search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225386"

    • பெரியநாகலூர், மைக்கேல்பட்டியில் ஓடை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், பெரியநாகலூர் மற்றும் மைக்கேல்பட்டி ஊராட்சிகளில் உள்ள ஓடைகள் தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்தாவது:- அரியலூர் மாவட்டத்தில் மருதையாறு வடிநிலக்கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    அதற்காக ரூ.3.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அரியலூர் ஒன்றியம், பெரியநாகலூர் ஊராட்சியில், நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் 3.30 கி.மீ நீளத்துக்கு பெரியநாகலூர் ஓடை ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலும், தா.பழூர் ஒன்றியம், மைக்கேல்பட்டி ஊராட்சி அருகேயுள்ள சிந்தாமணி ஓடை 5 கி.மீ நீளத்திற்கு ரூ.29 லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரும் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    பின்னர் அமைச்சர் சிவசங்கர் தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று அங்கு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடம், கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இந்நிகழ்வுகளில் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தார். இதில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர்கள் தினகரன், தியாகராஜன், மருதமுத்து மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தண்டாளம் வடிகால் வாய்க்கால் 3 ஆயிரம் மீட்டர் வரை உள்ளது.
    • இந்த வாய்க்காலின் படுக்கை தளம் 3 மீட்டர் ஆகும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நீர்வளத்துறை காவிரி வடிநில உட்கோட்டம் நன்னிலம் கட்டுப்பாட்டில் உள்ள பாசன பிரிவு எண் 1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வரும் திருமலைராஜன் ஆறு, முடிகொண்டன் ஆறு,நரிமணியாறு,ஆறுகள் மற்றும் ஆறுகளில் கலக்கும் வடிகால்கள் பாசன பிரிவு எண்-1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வருகிறது. தென்பிடாகை வடிகால் வாய்க்கால் 3000 மீட்டர் வரை மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் 3000 மீட்டர் வரை உள்ளது. கிராமத்தில் இவ்வடிகால் வாய்க்காலின் மூலம் தென்பி டாகை,தண்டா ளம் கிராமத்தில் 471 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன பெறுகின்றது.

    இவ்வாய்கா லின் படுக்கை தளம் 3 மீட்டர் ஆகும். தற்போது வடிகால் வாய்க்காலில் வண்டல் படிந்து காட்டாமணக்கு செடிகள் மண்டி,நீர் போக்கினை வெகுவாக தடுத்து விடுவதால் வெள்ள காலங்களில் வாய்க்காலில் வெள்ள நீர் வடியாமல் தேங்குவதால் கரைகள் பாதிக்கப்பட்டு கரை உடைப்பு மற்றும் கரைப்பொழிவுகள் ஏற்பட்டு, பெரும் சேதத்தை விளைவிக்கிறது.

    எனவே தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படு கிறது. இந்த பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், உதவி செயற்பொறியாளர் செங்கல்வராயன்,திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன்,செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • 100 இடங்களில், 376 கி.மீ. நீளத்திற்கு துார் வாரும் பணி
    • அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

    திருச்சி,

    மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல ஏதுவாகவும் டெல்டா பாசனப்பகுதிகள், நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையின் சார்பில் 375.78 கிலோ, மீட்டர் நீளத்திற்கு 100 தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள 15.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் திருச்சி கோரையாற்றில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 21.50 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி பஞ்சப்பூர் அருகில் உள்ள கே சாத்தனூர் கிராமம் கோரையாற்றில் தூர் வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார். மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், சேர்மன் துரைராஜ், ஒன்றியச்செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, கதிர்வேல், கோட்டத் தலைவர் துர்காதேவி, கவுன்சிலர்கள் முத்து செல்வம்,காஜாமலை விஜய், கிராப் பட்டி செல்வம், ஜி.ஆர்.சாமி, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சொர்ணகுமார், செயற் பொறியாளர்கள் நித்தியானந்தன், ' தமிழ்ச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், நகர பொறியாளர் சிவபாதம், அரசு அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததார்.
    • பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கா ததால் சிறுமியின் தாயார் புதுப்பே ட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததார். இவர் கடந்த 24-ந்தேதி வேலைக்கு சென்றவர் நள்ளிரவு வரை வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கா ததால் சிறுமியின் தாயார் புதுப்பே ட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.   புகாரில், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருணா ச்சலம் (24) என்பவர் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வருகிறார்.

    • அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி அறிவுறுத்தப்பட் டது

    நாகர்கோவில், ஏப்.26-

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் ஒவ்வொரு துறையின் சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரி களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஒவ்வொரு துறையின் வாயிலாக வளர்ச்சித் திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படை யில் குமரி மாவட்ட வருவாய்த்துறை, வழங்கல் துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத் துறை, பள்ளிக்கல்வித்துறை, வேலை வாய்ப்புத் துறை, பொதுசுகாதாரத்துறை, மருத்துவத்துறை, விளையாட்டுத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந் தாய்வு மேற்கொள்ளப்பட் டது.

    குறிப்பாக வருவாய்த்து றையின் சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உத வித்தொகை உள்ளிட்டவைகள் குறித்தும், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித்திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள், இலவச பஸ் பயண அட்டை மற்றும் பள்ளிகளின் உள்கட்ட மைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்தும் வறுமைக் கோட்டிற்கு கீழ் எத்தனை பயனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட் டுள்ளது உள்ளிட்டவைகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.

    மத்திய அரசால் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி அறிவுறுத்தப்பட் டது. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அனைத் துத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

    கூட்டத்தில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், நாகர்கோ வில் வருவாய் கோட் டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) சுப்பையா, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி, மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரி ஜெயந்தி, கூட்டு றவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சந்திரசே கர், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) பிரக லாதன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவகல்லூரி மருத்துவமனை சூப்பிரண்டு அருள்பிரகாஷ் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாலையில் மாநகராட்சி. நகராட்சிகள், பேரூ ராட்சிகள், ஊராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை, மீன்வளத்துறை, சுற்று லாத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை, தோட் டக்கலைத்துறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழ கம். ஆவின், மாவட்ட தொழில்மையம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு மேற் கொண்டார்

    • 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.
    • திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள வாரச் சந்தை வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுச் சந்தை நடைபெற்று வந்தது. அதன் பின்னா் இந்த சந்தை செயல்படவில்லை. இதையடுத்து மாடு வளா்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு இணங்க காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மாட்டுச்சந்தை செயல்பட முடிவு செய்யப்பட்டது.

    தற்போது காங்கயம் வாரச் சந்தை வளாகத்தில் தினசரி சந்தை, உழவா் சந்தை, சிறு மேடையுடன் கூடிய பொதுக்கூட்ட அரங்கம், பொது நூலகம், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி ஆகியன செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு சந்தைக்கான இடம் குறுகிய நிலையில் தற்போது இந்த வாரச் சந்தை வளாகத்தில் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் காங்கயம் நகரில் மாட்டுச் சந்தை அமைப்பதற்கு காலியிடம் இல்லாததால் தாராபுரம் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சக்தி நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் ஓராண்டு வாடகையாக ரூ. 3 லட்சம் செலுத்தி வாரம்தோறும் மாட்டுச்சந்தை செயல்பட உள்ளது.

    வரும் காலங்களில் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்பாக ஓராண்டு முன்னோட்ட அடிப்படையில் செயல்படவுள்ள இந்த மாட்டுச் சந்தையில் தற்போது ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை நாளை மாநிலம் முழுவதும் தொடங்கவுள்ளது. இதற்காக மாணவர்களின் விடைத்தாள்கள் ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை 625 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 44,831 மாணவர்கள் நடப்பாண்டு 10-ம் வகுப்பு தேர்வெழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிக்காக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் கல்வி மாவட்டத்தில், சூரமங்கலம் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆத்தூர் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சங்ககிரி கல்வி மாவட்டத்தில் ஜலகண்டாபுரம் மினர்வா பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிக்காக முகாம் அலுவலர்கள் தலை மையில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர், இதர பணியாளர்கள் என சுமார் 2,400-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை 24-ந் தேதி முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர் பணி களை தொடங்கி வைத்து, 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணியின்போது, தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள நேர விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி என்பது மிகவும் பொறுப்பான பணி. ஆனால் பல நேரங்களில் உரிய நேர விதிகள் கடைபிடிக்கப்படு வதில்லை. ஒரு சிலர் அவசர, அவசரமாக ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதாகவே மதிப்பீடு செய்துவிடுகின்றனர்.

    இதனை பார்த்து மற்றவர்கள் பதற்றமடைந்து விரைவாக திருத்த வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால், துல்லியத்தன்மை இல்லா ததுடன், குளறுபடிகளும் நடப்பதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கடந்த முறை விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்கு றைவுடன் இருந்ததாக ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த மையமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, விடைத்தாளை பொறுமையாக மதிப்பீடு செய்யும் வகையில், உரிய நேர விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

    • கடற்கரையில் ஓசோன் காற்று அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
    • தூய்மை பணி மேற்கொள்ள பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் ராட்சத பலூன்களை பறக்க விட்டனர்.

    அப்போது கலெக்டர் மகாபாரதி பேசியதாவது,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால் பூம்புகார் சுற்றுலா தளம் ரூ.24 கோடி செலவில் பூம்புகார் சுற்றுலா தளம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதேபோல தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மேம்படுத்தும் பணி மிக விரைவில் தொடங்கப்படும். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை தற்போது அருங்காட்சியமாக உள்ளது.

    மேலும் இங்கே கடற்கரையில் ஓசோன் காற்று அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    இத்தகைய தரங்கம்பாடி சுற்றுலா தளத்தை பிரபலப்படுத்தும் விதமாக ஓசோன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ஓசோன் என்பது ஆக்சிஜனின் மூலக்கூராகும். தூய்மை பண்ணி மேற்கொ ள்ள பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாகும்.

    சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வந்து செல்வதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சா ர்பில் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல அமைப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாதவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா, தரங்கம்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் அல்லா சாமி கோவில் தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்.
    • பல்வேறு பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் அல்லா சாமி கோவில் தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் நடைபெறும் குளம் புனரமைப்பு பணி, ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெறும் விளையாட்டு பூங்கா பணி, மாவட்ட நீதிமன்ற அலுவலகம் மற்றும் கழிவறை கட்டும் பணி போன்ற பல்வேறு பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தொடங்கி வைத்தார்
    • 15-வது மத்திய நிதி குழு மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட காளியாயன் விளை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜனை அணுகி தங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் 15-வது மத்திய நிதி குழு மானியத்திலிருந்து ரூ.3.26 லட்சம் ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாதேவி ரவிச்சந்திரன், 1-வது வார்டு உறுப்பினர் ராஜகுமாரி கலைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ரவிக்குமார், அனந்தகிருஷ்ணன், தியாகராஜன், அழகேசன், முத்துக்குட்டி, முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 20 வயதிற்கு மேற்பட்டவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • எந்த அரசியல் அமைப்பைச் சார்ந்தவராகவும் இருக்கக்கூடாது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படை பணிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாநகரில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண், பெண் ஆகியோர் ஆளினர் பதவிக்கு நிரப்பப்பட உள்ளனர்.

    இந்த பணிகளுக்கான விண்ணப்பத்தை திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பணியில் சேர 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 20 வயதிற்கு மேற்பட்டவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடனும், நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும். எந்த அரசியல் அமைப்பைச் சார்ந்தவராகவும் இருக்கக்கூடாது. திருப்பூர் மாநகரப் பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 24-ந் தேதிக்குள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
    • இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழைய பாளையத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.

    இக்கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்து, ராஜகோபுரம் அமைத்து கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின், திருப்பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர், கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    ×