என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 228017"
- வெப்பம் அதிகமாக உள்ள காரணத்தால் தொடர்ந்து தீ விபத்துகள் நிகழ்ந்தன
- பல்வேறு வகையான மீட்பு முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகர்கோவில் :
கோடை காலங்களில் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மே மாதம் வரை வனப்பகுதியில் தொடர்ச்சியாக தீ விபத்து நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. மழை அதிகமாக இருக்கும் சமயங்களில் தீ விபத்து நிகழ்வதில்லை.
இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக உள்ள காரணத்தால் தொடர்ந்து தீ விபத்துகள் நிகழ்ந்தன. இதுபோன்ற தீ விபத்துகளை தடுக்கும் வகையிலும், தீ விபத்து ஏற்படும் இடங் களில் உடனடியாக அதை கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தடுக்கும் வகை யிலும் வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு உபகரணங்கள் தமிழக அரசு உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது.
பயர் லைன் அமைப்ப தற்கான காற்று அடிப்பான் கருவி, புகை தடுப்பு கண்ணாடி கள், தீக்கவச உடைகள், தீ கவச காலணி கள் உள்ளிட்டவை வழங்கப் பட்டுள்ளன.
இதன் அடுத்த கட்டமாக தீயணைப்பு துறை சார்பில், வனத்துறையின ருக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் படி கீரிப்பாறை வன அலுவலகத்தில் வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வன பணியாளர்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் காட்டு தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் பல்வேறு வகையான மீட்பு முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் இமானுவேல், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் துரை, அழகிய பாண்டிபுரம் வனச்சரகர் மணிமாறன் மற்றும் தீய ணைப்பு துறை யினர் கலந்து கொண்டனர்.
- ஆயுதங்கள் ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது
- தீ விபத்தில் உயிரிழந்த வர்களின் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த நினைவிடத்தில் மலர் வளையம்
கன்னியாகுமரி :
1944-ம் வருடம் ஏப்ரல் மாதம் சுமார் மதியம் 2 மணி அளவில் மும்பை விக்டோரியா துறைமுகத்தில் போர்ட் ஸ்டிக்னி என்ற சரக்கு கப்பலில் வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் மும்பை நகரமே பூகம்பம் போல் அதிர்ந்து குலுங்கியது.
அப்போது தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 தீயணைக்கும் படை வீரர்கள் தீயில் கருகி இறந்தார்கள். அவர்களின் தொண்டினை போற்றும் பொருட்டும் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் தியாகத்தினை போற்றும் பொருட்டும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் ஒரு வார காலம் தீயணைப்பு தொண்டு நாளாக கடைபி டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கன்னியா குமரி தீயணைப்பு நிலை யத்தில் தீயணைப்பு தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்தில் மும்பை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைக்கும் படை வீரர்களுக்கு நீத்தார் நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜவகர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் நீத்தார் நினைவு அஞ்சலி கடைப்பிடித்தனர்.
- தீயணைப்பு துறையினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
- ரெயில்வே மேம்பாலத்தின் மேல் பக்கவாட்டு சுவரில் அமர்வதும், தூங்குவதும் வழக்கம்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த கழுவன்திட்டை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மாலை நேரத்தில் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
அங்கு மது குடிப்பவர்கள் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் மேல் பக்கவாட்டு சுவரில் அமர்வதும், தூங்குவதும் வழக்கம். நேற்று இரவு மது அருந்தி வந்த ஒருவர் மேம்பாலத்தின் மேல் பகுதியில் அமர்ந்துள்ளார்.
அப்போது திடீரென நிலைதடுமாறி அவர் பள்ளத்தில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள்அங்கு ஓடி வந்தனர். அவர்கள் பள்ளத்தில் விழுந்தவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பள்ளம் மிகவும் ஆழமான பகுதி என்பதாலும், அங்கு மின் விளக்கு வெளிச்சம் இல்லாததாலும் அவரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் விழுந்த நபரை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடிபோதையில் பள்ளத்தில் விழுந்தவர் அருமனை பகுதியை சேர்ந்த செல்வன் (வயது 43) என தெரிய வந்தது.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் அப்பகுதியில் முள்வேலி அமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தனக்கு சொந்தமான இடம் தொடர்பாக சிலருடன் முன்விரோதம் இருப்பதாகவும், அவர்கள் குடிசைக்கு தீ வைத்திருக்கலாம் என்று அன்னபூரணம் கூறியள்ளார்.
- அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில், அக். 20-
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திடல் ஊராட்சிக்குட்பட்ட ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அன்னபூரணம் (வயது 70).
இவர் குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் வெளியே தான் சமையல் செய்து வருகிறார். நேற்று இரவு சமையல் பணி முடிந்ததும், வழக்கம் போல் வீட்டுக்குள் சென்று அன்னபூரணம் படுத்து விட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை, இவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அன்னபூரணம் வீட்டுக்குள் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார்.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், நாகர்கோவில் தீயணைப்பு படையினர் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தனக்கு சொந்தமான இடம் தொடர்பாக சிலருடன் முன்விரோதம் இருப்பதாகவும், அவர்கள் குடிசைக்கு தீ வைத்திருக்கலாம் என்று அன்னபூரணம் கூறியள்ளார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நல்ல பாம்பு சிறிய வலையில் சிக்கி சீறிக் கொண்டிருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
- பாம்புகள் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் அடைவது வாடிக்கையாகி வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே பால்பண்ணைசேரி தெத்தி ரோட்டில் வீட்டின் வாசலில் பெட்டிக்கடை நடத்தி வருவர் ரேவதி வழக்கம் போல் இன்றும் கடையில் வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது தலைக்கு மேல் பாம்பு சீரும் சத்தம் வரவே அச்சமடைந்த அவர் அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்
இதனை அடுத்து சத்தம் வந்த திசையில் பார்த்தபோது அங்கு நல்ல பாம்பு சிறிய வலையில் சிக்கி சீறிக் கொண்டிருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் வரும் வரை பாம்பை கண்காணித்தபடி இருந்து பாம்பும் இருக்கும் இடத்தை காண்பித்தனர். இதனை அடுத்து பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் வலையோடு சேர்த்து நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பாதுகாப்பாக சாக்கினில் அடைத்து வனப்பகுதியில் விட்டனர்.
நாகை நாகூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வடக்கு புறமும், மேற்கு புறமும் மூங்கில் காடுகள் உள்ளதாலும் அருகில் உள்ள கருவை காடுகளிலும் அதிகமாக பாம்பு புற்றுகள் உள்ளது.
இங்கு அடைந்து இருக்கும் பாம்புகள் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் அடைவது வாடிக்கையாகி வருகிறது. இப்பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட சாரைப்பாம்பு மற்றும் நல்ல பாம்புகளை தீயணைப்பு படை வீரர்கள் பிடித்து சென்றுள்ளனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி வாழ தனியார் தோட்டத்தில் உள்ள மூங்கில் காடுகளையும் அருகாமையில் உள்ள கருவை காடுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கும் பணி நடந்தது.
நாகர்கோவில், ஜூன்.30-
நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சூறைக்காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதையடுத்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கும் பணி நடந்தது. 7 நாட்களாக நடந்த தீயணைக்கும் பணி நேற்று நிறைவு பெற்றுள்ளது.
- விருத்தாசலம் அருகே ஏரியில் தீ பற்றி எரிந்ததால் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
- நேற்று இரவு திடீரென, மர்மமான முறையில் ஏரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
கடலூர்:
விருத்தாசலத்தை அடுத்து மங்கலம்பேட்டைஅருகே பள்ளிப்பட்டு கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி முழுவதும் நிறைய கருவேல மரங்கள், விழல்கள் மற்றும் செடி, கொடிகளும் அடர்ந்து, வளர்ந்துக் கிடக்கிறது. நேற்று இரவு திடீரென, மர்மமான முறையில் ஏரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்த தீயானது கட்டுக் கடங்காமல் மள, மளவென பரவியது. கிராமப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை போலீசாரும், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையில், தீயணைப்பு படை வீரர்கள் ஸ்ரீ ரங்கன், கனகராஜ், செல்வம், மற்றும் ஓட்டுநர் அசோக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, தீயை அணைத்தனர். ஏரியின் மொத்த பரப்பளவான சுமார் 40 ஏக்கரில், சுமார் 10 ஏக்கர் அளவுக்கு தீயில் கருகி நாசமானது.
- மேல்மலையனூரில் தீயணைப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது,
- தீவிபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது, தீவிபத்து ஏற்படாமல் எவ்வாறு இருப்பது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உதவி ஆணையர் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சாமள வண்ணன் தலைமையில் வீரர்கள் தீவிபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது, தீவிபத்து ஏற்படாமல் எவ்வாறு இருப்பது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
- இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்ட தீணைப்பு துறை அலுவலர் உத்தரவுப்படி தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கொடுமுடி மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்