search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழநாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
    • அதன்படி போட்டி நடத்துவதற்கான இடத்தை பவளத்தானுரில் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்துள்ளனர். இந்த இடத்தை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மாநில பேரவை தலைவர் வந்து இடத்தை ஆய்வு செய்தனர்.

    தாரமங்கலம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழநாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் கூலமேடு, தம்மம்பட்டி, நிலவாரபட்டி ஆகிய ஊர்களை தொடர்ந்து தற்போது தாரமங்கலம் அருகிலுள்ள குறுக்குபட்டி ஊராட்சி பவளத்தானுர் பகுதியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தாரமங்கலம் பி ஆர் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் போட்டியை நடத்து

    வதற்கான முதற்கட்ட பணியை மேற்கொண்டுள்ளனர்.

    அதன்படி போட்டி நடத்துவதற்கான இடத்தை பவளத்தானுரில் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்துள்ளனர். இந்த இடத்தை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மாநில பேரவை தலைவர் ராஜசேகரன், செயலாளர் நாராயணன் ஆகியோர் வந்து இடத்தை ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாநில தலைவர் ராஜசேகரன் கூறுகையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டை அழியாமல் பார்த்துக்கொள்ளவும், நாட்டு இன காளைகளை வளர்க்கவும் நாங்கள் இந்த வீர விளையாட்டை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறோம் அதன்படி தமிழக அரசின் அனுமதியோடு அரசின் சட்ட நெறிகளுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெற்று விழா நடத்தி வருகிறோம்,

    அதன்படி இந்த ஆண்டு தாரமங்கலம் அருகில் பவளத்தானுர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த இடம் ஜல்லிக்கட்டு நடத்த தகுந்த இடமாக அமைந்துள்ளது, எனவே இந்த இடத்தில் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்,

    அப்போது விழா ஏற்பாட்டாளர்கள் தாரமங்கலம் நகராட்சி மன்ற தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் தனம்,குறுக்குப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாச்சலம்,ரகுபதி, ராஜேந்திரன்,தங்கராஜ், தாரமங்கலம் பிஆர் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி நாளாகும்.
    • மேலும் விவரங்களுக்கு 7401703493 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    கரூர்

    விளையாட்டு போட்டிகள் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டம் சார்பாக, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண்-பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. இவற்றில் பங்கேற்க www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டும்.

    இதற்கான கடைசி நாள் வருகிற 17-ந்தேதி ஆகும். எனவே மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உடனடியாக தங்களது பெயர்களை இணையதளத்தில் பதிவுசெய்திட வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே இப்போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாக ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.

    பல பயன்கள் உள்ளது தேவையான தங்களது ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு வருகை தர வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். எனவே பதிவுகள் மேற்கொள்ளாமல் விட்டு விடாதீர்கள். இப்போட்டியில் வெற்றி பெற்றால் இதன் மூலம் பல பயன்கள் உள்ளது. எனவே தனி நபர் மற்றும் குழு விளையாட்டு வீரர்கள் அனைத்து விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவு செய்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 7401703493 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.





    • கரூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு கலைத்திறன் போட்டி நடைபெற்றது
    • போட்டியில் சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவி களிடையே கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் கலைத்திறன் போட்டிகள் புலியூர் செட்டிநாடு வித்யாமந்திர் பள்ளியில் நடைபெற்றது. மாநில கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியை புலியூர் செட்டிநாடு வித்யாமந்திர் பள்ளியின் முதல்வர் எம்.எஸ்.வித்யா தொடங்கி வைத்தார். பள்ளிச் செயலாளர்கள் முத்துக்குமரன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டியில் மாணவ, மாணவிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில் நடனம், பேச்சு, கட்டுரை, நகைச்சுவை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பள்ளிக்கும் பரிசுகள் செட்டிநாடு வித்யா மந்திர் பள்ளி சார்பில் வழங்கப்பட்டன. போட்டியில் கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • கரூரில் மாநில அளவிலான வளைய பந்து போட்டிகள் நடைபெற்றன
    • இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்

    கரூர்:

    கரூரில் தமிழ்நாடு வளைய பந்து சங்கம் மற்றும் கரூர் புலியூர் நெல்சன் வளைய பந்து குழு சார்பில் 45-வது மாநில அளவிலான மிக இளையோருக்கான வளையபந்து போட்டி கரூர் வெங்கமேடு அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது.இருநாட்கள் நடைபெறும் போட்டிக்கு தமிழ்நாடு வளையபந்து சங்கச் செய–லாளர் டி.சங்கர் தலைமை தாங்கினார். கரூர் அன்னை வித்யாலயா மேல்நிலைப் பள்ளி தாளா–ளர் எம்.கீதா மணிவண்ணன், தமிழ் நாடு வளையபந்து சங்க பொருளாளர் அனந்த–கிருஷ்ணன், இணைச்செய–லாளர்கள் கீர்த்தி–வாசன், உமாபதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    போட்டியை கிருஷ்ண–ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி பங்கேற்று போட்டியை துவக்கி வைத்து பேசி–னார். போட்டியில் கரூர், சேலம், நாமக்கல், தர்ம–புரி, திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற–னர்.

    போட்டியில் வெற்றி–பெறும் மாணவ, மாணவி–களுக்கு இன்று பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. போட் டிக்கான ஏற்பாடுகளை புலியூர் நெல்சன் வளைய பந்துகுழுவின் தலைவர் கார்த்தி, இணைச் செ–யலா–ளர் ரூசோ உள்ளிட்டோர் செய்துள்ள–னர்.

    • மாணவ-மாணவிகளுக்கு கோலப்போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலவீதியில் கல்யாண சுந்தரம் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு நிர்வாக குழு உறுப்பினர் என்.எஸ். அருணபாஸ்கர் தலைமை தாங்கினார். நிர்வாக குழு செயலர் ஆர். பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

    முன்னதாக அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் கே. ரமேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

    இதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு கோலப்போட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கோலப்போட்டிக்கு நிர்வாக குழு உறுப்பினர் அனிதா அருணபாஸ்கர் நடுவராக செயல்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதே போல் கலை நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரிய -ஆசிரியைகள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், 

    • இந்திய கோ-கோ போட்டிக்கு கரூர் அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
    • பல்கலைக் கழகங்கள் சார்பில் ஆண்களுக்கான கோ -கோ போட்டியானது கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ளது.

    கரூர்:

    பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அகில இந்திய கோ-கோ போட்டியில் கலந்து கொண்டு விளையாட கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தேர்வு பெற்றுள்ளார். பல்கலைக் கழகங்கள் சார்பில் ஆண்களுக்கான கோ -கோ போட்டியானது கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பில் கலந்து கொண்டு விளையாட கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சிபிராஜ், சேது ஆகிய இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜேந் திரன் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.




    • கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார்
    • வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கி பாராட்டினார்

    மணப்பாறை:

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற கலைத் திருவிழா 2022-23க்கான போட்டிகள் ஓவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் மாணவ, மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கவிதை எழுதுதல் எனும் தலைப்பில் மணப்பாறையை அடுத்த கருத்தகோடங்கிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி யோகப்பிரியா முதலிடம் பிடித்தார். மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தமிழாசிரியை எழிலரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற மாணவியை பள்ளி தலைமைஆசிரியை லீமா ரோஸ், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


    • உடற்கல்வித்துறை இயக்குநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
    • தேசிய குத்துச் சண்டை போட்டி அரசு கல்லூரி மாணவர்கள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

    கரூர்:

    தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டிக்கு கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் வரும் 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரியான கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் குமார், கார்த்திக்ராஜா ஆகியோர் விளையாட தேர்வு பெற்றுள்ளனர். தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ள மாணவர்களை கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.




    • போட்டியில் அரியலூர் மாணவர்கள் 1023 பங்கேற்றனர்
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்

    அரியலூர்:

    அரியலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டி நடைபெற்றது. அரியலுார் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், செந்துறை, தா.பழூர், திருமானுார் ஆகிய 6 வட்டாரங்களை சேர்ந்த 40 ஆயிரத்து 353 அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 6 முதல் 8ம் வகுப்பு, 9-10, 11-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை, நுண்கலை, மொழித்திறன், நடனம், நாடகம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளி அளவில் 20 ஆயிரத்து 42 மாணவர்களும், வட்டார அளவில் 4 ஆயிரத்து 991 மாணவர்களும், மாவட்ட அளவில் ஆயிரத்து 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்படும். மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் கல்விச்சுற்றுலாவாக வெளிநாடு அழைத்து செல்லப்பட உள்ளனர். இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறும்போது:- இதுபோன்ற கலைத்திருவிழாப் போட்டிகள் மாணவ, மாணவியர்களிடையே உள்ள கலைத்திறனை வெளிப்படுத்தி அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்றால் அது மிகையாகாது என்று அவர் கூறினார்.


    • மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள் நாளை நடைபெறும் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
    • கலை பயிற்சிகள் பெரம்பலூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட அளவில் 5 முதல் 8 வயது வரை, 9 முதல் 12 வயது வரை, 13 முதல் 16 வயது வரை ஆகிய வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவர்களுக்கான கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பரத நாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை), குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலை போட்டிகள் நாளை (சனிக்கிழமை) பெரம்பலூர் மதனகோபாலபுரம் 4-வது தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வயது சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு நாளை காலை 9 மணிக்கு வருகை தர வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனிக்கிழமையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே சிலம்பம் போன்ற கலை பயிற்சிகள் பெரம்பலூரில், மாவட்ட அரசு இசை பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் சிறுவர்-சிறுமிகள் சேர்ந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


    • மின்சிக்கன வார விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சிக்கன வார விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பாலக்கரையில் தொடங்கிய மாரத்தான் ரோவர் ஆர்ச், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு சந்திப்பில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகாரி அம்பிகா கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். விழாவில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • கையுந்து பந்து விளையாட்டிற்கு மாணவ- மாணவிகளுக்கு வருகிற 13-ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ.டேவிட்டேனியல் வெளியிட்டுள்ள செய்திகுறி ப்பில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக வருங்காலங்களில் ஏப்ரல்-2023 முடிய நடை பெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு கொள்ள உள்ள தமிழக அணிக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்திட உத்தேசிக்கப் பட்டுள்ளது.

    ேமலும் தேர்வு போட்டிகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

    வளை கோல்பந்து விளையாட்டிற்கு (மாணவர்கள் மட்டும்) 13.12.22 அன்று அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் சிவகங்கையிலும், கையுந்து பந்து விளையாட்டிற்கு மாணவ- மாணவியர்களுக்கு 13.12.22 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்னை–யிலும், கால்பந்து விளையாட்டிற்கு (மாணவிகள் மட்டும்) 13.12.22 அன்று ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் சென்னையிலும், 0 விளையாட்டிற்கு மாணவ-மாணவிகளுக்கு 14.12.22 அன்று ஜவஹர் லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்னையிலும் நடைபெற உள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை 7 மணிக்கு நடைபெறும்.

    இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்ள தகுதிகள், வயது வரம்பு 1.1.2004 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.

    ஆதார் கார்டு 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதி சான்றிதழ், நகராட்சி / கிராம நிர்வாக அலுவலரிட் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் (ஜனவரி 2012 ஆம் ஆண்டிற்குள்ளும் 5 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்).

    தேர்வு போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து தேர்வு போட்டியில் பங்கு கொள்ள வேண்டும்.

    எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், திறமையும் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேற்கண்ட மாநில அளவிலான தேர்வு போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட பிரிவு அலுவலக தொலைபேசி எண் 04362-235633 என்ற எண்ணிலும் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைபேசி எண் 7401703496 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×