என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 226252"
- கல்லல், சாக்கோட்டை, காரைக்குடியில் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- அலுவலர்களுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டிஅறிவுறுத்தினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், கல்லல், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் தற்போது அனைத்து அலுவல கங்களிலும் ஆண்டாய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கல்லல், சாக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவ லர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையில் உள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அலுவலகப் பணியா ளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும், இ-சேவை மையம், நிலஅளவை பிரிவு, வட்ட வழங்கள் பிரிவு ஆகிய பிரிவுகளிலும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நிதிநிலை மற்றும் அலுவ லகங்களில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.
வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, பகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டிஅறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, உதவி திட்ட அலுவலர்கள் சேகர் (கல்லல்), இளங்கோ (சாக்கோட்டை), காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், செழியன் (கல்லல்), ஊர்காவலன், தவமணி (சாக்கோட்டை) உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.
- தர்மபுரம் மடம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.
கடையம்:
கடையம் அருகே தர்மபுரம் மடம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி, ரூ. 7 லட்சத்து13 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை திறப்பு விழா மற்றும், சமையல் கூடம், ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தி.மு.க.மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகாரி மீரா சாகிப், சசிகுமார், மோகன், அர்ஜுனன், முருகன், இளங்கோ, அந்தோணி சாமி, முல்லையப்பன், அந்தோணி தாமஸ் அருள் சதாம் உசேன், ஜஹாங்கீர், முருகன் முத்தையா, பக்கீர் மைதீன், பிவி கோதர் மைதீன் ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி மிக்கேல், சங்கர், ரம்யா ராம்குமார், ஊராட்சி தலைவர்கள் சன்னத் ,சதாம் முகமது உசேன், வளர்மதி சங்கரபாண்டியன், மகேஷ் பாண்டியன் அல்லாஹ் பிச்சை, ஆர்.எஸ். பாண்டியன், செல்வராஜ், கணேசன் , முருகன், பாலமுருகன், சுபேர் மேசியா சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- மானாமதுரை நகராட்சி பகுதியில் ரூ.10 கோடியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மானாமதுரை நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைகளுக்கென ராஜகம்பீரம் தலைமை நீரேற்று நிலையத்தில்
15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாகவும், மானாமதுரை பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருசக்கர வாகன நிறுத்தம் தொடர்பாகவும் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
மானாமதுரை பேரூராட்சியாக இருந்து, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் கூடுதல் அலுவலகக் கட்டிடத்திற்கென ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், மானா மதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய நகர்ப்புற சுகாதார மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடர்பாகவும், மானா மதுரை நகராட்சியின் உரக்கிடங்கு மையத்தில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் ஆய்வு செய்தேன்.
இந்த மையத்தின் கசடு கழிவு நிலைய மேலாண்மைப் பணிக்கான இடத்தை தேர்வு செய்வது குறித்தும், அரசக்குழி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மின் மயான கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் என மொத்தம் ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது போன்று சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசிரவிக்குமார், மானாமதுரை நகர்மன்றத் தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, நகராட்சி ஆணையாளர் சக்திவேல், நகர்மன்றத் துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அருப்புக்கோட்டை யூனியனில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.
- இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட் ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்படி கூரைக்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு ஆசிரியர்களிடம் மாண வர்களின் வருகை பதிவு, கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்ததுடன் கழிவறைகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். கழிவறையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர், குல்லூர் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் மானிய விலையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் கவுசிகாநதி உழவர் உற்பத்தியாளர் நிறு வனத்தின் ஒருங்கிணைந்த முதல்நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு வகைகள் தயாரிக்கும் முறைகள், தரம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.
குல்லூர்சந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருந்துகள், அங்கு வழங்கப்படும் சிகிச்சை, மருத்துவர்களின் வருகை குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
குல்லூர்சந்தையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு ரூ.340 லட்சம் மதிப்பில் 68 தொகுப்பு வீடுகளும், ரூ.11.30 லட்சம் மதிப்பில் 2 தனி வீடுகளும் என மொத்தம் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவல, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட் ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
- ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம், தேவகோட்டை யூனியன், கண்ணங்குடி யூனியன், ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்புவனம் அரசு மருத்துவமனை மற்றும் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய வற்றில் புற நோயாளிகள் பிரிவு, தாய்-சேய் நலப்பி ரிவு, மருந்தகம், மருந்துகளின் இருப்பு மற்றும் பராமரிப்புப் பதிவேடு, தேவையான மருந்துகளின் எண்ணிக்கை மற்றும் ஊசிபோடும் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவ லகத்தின் செயல்பாடுகள், தேவகோட்டை யூனியன், வீரை ஊராட்சி, கைக்குடி நடுநிலைப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் அறைக்கூடம் மற்றும் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கண்ணங்குடி கிராமத்தில் ரூ.7.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும், கண்டியூர் ஊராட்சி, வலையன்வயல், கீழக்குடியிருப்பில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டனர்.
- அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும்.
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் அனைத்துத் துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது. கலெக்டர் வினீத முன்னிலை வகித்தார்.
இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின் போது திருப்பூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கையில் இடம் பெறாதவை, தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், ஆகிய திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். தமிழக அரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும் என்றார்.
தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பெண் குழந்தைகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் வைப்புத்தொகை பத்திரத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) விஜயராஜ், (வளர்ச்சி) வாணி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மக்கள் குறை கேட்பு முகாம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
திருப்பூர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் தலைமையில் கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது.
அப்போது திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை கேட்பு முகாம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத் திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார்.
கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) விஜயராஜ், (வளர்ச்சி) வாணி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அரசு தொடக்கப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட சிறு மின்விசை திட்ட குடிநீர் தொட்டியை பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பாறைக்கடை செல்லும் சாலை பணி
கன்னியாகுமரி :
குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ரீத்தாபுரம் பேரூராட்சி 13-வது வார்டு சரல்விளை அரசு தொடக்கப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட சிறு மின்விசை திட்ட குடிநீர் தொட்டியை பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இதில் பேரூராட்சி மன்ற தலைவர் எட்வின் ஜோஸ், கவுன்சிலர் சோமன், பேரூர் காங்.தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் ராஜேஷ், செல்வி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பாறைக்கடை செல்லும் சாலை பணியையும், ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் யூதா காலனி செல்லும் சாலை பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்