என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தபால்"
- பொழிச்சலூர் தபால் நிலையத்தில் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்புதற்காகச் சென்றுள்ளார்.
- 30 ரூபாயை அலுவலரிடம் கொடுத்து மீதி சில்லறை 50 பைசாவை கேட்டுள்ளார்.
50 பைசாவை திரும்பித் தராத போஸ்ட் ஆபீசுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 3 அன்று சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் பொழிச்சலூர் தபால் நிலையத்தில் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்புதற்காகச் சென்றுள்ளார். தபால் செலவாக ரூ.29.50 பைசா வந்துள்ளது.
ஆனால் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் Pay U யுபிஐ சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பழுதடைந்தால் 30 ரூபாயை அலுவலரிடம் கொடுத்து மீதி சில்லறை 50 பைசாவை கேட்டுள்ளார். ஆனால் டிஜிட்டல் பெண்மன்ட் பழுதாகி உள்ளதால் தபால் செலவு ரவுண்டாக ரூ.30 என்று கூறி மீதி சில்லறை தர மறுத்துள்ளார்.
எனவே இதனை எதிர்த்து அந்த நபர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்த நிலையில் இதுதொடர்பான விசாரணையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனது சொந்த பணமான 50 பைசாவை இழந்து பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடாக ரூ.15,000 வழங்கும்படி போஸ்ட் ஆபீசுக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாதாந்திர உரிமைத் தொகையை தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
திருப்பூர்:
திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற, தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தபால்காரர், கிராம தபால் ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனம் மூலம், பயனாளிகள் தங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும். இந்த கணக்குக்கு இருப்பு தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத் தொகையை அருகில் உள்ள தபால் நிலையங்களில் அல்லது, சிறப்பு சேவை மூலம் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள், பிரதமரின் உதவித்தொகை பெறுவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவோர், தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை பெறுவோர் பயன்படுத்தி வருவோருக்கு பயன்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது.
- இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது.
மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வேலை நாட்களில் பணிக்கு செல்லும்போது அல்லது பணியிலிருந்து திரும்பும் பொழுது தங்களுக்கு தேவையான அஞ்சல் சேவைகளை தடையின்றி பெறலாம். சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்துதல் பதிவு தபால்களை அனுப்புதல், மணி ஆடர்களை அனுப்புதல் , அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பிரிமியங்களை செலுத்துதல் போன்ற சேவைகளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அஞ்சல் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாமக்கல் தலைமை அஞ்சலகத்தை தொடர்ந்து திருச்செங்கோடு தலைமை அஞ்சலகத்திலும் இந்த சேவை விரிவுபடுத்தபட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி திருச்செங்கோடு தலைமை அஞ்சல் அதிகாரி உதயகுமார் மற்றும் துணை அஞ்சலக அதிகாரி தீபா முன்னிலையில் தொடங்கியது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அஞ்சல் உட்கோட்ட அதிகாரி ரமேஷ் மற்றும் சங்ககிரி அஞ்சல் உட்கோட்ட அதிகாரி நவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.
- வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
- 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்,ஜூன்.29-
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு, நேரில் சென்று சுவாமியை தரிசிக்க முடியாத பக்தர்கள் வசதிக்காக, அவர்கள் வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாத சுவாமி கோவிலும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கோவிலில் கோடி தீர்த்தம், 100 மி.லி., செம்பில் அடைத்தும், 50 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் படம், விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாதம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தபால் செலவு தவிர்த்து, இதற்கு கட்டணம், 145 ரூபாய். பிரசாதம் வேண்டுவோர் www.hrce.tn.gov.inஎன்ற இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.இந்து சமய அறநிலையத் துறை - தபால் துறை இணைந்து ஏற்கனவே, 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
- தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் முற்றிலும் இந்தி மொழியில் ஒரு அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
- போஸ்டரை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் முதல் தளத்தில் விளாத்திகுளம் கிளை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் பதிவு தபால், விரைவு தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு இந்த தபால் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது ஆதார் திருத்த பணிகளும் தபால் அலுவலகத்தில் நடை பெறுவதால் இங்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அந்த தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் முற்றிலும் இந்தி மொழியில் ஒரு அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை அங்கு வந்த கிராம மக்கள் பலரும் பார்த்து விட்டு குழப்பம் அடைந்து வருகின்றனர்.
அந்த அறிவிப்பு குறித்து தபால் அலுவலக ஊழியர்களிடம் கேட்ட போது, இணைய வழியில் மோசடி செய்பவர்களை புகார் செய்வதற்கான இணையதளம் பற்றிய தகவலும், அதற்கான இலவச தொலைபேசி எண்ணும் மற்றும் அதற்கான வழிமுறைகளும் குறித்து அதில் விளக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
விளாத்திகுளம் தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வரும் அப்பகுதி கிராம மக்களுக்கு இந்தி தெரியாததால் தபால் அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டுள்ள இந்தி வழிகாட்டு முறை போஸ்டரால் எந்த பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட தபால் துறையினர் இணைய வழி புகார், இணையதளம் மற்றும் தொலைபேசி எண், வழிகாட்டி முறைகள் அடங்கிய போஸ்டரை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.
- போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அதானி தொடர்பான 3 கேள்விகள் அடங்கிய தபால் கார்டை பிரதமருக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கி, தூத்துக்குடி தலைமை தபால்
அலுவலகத்தில் தபால்கார்டுகளை தபால் பெட்டியில் போட்டார். தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கையெழுத்திட்டு தபால் கார்டுகளை பெட்டியில் போட்டனர்.
இதில் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல், மேற்கு, தெற்கு மண்டல தலைவர்கள் ராஜன் செந்தூர்பாண்டி, மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், அருணாசலம், தனபால்ராஜ், மாவட்ட பொது செயலாளர் சின்ன காளை, செயலாளர்கள் கோபால், காமாட்சிதனபால், ஆரோக்கியம், வெங்கட சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தபால் பொருட்களுடன் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
- கீழமுத்துப்பட்டி வீரமுடையான் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் மதன்குமாரை (22) கைது செய்தனர்.
மதுரை
மதுரை பசுமலையை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் திவ்யா (27). மத்திய அரசு அலுவலகத்தில் தபால் டெலிவரி ஊழியராக உள்ளார். சம்பவத்தன்று மதியம் இவர் சைக்கிளில், தபால் பொருட்களுடன் சென்றார். திருப்பரங்குன்றம் ரோட்டில் ஒரு வீட்டுக்கு தபால் கொடுக்க வேண்டி இருந்தது. அங்குள்ள போலீஸ் பூத் அருகே, சைக்கிளை நிறுத்தினார்.
திரும்பி வந்து பார்த்த போது தபால் பொருட்களுடன் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் பைக்காரா முத்துராமலிங்கபுரம் மேட்டு தெருவை சேர்ந்த பாண்டியை (46) கைது செய்தனர்.
மதுரை புதுராமநாதபுரம் ரோடு ஜவகர் சாலையை சேர்ந்தவர் டார்ஜான் ராஜா(வயது35). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு மதுரை-ராமேசுவரம் ரிங் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை தாக்கி செல்போனை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பசுமலை ராயப்பன் நகரை சேர்ந்த சுரேந்திரன் மகன் ராஜசேகர் (21). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பைக்கை திருடிய கீழமுத்துப்பட்டி வீரமுடையான் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் மதன்குமாரை (22) கைது செய்தனர்.
- முருகன் புகைப்படம், திருநீறு வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பழனி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5ந் தேதி நடக்கிறது.
உடுமலை:
பழனி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5ந் தேதி நடக்கிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவு வருவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வீட்டிலிருந்த படியே பிரசாதங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது.
அதன்படி மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களில் பழநி பஞ்சாமிர்தம் பெறுவதற்கான விண்ணப்பங்களில் முகவரியை பூர்த்தி செய்து 250 ரூபாய் செலுத்த வேண்டும். விரைவு அஞ்சல் சேவை வாயிலாக அரை கிலோ பஞ்சாமிர்தம், முருகன் புகைப்படம், திருநீறு வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விரைவு தபால், பதிவு தபால், பார்சல் சேவை இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- விரைவு தபால்களுக்கு 50 கிராம் வரை ரூ.41 கட்டணமாக பெறப்பட்டு மறுநாள் காலையில் தமிழகத்திற்குள் அந்தந்த முகவரியில் போய் சேரும் என்று தபால் துறையினர் தெரிவித்தனர்.
ராஜபாளையம்
தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் மதியம் 3 மணி வரை சேவைகள் இருந்தன. பின்னர் தனியார் கூரியர் சேவை தொடங்கப்பட்டு அபரிதமான வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக மத்திய அரசின் அஞ்சலக சேவைகளில் சுணக்கம் ஏற்பட்டது.
மதியம் 3 மணி வரை பதிவு தபால், விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் இருந்து வந்த நிலையில் தனியார் கூரியர் சேவைகளில் இரவு 8 மணி வரை பார்சல் பெறப்பட்டு, மறுநாள் காலை போய் சேரும் நிலை இருந்தது.
இதன் காரணமாக தபால் நிலையங்களில் கூட்டம் குறைந்து பொதுமக்கள் தனியார் கூரியர் சேவையை பயன்படுத்த தொடங்கினர். இதனால் அஞ்சலக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் இரவு 8 மணி வரை பதிவு தபால், விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் துணை கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன் இந்த சேவையை தொடங்கி வைத்தார். தலைமை அஞ்சலக அதிகாரி சண்முகராஜ் வரவேற்றார். இதில் அஞ்சலக அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
விரைவு தபால்களுக்கு 50 கிராம் வரை ரூ.41 கட்டணமாக பெறப்பட்டு மறுநாள் காலையில் தமிழகத்திற்குள் அந்தந்த முகவரியில் போய் சேரும் என்று தபால் துறையினர் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்