search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • முதியவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
    • வெயில் கொடுமையால் சம்பவம்

    திருச்சி,

    திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகரன் ரவி டேவிட் (வயது 72). இவர் அந்த பகுதியில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஜெயசேகரன் ரவி டேவிட் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வெயிலின் கொடுமை தாங்காமல் அவர் சுருண்டு விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி ஜெயசீலி எப்சி பானு கே.கே. நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் அரசு ஊழியர் திடீரென இறந்தார்.
    • தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 50). இவர் மதுரை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வேலை பார்த்தார்.

    அவர் நேற்று இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்கி வேலை பார்த்ததாக தெரிகிறது. இன்று காலை அலுவலகத்துக்கு வந்து பணிகளை தொடங்கிய போது சண்முகவேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

    வலியால் துடித்த அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''கருவூலத்துறை சர்வரில் கோளாறு இருப்பதால் பில் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து கருவூலத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

    ஆனாலும் சர்வர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக சண்முகவேல் இரவு முழுவதும் வேலை செய்ய நேரிட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு காரண மாக அவர் மாரடைப்பால் உயிர் இழக்க நேரிட்டது என்றனர்.

    • பாம்பு கடித்து கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்
    • திறந்த வெளிபகுதிக்கு சென்றார்

    கரூர்:

    தரகம்பட்டியை அடுத்த, அத்திகுளத் துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் சத்தியமூர்த்தி (வயது 19). தரகம்பட்டி அரசு கலை கல்லுாரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் உள்ள திறந்த வெளி பகுதிக்கு சென்றார். அப்போது சத்தியமூர்த்தியை பாம்பு கடித்தது. இதையடுத்து, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சரவணன் அளித்த புகாரின் படி, விசாரிக்கின்றனர். பாலவிடுதி போலீசார் விசாரிக்கின்றனர்.

    • வீட்டில் இருந்த போது ராமசாமி திடீரென மயங்கி விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த தளுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (60). டெய்லர். இவரது மனைவி நிர்மலா (52).

    இருவருக்கும் திருமணமாகி 35 வருடங்களாகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை.

    ராமசாமிக்கு கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 7 மணியளவில் வீட்டில் இருந்த போது ராமசாமி திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் உயர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இன்று காலை 8.30 மணி அளவில் ஹரிகரன் வேலை செய்து வந்த வெள்ளி பட்டறையில் பிணமாக கிடந்தார்.
    • இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அன்னதானப்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ராமயன் காடு பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர். இவரது மகன் ஹரிஹரன் என்கிற பிரவீன் (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவில் மேட்டில் உள்ள தனது மாமா வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் ஹரிகரன் வேலை செய்து வந்த வெள்ளி பட்டறையில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அன்னதானப்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிஹரன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஹரிஹரன் எப்படி இறந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்
    • கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை

    திருச்சி,

    திருச்சி கல்லுகுழி பகுதியைச் சேர்ந்தவர் வீரய்யா. இவரது மனைவி சித்ரா (வயது 46). இவர்களின் மகள் அஷ்டலட்சுமி (20). இவர்கள் இருவரும் இன்று மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும் மகளும் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற போலீஸ்காரர் திடீரென இறந்தார்.
    • பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவனியாபுரம்

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). இவரது மனைவி கண்மணி (30) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ராஜபாண்டி மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றினார். சில நாட்களாக இவர் மூட்டு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து ராஜபாண்டி வில்லாபுரம் வீரபத்திரப்பிள்ளை காம்பவுண்டு பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று சிகிச்சை அளிக்கும் போது ராஜ பாண்டிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் ராஜபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி கண்மணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அதில், கணவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மகன் பரிதாபமாக இறந்தார்.
    • திருமங்கலம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உளள் டி.அரசப்பட்டியை சேர்ந்தவர் அ.தி.மு.க. நிர்வாகி கருப்பு. இவரது மகன் சரத்குமார் (வயது 26). கட்டிட தொழிலாளியான இவருக்கு புவனா என்ற மனைவியும், 7மாத பெண் குழந்தையும் உள்ளனர்.சரத்குமார் தற்போது கப்பலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்த சகோதரர் வீட்டு கிரகப் பிரவேச நிகழ்ச்சியில் சரத்குமார் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அன்று இரவு விசேஷத்திற்கு வந்த உறவினர் ஒருவரை அரசபட்டியில் மோட்டார் சைக்கிளில் சரத்குமார் அழைத்துச் சென்றார்.

    அங்கு அவரை இறக்கி சென்று விட்டு மீண்டும் சரத்குமார் கப்பலூருக்கு புறப்பட்டார். திருமங்கலம் -உசிலம்பட்டி சாலை சந்திப்பு இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த நெற்கதிர் அறுவை செய்யும் எந்திர வாகனம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரத்குமார் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்க லம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அளவுக்கதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டதால் விபரீதம்
    • ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி

    ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பர்மா காலனியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 72). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை தின்றார். பின்னர் மயங்கி அவரை உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். .ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முள்காட்டில் பிணமாக மீட்பு
    • கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எப்.கீழையூரை சேர்ந்த–வர் ராஜகோபால் (வயது 65). இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த 24-ந்தேதி மணப் பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குடும்பத்தினர் சிகிச் சைக்காக சேர்த்தனர்.ஆனால் அவர் அங்கிருந்து திடீரென்று மாயமானார். இது தொடர்பாக அவரது மனைவி சீத்தாலெட்சுமி அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று காலை அன்புமேடு பகுதியில் உள்ள முள்காட்டில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக மணப்பாறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்தனர். அப்போது மாயமான ராஜகோபால் என்பவர் தான் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் சில இடங்களில் காயங்களும் இருந்தது. இதையடுத்து மணப்பாறை போலீசார் இறந்தவரின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்தவரின் உடலில் சில காயங்கள் இருந்ததோடு வாய் மற்றும் மூக்கில் ரத்தம் அதிகம் வெளியாகி இருந்தது. எனவே அவர் மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்து–வமனையில் மாயமானவர் முள் காட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது

    • பரமத்திவேலூரை அடுத்த வாழவந்தி அருகே தீயில் காயம் அடைந்த இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.
    • சம்பவத்தன்று இளம்பெண் அடுப்பை பற்ற வைக்க மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ பிடித்ததால் கருகி பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன். கூலித் தொழி லாளி. இவரது மனைவி நீலாவதி (வயது 34). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள்ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    நீலாவதி கடந்த 17-ம் தேதி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடுப்பு எரியாததால் மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ குபுவென வெளியேறி நீலாவதி அணிந்திருந்த துணியில் பிடித்தது.

    தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. அவருடைய அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீலாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீலாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன்னார்குடி அருகே வடகரை வயல் கிராமத்தில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
    • தகவல் அறிந்தத ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அருகே வடகார வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40).

    கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு வேலைக்குச் சென்றபோது மன்னார்குடி அருகே வடகரை வயல் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது அவ்வழியாக வந்த ரெயில் எதிர்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷ்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடிஅரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×