என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மறுசுழற்சி"
- வளம்குன்றா உற்பத்தி கோட்பாட்டின் கீழ் திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளது.
- ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் முக்கிய நகரங்களில் மத்திய அரசு சார்பில் கண்காட்சிகளை நடத்தி திருப்பூரில் உள்ள வளம் குன்றா உற்பத்தி குறித்து தெரிவிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் டெல்லியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரஜக்தா வர்மாவை நேரில் சந்தித்து பேசினர். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல் தலைமையில் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், துணை தலைவர் இளங்கோவன், இணை செயலாளர் குமார் துரைசாமி, ஆலோசக கமிட்டி உறுப்பினர்கள் பரமசிவம், சண்முகசுந்தரம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் இணை செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, வளம்குன்றா உற்பத்தி கோட்பாட்டின் கீழ் திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளது. ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, மரபுசாரா மின்உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் சமூகம் சார்ந்த முன்னெடுப்புகளை செய்துள்ளது குறித்து எடுத்துக்கூறினார்கள். திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களின் வளம் குன்றா உற்பத்தி குறித்து உலக வர்த்தக நிறுவனங்களுக்கும், இறக்குமதி நிறுவனங்களுக்கும் தெரிவிக்கும் பணியை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் முக்கிய நகரங்களில் மத்திய அரசு சார்பில் கண்காட்சிகளை நடத்தி திருப்பூரில் உள்ள வளம் குன்றா உற்பத்தி குறித்து தெரிவிக்க வேண்டும். இதன் மூலமாக இறக்குமதி நிறுவனங்கள் திருப்பூரின் சிறப்பை அறிந்து புதிய ஆர்டர்களை வழங்குவதற்கு வசதியாக அமையும் என்று சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல் கூறினார்.
இதை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக இணை செயலாளர் கூறினார். வளம் குன்றா உற்பத்தியில் தயாரிக்கும் ஆடைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக எச்.எஸ். கோர்டை புதிதாக அமைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கும் ஆடைகளுக்கு அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று கூறினார்கள். திருப்பூர் ஏற்றுமதியாளர்சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசும்போது, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்யும்போது அதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதற்காக அதிகமான பொருட்செலவு ஏற்படுகிறது. மத்திய அரசு இந்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தனியாக சலுகைளை வழங்கினால் உதவியாக அமையும் என்றார். திருப்பூர் மாநகராட்சியை முன்மாதிரியாக எடுத்து, பனியன் கழிவுகளை தனியாக எடுத்து அவற்றை மறுசுழற்சி செய்வது தொடர்பாக மேயர், ஆணையாளருடன் ஆலோசனை நடத்த மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக இணை செயலாளர் தெரிவித்தார்.
தனியார் அமைப்பு மூலமாக விரைவில் திருப்பூரில் ஆய்வு செய்து முடிவுகளை மத்திய அரசிடம் இன்னும் 6 மாதங்களில் சமர்ப்பித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இணை செயலாளர் தெரிவித்தார்.
- மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை.
- மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி சார்பில் தனியார் பாரா மெடிக்கல் பயிலும் மாணவியர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
இதில் இயற்கை உரம் தயாரிக்கும் முறை, குப்பைகளை எவ்வாறு கையாளுவது, மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி முன்னிலையில் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. 19-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.பி.எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பழைய பொ ருட்கள் தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தென்காசி:
சென்னை பேரூ ராட்சிகளின் இயக்குநர் மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோர் அறிவு ரைப்படி தென்காசி மாவ ட்டம் ஆய்க்குடி பேரூ ராட்சியில் 7-வது வார்டு சிவன் கோவில் மைதா னத்தில் பொது மக்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புத்தகங்கள், பழைய காலணிகள் போன்றவை ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆய்க்குடி பேரூ ராட்சி தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் பழைய பொ ருட்கள் தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது துணை த்தலைவர் மாரியப்பன், செயல் அலுவலர் சாந்தி, வார்டு உறுப்பினர்கள் இலக்கியா, கார்த்திக், உலக ம்மாள், புணமாலை, பசுமதி, முத்துமாரி, நமச்சிவாயம், விமலாராணி, சிந்துமொழி, வெங்கடேஷ், அருள் வள ர்மதி, ஷோபா, பேச்சிமுத்து மற்றும் பேரூராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொ ண்டனர். பொது மக்களிடம் மஞ்சப்பை விழிப்பு ணர்வும் ஏற்படுத்த ப்பட்டது. முடிவில் சிறப்பாக பணி யாற்றிய தூய்மை பணியா ளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
- தொழில்துறையினருக்கு உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிபகுதியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், தொழில்துறையினர் கலந்துகொண்டனர்.தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. அந்த கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆராய பெங்களூருவை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1 மாத காலம் இந்த நிறுவனத்தினர் திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து எவ்வளவு திடக்கழிவு குப்பை வெளியேறுகிறது. அவற்றை மறுசுழற்சி செய்து கட்டுப்படுத்தும் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
இதற்கு தொழில்துறையினருக்கு உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. இந்த தொண்டு நிறுவனத்தினர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திடக்கழிவுகளை அகற்றும் வழிமுறைகளை தெரிவிக்க உள்ளனர். இந்த நிறுவனம் ஏற்கனவே கோவை மாநகராட்சியில் தொழிற்சாலை திடக்கழிவு மறுசுழற்சி பணிகளை செய்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தும்போது குப்பை பிரச்சினை வெகுவாக குறையும். வீதிகளில் குப்பை தேங்குவது தவிர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சேதம் அடைந்த மின்னணு கழிவுகளான சுவிட்போர்டுகள், விளக்குகள் டன் கணக்கில் சேகரிக்கப்–பட்டுள்ளன.
- பிளாஸ்டிக் மாற்றாக உபயோகப்படுத்தப்படக் கூடிய பொருட்களும் காட்சி படுத்தப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் நெகிழி பயன்பாடு இல்லாத மாவட்டமாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தீவிர நடவடிக்கைகள் கொடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கடைகள், வணிக நிறுவனங்களில் பாலித்தீன் பைகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்கும் கடைகளின் உரிமை–யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் மின்னணு கழிவுகள் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி கடந்த ஒரு வாரகாலமாக தஞ்சை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் உள்ள 14 கோட்டங்களிலும் இந்த மின்னணு கழிவுகளான சேதம் அடைந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மின்விசிறிகள், டியூப் லைட்கள், சுவிட்போர்டுகள், விளக்குகள், என டன் கணக்கில் சேகரிக்கப்–பட்டுள்ளன.
அவ்வாறு சேகரிக்கப்–பட்டுள்ள பொருட்கள் தஞ்சை திலகர் திடலில் காட்சிபடுத்தப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கூடை தயாரித்தல், பிளாஸ்டிக் மாற்றாக உபயோகப்படுத்தப்படக் கூடிய பொருட்களும் காட்சி படுத்தப்பட்டன.
இவற்றை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜயபிரியா, தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியும் மேற்கொண்டனர். அதை தொடர்ந்து கலெக்டர் திலகர் திடல் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டதோடு, மின்னணு கழிவுகள் சேகரிப்பு வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 15 டன் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இன்னும் 3 நாட்கள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சேகரிப்பு பணியில் 15 வாகனங்கள், 250 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 100 டன் வரை மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட உள்ளன.
இந்த கழிவுகள் அனைத்தும் மறு சுழற்சிக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது"என்றார்.
- பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு ஊக்கத்தொகையை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
- கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மாபெரும் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
இதை கலெக்டர் சங்கர்லால் குமாவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அரிச்சல்முனையில் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டி னை தவிர்த்து கடல் உயிரினங்களை பாது காக்க கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு மணல் சிற்பத்தை பார்வையிட்டார்.
பின்னர் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மாபெரும் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தங்கச்சிமடம் கிராமத்தில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வனத்துறை மூலம் கடற்கரை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக தங்கச்சிமடம் ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு ஒப்படைத்தற்காக தங்கச்சிமடம் ஊராட்சி சார்பில் ரூ. 10 ஆயிரத்திற்க்கான காசோலை வனத்துறைக்கு வழங்கப்பட்டது. தூளாக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்ததற்காக ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலை தங்கச்சிமடம் ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. மேலும் பாம்பன் ஊராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட இயற்கை கரிம உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்தநிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வன உயிரினகாப்பாளர் ஜக்தீஷ்பகான் சுதாகர், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், ராமேசுவரம் வட்டாட்சியர்கள் மார்ட்டின், அப்துல்ஜபார், மாவட்டசுற்றுலாஅலுவலர் வெங்கடாச்சலம், ராமேசுவரம் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்