என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 227917"
- அம்பாளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- கரகம், காவடி ஆட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, தென்னம்புலம் மழை மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாள் சிம்ம, கிளி, அன்னபச்சி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று தென்னம்புலம் கருப்பங்காடு பகுதி சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, பின் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்பு, புலி வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
தொடர்ந்து, கரகம், காவடி ஆட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. நிகழ்ச்சியை கருப்பங்காடு கிராமமக்கள் செய்திருந்தனர்.
- அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- தொடர்ந்து, கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் முல்லை நகரில் எழுந்தருளி இருக்கும் சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், அலகு காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து நேத்தி கடன் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
108 சிவாலயம் முல்லை நகர், கிராமவாசிகள், விழா குழுவினர், மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
- குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திகரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் உள்ள வீரமகாசக்தி பத்திரகாளி அம்மன் கோவிலில் 12-ம் ஆண்டு திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு நேற்று 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திகரகம், திரிசூலம், அக்னி கொப்பரை, அரிவாள் எடுத்தும், பால்குடம், காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
- முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
- ஜபம், ஹோமம் நடைபெற்று, பின்னர் பூர்ணாஹூதி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது.
திருநிலை நாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வ ரர்சுவாமி அருள்பாலி க்கிறார்.
இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சித ருகிறார்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து 8கால யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கியது.
சுவாமி, அம்பாள்,தோணியப்பர்,சட்டைநாதர்,முத்துச்சட்டைநாதர் ஆகிய தெய்வங்களுக்கு நவாக்கினியும், பரிவாரங்கள் சேர்த்து 82 யாக குண்டங்கள் அமைக்க ப்பெற்று,120 வேதவி ற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் தொடங்கியது.முன்னதாக கலாகர்ஷணம், யாத்ராஹோமம், யாகசாலை பிரவேசம் நடந்தது.
பின்னர் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. ஜபம், ஹோமம் செய்து பின்னர் பூர்ணாஹூதி, மகாதீபாரா தனை நடந்தது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.
திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர்தம்பிரான் சுவாமிகள், தமிழ் சங்கத்த லைவர் இ.மார்கோனி, காசாளர் செந்தில், மகாலெட்சுமி அம்மாள், உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- 9 நவதானியங்களால் மூலை அனுமாருக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
- வைகாசி அமாவாசை அன்று ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பாகும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மேலவீதியில் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.
சேதுபாவா சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலை அனுமார் வாலில் சனீஸ்வரன் பகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.
இக்கோவில் வாஸ்து தோஷம் மற்றும் நவக்கிர தோஷ பரிகாரம் ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு பக்தர்கள் அமாவாசை தோறும் 18 அகல் தீபமேற்றி 18 வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் நாளை ( வெள்ளிக்கிழமை) வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு இலட்ச ராம நாமம் ஜெபம் நடைபெறும்.
தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் , சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு நவக்கிரக தோஷம் நீங்க வேண்டி சம்பா கோதுமை,கொள்ளு, துவரை, மொச்சை, கொண்டகடலை,
பயிறு, எள், காரமணி, கருப்பு உளுந்து போன்ற ஒன்பது நவதானியங்களால் மூலை அனுமாருக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் அதையடுத்து 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி வழிபாடு நடைபெறுகிறது.
வைகாசி அமாவாசை அன்று ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பாகும்.
அமாவாசை அன்று பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு நவதானியங்களை வாங்கி வந்து மூலை அனுமாருக்கு படைத்து அதனை திரும்ப பெற்று வீட்டிற்கு எடுத்துச் சென்று நவதானியங்களை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை வடிகட்டி வெல்லம் சேர்த்து பசுமாட்டிற்கு கொடுத்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இந்த வழிபாட்டை ஏராளமான பக்தர்கள் மேற்கொள்ள வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.
- சீர்வரிசை பொருட்களை தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர்.
- தொடர்ந்து, சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசத்தில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோவிலில் 9-ம் ஆண்டு சித்திரை திருவிழா காப்பு கட்டுதல், கரகம் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளில் ஊர்மக்கள் ஒன்றாக திரண்டு அம்மனை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து புடவை, பழம், பூ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர்.
பின்னர், அவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து படைவெட்டி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தார். இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
- காலை 8 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
- வருகிற 22-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள விஜயராமர் கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ராமநவமி , வைகுண்ட ஏகாதசி , புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜய ராமரை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரமோற்சவம் 9 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு இன்று (செவ்வாய்கிழமை) முதல் வரும் 24-ம்தேதி வரை வைகாசி பிரமோற்சவம் விழா நடைபெறுகிறது.
வைகாசி பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வைகாசி பிரமோற்சவம் நடைபெறும் நாட்களில் காலை 8 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும். மாலை 6.30மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நான்கு ராஜ வீதிகளிலும் நடைபெறும்.
இன்று அன்னப் பட்சி வாகனமும், நாளை சிம்ம வாகனம், 18-ம்தேதி அனுமந்த வாகனம், 19-ம்தேதி சேஷ வாகனம், 20-ம்தேதி கருட சேவையும். 21-ம்தேதி யானை வாகனமும், 22-ம்தேதி திருக்கல்யா ணமும் , 23-ம்தேதி குதிரை வாகனமும் ,24-ம்தேதி திருத்தேரும் நடைபெறுகிறது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் உபயதா ரர்கள் செய்து வருகின்றனர்.
- காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
- சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 37-வது ஆண்டாக சித்திரைத் திருவிழாவை தீயாடியப்பர் பஸ் நிலைய டாக்ஸி, டூரிஸ்ட் வேன், மினி வேன், ஆட்டோ உரிமையாளர்கள் தொழிலாளர்கள் இணைந்து நடத்தினார்கள்.
திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் நாக்கில் உடல் முழுவதும் அலகு குத்தி கொண்டு, ஆட்ட காவடி, பறவை காவடி எடுத்து திருக்காட்டுப்பள்ளி வீதிகளின் வழியாக சிறப்பு கிராமிய இசையுடன் ஊர்வலமாக வந்து தெண்டாயுதபாணி சுவாமி கோவிலை அடைந்தனர்.
அங்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலையில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவாரூர்:
நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.
இதனையொட்டி நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர் கோவிலில் உள்ள சித்திவிநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி, நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோவிலில் உள்ள சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார், காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள விநாயகர், நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் உள்ள விநாயகர், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் உள்ள விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- விநாயகர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்பு விநாயகர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனையும் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.
இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவி நாயகர், கட்சுவான் முனிஸ்வ ரர்சுவாமி கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.
- சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவாரூர்:
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் நேற்று கேது பகவானுக்கு பால்,பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர்,மஞ்சள்,சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராகுதோஷம், கேதுதோஷம், நாகதோஷம், திருமணதடை உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலில் வழங்கப்படும் வெள்ளியிலான நாகத்திற்கு அபிஷேகம் செய்து பரிகார பூஜை செய்தனர். இதற்கனா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
- அம்மனுக்கு பால், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுகா, காட்டுச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த நாணல்திடல் மாரியம்மன் கோயிலில் கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது.
நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு, பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவையொட்டி காருடையான்பள்ளம் வீரசோழன் ஆற்றங்கரை யிலிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் கரகம் மற்றும் காவடிகளை வானவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் வந்து கோயிலை அடைந்தனர்.
அப்போது கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டம் எதிரே மாரியம்மன் எழுந்தருள ஏராளமான பக்தர்கள், தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்த ருளிய அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது.
இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சேனைத் தலைவர் மகாஜன சங்க தலைவர் முனுசாமி, நாட்டாண்மை இளங்கோவன் மற்றும் விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்