என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நுகர்வோர்"
- மின்நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
- செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது
அரியலூர்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராமநாதபுரத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது.
- இந்த கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடனை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதாக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடனான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி மாலை 5.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.
வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
- எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது.
- பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், அசோசியேசன் எரிவாயு நுகர்வோர்கள், ரிவாயு முகவர்கள் மற்றும் அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இதில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கொரோனா நோய் தொற்றினை தடுப்பதற்காக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
- அதிக விலைக்கு சிலிண்டர் விற்ற தனியார் கியாஸ் ஏஜென்சிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விட்டது.
- கேஸ் கம்பெனியின் அதிக வசூல், குறித்து வாடிக்கையாளர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் கடந்த ஆண்டு 2019 மே 6-ந் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் ரீபிள் கேட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்தார். கேஸ் ஏஜன்சியினர் சசிகலா பெயரில் ரசீது போட்டு கட்டணம் ரூ.746 என பதிவு செய்துள்ளனர்.
மே 11-ந் தேதி கேஸ் கம்பெனியினர் சமையல் கேஸ் சிலிண்டரை சசிகலாவின் வீட்டிற்கு கொண்டு வந்து விநியோக புத்தகத்தை வாங்கி கையெழுத்திட்டு, கேஸ் சிலிண்டருக்கு ரூ.800 கட்டணம் கேட்டுள்ளனர். வாடிக்கையாளர் சசிகலா ரசீதில் ரூ.746 என்று தான் உள்ளது. அதை மட்டுமே தருவேன் என்று கூறவே, பணியாளர் ரூ.800 கொடுத்தால் தான் சிலிண்டர் தரமுடியும், இல்லையெனில் நான் திருப்பி எடுத்துப் போகிறேன் என்று கூறிவிட்டு சிலிண்டரை எடுத்துச் சென்றுவிட்டார்.
கேஸ் கம்பெனியின் இத்தகைய அதிக வசூல், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைக்குறைபாடு மற்றும் நேர்மையற்ற வணிக முறையாகும் என சசிகாலா நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் முத்துக்குமார், ரத்தினசாமி ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.
விசாரணை முடிவில், வாடிக்கையாளருக்கு பில் விலையிலேயே கேஸ் சிலிண்டரை விநியோகம் செய்ய கோர்ட் உத்திரவிட்டது. மேலும், சசிகலாக்கு கேஸ் ஏஜென்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மனஉளைச்சல் இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கின் செலவுத் தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் நல நிதிக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை 2 மாதத்தில் நிறைவேற்றா விட்டால் சசிகலாக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயன் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார்.
- கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் டாக்டர்.அருணாசலம் தலைமை தாங்கினார். உழவர் விவாதக்குழு அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றுப்பேசினார். முன்னாள் செயலாளர் ஆசிரியர் விஸ்வநாதன், துணைச்செயலளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுந்தப்பாடி நுகர்வோர் அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்லமுத்து வரவு-செலவு கணக்கு வாசித்தார். மாநில அளவில் கரும்பு விளைச்சலில் சாதனைபடைத்த அரியப்பம்பாளையம் விவசாயி குமார், வேம்பத்தி விவசாயி ஈஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
பெங்களூரில் இந்திய அளவில் நடைபெற்ற தட்டு எறியும் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலயாவில் நடைபெறும் சர்வதேசஅளவிலான தட்டெறிதல் போட்டிக்கு தேர்வு பெற்ற தலைமை காவலர் சரவணக்குமார், சென்னை நேருவிளையாட்டு அரங்கில் இந்திய அளவில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2-ம் பிடித்த சண்முகம் ஆகியோருக்கு பரிசுவழங்கி பாராட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர் வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம், சலங்கபாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் ராமலிங்கம், தலைைமயாசிரியர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
- கலெக்டர் தெரிவித்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) தலைமையில் வருகிற 28.6.22 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டுதங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்