search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228109"

    • தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் நகராட்சி துப்பரவு தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது
    • நகராட்சி அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை சிலம்புச்செல்வி ஏற்றி வைத்தார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் திருச்சி சாலையில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து அண்ணா சிலை, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் வந்தடைந்தனர். பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை சிலம்புச்செல்வி ஏற்றி வைத்தார். முன்னதாக ஊர்வலத்தை துரை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் லட்சுமி, ஜெயா, சீதா, சபரியப்பன், மணிகண்டன், விமல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் சிவகுமார் நன்றி கூறினார்.


    • அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • கரியாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் பேரணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதேபோல், வேதார ண்யம் பஸ் நிலையம், ஆயக்காரன்புலம், குரவப்புலம் தாணிக்கோட்டகம், கோடியக்கரை, கோடிய க்காடு மூலக்கரை, கரியாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    • யோகா ஆசிரியர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கீழரத வீதி பதஞ்சலி யோகா மையத்தில் நடைபெற்றது.
    • சுகாரார நிலையத்தில் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.

    கடலூர்:

    தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரி யர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கீழரத வீதி பதஞ்சலி யோகா மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச் செயாளர் காசிநாத துரை தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர வடிவேல், சுந்தரராஜன், கென்னடி, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ராதா, ஹெலன், மயிலாடு துறை மாவட்ட பொறுப் பாளர்கள் திருமுருகன், மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பின்னர் மாநில பொதுச் செயலாளர் காசிநாததுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரி. அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆகியவற்றில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சி யாளர்களை இந்த கல்வி ஆண்டிலேயே நியமிக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாரார நிலையத்தில் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றி தர வலியுறுத்தி வருகின்ற ஜூன் 20-ந்தேதி சென்னை யில் மாபெரும் பேரணி நடந்த திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

    • பேரணி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வேம்பு தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா முன்னிலை வகித்தார்.

    பேரணி பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.

    இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தானம்,ஆசிரியர்கள் அகல்யா, பொற்கொடி, கீதா,வளர்மதி ஆகியோர் திட்டச்சேரி பகுதியில் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று தங்கள் பள்ளியில் உள்ள வசதிகள், கட்ட மைப்புகள் உள்ளிட்டவை குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

    • பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் போதை ஒழிப்பு பேரணியை துவக்கி வைத்தார்.
    • ஜே.ஆர்.சி மாணவர்கள், சாரணர் படை மாணவர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

     பாபநாசம்:

    பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமையில் நடைபெற்றது.

    பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், தேன்மொழி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் போதை ஒழிப்பு பேரணியை துவக்கி வைத்தார்.

    இப்பேரணியில் ஆசிரியர்கள் முருகானந்தம் செல்வகுமார், சரவணன், ராஜ்குமார், சண்முகம் மற்றும் என்சிசி மாணவர்கள், ஜே. ஆர். சி மாணவர்கள், சாரணர் படை மாணவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பிரச்சாரம் செய்தனர்.

    • குமாரசாமிபேட்டை வாரியார் திடலில் ஆர்.எஸ்.எஸ். கொடிக்கு மலர் தூவி, குங்குமமிட்டு மரியாதை செலுத்தபட்டது.
    • ஊர்காவல் படையினர் என 400-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தருமபுரி,

    நீதிமன்ற உத்தரவை யடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 45 இடங்களில் ஊர்வலம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது.

    அதனைதொடர்ந்து தருமபுரியில் நேற்று ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்பு பேரணி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பழனி தலைமையில் குமாரசாமிபேட்டை வாரியார் திடலில் ஆர்.எஸ்.எஸ். கொடிக்கு மலர் தூவி, குங்குமமிட்டு மரியாதை செலுத்தபட்டது.

    அதனை தொடர்ந்து 4 ரோடு சந்திப்பு, நகர பேருந்து நிலையம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் வாரியார் திடலில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 200 -க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்துள்ளது. குறிப்பாக பேரணியின் போது தனி நபர்கள், சாதி, மதம் பற்றி தவறாக பேசக்கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்த கருத்தையும் பேசக்கூடாது.

    நாட்டின் இறையாண்மை க்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்ததாத வகையில் பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி முடிக்க வேண்டும். கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்தி செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கபட்டது.

    அதனையடுத்து பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 17 ஆய்வாளர்கள், ஊர்காவல் படையினர் என 400-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடந்தது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    75-வது சுந்திர தின விழா, வள்ளலாரின் 200-வது பிறந்த நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆகியவற்றை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தது. ராமகிருஷ்ணபுரத்தில் தொடங்கிய பேரணி, பெரியமாரியம்மன் கோயில், சர்ச் சந்திப்பு, தேரடி மற்றும் 4 ரத வீதிகள் வழியாக சென்று வடக்கு ரத வீதியில் பேரணி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் ஆர்.எஸ்.எஸ். பிராந்த சக சேவா பிரமுக் முருகன், மாவட்ட தலைவர் விஜயராகவன், ஜில்லா காரியவாக் ஜெயபாலன், விஸ்வ இந்து பரிசத் தென்மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுக்கூட்டம் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத்தில் நடைபெறுகிற அனைத்து உரைகளும், நிகழ்வுகளும் செய்கை மொழியுடன் ஒளிபரப்பப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். 500 ரூபாய் உதவித்தொகை என்பதை போராடி பெற்றுள்ள நிலையில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலை கேட்டு விண்ணப்பம் 6 என்ற படிவத்தை கொடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதத்திலேயே வேலை கேட்டு அந்தந்த மாவட்டங்களில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு வருகிற மே மாதம் 9-ந் தேதி மனு கொடுக்க உள்ளோம்.

    100 நாள் வேலை திட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10-ந் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • துணிபைகளை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • முகாமையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலபணி திட்டம் சார்பில் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டுதலின்படி "தூய்மை பணியில் இளைஞர்கள்" என்ற தலைப்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் கொங்கம்பட்டி கிராமத்தில் நடந்தது.

    முகாமில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்கூடாது. துணிபைகளை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். முகாமையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. 300 பேர் சிகிச்சை பெற்றனர்.

    சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம், இளையான்குடி, வட்டார மருத்துவர் அருண் அரவிந்த், வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகமது, வங்கி துணை மேலாளர் பாலமுருகன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினி தேவி, வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் நாசர், இளையான்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் நோன்பரசன் மற்றும் ஆய்வுக்கூட பிரிவு ரஞ்சித் குமார், இளையான்குடி தாசில்தார் கோபி நாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    நிறைவு விழாவில் கொங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி சரண்யா பிரசாந்த், கண் மருத்துவர் ரிஷிகேஷ், செய்யது அபுதாஹிர், ஜனாப் முகம்மது யூசுப் ஆகியோர் சிறப்புரையாற்றி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் பீர் முகமது, அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமாகனி செய்திருந்தனர்.

    • மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்டது
    • கல்வியம் அவசியம் குறித்து மாணவர்கள் கோஷம்

    கரூர்

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளி தலைமையாசிரியை தேன்மொழி தொடங்கி வைத்தார். ராயனூர் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் முக்கியத்துவம், அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

    • கரூர் மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
    • நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்பு

    கரூர்

    தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தல் படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட சமரச மையம் சார்பாக குளித்தலையில் சமரச நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் குளித்தலை சுங்க கேட்டு வரை சென்று பின்னர் மீண்டும் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தது. மேலும் ஊர்வலம் சென்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வழக்குகளை தங்களுக்குள்ளாகவே பேசி இருவருக்கும் வெற்றி என்ற சமரச தீர்வை ஏற்படுத்திக் கொள்ள கரூர் மாவட்ட சமரச மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் நீதிபதிகள் பாக்கியம், சண்முககனி, பாலமுருகன், பிரகதீஸ்வரன், தினேஷ் குமார், வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது, செயலாளர் நாகராஜன் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், தனியார் தொழிற்கல்வி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்
    • மாணவ-மாணவிகள் சமரசம் மையம் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம்

    கன்னியாகுமரி :

    சென்னை உயர்நீதி மன்றத்தால் தமிழ்நாடு சமரசமையம் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகிறது.வழக்குத்தரப்பினர்கள் தம் எதிர்தரப்பினருடன் பேசி சமரசம் செய்து கொள்ள ஏதுவாக நீதிமன்றம் சமரச மையத்துக்கு வழக்குகளை அனுப்புகிறது.

    இங்கு நன்கு பயிற்சிஅளிக்கப்பட்ட சமரசர்கள் வழக்குத்தரப்பினர்கள் தங்கள் வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள உதவுவார்கள். நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு வழக்கு தரப்பினர்கள் எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்ததேவையில்லை. தனிப்பட்ட முறையில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த தனி அறைகள்,காத்திருக்க இடவசதி போன்றவை சமரச மையத்தில் உள்ளன. நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நாள் முழுவதும் இந்த சமரசம் மையம் இயங்கும்.குமரி மாவட்டநீதிமன்றத்தின் சமரச மையம் சார்பில் சமரசம் மையம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த "சமரசம் நாடுவீர்" என்ற தலைப்பில் சமரச விழிப்புணர்வு பேரணி கன்னியாகுமரியில் நேற்று மாலை நடந்தது. கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து இந்த பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி மாயகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்தப்பேரணியில் முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார், 1-வது கூடுதல் சார்பு நீதிபதி முருகன், 2-வது கூடுதல் சார்பு நீதிபதி அசன்முகமது, சமரசம் மையத்தின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான நம்பிராஜன்,சமரச மையத்தின் வழக்கறிஞர்கள் ஜெயராணி, எம்.இ.அப்பன், துரைராஜ், சுபாஷ்,ஸ்டீபன்,உமாசங்கர், சரத்,ஜெகன், சுசீலாதேவி, சுஜாதா மற்றும் படந்தாலுமூடு முகில் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்ட னர். கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து புறப்பட் ட இந்த பேரணி மெயின் ரோடு, முக்கோண பூங்கா சந்திப்பு,காந்தி மண்டப பஜார் வழியாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு சென்று நிறைவடைந்தது. வழி நெடுகிலும் சுற்றுலா பயணிகள், மற்றும் கடை வியாபாரிகளிடம் நீதிபதிகள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் சமரசம் மையம் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

    ×