என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 227917"
- சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- கோவில் கிணற்றில் உள்ள நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் பிரம்மன் உயிர் பெற்ற தலம் என்ற சிறப்புடைய ஆம்ல குஜாம்பிகா எனும் வாடா முலையாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயில் இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமானது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைப்பெறுவது வழக்கம். தேவார சிறப்புமிக்க 274 திருத்தலங்களில் மூவரால் பாடப்பட்ட 44 தலங்களில் இதுவும் ஒன்றாக போற்றப்படுகிறது.
இக்கோயிலில் உள்ள கிணற்றில் இருந்து புனிதநீரை எடுத்து வந்து தினமும் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நாளில் கோயில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவது சிறப்பாகும். இந்த நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டில் இந்த ஒரு நாள் மட்டும் கோயில் கிணற்றில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டு நேற்று முன்தினம் அசுபதி நட்சத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையொட்டி ஆம்ல குஜாம்பிகா, பிரம்ம புரீஸ்வரர் ஆகிய சாமிக ளுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில் கிணற்றில் இருந்து வாரி இறைக்கப்பட்ட தண்ணீரில் பக்தர்கள் புனித நீராடி சாமி வழிபாடு செய்தனர்.
இந்த தீர்த்தவாரி விழாவில் கணேச குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உள்ளூர், வெளியூர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
- வண்ண மலர்களால் சிவன்- அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அந்தணப்பேட்டை ஊராட்சி கருவேலி பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பிகை சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இவ் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 120 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
கடந்த 22 ஆம் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை நான்கு காலங்கள் நடைபெற்றது நான்காம் கால யாகசாலை பூஜைக்கு நேற்று காலை கோவிலில் நான்கு பிரகாரங்கள் வழியாக மல்லாரி இசை முழங்க புனித கடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், உள்ளிட்ட கோபுர கலசங்களுக்குபுனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவன் மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில்சூரியனார் கோயில் ஆதீனம் தவத்திரு சிவக்கர தேசிக சுவாமிகள்அறநிலை துறை உதவி ஆணையர் இராணிமற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
- தீமிதி திருவிழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
- அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் உள்ள முள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் 79-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து, 15 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அம்பாளுக்குசிறப்பு அபிஷேகம்நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து சாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலுக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பாதுகாப்பு பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
- மலைமீது உமா மகேஸ்வரர், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர்.
- திருஞான சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாக கோயில் போற்றப்படுகிறது.
சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை அமைப்பதற்கான பந்த்கால் முகூர்த்தம் தருமபுரம் ஆதீனம் நேற்று தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
மலைமீது உமா மகேஸ்வரர், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர்.
இக்கோயிலில் சிவபெருமான் லிங்கம், மூர்த்தம்,சங்கமம் ஆகிய மூன்று நிலைகளில் பக்தர்களுக்கு காட்சித் தருகிறார்.
திருஞான சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாக கோயில் போற்றப்படுகிறது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 24-ந்தேதி கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமார்ச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி நடைபெறவுள்ளது.
அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை மற்றும் பந்தல்கால் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோயில் கொடிமரம் அருகே பந்தக்காலுக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேள, தாளங்கள் முழங்க பந்தக்கால் கோயிலை வலம் வந்து பின்னர் நவகிரக சன்னதி அருகே பந்தகால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து மேல கோபுரவாசல் அருகே யாகசாலை அமைப்பதற்கான பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசுவதற்கான இயந்திரத்தினை பூஜைகள் செய்து தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து முத்துசட்டை நாதர் சுவாமிக்கு புதிதாக அமைக்கப்படும் கருங்கல் மண்டபத்திற்கு கருங்கல் நிலை வைப்பதற்கான சிறப்பு பூஜையையும் தருமபுரம் ஆதீனம் செய்து நிலைப்படி வைத்து பணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக சீர்காழி தேரடி சித்தி வினாயகர் கருங்கல் கோவில், பிடாரிவடக்குவீதி பதிணென்புராணேஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்காக பந்தகால் முகூர்த்தத்தையும் தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்.
இதில் திருப்பணி உபயதாரர்கள் மகாலட்சுமி அம்மையார், மார்கோனி, முரளி, கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
- திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது.
- விழாவின் 12 ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறுகோயில்களில் முதன்மையான கோயிலாகும்.
இந்த கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து முன்று பொறிகள் விழுந்து முக்குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
இத்தலத்தில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக விளங்கும் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் இங்கு அகோர முர்த்தியாக தனிசன்னதி கொண்டு விளங்குகிறார். சுவேதாரண்யேஸ்வர ஸ்தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ அவ்வாறு எதிரிகளை இராமன் சம்காரம் செய்தான் என வால்மீகி இராமயணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மையை விளக்கியுள்ளார்.
இந்த கோயிலின் ஆண்டு இந்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.
விழாவின் 12 ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தெப்போற்சவத்தை முன்னிட்டு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர்.
இதனை அடுத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தெப்பம் புறப்பட்டு திருக்குளத்தை 5 முறை வலம் வந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
- சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு திறக்க அடைக்க பாடும் வரலாற்று திருவிழா, தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு மனோன்மணி சமேத சந்திரசேகர் வண்ண மலர்களாலும், மின் விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அப்போது தேவார பாடலி லும், நாதஸ்வரத்திலும் நலுங்கு பாடல்கள் இசைக்கப்பட்டது.
பின்னர், சிறப்பு தீபாரா தனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் இளையவர் சபேசன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், தேவார வார வழிபாட்டு மன்றத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கொடிமரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் எழுந்தருளினார்.
- பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்து முறை செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் 108 திவ்யதேசங்களில் 11 திவ்ய தேச பெருமாள் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன. இதில் பிரசித்தி பெற்ற வண்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடிமரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் எழுந்த ருளினார். பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்து முறை செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு திரு மஞ்சனம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தின் முதல் நாள் பெருமாள் சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்து அருளி வீதி உலா நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- ஆண்டுதோறும் நடைபெறும் நெல் மகோற்சவ விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
நாகப்பட்டினம்:
தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலில் நெல் மகோற்சவ விழா நடைபெற்றது.
தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீ கல்யாணசுந்தரா் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, கிழாா் தம்பால் நெல் கிடைத்ததை சுந்தரமூா்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் நிகழ்வும், சுந்தரா் நெல் மலையை பாா்க்க குண்டையூா் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும் சுவாமியை வழிபட்டனர்.
மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து கல்யாண சுந்தரா் பூதகணங்களோடு குண்டையூரில் எழுந்தருளி, நெல் மலையை ஆரூரில் சோ்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில், நெல் மலையோடு பூதங்கள் ஆருருக்கு புறப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் நெல் மகோற்சவ திருவிழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென தமிழக அரசுக்கு, தருமை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.
- 136 மூலிகை பொருள்களை கொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
- புனிதநீர் கொண்டு மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்து, 5 சிவன் ஆலயமும், ஆறுபடை வீடுகளான 6 முருகன் கோவில்களும் ஜப்பான் நாட்டில் கட்ட திட்டமிட்டுள்ளனர்.
அதன் பயணமாக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 19 பெண்கள், 21ஆண்கள் என 41 பேர் ஜப்பான் சிவஆதீனம் பாலகும்ப குருமுனி என்கிற தகாயுகி ஹோஷி தலைமையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.
இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற பல்வேறு சைவ கோவில்களில் யாகம் செய்து சிவவழிபாடும், ஆறுபடை வீடுகளான 6 முருகன் கோவில்களில் யாகம் செய்து வழிபட்டு 9 கிரக கோயில்களில் வழிப்பாடு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை சேந்தங்குடியில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரசித்திபெற்ற வள்ளலார் கோயில் என்று அழைக்கப்படும் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டனர்.
ஆலயத்தில் உள்ள குருபகவான் மேதா தட்சிணாமூர்த்திக்கு மூலமந்திர ஹோமம், ருத்திர ஜபம் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர். இதையொட்டி, கோயில் பிரகாரத்தில், புனித நீர் அடங்கிய கடம் பிரதிஷ்டை செய்து, 136 மூலிகைப் பொருள்களை கொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
பின்னர் பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, புனிதநீர் கொண்டு மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக ஜப்பானிய ஆன்மீகக் குழுவினர் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் உள்ள கோயில்கள் மற்றும் முந்தைய ஆதீனகர்த்தர்கள் சித்தியடைந்துள்ள ஆனந்தபரவசர பூங்காவில் உள்ள சமாதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஜப்பான் தொழிலதிபர் சுப்பிரமணியம், வைத்தீஸ்வரன் கோயில் செந்தில்குமார், தருமபுரம் கல்லூரி செயலர் செல்வநாயகம், ஏ.வி.சி. செந்தில்வேலன், கோயில் கண்காணிப்பாளர் அகோரம், யுவா ஜெயின் சங்க தலைவர் மகாவீர் ஜெயின் ஆகியோர் உடன் இருந்தனர்.
- முதல் கால யாகபூஜை, வேத பாராயணம், பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.
- விமான பாலாலயம் செய்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டையில் அமைந்துள்ள மச்சபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணி செய்வதற்காக பாலாலயம் நடைபெற்றது. முதல் நாள் விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகபூஜை, வேத பாராயணம், பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.
2-வது நாள் கோ பூஜை, 2-ம் கால யாக பூஜை அதனை தொடர்ந்து விமான பாலாலயம், சுவாமிக்கு மகா தீபராதனையும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர்கள் ஹாசினி, சிவசங்கரி, ஆய்வாளர் லட்சுமி, கங்காதர சிவாச்சாரியார், கோவில் மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நாட்டாமைகள் கிராமவாசிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது.
- சாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் கோதண்டராமர் சாமி கோவிலில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் 8 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண நிகழ்வு நடைபெற்றது.
காலை தென்பாதி விநாயகர் கோவிலில் இருந்து திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களை மங்கல வாத்தியங்கள் முழங்க பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து ராதா, கிருஷ்ணன் சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருள பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது.
அதன் பின்னர் நடைபெற்ற ஆஞ்சநேயர் உற்சவத்தில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றுகூடி கோலாட்டம் மற்றும் நடனத்துடன் ராதா கல்யாண விழா களை கட்டியது.
அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ராதா கல்யாண உற்சவம் மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை கட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலை நடராஜ.சட்டையப்பன் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
- வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்கு வளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடைவீடான சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், மாசி மாத கிருத்திகையை யொட்டி முருகப்பெருமானுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின், வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்