என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 226127"
- போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தொடங்கபட உள்ளது
- இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வருகிற 20-ந் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் விபரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளாகிய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), ெரயில்வே தேர்வு குழுமம் (ஆர்.பி.ஐ), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (ஐ.பி.பி.எஸ்) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற வசதியாக இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வருகிற 20-ந் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் விபரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ம்தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் இளைஞர்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்புக்குழு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் கீழ் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தேர்வு செய்யப்பட்ட 272 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. இதன் தொடர்ச்சி யாக ராமநாதபுரம் மாவட்டத்தில் "போதைப்பொருள் தடுப்பு குழு" கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு உட்பட்டு கூலிப், ஹான்ஸ், சிகரெட் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதற்கான தடையை கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்யவும் போன்றபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
10.5.2023 அன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 தன்னார்வலர்களுக்கு திறன் வளர்ப்புபயிற்சி, மத்திய அரசின் "போதைப்பொருள் தடுப்புப்குழு" தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி மற்றும் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் மீரா போன்றவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோடைகால பயிற்சி முகாமானது கடந்த மே 2-ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது.
- விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட பிரிவு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் எஸ். எஸ். பழநிமாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு விளையாட்டு வீராங்கனை களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இந்த கோடைகால பயிற்சி முகாமானது கடந்த மே 2-ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது. இந்த பயிற்சியில் வாலிபால், தடகளம், கூடைபந்து ஆகிய போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்களிடம் அவர்கள் கற்றுக் கொண்டது மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்கள் குறித்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் ராஜ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், வாலிபால் மண்டல முதுநிலை மேலாளர் காந்தி மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.
- பயிற்சியின்போது தினசரி சிற்றுண்டி வழங்கப்பட்டது.
விருதுநகர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தி னால் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.
இந்த பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளின் உடல் திறன் மற்றும் விளை யாட்டு திறனை மேம்படுத் தும் பொருட்டு தடகளம், கூடைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து மற்றும் வாலிபால் போன்ற விளை யாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின் போது தினசரி சிற்றுண்டி வழங்கப் பட்டது. பயிற்சி முகாமில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 245 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு, கலெக்டர் ஜெயசீலன் சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமர மணிமாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாஹிர் உசேன், ராம்கோ நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன், பயிற்றுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள் வெளிநாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
- விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
வேளாண் அமைச்சர் 2023-24 நிதியாண்டின் நிதி நிலை அறிக்கை உரையில் உழவர்களுக்கு அயல்நாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தோட்டக்கலை, வேளாண் பயிர் சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களை பெறும் வகையில் இஸ்ரேல், நெதர்லாந்து போன்ற அயல்நாடுகளுக்கு சென்று பயன்பெறுவதற்கு உழவர் பெரு மக்களுக்கு இது வரப்பிரசாதமாகும்.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் tnhorticulture.tn.gov.in/thnortinet/registration-new.php என்ற இணையதள முகவரியில் நேரடியாகவோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
- 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கீழக்கரை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
ஹாக்கி பயிற்றுனர் மணிகண்டன் கடந்த 15 நாட்களாக மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இந்த நிலையில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேஷ் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைத்தலைவர் ஜெயக்குமார் வாழ்த்திப் பேசினார். இதில் தடகளம், ஓட்டப்பந்தயம், குழு விளையாட்டுப் போட்டிகள், கைப்பந்து என பல பயிற்சிகளில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இலவச பயிற்சி வகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றன.
தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் போலீஸ் துறையில் காலியாக உள்ள 615 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ள்ளது.
இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1-7-2023 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்த தேர்விற்கு 1-6-2023 முதல் 30-6-2023 வரை www.tnusrb.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வானது ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.
தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்விற்கான பாடத்திட்டம், தேர்விற்கு தயார் செய்யும் விதம், பாடக்குறிப்பு உள்ளிட்ட விளக்க வகுப்பு மற்றும் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெறும்.
எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 621 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை, சிறப்பு காவல் படை) பணிகளுக்கு நேரடி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள ஜூன் 1 முதல், 30ந்தேதி வரை விண்ணப் பிக்கலாம்.
இத்தேர்வுக்கான இலவசபயிற்சி வகுப்பு நாளை தொடங்கப்பட உள்ளது. இதில், சேரவிரும்பவர்கள், 2 புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும், தங்களின் விவரத்தினை இமெயில் வாயிலாகவும் அனுப்பலாம. கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அனைத்து போட்டித்தேர்வுக்கான காணொலி வழிகற்றல், மாதிரிதேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
- பெரம்பலூர் கிராம பஞ்சாயத்து இளைஞர்களுக்கு சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல் பயிற்சி நடைபெற உள்ளது
- இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள ஐ.ஓ.பி. ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்களுக்கான சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல் மற்றும் சேவை, ஸ்மோக் டிடெக்டர் அலாரம் பொருத்துதல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது. பயிற்சி கால அளவு 13 நாட்கள். பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராம பஞ்சாயத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் குடும்பஅட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 13-ந் தேதிக்குள் ஐ.ஓ.பி. கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரில் வந்து பதிவு செய்யவும். அல்லது 04328-277896, 9488840328, 8489065899 என்ற எண்ணிலோ தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
- வேளாண் விரிவாக்க பணியாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
- இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்க ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் செய்திருந்தார்.
ராமநாதபுரம்
வேளாண் விரிவாக்க பணியாளர்களுக்கு காலநிலை மாற்றத்திற்கேற்ற சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை சேகரிப்பது மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான பயிற்சி ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது. வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி தலைமை தாங்கினார். காலநிலை மாற்றங்களை எவ்வாறு கணிப்பது? காலநிலை மாற்றங்களை விவசாயிகளுக்கு முன்னறிவிப்பாக அளிக்கும் சேவை,காலநிலை மாற்றங்களால் வேளாண்மையில் ஏற்படக்கூடிய மாறுதல்கள், வேளாண் உற்பத்தியின் பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வளங்களை பாதுகாத்து கூடுதல் உற்பத்தி பெறுவதற்கான தொழில்நுட்பங்களாகிய எந்திர விதை விதைப்பு,நேரடி நடவு முறை, எந்திர நடவு முறை, நெல்லில் ஊடுபயிர், நெல்லில் சொட்டுநீர் பாசன முறை, கூடுதல் விதைப்பு விதைத்த வயலில் களை எடுக்கும் கருவி மூலம் சரியான பயிர் எண்ணிக்கை பராமரித்தல்,நெல் தரிசில் உளுந்து சாகுபடி மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், மாவட்ட வேளாண் வானிலைப்பிரிவு விஞ்ஞானி வெங்கடேசுவரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்க ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் செய்திருந்தார்.
- வருகிற 16-ந்தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) வெள்ளாடு வளர்ப்பு குறித்தும், 16-ந்தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்தும், 23-ந்தேதி கறவை மாடு வளர்ப்பு குறித்தும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் பங்குபெற முன்பதிவு அவசியமில்லை. பயிற்சியில் பங்கு பெறுபவர்கள் ஆதார் நகலுடன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெரம்பலூரில் நான் முதல்வன் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு 10-ந் தேதி தொடங்குகிறது
- போட்டி தேர்வு எழுதுபவர்களின் வசதிக்கேற்ப மாவட்ட அளவில் 2 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில், மத்திய அரசின் பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட அளவில் நடத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகள் பிரிவு எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் பணிக்கான தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), ரெயில்வே பணி தேர்வாணையம், வங்கி பணிகளுக்கான தேர்வாணையம் ஆகியவை நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 10-ந்தேதி தொடங்கி, தொடர்ந்து 3 மாதங்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வு எழுதுபவர்களின் வசதிக்கேற்ப மாவட்ட அளவில் 2 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூடுதல் அரங்கத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் வேப்பூர் வட்டார ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 150 மாணவர்கள் அல்லது இளைஞர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவார்கள். மாணவர்கள் பதிவுகள் தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் மூலம் ஆன்லைன் இணைப்பு (லிங்க்) வழங்கப்படும்.
150 மாணவர்களுக்கு மேல் பதிவுகள் நிகழ்ந்திருந்தால், மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பயிற்சி மையங்களுக்கு மாணவர்கள் சுலபமாக வந்து செல்லும் வகையில் போதிய போக்குவரத்து வசதி மற்றும் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் சிறப்பாக ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்