search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • செல்வராஜ் வலது கையில் பாம்பு கடித்து விட்டது.
    • கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கிணத்துக்கடவு அருகே சோலவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(55).கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலது கையில் பாம்பு கடித்து விட்டது. இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    திருச்சி,

    தென்னூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ( வயது 42). இவருக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர் பீமநகர் பகுதியில் டிபன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடைக்கு சென்ற அவர் கடையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி பாத்திமா கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 நாட்களுக்கு திருவிழா ஊர்வலம் பார்க்கச் சென்ற போது காணாமல் போனவர்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருவெறும்பூர்,

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் - ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் சரவணன் (வயது11). இவர் திருச்சியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 4-ந் தேதி காலை சர்க்கார்பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் வந்தது. அதனை பார்ப்பதற்காக சரவணன் வீட்டில் இருந்து சென்றார். வெகு நேரம் ஆகியும் சரவணன் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடினர். எங்கும் எந்த தகவலும் கிடைக்காததால் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சரவணனை தேடிவந்தனர்.இந்நிலையில் இன்று காலை கீழமுல்லக்குடி காவிரி ஆற்றில் ஒரு சிறுவனின் உடல் கிடப்பதாக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் சரவணனின் பெற்றோரை அழைத்து அடையாளம் காட்ட சொன்னார்கள். உடலை பார்த்த அவர்கள் இறந்து கிடப்பது எங்கள் மகன் சரவணன் தான் என்று கதறினர்.பின்னர் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவிழா பார்க்க சென்ற ஆறாம் வகுப்பு சிறுவன் நான்கு நாட்களுக்கு பிறகு பிணமாக கிடைத்தது அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.




    • போலீஸ்காரர் சாவு சம்பவத்தில் வர்ம மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
    • திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). ஆயுதப்படை காவலரான இவருக்கு கண்மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலியால் அவதிப்பட்ட காவலர் ராஜபாண்டி வில்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அவருக்கு அளித்த வர்ம சிகிச்சையில் தவறு ஏற்பட்டு தான் இறந்ததாக காவலர் ராஜபாண்டியின் மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில் இன்று காவலரின் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வந்ததை அடுத்து வர்ம மருத்துவமனை மருத்துவர் சிவசுப்பிரமணியத்தை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

    • 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பயணிகளிடம் காசு கேட்டு பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.
    • அவர் உடல்நிலை சரியில்லாமல் சாலையோரம் படுத்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பயணிகளிடம் காசு கேட்டு பிச்சை எடுத்து கொண்டிருந்தார். பின்னர் அவர் உடல்நிலை சரியில்லாமல் சாலையோரம் படுத்து கிடந்தார். கடந்த வாரம் அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அந்த முதியவர் திடீரென உயிரிழந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போனில் பேசிக்கொண்டே சென்ற சத்தியா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக உறவினர்கள் புகார்

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள ஆலவாய் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி சத்தியா (வயது 28). இந்த தம்பதிக்கு வேதா (9) என்ற மகளும், சாரதி (3) என்ற மகனும் உள்ளனர். கொளஞ்சி கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சத்தியா தனது குழந்தைகளுடன் ஆலவாய் கிராமத்தில் வசித்து வந்தார்.இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்தியாவுக்கு தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் அதுவே கள்ளக்காதலாக மாறியது. கணவர் கோவையில் வேலை பார்த்து வரும் நிலையில் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை அவரது உறவினர்கள் பலமுறை கண்டித்தும் சத்தியா திருந்தவில்லை.

    இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சத்தியா தனது குழந்தைகளை தவிக்கவிட்டு திருப்பூருக்கு சென்று அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து செந்துறை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சத்தியாவின் தாய்மாமா பெரியசாமியின் மனைவி சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். தன்னுடன் தங்க வைத்து தகுந்த அறிவுரைகள் கூறி அதே பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலையும் வாங்கி கொடுத்தார்.இதனை அறிந்த கள்ளக்காதலன் அவ்வப்போது சத்தியாவை தனிமையில் சந்தித்து வந்தார். அப்போது அவருக்கும், கள்ளக்காதலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பிள்ளைகள் தாயுடன் வசித்தால் அவர்களுடைய வாழ்க்கை பாழாகி விடும் என்று கருதி, சத்தியாவின் கணவர் கொளஞ்சி தனது மகனை மட்டும் தன்னுடன் அழைத்து சென்றார். மகள் மட்டும் ஆலவாய் கிராமத்தில் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

    இந்த நிலையில் சத்தியாவுக்கு நேற்று இரவு சுமார் 8 மணியளவில் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய கள்ளக்காதலன் அவரை தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து செல்போனில் பேசிக்கொண்டே சென்ற சத்தியா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இன்று காலை செந்துறையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேக்கு மரத்தோப்பில் ஒரு மரத்தில் சேலையில் சத்தியா தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் செந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது அங்கு திரண்ட உறவினர்கள் சத்தியாவின் கள்ளக்காதலன் தான் இரவில் தனியாக வரச்சொல்லி அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார் என்று பரபரப்பு புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியா

    • கல்லூரி மாணவர் திடீரென மரணமடைந்தார்.
    • கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பாட்டக்குளத்தைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் மெல்வின் கிறிஸ்டோபர்(வயது19). சிவகாசியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் 1½ மாதங்களுக்கு முன்பு பேண்ட் கிழிந்த நிலையில் மெல்வின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஜோசப் அது குறித்து விசாரித்தபோது, கல்லூரியில் மயங்கி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது மெல்வின் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜோசப் கொடுத்த புகாரின் பேரின் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே இளம்பெண்-வாலிபர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சந்திரன் இவரது மகள் பவித்ரா (வயது 23). சம்பவத்தன்று இவர் தனது சகோதரர் காசிமாயன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த பவித்ரா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளை யம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் சண்முக குமார் (வயது17). நேற்று அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் பாலாஜி (19) என்பவருடன் சண்முககுமார் மோட்டார் சைக்கிள் வெளியே சென்றார்.

    அருப்புக்கோட்டை ரோடு தியேட்டர் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சண்முக குமார் மீது பஸ் ஏறி இறங்கியது.

    உயிருக்கு போராடிய வரை அங்கிருந்து அவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சண்முக குமார் பரிதாபமாக இருந்தார். பாலாஜி லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் இருளாண்டி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி முத்துராம லிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (32). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஒத்தப்புளி- ஆனையூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது மண்ணில் சிக்கிய மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக் குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பால கிருஷ்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது50). கூலி தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (55).

    இந்நிலையில் அமல்ராஜுக்கு குடி பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று இவர் குன்னத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்க்கு சென்றார். அப்போது அளவிற்க்கு அதிகமாக மது அருந்திவிட்டு அந்த பகுதியில் மயக்கம் அடைந்து திடீரென அவர் நிலைகுலைந்து மயங்கி சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம், வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்ச சென்றவர் ‌இரவு வரை‌ வீடு திரும்பாததால்,
    • சுமார் 4 மணிநேர தேடுதலுக்கு பிறகு, செல்லமுத்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 65). இவர் குப்புச்சிபாளையம் அருகே உள்ள கோவில்காடு ராஜா நகர் பகுதியில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம், வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்ச சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செல்லமுத்துவை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, அங்குள்ள கிணற்றுக்கு அருகே செல்லமுத்துவின் துண்டு கிடந்துள்ளது.

    இதை பார்த்து செல்லமுத்து கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கிணற்றில் தேடினர்.

    சுமார் 4 மணிநேர தேடுதலுக்கு பிறகு, செல்லமுத்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூப்பிட்டான் பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 82). இவரது மனைவி ராமாயி (80).

    இவர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். ராமன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ராமனுக்கு உடல்நிலை மோசமானதால், பரமத்திவேலூர் தாலுகா, கோலாரத்தில் உள்ள அவரது மகள் சரசுவுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    அவரது மகள் ராமனை, நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுவுக்கு அடிமையானவர் இருதினங்களுக்கு முன்பு மாயமானார்
    • தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

    திருச்சி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை மங்களாக்குடி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் வயது 48. இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியை பிரிந்து திருச்சி சந்து காசியா பிள்ளை கள்ளர் தெரு பகுதியில் லட்சுமணன் தனியாக வசித்து வந்தார்.

    இதற்கிடையே மதுவுக்கும் அடிமையானார். அந்தப் பகுதியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து கிடைக்கும் வருவாயில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லட்சுமணன் இரு தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தொட்டிக்குள் அவர் தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×