search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    • 58 ேஜாடி மாடுகள் கலந்து கொண்டது
    • சாலையின் இருபுறங்களிலும் நின்று மக்கள் ரசித்தனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் கிராமத்தில் ஸ்ரீ முத்தையா சாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 58 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 16 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் ஜோடி 32 மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் மக்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். .விழாவினை ஏம்பல் இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • போட்டியானது கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கியது.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை சார்பில் 10 முதல் 25 வயது வரை உள்ள பெண்களுக் கான மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    போட்டியை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியானது உச்சி பிள்ளையார் கோவில் அருகில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து நிறைவடைந்தது.

    போட்டியில் முதல் 2 இடங்களை மயிலாடு துறையை சேர்ந்த பெண்களும், 3-ம் இடத்தை கும்பகோணத்தை சேர்ந்த பெண்ணும் பிடித்தனர்.

    அவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்களை கும்பகோணம் ரெட்கிராஸ் துணை சேர்மன் ரொசாரியோ முன்னிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் வழங்கினார்.

    மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியை கும்பகோணம் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஒருங்கிணைத் ்தார்.

    இதில் ரெட்கிராஸ் நிர்வாகிகள் கணேசன், சிவக்குமார், ராமதாஸ், சபாபதி மற்றும் போலீசார், போக்குவரத்து போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தட்டான்வயல் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு எல்கை பந்தையம் நடைபெற்றது
    • ரூ.1.80 லட்சம் ரொக்கப்பணம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது

    அறந்தாங்கி, 

    மணமேல்குடி தாலுகா தட்டான்வயல் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்து முனீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 68 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் நடுமாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 56 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை தட்டான்வயல் கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • கோப்பைகள் வழங்கி பாராட்டு

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையாம்பாளையம் என்.ஆர். பப்ளிக் பள்ளியில் தண்டர் விளையாட்டு கழகம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி தலைமையேற்று நடத்தி வைத்தார். தண்டர் விளையாட்டு கழகம் நிறுவனர் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராவணன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார். போட்டியில் உடையார்பாளையம் என்.ஆர். பப்ளிக் ஸ்கூல் ஜெயங்கொண்டம் மாடர்ன் பி .எம். பப்ளிக் ஸ்கூல் அன்னை தெரசா பள்ளி ஜெயங்கொண்டம் உட்கோட்டை குறுக்கு ரோடு தா பலூர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனர் பொய்யாமொழி கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவ மாணவிகளுக்கு கராத்தே மாஸ்டர் வினோத் பயிற்சி அளித்து போட்டி நடத்தினார்.

    • ஒரு வருடமாக நடைபெற்ற போட்டி நிறைவடைந்தது
    • பத்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்வி மைதானத்தில்கீழக்குடியிருப்பு KKP-வாரியர்ஸ் அணியினர் நடத்திய தொடர் கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று நேற்று நிறைவு பெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து கிரிக்கெட் அணியினர் போட்டியில் கலந்து கொண்டனர். இத்தொடருக்கான முதல் பரிசு வென்ற திருமானூர்-FRESHஅணிக்கு, ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ம் பரிசினை பொன்பரப்பி-சத்ரியன்பிரதர்ஸ் அணி, 3-ம் பரிசினை சிலால்-DXஅணி, 4-ம் பரிசினை உடையார்பாளையம்-தமிழன்CC அணி பெற்றனர்.இவர்களுக்கு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் வைத்தி பரிசுகளை வழங்கினார். இத்தொடரானது கடந்த 2022- பொங்கல் அன்று துவங்கப்பட்டது.இந்தப் போட்டிக்கு பரிசுகள் வழங்கிய மாடர்ன் கல்வி குழுமம் எம் ஆர் சுரேஷ், கவுன்சிலர் ரங்கநாதன். எஸ் டி துரை மாதவன் தேவா பரப்பிரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும்கபடி குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

    • மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி தெற்கு வீதி ச.மு.இ நடுநிலைப்பள்ளியில் 127-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலர் எஸ்.இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் நாகராஜன், பொன்.பூங்குழலி முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் சி.பாலமுருகன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் பங்கேற்று பேசினார். 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஆசிரி–யர்கள் மனோரஞ்சிதம், தையநாயகி, குமார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டு, பரிசுகள் வழங்கி கெளர வித்தனர். தொடர்ந்து மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது

    பட்டதாரி ஆசிரியை ஶ்ரீப்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.

    • போட்டியில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    • பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பேராவூரணி வட்டார வள மையத்தில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-23 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும்,சிகரம் தொட சிலேட்டை எடு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

    போட்டியில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள், அங்கயர்க்கண்ணி, கலாராணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

    ஒன்றியத்தில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லாதோருக்கான, கற்றல் கற்பித்தலை ஊக்குவிக்கும் வண்ணம், மேற்கண்ட தலைப்பிற்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் தங்களின் கருத்துக்களை கூறினர்.

    போட்டியில் சித்தாத்திக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவி. தாமரைச்செல்வன் முதலிடத்தை பெற்றார்.

    2-ம் இடத்தை பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சிவகாமியும், 3-ம் இடத்தை திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து பெற்றனர்.

    3 ஆசிரியர்களுக்கும், பரிசு தொகையும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியினை ஆசிரியர் பயிற்றுநர்கள் சரவணன் மற்றும் முனிராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.

    முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் சிவமுருகன் நன்றி கூறினார். 

    • பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளியில் மூளைத்திறன் போட்டி நடைபெற்றது
    • இந்த போட்டியில் 100க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் மேம்படவும், சிந்தனைகளை ஒருமுகப்படுத்தவும் ப்ரைன் கேம் போட்டி நடந்தது.கிறிஸ்டியன் கல்வி நிறுவன தலைவர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கும், கலந்துகொண்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் குலுக்கல் முறையில் ஒரு குழந்தையை தேர்ந்து எடுத்து ஸ்மாட் வாட்ச் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 100க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


    • கரூர் வள்ளுவர் கல்லுாரியில் சமையல் போட்டி நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் செப் தீனா தயாளன் கலந்து கொண்டு பேசினார்

    கரூர்:

    கரூர் புத்தாம்பூர் வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் "வாங்க சமைக்கலாம்" என்ற தலைப்பில் பிரியாணி மேளா சமையல் போட்டி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இருளப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் செயலாளர் ஹேமலதா செங்குட்டுவன், துணை செயலாளர் ராகவி நிகில் கண்ணன், கேட்டரிங் பயிலும் கல்லூரி மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக டிவி புகழ் டிஜிட்டல் தொழில் முனைவர் ஃசெப் தீனா தயாளன் கலந்து கொண்டார்.கல்லூரியில் கேட்டரிங் பயின்று வரும் மாணவ மாணவியர் மூங்கில் மாட்டுக்கறி பிரியாணி, சிக்கன் பரோட்டா பிரியாணி, கொங்குநாடு வெள்ளை பிரியாணி, வாத்து பிரியாணி,சிந்தி பீப் பிரியாணி, சிக்கன் மண் பானை பிரியாணி, மண் பானை ஆட்டுக்கறி பிரியாணி, பிரவுன் பிரி யாணி என 22 வகையான பிரியாணி வகைகளை சமைத்து அசத்தினர்.

    அத்தோடு பாரம்பரிய உணவு வகையிலான ராகி, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, தினை போன்றவற்றை பயன்படுத்தி தோசை,லட்டு, என பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளும் தயாரித்து சுவைப்பதற்காக வைத்திருந்தனர். மேலும், பழங்களை பயன்படுத்தி பல்வேறு நாகரிக உணவு தயாரித்து பார்வை க்கு வைத்திருந்தை பார்வை யிட்டு ஒவ்வொருவரும் அந்த உணவை தயாரித்த விதம், அதனுடைய சுவை போன்றவற்றை அறிந்து, சுவையாக உணவு தயாரித்த கல்லூரி மாணவ- மாணவிகளை பாராட்டினார்.சிறந்த உணவுகளை தயாரித்த மாணவ- மாணவியருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை தீனா தயாளன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் அவர் பேசும் போது, மாணவர்கள் கேட்டரிங் துறை என்று மட்டுமல்ல எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் எந்த அளவுக்கு நாம் முயற்சி எடுத்து தேடுதல் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் வெற்றி பெறலாம். என்னதான் கடுமையான உழைப்பை நாம் மேற்கொண்டாலும் அதனுடன் ஸ்மார்ட் ஒர்க்கையும் நாம் பயன்படுத்தினால் நம் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் திறமைகளை கண்டறிந்து சிறந்த வீரர், வீராங்கனை களை உருவாக்க வேண்டும்
    • தனிநபர் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களும், குழுப் போட்டிகளில் தேர்வுக்குழு மூலம் தேர்வு

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்கள் கல்வியில் பல்வேறு திட்டங் களை அறிவித்து செயல்படுத்தி வருவதோடு, விளையாட்டுத்துறையிலும் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் திறமைகளை கண்டறிந்து சிறந்த வீரர், வீராங்கனை களை உருவாக்க வேண்டுமென்று பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் கல்வியில் சிறந்த மாவட்டமாகும். அதேபோல் தடகளம், கபடி, இறகுப்பந்து, கையுந்துபந்து, செஸ் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வருவதோடு, பல்வேறு போட்டிகளில் தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்கள்.

    குறிப்பாக, முதலாவது கேலோ இந்தியா (2021-2022) தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் ஆஸ்லின் சானியா என்ற வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். டெல்லியில் 2021-2022 டெல்லியில் நடைபெற்ற தடகள நேஷனல் விளையாட்டு போட்டியில் செல்வன் அசதுல்லா முஜாஹித் கலந்து கொண்டு வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். அகமதாபாத் பகுதியில் தேசிய அளவிலான தடகள போட்டி (2022-2023) 3-வது நேஷனல் விளையாட்டில் செல்வி கிரேசினா மெர்லி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். மேலும், போலந்து நாட்டில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளார்கள்.

    தற்போது, 2022-23ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் 12 முதல் 19 வயது வரை பள்ளிப் பிரிவாகவும், 17 வயது முதல் 25 வரை கல்லூரிப் பிரிவாகவும், 15 முதல் 35 வயது வரை பொதுப் பிரிவாகவும் மற்றும் அரசு ஊழியர், மாற்றுத் திறனாளிகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. குறிப்பாக, அரசு துறைகளான வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கு தடகளம், கபடி, இறகுப்பந்து, கையுந்துபந்து, மற்றும் செஸ் போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

    மேலும், இப்போட்டி களில் முதல் இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.3000/-மும், 2-ம் இடத்தை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.2000/-மும், 3-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1000/- வீதம் என மொத்தம் ரூ.42.02 லட்சம் பரிசு தொகை வழங்குவதற்கு நமது மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களும், குழுப் போட்டிகளில் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இது போன்று பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் கலந்து கொண்டு நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை

    கரூர்,

    கரூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார், வைரக்கல்மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சேவல் சண்டை நடத்திய அக்பர் அலி (வயது 36), கார்த்திக் (30), சுதாகர் (41), நெப்போலியன் (35), சஞ்சய்குமார் (26), மணி (29) உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து இரண்டு சேவல்கள், 200 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது
    • பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கத்தில் கடந்த 8-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள் தனித்தனியாகவும், மாணவர்களுக்கான கால்பந்து போட்டியும் நடைபெற்றது. இதில் நீச்சல் போட்டிகள் 200 மீட்டர் பிரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்டோக், பேக் ஸ்ட்டோக், பட்டர் பிளை, 400 மீட்டர் தனி நபர் மெட்லே ஆகிய 5 வகையான பிரிவுகளில் நடைபெற்றது. நீச்சல் போட்டிகளில் 50 மாணவர்களும், 21 மாணவிகளும், கால்பந்து போட்டியில் 13 அணிகளை சேர்ந்த 216 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரமும் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே விளையாட்டு அரங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) பொது பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு தடகளம், கபடி, இறகுபந்து ஆகிய விளையாட்டு போட்டிகளும் தனித்தனியாகவும், ஆண்களுக்கு வாலிபால், சிலம்பம் போட்டிகளும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது.

    ×