search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி"

    • கர்நாடகாவில் அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு கட்டாயம் முட்டை வழங்கவேண்டும்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள குண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் உள்ள மாணவர்களுக்கு உணவோடு முட்டை பரிமாறப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் போட்டோ எடுத்துள்ளனர்.

    பின்பு மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்கிறார்கள். அதன்பின் தட்டில் இருந்த முட்டைகளை மாணவர்கள் சாப்பிடும் முன்பே அங்கிருந்த ஊழியர் எடுத்து விடுகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, அங்கன்வாடி ஊழியர்களான லட்சுமி, ஷைனஜா பேகம் ஆகியோரை கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

    அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு கட்டாயம் முட்டை வழங்கவேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அங்கன்வாடியில் இருந்து அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு உணவு பொருள் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.
    • குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அங்கன்வாடிகள் மூலம் மதிய உணவு மற்றும் கொண்டை கடலை, பச்சை பயறு, கோதுமை போன்ற உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் சாங்கிலி மாவட்டம் பாலஸ் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் இருந்து அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு உணவு பொருள் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது, ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவுப்பொருள் பாக்கெட்டை திறந்தபோது, அதில் சிறிய அளவிலான பாம்பு செத்து கிடந்ததாக தெரிகிறது.

    இதைப்பார்த்து குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உணவுப்பொருளில் பாம்பு கிடப்பதை செல்போனில் படம் பிடித்தனர். மேலும் அது குறித்து அங்கன்வாடி பணியாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    அங்கன்வாடி பணியாளர் உணவுப்பொருளில் பாம்பு இருக்கும் படத்தை மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள் வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்தார். இதையடுத்து இந்த சம்பவம் அம்பலமானது.

    இந்த பிரச்சினை குறித்து கடந்த 2-ம் தேதி நடந்த சாங்கிலி ஜில்லா பரிஷத் துணை தலைமை நிர்வாக அதிகாரி கூட்டத்தில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட உணவுப்பொருள் இருந்த குடோன் உடனடியாக 'சீல்' வைக்கப்பட்டது.

    • அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
    • கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது.

    தென்காசி:

    ஆலங்குளம் அருகே உள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி கேயன் என்பவரது மகன் திருமாறன். (வயது3). தனது தாயுடன் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த திருமாறன் கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை வழங்கி னான். அதில் கூறியிருப்பதாவது:-

    குத்தப்பாஞ்சான் ஊராட்சி, பரும்புநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஆரம்ப கல்வி பயின்று வருகிறேன். இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர். எங்கள் பரும்பு நகர் பகுதியில் பரும்புநகர் மெயின் ரோடு வாறுகால் அமைக்கும் பணி நடைபெறு கிறது. இந்த வாறுகால் வழியாக கிராமத்தில் உள்ள கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது. கழிவுநீர் தேக்குவதால் அங்கு துர்நாற்றம் வீச கூடும். கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகும் இதனால் அங்கன்வாடியில் பயிலும் இளம் குழந்தைகளுக்கு தொற்று நோய் மற்றும் உயிர்கொல்லி நோய் வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனவே குழந்தை களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் அமைக்கும் வறுகால் பணியினை தடைசெய்து மாற்றுமுறையில் வேறு இடத்தில் கழிவு நீர் செல்லும் வகையில் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
    • மாதானம் ஊராட்சியில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே எருக்கூர் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி கிராம செயலக கட்டிடம், புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்ட ப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடம், மாதானம் ஊராட்சி யில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகிய 3 புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

    விழாவிற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ராமலிங்கம் எம்.பி., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஊராட்சி தலைவர்கள், காந்திமதி சிவராமன், முத்தமிழ் செல்வி சுப்பையன், வசந்தி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி ஒன்றி யங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சுழி, நரிக்குடியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள்,சி.ஐ.டி.யு. தலைவர் சாராள், ஒன்றிய கன்வீனர் சுரேஷ் குமார், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகி இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

    மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • சித்தம்பலம் அங்கன்வாடி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
    • பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் அங்கன்வாடி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் விநாயகர் மற்றும் முருகன் வேடம் அணிந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் அங்கன்வாடி ஆசிரியை பிருந்தா, மற்றும் உதவியாளர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மதி அங்காடி விற்பனை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • அங் காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் தேர்வு செய்யப்படும்

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காளையார்கோவில், சிவகங்கை அரண்மனை வாசல், கீழடி ஆகிய இடங்க ளில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட் களை விற்பனை செய்திடும் பொருட்டு மதி அங்காடி – விற்பனை மையம் மகளிர் திட்டம் வாயிலாக அமைக் கப்பட உள்ளது. அவ் விற்பனை மையம் அமைந் துள்ள உள்ளாட்சி அமைப்பு பகுதியில் உள்ள சுய உதவிக் குழு, கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

    தேசிய ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டாவது பூர்த்தி செய்து ஒரு வங்கிக்கடன் இணைப் பாவது பெற்று இருத்தல் வேண்டும்.

    அங்காடியின் உரிமம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்திடம் மட்டுமே இருக்கும். அங் காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் தேர்வு செய்யப்படும் சுய உதவிக் குழு, கூட்டமைப் பிற்கு 6 மாதங்களுக்கு வழங்கப் படும்.

    பின்னர் சுழற்சி முறையிலும், விற்பனை மற்றும் திறன் அடிப்படையிலும் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சித் துறை ஒருங்கிணைந்த கட்டிட வளாகம், வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகை அருகில், சிவகங்கை-630 562 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    மேலும், கூடுதல் விபரங்களுக்கு 04575 240962 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    அதனை ஏற்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அங்கன்வாடி கட்டிடத்தை குழந்தைகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இதில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆல்பர்ட் ஜெனில், முன்னாள் கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிளைமெண்ட் பிரேம்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி குழந்தைகள், பெற்றோர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
    • தற்போது போதுமான கட்டிட வசதி அடிப்படை வசதி இல்லாத குடிசை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் 11 லட்ச ரூபாய் மதிப்பில் புதியதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

    இதனால் இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் தற்போது போதுமான கட்டிட வசதி அடிப்படை வசதி இல்லாத குடிசை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

    அங்கன்வாடி குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி ஊராட்சி புதிய அங்கன்வாடி கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டிச்சாமி அணைவரையும் வரவேற் றார். இந்த புதிய கட்டிடத்தில் அதிநவீன வசதிகளும் செய் யப்பட்டுள்ளது. இதேபோல் அதே பகுதியல் மின் தட்டுப்பாட்டை போக்க அதிக திறன் கொண்ட புதிய மின்மாற்றியை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கி வைத்தார்.இந்த விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் லதா, ஒன் றிய செயலாளர் அண்ணா துரை, ஊராட்சி துணை தலைவர் முத்தையா, வாகுடி கிளை செயலாளர் வேலுசாமி, வாகுடி காலணி கிளை செயலாளர் ராஜேந் திரன், அன்னியேந்தல் கிளை செயலாளர் மணிகண் டன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப் ரகு மான், மேல பசலை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா, மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்குராஜா, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
    • புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    தாராபுரம்:

    தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக தளவாய்பட்டிணம் ஊராட்சி ஊத்துப்பாளையத்தில் கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்தார்.

    அப்போது அங்கன்வாடி மையம் சார்பில் புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    • மீண்டும் தரமற்ற பெயிண்ட் அடிக்க வந்துள்ளீர்கள் என கேட்டதால் வேலைக்கு வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த மோதல் சம்பவம் ஏற்படுவதை அறிந்து அப்பகுதி பொதுமக்களும் ஒன்று திரண்டதால் தாளநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் பஞ்சாயத்து அங்கன்வாடி மையத்திற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெயிண்ட் அடிக்க டெண்டர் எடுத்தவர்கள் வந்த பொழுது, அவர்கள் கொண்டு வந்த பெயிண்ட் தரமற்றதாக இருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் சக்திவேல் உள்ளிட்டோர் அங்கன்வாடி மையத்திற்கு தரமான பெயிண்ட் அடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனால் பெயிண்ட் அடிப்பதை தடுத்தனர். மேலும் இதுகுறித்து கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பின்பு நேற்று காலை பெயிண்ட் அடிப்பதற்காக வந்தவர்கள் தரமற்ற அதே பெயிண்ட் எடுத்து வந்து அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதை அடுத்து அங்கு வந்த மேலாண்மை குழு உறுப்பினர் சக்திவேல் ஏற்கனவே கட்டிடத்திற்கு தரமான பெயிண்ட் அடிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் உங்களுக்கு தகவல் தெரிவித்தும், மீண்டும் தரமற்ற பெயிண்ட் அடிக்க வந்துள்ளீர்கள் என கேட்டதால் வேலைக்கு வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த மோதல் சம்பவம் ஏற்படுவதை அறிந்து அப்பகுதி பொதுமக்களும் ஒன்று திரண்டதால் தாளநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மூன்று நாட்களுக்கு முன்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    ×