக்தா அசைவற்று இருந்துள்ளார்.

    உடனடியாக விக்கிமுக்தா அவரை ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று ள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருண்பரசுராம் முக்தா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • காவலாளி திடீரென இறந்தார்.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் கருப்பாயூரணி வீரபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சமயமுத்து(33). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி நெடுகனேந்தலில் நடைபெற்ற மாமனாரின் இல்ல விழாவிற்காக சென்றார். அங்கு உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல்சிகி ச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமயமுத்துவின் தந்தை தமிழ்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×