search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • மாநில அளவில் தேர்தல் நடைமுறைகளுக்கான சிறந்த ஒட்டு மொத்த செயல் திறனுக்கான விருதை அரியலூர் கலெக்டருக்கு கவர்னர் ரவி வழங்கினார்.
    • விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியால் விருதுகள் வழங்கப்பட்டன.

    அரியலூர்

    சென்னை கலைவாணர் அரங்கில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற மாநில விருதுகள் வழங்கும் விழாவில் வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர்கள், அலுவலர்கள் மற்றும் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியால் விருதுகள் வழங்கப்பட்டன. அதில், அரியலூர் மாவட்டத்திற்கு தேர்தல் நடைமுறைகளுக்கான சிறந்த ஒட்டு மொத்த செயல் திறனுக்கான விருதினை கலெக்டர் ரமணசரஸ்வதிக்கு கவர்னர் ரவி வழங்கி, பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, சிறந்த வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான விருதினை கவர்னர் ரவி அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளத்துக்கு வழங்கினார். மேலும், சுவர் ஓவியப்போட்டி சிறப்பு பள்ளி மாநில அளவில் 2-வது இடம் பெற்ற அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் குறுக்குரோடு ஹெலன் கெல்லர் காதுகேளாதோர் சிறப்பு பள்ளி மாணவன் சதீசுக்கும், இதேபோன்று மாநில அளவில் 3-வது இடம் பெற்ற மாணவன் அன்புமணிக்கும், ரங்கோலி போட்டியில் மாநில அளவில் 8-வது இடம் பெற்ற அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், விழுதுடையான், பெரியாத்துக்குறிச்சியைச் சேர்ந்த ஆப்பிள் சுயஉதவிக்குழுவினருக்கும் கவர்னர் ரவிகையால் விருதுகள் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    லால்குடி அருகே நந்தியாற்றின் குறுக்கே

    திருச்சி,

    திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், காணக்கிளிய நல்லூர் கிராமத்தில் நந்தியாற்றின் குறுக்கே 9.24 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் நித்தியானந்தன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதரணி, காணக் கிளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கராயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொருட்கள் வாங்கும்போது தர முத்திரைகளை பார்க்க வேண்டும்
    • குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் விழா

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்துகொண்டு பேசுகையில், நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார். மேலும் ஒவ்வொரு மாணவர்களும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை முழுமையாக அடைந்து தனது பெற்றோரிடமும், அருகாமையில் இருப்பவரிடம் இதுபற்றி விளக்கமாக கூற வேண்டும் எனவும், கண்டிப்பாக பொருட்கள் வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டும், பொருட்கள் வாங்கும்போது அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை பார்த்து வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

    • துறையூரில் 34-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது
    • வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கபட்டது

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறை–யூரில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் 34-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில் குமார் தலைமை தாங்கி–னார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறை–கள் பற்றியும், விதி மீற–லுக்கான அபராதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஹெல்மெட் அணி–வதின் அவசியம் மற்றும் சாலை விபத்துகள் பற்றிய குறும் படம் காட்சிப்ப–டுத்தப்பட்டன. அத்துடன் வாகன ஓட்டு–னர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இந்நி–கழ்ச்சி–யில் அலுவலக பணி–யாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட–னர்.

    • தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் விழா நடைபெற்றது
    • விழாவில் பெண்கள் கும்மி அடித்தும் குலவை போட்டும் அம்மாயியை வழிபட்டனர்

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் விழா நடைபெற்றது. ஊர் செழிக்கவும், விவசாயம் வளம் பெறவும், காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் வரவேண்டியும் நடைபெற்ற இந்த விழாவில், 3 சிறுமிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு, அம்மாயி சாமி அழைக்கப்பட்டது. பின்னர் அபிஷேக ஆராதனைநடைபெற்றது. விழாவில் பெண்கள் கும்மி அடித்தும் குலவை போட்டும் அம்மாயியை வழிபட்டனர். அதன் பின்னர் தங்களின் வீடுகளில் இருந்து ெகாண்டு வந்த முளைப்பாரியை காவிரி ஆற்றில் விட்டனர்.

    இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை வரதராஜபுரம் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் உபயதாரர்கள் செய்திருந்தனர்.அதே போல தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் பழனி சுப்பிரமணியசுவாமி கோயில் முன்பு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கும்மியடித்து வழிபட்டு மகிழ்ந்தனர். அதன் பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுபாசண்முகம் குடும்பத்தினர் செய்திருந்தனர்.


    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நுண்கலை நாள் விழா நடந்தது.
    • துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிவகாசி,

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நுண்கலை நாள் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். இதில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், முகத்தில் வர்ணம் பூசுதல், சைகை மொழி, வினாடி-வினா, கழிவில் இருந்து கலை, நா பிறழ் பயிற்சி, குறள் முழக்கம், 3டி ஓவியம், விளம்பரம் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பிரதீபா வரவேற்றார். துணைத் தலைவர் கமலவேணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் செய்தி ருந்தனர். 

    • மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
    • இந்திய சுற்றுலா துறையின் தென் மண்டல இயக்குனர் முகமது பாரூக் முன்னிலை வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை வெள்ளைச்சாமி கோவில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இந்திய சுற்றுலா துறையின் தென் மண்டல இயக்குனர் முகமது பாரூக் முன்னிலை வைத்தார்.

    விழாவில் சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், அவரது மனைவி , மகள்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பாட்டம், கோலாட்டம், கபடி, கயிறு இழுத்தல் போட்டி, இளவட்டக் கல் தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து தப்பாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் நெல்சன், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் சத்யராஜ், இன்டாக் கவுரவ தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிர்வாகிகள் பொங்கலிட்டனர்.
    • பொதுமக்களுக்கு மேயர் மகேஷ் கரும்புகளை வழங்கினார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    அவைத்தலைவர் எப்.எம்.ராஜரத்தினம் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், கூட்டுறவு சங்கத்திற்கு விரைவில் தேர்தல் வர உள்ளது.கூட்டுறவு சங்க பதவிகளை கைப்பற்ற அனைவரும் உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், மாநில மீனவரணி துணை செயலாளர் நசரேத் பசலியான், துணை மேயர் மேரி பிரின்சி லதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஒன்றிய செயலாளர் மதியழகன், செல்வன், பிராங்கிளின், பாபு, மாநகராட்சி மண்டல தலைவர்கள், அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதைத் தொடர்ந்து தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் பொங்கலிட்டனர். பொதுமக்களுக்கு மேயர் மகேஷ் கரும்புகளை வழங்கினார்.

    • ,பலா,நாவல் உள்ளிட்ட பலவகை மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
    • ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி அழகரசு தலைமை வகித்தார்.

    மொரப்பூர்,

    மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்,நவலை ஊராட்சி சமத்துவபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி அழகரசு தலைமை வகித்தார்.

    மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பி.வி.ரவிச்சந்திரன்,உதவி பொறியாளர் டி.அன்பழகன்,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் இன்பசேகரன்,நவலை ஒன்றிக்குழு உறுப்பினர் சசிகுமார்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேவி சங்கர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னில வகித்தனர்.

    ஊராட்சி செயலாளர் கணேசன் மூர்த்தி வரவேற்று பேசினார் இவ்விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மரியம் ரெஜினா,மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் இ.டி.டி.சுமதி செங்கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெரியார் நினைவு புரத்தில் தென்னை,பலா,நாவல் உள்ளிட்ட பலவகை மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    இதனை தொடர்ந்து பெரியார் திடலில் பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கி சமத்துவ பொங்கலை கொண்டாடினார்கள்.இவ் விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர்கள்,நவலை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜெ.மல்லிகா ஜெயகாந்தன்,டி.சக்திவேல்,பி.காயத்ரி பாரத்,கே.வாணி ஸ்ரீ கேசவன்,எஸ்.வனிதா பரமசிவம்,டி.கணேசமூர்த்தி,சி.ருக்மணி சொக்கன்,சி.சுதாகர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • மாணவிகளின் தமிழ்பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை மாணவிகள் பேரவை அமைப்பினர் செய்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஹோலி கிறாஸ் மகளிர் கலை கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி துறை வாரியாக மாணவிகள் பொங்கலிட்டனர். அதனைத்தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு உறியடித்தல், வடமிழுத்தல், முறுக்கு கடித்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து மாணவி களின் தமிழ்பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லூரி செயலர் அருட்சகோதரி மேரி ஹில்டா, முதல்வர் அருட்சகோதரி சகாய செல்வி ஆகியோர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தி வழங்கினர். பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாணவிகள் பேரவை அமைப்பினர் செய்திருந்தனர்.

    • திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பாய்ஸ் கிளப் சார்பில் பொங்கல் திருவிழா புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாய்ஸ் கிளப் அலுவலகம் அருகே நடந்தது.
    • திய மண்பானை வைத்து பொங்கல் சமைத்து படையல் இட்டு பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்ட காவல்துறை திருச்செங்கோடு உட்கோட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பாய்ஸ் கிளப் சார்பில் பொங்கல் திருவிழா புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாய்ஸ் கிளப் அலுவலகம் அருகே நடந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. மகாலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். புதிய மண்பானை வைத்து பொங்கல் சமைத்து படையல் இட்டு பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி ஆகியவை நடந்தன.

    கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற சர்வின், 2-ம் பரிசு பெற்ற கவுசிக்ராஜ், 3-ம் பரிசு பெற்ற ஹேமா தர்ஷன், ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அருள்குமரன், 2-ம் பரிசு பெற்ற அஸ்வின், 3-ம் பரிசு பெற்ற மணிகண்ட ராவ் ஆகியோருக்கு டி.எஸ்.பி. மகாலட்சுமி பரிசுகள் வழங்கினார்.

    இதேபோல் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் விழாவை ஒட்டி சிறப்பு பரிசாக புடவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி மற்றும் போலீசார் புதிய பேருந்து நிலைய கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் சிவா மற்றும் நிர்வாகிகள் மோகன், சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது
    • 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் 52-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதில், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஓய்வு எடுத்து கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பின்னர் 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விழா 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.


    ×