என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 227301"
- சாலையோர பாதுகாப்பு பணியில் நிற்கும் போலீசாருக்கு தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
- போலீசார் அசராமல் பணி செய்ய பயனுள்ளதாக அமைந்தது.
ராமநாதபுரம்
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. சாலையோரம் பாது காப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் முதன் முறையாக ராமநாதபுரத்தில் தற்காலிக நிழற்குடை அமைத்து கொடுத்து அசத்தி யுள்ளனர்.
நீண்ட தூரம் மரமோ, நிழற்குடையோ இல்லாத பகுதிகளில் சாலை யோரம் நிற்கும் போலீசாருக்கு மடக்கும் தன்மை யுடன் கூடிய நிழற்குடை அமைத்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு பணியில் போலீசார் அசராமல் பணி செய்ய பயனுள்ளதாக அமைந்தது. ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் இந்த முன்னெடுப்பு சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ேபாலீசாருக்கு 250 பிரத்யேக சுருக்கி மடக்கும் குடை வாங்கப்பட்டுள்ளது. கவர்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு 120 குடைகள் வழங்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்றார்.
- திருமங்கலத்தில் சாலையோர வியாபாரிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
- வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் பல்வேறு பகுதிகளிலும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் 12 மற்றும் 13 வது வார்டுகளில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த சாலை யோர வியாபாரிகள்
100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
விழாவில் மணிமாறன் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தற்போது தி.மு.க.வை நாடிவரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
விரைவில் குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், நகர அவை தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிமாறன் ஒவ்வொரு வீடாக சென்று தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்தார்.
- பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது.
- 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதிபொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது. உடனே குழந்தையின் உடலை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தையின் தாய் யார், எதற்காக வீசி சென்றார் என்று தெரியவில்லை. குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததால் வீசி சென்றாரா அல்லது தகாத உறவு காரணமாக பிறந்ததால் வீசி சென்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தகவல்
- போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை
நாகர்கோவில்:
நாகர்கோவில் மூவேந்தர் நகரில் ரூ. 13 லட்சம் மதிப்பிலான சாலை பணியை மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஒயிட் ஹவுஸ் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில் பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே டதி பள்ளி பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது .இதை ஒழுங்குப்படுத்தும் வகையில் ஒயிட் ஹவுஸ் தெருவில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான முதல் கட்ட ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
கோட்டார் சவேரியார் ஆலய பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்பட்டு வழக்கம் போல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது ஆணையர் ஆனந்த மோகன் என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர், மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது
- படிக்கட்டுகள், கடைகள் முன்பு போடப்படும் தகர சீட்டுகளையும் அப்புறப்படுத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநக ராட்சி அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.
நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடந்தது.
நகர் நல அதிகாரி பொறுப்பு ஜாண், சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ் ஆகி யோர் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.படிக்கட்டுகள், கடைகள் முன்பு போடப்படும் தகர சீட்டுகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
சுமார் 60 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஊழியர்கள் அகற்றினர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன.
- வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் கிடையாது.
உடுமலை :
உடுமலை நகரில் ராஜேந்திரா ரோடு, கல்பனா வீதி, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட வழித்தடங்கள் பிரதான பகுதியாக உள்ளன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன.தினமும் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் என எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. ஆனால் இப்பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் கிடையாது. பெரும்பாலான வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு, தங்கள் பணிகளுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த ரோடுகளில் தினமும் இடநெருக்கடி நீடிப்பதால், வாகன ஓட்டுனர்கள் திணறுகின்றனர்.
முறையற்ற போக்குவரத்து, வாகன நிறுத்தம் இல்லாமை போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கின்றனர். மத்திய பஸ் நிலையம் ஒட்டிய ரோடுகளில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சிறு விபத்துக்களும் அதிகரிக்கின்றன. பிரதான பகுதிகளில், வாகன நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய கடைகள், நிறுவனங்கள், உணவகங்களில் வாகனம் நிறுத்த வசதி ஏற்படுத்தாவிடில், உரிமத்தை புதுப்பிக்க அனுமதிக்கக்கூடாது. விதிகளை மீறும் தனி நபர், நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது, போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு தொடர்ந்தால் மட்டுமே விதிமீறலை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மதுக்கூர், வடசேரிலிருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் 7 பேர் வந்து இன்று அதிகாலை வந்து கெண்டிருந்தனர்.
- நுகர்பொருள் வாணிபக் கழகம் எதிரே நெல் காயவைத்துள்ளது தெரியாமல் அதில் உள்ள பேரிகாடில் கார் மோதி உள்ளது.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் - திருக்கானூர்பட்டி சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளது. அங்கு நெல்லை சாலையில் கொட்டி வைத்து நேற்று காய வைத்துள்ளனர். பின்னர் பர்தாவை போட்டு நெல் குவியல்கள் மூடி வைக்கப்பட்டு இருந்துள்ளது.
இந்நிலையில் மதுக்கூர், வடசேரிலிருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் 7 பேர் வந்து இன்று அதிகாலை வந்து கெண்டிருந்தனர். அப்போது நுகர்பொருள் வாணிபக் கழகம் எதிரே நெல் காயவைத்துள்ளது தெரியாமல் அதில் உள்ள பேரிகாடில் கார் மோதி உள்ளது. இதில் நிலை தடுமாறி கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
இதில் காரில் வந்த வடசேரி நெம்மேலி பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் காரில் பயணம் செய்த ராமமூர்த்தி (50), பாலமுருகன் (35), மாரிமுத்து (60), சங்கீதா (40), அன்பரசன் (45), சிறுவன் பிரிநீத் (5) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த 3 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான திருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாலையில் நெல்லை காய வைத்து மூடி வைக்கப்பட்டு இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்