search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி"

    • விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது சோகம்
    • போலீசார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே வட்டக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன், டெம்போ டிரைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திவாகர் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கண்ணன் தற்பொழுது காணி மடத்தில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கண்ணனின் மகன் திவாகர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை அடுத்து திவாகர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இதையடுத்து நேற்று வீட்டில் இருந்து திவாகர் தனது தாயார் சித்ரா மற்றும் சகோதரி உடன் அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் அங்கு கடல் அலையை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது திவாகர் கடலில் இறங்கி கால் நனைத்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ராட்சத அலை அவரை இழுத்துச்சென்றது. தாய் மற்றும் சகோதரியின் கண் எதிரே திவாகரை ராட்சத அலை இழுத்துச் சென்றதைப் பார்த்த அவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசுக்கும், கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட் டது.

    அவர்கள் சம்பவ இடத் திற்கு வந்து தேடுதல் வேட் டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் திவாகர் பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திவாகரை அலை இழுத்துச் சென்ற இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

    இதை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திவாகரின் உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்கள் திவாகர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதற்கிடையில் போலீ சார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ராட்சத அலையில் மாணவன் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    • கொழுக்கட்டை, பொரி படைத்து வழிபாடு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி இந்து மகா சபா பாரதிய ஜனதா தமிழ்நாடு சிவசேனா உள்பட பல்வேறு இந்த அமைப்பு கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முக்கிய சந்திப்புகள் பொது இடங்களில் விநா யகர் சிலைகளை இன்று அதிகாலையிலேயே பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு பக்தர்கள் கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தார்கள். மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 2 அடி முதல் 10 அடி உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளது. கற்பக விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர் உள்பட பல்வேறு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய் யப்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற் கொண்டனர். விநாயகர் சிலைகள் உரிய அனுமதி வாங்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகர் கோவில்களிலும் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள், அபிஷேகங்கள் நடந்தது. இதை எடுத்து விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோட்டார், மீனாட்சிபுரம், வடசேரி, கிருஷ்ணன் கோவில் உள்பட நாகர் கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநா யகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    விநாயகருக்கு பொரி, கொழுக்கட்டை படைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்றிரவு தக்கலை, குளச்சல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட் டார். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பேச்சிப்பாறையில் 24.8 மி.மீ. பதிவு
    • திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நேற்று காலை சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மாலையில் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது மாவட்ட முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது.

    இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது நாகர்கோவிலில் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய மழை 11 மணி வரை இடைவிடாது பெய்தது. அதன் பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது. தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் கனமழைகொட்டி தீர்த்தது. பூதப்பாண்டி, கொட்டாரம், அடையாமடை, ஆரல்வாய் மொழி, கோழிப்போர் விளை, முள்ளங்கினா விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்ய மான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப் பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்திருந்தனர். பேச்சிப் பாறையில் அதிகபட்சமாக 24.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட் டம் இன்று காலை 42.82 அடியாக உள்ளது அணைக்கு 660 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 569 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சானி அணை நீர்மட்டம் 68.45 அடியாக உள்ளது. அணைக்கு 373 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 310 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.89 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நாகர்கோவில்-3.2, பேச்சிப்பாறை-24.8, சிற் றார்-1-20.2, பாலமோர்-15.6, திற்பரப்பு-15, கொட் டாரம்- 13.2, கோழிப்போர் விளை-4.8, அடையா மடை-5.2, முள்ளங்கினா விளை-7.6, சுருளோடு-6.

    • போலீசார் அதிரடி நடவடிக்கை
    • கஞ்சா குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தனிகவனம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தனிகவனம் செலுத்தி வருகிறார்கள்.

    போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போலீசாரின் அதிரடி சோதனையின் காரணமாக தற்பொழுது கஞ்சா விற்பனை ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது.

    சமீபகாலமாக சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா  ரெயில் மற்றும் பஸ்களில் வாங்கி வரப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் பஸ் நிலை யங்களிலும் ரெயில் நிலை யங்களிலும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புனேயில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலை மையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் பேக் ஒன்று இருந்தது.

    அந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.ஆனால் யாரும் சிக்க வில்லை. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலில் அனாதையாக கிடந்த 12.450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருந்தனர்.

    மாவட்டம் முழுவதும் போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 25 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் அந்த ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தார்கள்.அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது 2.100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பணக்குடியை சேர்ந்த இராமையா (வயது 38) என்பதும் ராதாபுரம் லட்சுமிநகர் பகுதியில் சேர்ந்த ஆண்டனி சுரேஷ் (54) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • தற்போது பறக்கை பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கடுக்கரை, சிறமடம், திட்டுவிளை, தாழக்குடி, செண்பகராமன்புதூர், தேரூர், பறக்கை, கிருஷ்ணன்கோவில் மற்றும் திங்கள்நகர் பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    தற்போது பறக்கை பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதனை தனியார் அரிசி ஆலையினர் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். 1 கோட்டை (87 கிலோ) நெல் ரூ. 1,550 முதல் ரூ. 1,670 வரை கொள்முதல் செய்து வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையம் இப்பகுதிகளில் தொடங்கி இருந்தால் 1 கோட்டை நெல் ரூ. 1,840 வரை கிடைத்திருக்கும் தனியாருக்கு கொடுப்பதில் இருந்து ரூ. 200 வரை கூடுதலாக கிடைத்திருக்கும். இதனால் விவசாயிகள் பயனடைந்து இருப்பார்கள்.

    இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் நலன் கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கன்னிப்பூ அறுவடையில் விவசாயிகள் அதிக மகசூல் எதிர்பார்ப்பதால், வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 60 மூடை நெல் கொள்முதல் செய்வதை உயர்த்தி 70 மூடை வரை நெல் கொள்முதல் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • பெருஞ்சாணியில் 7.8 மி.மீ. பதிவு
    • திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று திடீரென சீதோசன நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

    மலையோர பகுதிகளி லும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. லேசான சாரல் மழை காலையில் பெய்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு சென்றனர்.

    தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய் மொழி, கோழிப்போர் விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதி களிலும் மலையோர பகுதி யான பாலமோர் பகுதி யிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 7.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.10 அடியாக உள்ளது.

    அணைக்கு 610 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 560 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.03 அடியாக உள்ளது. அணைக்கு 269 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 310 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 12.92 அடியாகவும், சிற்றார்-2அணையின் நீர்மட்டம் 13.02 அடியாக வும், பொய்கை அணை நீர்மட்டம் 17.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.06 அடியாகவும், உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது.

    • பூஸ்டர் தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள்
    • இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    18 வயதிற்கு மேற்பட்ட வர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந் தால் 6 மாதம் கழிந்ததும் 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி வருகி றார்கள். ஆனால் பலர் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும்பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    தடுப்பூசி செலுத்தா தவர்கள் உடனடியாக பக்கத்தில் உள்ள மையங்க ளுக்கு சென்று தடுப்பூசி எடுத்துக்கொள்ள வசதியாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. இன்று மாவட்டம் முழுவதும் 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    நாகர்கோவிலில் வடி வீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், தொல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையம், வடசேரி ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலை 7 மணி முதலே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மையங்களில். கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்த வந்தவர்களுக்கு உட னுக்குடன் தடுப்பூசி செலுத் தப்பட்டது.

    அண்ணா பஸ் நிலை யத்தில் சுகாதார பணியா ளர்கள் தடுப்புச் செலுத்தும் பணியை மேற்கொண்டனர். பஸ்களில் பயணம் செய்தவர்களும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய் யப்பட்டது.

    வடசேரி பஸ் நிலையம், வடசேரி சந்தை, வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரி, குளச்சல் அரசு ஆஸ்பத்திரி, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்தி ரிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 2200 இடங்களில் தடுப்பூசி போடும் பணி இன்று நடந்தது.

    கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ெமகா தடுப்பூசி முகாமில் மதியம் 1 மணி வரை சுமார் 18,000-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி இருந்த னர்.

    தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெறும். 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கழித்து இருந்தால் உடனடியாக தடுப்பூசி முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இனிவரும் காலங்களில் கட்டணம் செலுத்தியே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

    • நாகர்கோவிலில் இன்று நள்ளிரவு முதல் 12 நாட்கள் நடக்கிறது
    • அண்ணா விளையாட்டரங்கத்தை வீரர்கள் 4 முறை சுற்றி வரவேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவு தொடங்குகிறது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், விருது நகர், காரைக்கால், பெரம் பலூர் உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளை ஞர்கள் பங்கேற்க உள்ள னர்.

    இதற்காக ஆன்லைன் மூலமாக 36 ஆயிரம் இளைஞர்கள்  விண்ணப் பித்ததாக கூறப்படுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. தினமும் 3000 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை, திருவனந்தபுரம், சென்னையிலிருந்து 140-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் ராணுவ உயர் அதிகாரிகளும் நேற்று இரவு வந்தனர். ராணுவ வீரர்கள் தேர்வு இன்று இரவு நடைபெறுவதையடுத்து இன்று காலையிலேயே பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் வர தொடங்கினார்கள்.

    இதனால் வடசேரி பகுதி யில் காலை முதலே இளை ஞர்களின் கூட்டம் அதிக மாக இருந்தது. ராணு வத்திற்கு ஆள் சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு வருகை தரும் இளைஞர்கள் அமர வசதியாக மூன்று இடங்களில் பந்தல் அமைக் கப்பட்டு உள்ளது.

    உழவர் சந்தை திடல், மாநகராட்சி புதிய அலு வலக கட்டிட வளாகம், அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து நீச்சல் குளத்திற்கு செல்லும் பகுதி ஆகிய பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வசதியாக குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இன்று தொடங்கும் ஆள் சேர்ப்பு முகாம்வருகிற 1-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

    வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு வசதியாகவும் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வின்போது அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கு வருபவர்களுக்கு உடல் தகுதி மேற்கொள் ளப்படும்.

    மேலும் 1600 மீட்டர் தூரத்தை ஓடும் வகை யில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.நாகர்கோவில் அண்ணா விளை யாட்டரங்கத்தின் ஓடு தளம் 400 மீட்டர் நீளம் கொண்டதாகும்.இத னால் அண்ணா விளை யாட்டரங்கத்தை வீரர்கள் 4 முறை சுற்றி வரவேண்டும். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் ஆள் சேர்ப்பு முகாம் அதிகாலை வரை நடைபெறும்.

    பின்னர் மறுநாள் நள்ளிரவு நடத்தப்படும். நள்ளிரவு ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதால் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடை பெறும் அண்ணா விளை யாட்டு அரங்கம் முன் பகுதியில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    • குளச்சலில் துணை சூப்பிரண்டு தங்கராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • குளச்சல் சப்-டிவிசன் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்ட னர்.

    கன்னியாகுமரி:

    மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளிடையே போதை எதிர்ப்பு பிரசாரமும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவுப்படி குளச்சல் சப் - டிவிசன் சார்பில் போதை எதிர்ப்பு இரு சக்கர வாகன பேரணி நேற்று மாலை குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் முன்பு நடந்தது. குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணி உடையார்விளை, லட்சுமிபுரம், செட்டியார் மடம், திங்கள்நகர் வழியாக இரணியல் போலீஸ் நிலையம் சென்றடைந்தது.இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியன் பெஞ்சமின், சப் - இன்ஸ் பெக்டர்கள் சுரேஷ்குமார், பாலசெல்வன், குருநாதன் மற்றும் மகளிர் போலீசார் உள்பட குளச்சல் சப்-டிவி சன் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்ட னர்.

    • போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேச்சு
    • ஆன்லைன் மற்றும் சைபர் மோசடிகளில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சார்பில் மாதாந் திர குற்ற தடுப்பு கூட்டம் நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரசு குற்ற வழக்கறிஞர்கள், மருத்துவ அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகா ரிகள், சிறை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண் டனர். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேசியதா வது:-

    கஞ்சா, குட்கா புழக்கம் மாவட்டத்தில் அறவே இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும், கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் நபரின் வங்கி கணக்குகள், மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட்ட நபரின் வீடு சோதனையிடப்பட்டு வழக்குக்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட வேண்டும். கஞ்சா, குட்கா எங்கிருந்து பெற்றனர் போன்ற விவரங்கள் சேக ரிக்கப்பட வேண்டும்.

    ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த விதமான பாரபட்சமும் இருக்கக் கூடாது. தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபருக்கு சரித்திரபதிவேடு தொடங்கப்பட வேண்டும், ரவுடிகளுக்கு நன்னடத்தை பிணை வாங்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

    போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.கந்து வட்டிதொடர்பான வழக்குகளில் உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு உடனடியாக சட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவுகள் பதிவிடு பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன் லைன் மற்றும் சைபர் மோசடி களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அந்தந்த போலீஸ் நிலை யங்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அலுவல் செய்வதற்கு அனைத்து முன்னேற்பாடு களையும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் கோவில்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
    • 50- க்கு மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்த ஏற்பாடு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. நாளை 15-ந்தேதி காலை 9 மணிக்கு கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி வைக்கிறார்.

    பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடக்கிறது. சுதந்திர தின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அண்ணா ஸ்டேடியத்தில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்றும் நடந்தது.

    சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    முக்கிய சந்திப்புகள், அரசு அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.போலீசார் இரவு நேர ரோந்து பணியையும் தீவிர படுத்தியுள்ளனர்.இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாசல்களில் மெட்டல் டிடெக்டர் வாசல் போடப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள லாட்ஜு களில் 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவில் ெரயில் நிலை யத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் கள். ெரயில் நிலைய வாசலில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டுள்ளது. ெரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் முழுமை யான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வரு கிறார்கள். பயணிகளின் உடைமைகள் முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, அஞ்சு கிராமம் சோதனை சாவடி களில் கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங் களிலும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து போலீ சார் சோதனை மேற் கொண்டு உள்ளனர்.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 50- க்கு மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    • 4 பேருக்கு மட்டுமே தொற்று
    • கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 21,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் 656 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 4 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    குருந்தன் கோடு ஒன்றியத்தில் 2 பேரும், நாகர்கோவில், தக்கலை பகுதியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 21,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ×