search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225867"

    • கீழடிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கீழடியில் உலகதரம் வாய்ந்த சுமார் ரூ.18.43 கோடி செலவில் அமைக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் திறப்பு விழா நடந்தது.

    இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். தனது செல்போனில் செல்பி படம் எடுத்து கொண்டார்.

    முன்னதாக கீழடி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் நிகழ்ச்சியில் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    கீழடி கிராமத்துக்கு செல்லும் வழியில் கிராமிய பாடல்கள் பாடியும், கரகம் ஆடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர்- திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ.- நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜிமுதீன், மானாமதுரை ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நகராட்சி, யூனியன் துணைத் தலைவர்கள் பாலசுந்தரம், முத்துசாமி, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. தொண்டர்கள், கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

    • அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் நாடு முழுவதும் பவனி வரும் கிருஷ்ணர் ரதம் உடன்குடி வந்தது.
    • பக்தர்களுக்கு பகவத் கீதை மற்றும் ஆன்மீக புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    நெல்லையில் உள்ள அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் நாடு முழுவதும் பவனி வரும் கிருஷ்ணர் ரதம் உடன்குடி வந்தது. உடன்குடி பஜார், கொட்டங்காடு, சந்தையடியூர் உள்ளிட்ட பகுதிகளில் பவனி வந்த ரதத்திற்கு இந்து ஆலயப் பாதுகாப்புக்குழு மாநில செயலர் பாலன், தொழிலதிபர் மகேந்திரன், பா.ஜ.க. தொழிற்சங்க நிர்வாகி அப்பாத்துரை ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    உலக நாடுகளில் போர் பதட்டம் இன்றி அமைதி நிலவவும், நாட்டில் நன்கு மழை பெய்து விவசாயம், தொழில்வளம், வியாபாரம் பெருகவும் வேண்டி சிறப்பு பஜனைகள், பிரார்த்தனைகள் நடைபெற்றது. அனைத்து பக்தர்களுக்கும் பகவத் கீதை மற்றும் ஆன்மீக புத்தகங்கள் வழங்கப்பட்டது. பரமன்குறிச்சியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், சேவா பாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தின்படி ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையம் வந்தார்.
    • சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    சேலம்:

    'தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தின்படி ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையம் வந்தார். முதல்-அமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின்தனிப்பிரிவு செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் உடன் வந்தனர். விமான நிலையம் முன்பு காவல்துறை சார்பில் நடந்த அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    விமான நிலையத்தில் முதல்-அமைச்சருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் கள ஆய்வில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து காரில் புறப்பட்டு சேலம் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    • நாளை மதுரைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றுகிறார்.
    • ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    1½ கோடி தொண்டர் களின் எண்ணத்தை நனவாக்கும் வகையில், கழக பொதுக்குழு உறுப்பினர் களால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுத லோடு அ.தி.மு.க சிறப்பாக பணியாற்றி வருகிறது. அம்மா வழியில் சட்ட போராட்டம் நடத்தி, துரோகிகளின், விரோதி களின் சதி செயல்களை முறியடித்து, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வெற்றி யின் சின்னமான இரட்டை இலையை மீட்டெடுத்து உள்ளார்.

    அ.தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றி வரலாறு படைக்கும் வகையிலும், இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையிலும் நாளை (10-ந்தேதி) மதியம் 1 மணிக்கு இடைக்கால பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி, தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள, கூத்தியார் கூண்டு பகுதியில் 51 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் கழக கொடியினை ஏற்றி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா (நான்) தலைமை தாங்குகிறேன். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ராஜ் சத்யன் ஆகியோர் வரவேற்புரையாற்று கிறார்கள். பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், மேளதாளம் முழங்க, தாரை தப்பட்டை எதிரொலிக்க, பெண்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் மட்டுமல்லாது, பொது மக்களும் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
    • ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்திய தனி நபர் வருமான வரி வரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவை யில்லை என்ற அறி விப்பு பாராட்டத்தக்கது.

    நாடெங்கும் 157 நர்சிங் கல்லூரிகள் நிறுவ உத் தேசித்துள்ளதும், விவசாய தொழில் முனை வோரை ஊக்குவிக்க தனி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதும், மீன் வளத்துறையை மேம்படுத்த ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.79,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதும் பாராட்ட தகுந்த அம்சங்கள். மின்சார வாகனங்களுக்கு பொருத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி குறைப்பை வரவேற்கிறோம்.

    மிகப்பழைய அரசு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாக னங்க ளுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு, உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்த 50 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது சிறப்பான அம்சம்.

    இப்படி பல நல்ல அம்சங்களை கொண்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சேது கால்வாய் திட்டம் பற்றி ஒரு வரி கூட இல்லாதது தான் ஏமாற்றம் அளிக்கிறது. பொதுவாக இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கால்நடை மருத்துவமனை கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
    • தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவிலில் கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு புதிய கால் நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக அமைச்சருக்கு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் பூரண கும்பம் வரவேற்பு அளித்தார்.

    விழாவில் பூம்புகார் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., கோட்ட கால்நடை மருத்துவ இணை இயக்குநர் ஈஸ்வரன், கால்நடை மருத்துவர் அன்பரசன், திமுக துணை செயலாளர் ஞான வேலன், பி.எம்.சீதர், ஒப்பந்ததாரர் மயிலாடுதுறை கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன், துணை தலைவர் உமாராணி உள்பட தி.மு.க.நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் நல்லூர் மேற்கு நெல்லை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-வது இடம் பிடித்தனர்.
    • சிறப்பிடம் பெற்ற மாணவிகளை, பள்ளித் தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் பாராட்டினர்.

    ஆலங்குளம்:

    குடியரசு தினவிழா குழு போட்டிகள் அண்மையில் தருமபுரியில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில், 17 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் பிரிவில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் மேற்கு நெல்லை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-வது இடம் பிடித்தனர்.

    இதே போன்று, 32-வது தேசிய சப்-ஜுனியர் கபடிப் போட்டியில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த தமிழக அணியில், இப்பள்ளி மாணவியும், காளத்திமடம் தென்றல் அணியின் வீராங்கனையுமான ரோபோ அஜி மாய்ஷா இடம்பிடித்திருந்தார்.

    போட்டிகள் நிறைவு பெற்றதையடுத்து, இந்த மாணவிகள் ஊருக்கு திரும்பினர். அப்போது ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அப்போது, போட்டியில் சிறப்பிடம் பெற்ற அம்மாணவிகளுக்கு ஆலங்குளம் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளித்து, பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.டி.ஜாண்ரவி, பரணி சில்க்ஸ், ஆர்த்தி ஜவுளி ரெடிமேட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

    சிறப்பிடம் பெற்ற இம் மாணவிகளை, பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி ஜான்சிராணி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், காளத்திமடம் தென்றல் அணியின் தலைவர் செல்வகுமார், செயலாளர் உதயசூரியன், மேலாளர் கருணாகரன், தலைமை பயிற்சியாளர் ஆசீர்ராஜா, பயிற்சியாளர்கள் மணி டேவிட், ஸ்டீபன், கரிகாலன் உள்ளிட்ட முன்னாள் கபடி வீரர்கள் பாராட்டினர்.

    • இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என டி.எஸ்.பி. பிரீத்தி கூறியுள்ளார்.
    • நான் சைக்கிளில் செல்லும் வழியில் பொதுமக்கள், காவல் துறையினர் எனக்கு நல்ல வரவேற்பு அளித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்

    மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆயிசா மால்வியா (வயது24) உடற்கல்வி ஆசிரியரான இவர் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை பறைசாற்றவும், பெண்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வர முடிவு செய்தார்.

    இதற்காக அவர் கடந்த ஆண்டு நவம்பர் 14-ந் தேதி மத்தியபிரதேசத்தில் இருந்து தன்னந்தனியாக சைக்கிளில் பயணத்தை தொடர்ந்தார். அங்கிருந்து மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா சென்று விட்டு தமிழகம் வழியாக வடமாநிலங்கள் நோக்கி செல்லும் அவர் ராஜபாளையம் வந்தடைந்தார்.

    அவருக்கு ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள காவல்துணை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் ஆயிசா மால்வியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமது நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

    வழியில் எந்த விதமான அச்சுறுத்தலோ, இடையூறோ ஏற்பட்டதில்லை. இந்தியா வில் நடு இரவில் பெண்கள் அச்சமின்றி எப்போது நடமாட முடிகிறதோ? அப்போது தான் இந்தியா சுதந்திரம் பெற்ற முழு பயனை அடைய முடியும் என மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அவரது கனவு நனவாகி விட்டது.

    நான் சைக்கிளில் செல்லும் வழியில் பொதுமக்கள், காவல் துறையினர் எனக்கு நல்ல வரவேற்பு அளித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். இது மகிழ்ச்சியாக உள்ளது. எந்த நோக்கத்திற்காக சைக்கிள் பயணத்தை தொடங்கினேனோ அதில் எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசாருடன் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்
    • குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    புத்தாண்டையொட்டி வெளி மாவட்டங்களில் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    மேலும் வெளியூர்களில் தங்கி மீன்பிடித்த மீனவர் கள் பலரும் ஊருக்கு வந்துள்ளனர். இதை யடுத்து மாவட்டம் முழுவ தும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு வடசேரி, தக்கலை, குளச்சல், கன்னி யாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில் தக்கலை பஸ் நிலையம் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் அவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

    நிகழ்ச்சி யில், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், தக்கலை இனஸ் பெக்டர் நெப்போ லியன், வர்த்தக சங்க துணை தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் பல்வேறு தெரு வீதிகளில் இளைஞர்கள், வாலிபர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி னார்கள். புத்தாணை் டையடுத்து இன்று காலையில் திற்பரப்பு அருவியில் கூட்டம் அலை மோதியது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    மாத்தூர் தொட்டில் பாலம் குளச்சல் பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • இந்துஸ்தான் சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்தார்.

    மங்கலம்  :

    பா.ஜ.௧. மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மங்கலம் வந்தார். அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளித்தனர் . இந்துஸ்தான் சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்தார்.

    இதனைத்தொடர்ந்து பா.ஜ.௧.கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். கட்சியின் மாநில செயலாளர் மலர்கொடி, மாநில நிர்வாகி ஏ.பி.முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன், , இந்து மக்கள் கூட்டமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் சி.பி.சுப்பிரமணியம், பொருளாளர் கோபிநடராஜமூர்த்தி, துணைச்செயலாளர் மோகன்குமார் , இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளான ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, மகேந்திரன், கோகுல் சுப்பிரமணியம், சுவாமிடெக்ஸ், ஈஸ்வரன் ,அமிர்தம் டெக்ஸ் ஈஸ்வரன்,ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தராஜ் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் எம்.ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • மாநாட்டிற்காக நாகை மாவட்டம் கீழ் வெண்மணியில் இருந்து வெண்மணி தியாகிகள் ஜோதி பயண குழு தமிழகம் முழுவதும் பயணம் செல்கிறது.
    • பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    கேரளாவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 -வது மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக நாகை மாவட்டம் கீழ் வெண்மணியில் இருந்து வெண்மணி தியாகிகள் ஜோதி பயண குழு தமிழகம் முழுவதும் பயணம் செல்கிறது. இந்த நிலையில் பல்லடம் வந்த தியாகிகள் ஜோதி பயண குழுவிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்,பல்லடம் கடைவீதியில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாயிகள் சங்க நிதிச் செயலாளர் கிருஷ்ண பிரசாத், மாநில பொருளாளர் பெருமாள், மாநில துணைத்தலைவர் டில்லி பாபு, திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அரவிந்த் தகவல்
    • 2023-ம் ஆண்டு நடை பெறும் தேசிய இளையோர் கலை விழாவின் போது இந்த விருதைப் பெறுவார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    ஒவ்வொரு வருடமும், நேரு யுவக்கேந்திரா சார்பில் செயல் பாடுகளில் சிறந்து விளங்கும் இளைஞர் மன்றம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. சிறந்த மன்றமாக தேர்வு செய்யப்படும் மன்றத்துக்கு ரூ.25 ஆயிரத்திற்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

    மாவட்ட அளவில் முதல் பரிசை பெறும் மன்றம், மாநில அளவில் நடைபெறும் போட்டி யில் கலந்து கொள்ளும். மாநில அளவில் முதல் பரிசு ரூ.75 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசு பெறும் மன்றங்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள். தேசிய அளவில் வெற்றி பெறுபவர்கள் முதல் பரிசாக ரூ.3 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1 லட்சமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் பெறுவார்கள். தேசிய அளவில் வெற்றி பெறும் மன்றம்

    2023-ம் ஆண்டு நடை பெறும் தேசிய இளையோர் கலைவிழாவின்போது இந்த விருதைப் பெறுவார்கள்.

    மாவட்ட அளவிலான விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மன்றங்கள் நேரு யுவகேந்திராவில் இணைக்கப்பட்ட மன்றமாக இருக்க வேண்டும். முக்கிய மாக தமிழ்நாடு அரசு பதிவு சட்டப்படி பதிவு பெற்ற மன்றமாக இருத்தல் வேண்டும். ஏப்ரல் 2021-ல் இருந்து 31 மார்ச் 2022-க்கு உள்ளாகவோ அல்லது அதற்கு முன்பாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.

    பதிவு வருடா வருடம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வருடத் துக்கான விண்ணப்பங்க ளை நாகர்கோவில் பறக்கை ரோட்டில் பிரியா நகரில் உள்ள நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022-ம் ஆண்டுக் கான மன்ற செயல்பாடுகளை மட்டுமே குறிப்பிட வேண்டும். மேலும் ஒவ்வொரு செயல்பாட் டிற்கும் அதற்கான சான்று களை இணைக்க வேண்டும். பத்திரிக்கைச் செய்தி, புகைப்படம், சான் றிதழ் போன்றவைகளை அத் தாட்சிகளாக இணைக்க லாம்.

    2021-2022-ம் ஆண்டுக் கான தணிக்கை சான்றி தழையும் அதனுடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைந்த குழு ஆராய்ந்து விருதுக்கான மன்றத்தை தேர்வு செய்வார்கள். சிறந்த இளையோர் மன்ற விருதுக்கான விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 13.12.2022 ஏற்க னவே மாவட்ட அளவிலான சிறந்த மன்ற விருதைப் பெற்ற மன்றம் அந்த விருது பெற்று 2 ஆண்டுகள் முடிவடைந்திருந்தால் அவர்களும் இந்த விருதுக் காக விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    ×