search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • சேலம் மாவட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
    • சமத்துவ கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி கோலப்போட்டி. குழுப்பாட்டு, நாடகம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளது. மேலும், அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் நாளை(வெள்ளிக்கிழமை) சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிகழ்வில் ஊராட்சியின் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    ஊராட்சிகளில் பணி–யாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் போன்ற ஊராட்சியின் அலுவலர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கலைநிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி வெற்றி பெற்றோரை பெருமைப்ப–டுத்தப்பட உள்ளது.

    சமத்துவ கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி கோலப்போட்டி. குழுப்பாட்டு, நாடகம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளது. மேலும், அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் அனைவரும் பொது இடத்தில் ஒன்று கூடி தங்களுக்குள் சமத்துவ உறுதி மொழியினை எடுத்துக் கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டையில் சதுர்த்தி விழா நடைபெற்றது
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டுச் சென்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பெரிய கடை வீதியில் உள்ள ராஜ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நெய் தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டுச் சென்றனர். விழாகுழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஓம் சக்தி, அக்குமாரியம்மன், சாமி அழைப்பு நடத்தி வருகின்றனர்.
    • கரகத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு எல்லையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய முத்தூர், நாகராஜ புரம் கிராமத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மக்கள் ஆண்டுதோறும் பொங்கலுக்கு முன்பாக வரும் செவ்வாய் கிழமை தினத்தில் மாரியம்மன், ஓம் சக்தி, அக்குமாரியம்மன், சாமி அழைப்பு நடத்தி வருகின்றனர்.

    நாகராஜ புரம் கிராமத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு மா விளக்கு ஊர்வலம் தொடங்கியது. ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மண்டு பகுதிக்கு சென்று சாமி அழைப்பு நடத்தி வழிபாடு நடத்தினர்.

    பின்னர் பூஜை செய்த இரண்டு பூசாரிகளுக்கு சாமி வரவழைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சாமி வந்த பூசாரிகள் கரகத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு எல்லையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விட்டனர்.

    சாமி கரகத்துடன் எல்லையில் இருந்து கொண்டு ஊரைக் காக்கும் என்பது ஐதீகம். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஊர் மணியகாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலாத்துறை சார்பில் 14-ந்தேதி நடக்கிறது
    • கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் சுற்றுலா விழா கன்னியாகுமரி அருகே உள்ள கிராமப்புறங்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்று பொங்கல் இடும் நிகழ்ச்சியை காண செய்வார்கள்.

    அப்போது கிராமப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அதேபோல இந்த ஆண்டு குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா வருகிற 14-ந்தேதி காலை 6 மணிக்கு கொட்டாரம் அருகே உள்ள சந்தையடி கிராமத்தில் நடக்கிறது. அன்றைய தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழக பாரம்பரிய கலாச்சார முறைப்படி வேட்டி சேலை அணியச் செய்து அந்த கிராமத்துக்கு சுற்றுலாத் துறையினர் அழைத்துச் செல்வார்கள்.

    அங்கு ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பானைகளில் கிராம மக்கள் பொங்கல் இடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒரே இடத்தில் 100 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அப்போது ஆர்வமிகுதி யால் ஒருசில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொங்கல் பானையில் பொங்கல் இடுவார்கள். கரும்புகளை கடித்து ருசிப்பார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பாட்டம், மகுட ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறு கின்றன. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தலையில் கரகம்எடுத்து ஆடுவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி மற்றும் சுற்றுலா துறையினர் செய்து வருகிறார்கள்.

    • மாவட்ட இணை செயலாளர் நன்றி கூறினார்.
    • பட்டதாரி ஆசிரியர் கழக பரிசளிப்பு விழா நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பட்டதாரி - முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 49 - ம் ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் இலக்கியசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பூலாம்பாடி பிளஸ் மேக்ஸ் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் டத்தோ பிரகதீஸ்குமார் கலந்துகொண்டு, பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்று தந்த ஆசிரியர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுதந்த தலைமையாசிரியர்கள், 2022-2023 கல்வியாண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஆகியோர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசினார்.

    தொடர்ந்து மாநில சிறப்பு தலைவர் சுப்ரமணியன், மாநில தலைவர் மகேந்திரன், மாநில பொதுசெயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொருளாளர் துரைராஜ், கவுரவ தலைவர் பாபுவாணன், முன்னாள் மாநில துணை தலைவர் தங்கராஜ் ஆகியோர் பேசினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மகளிரணி செயலாளர் ஜெயந்தி வரவேற்றர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

    • திருச்செங்கோட்டில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவிலான நிலத்தம்பிரான் கோவில் எனப்படும் சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோவிலில் 10-ம் ஆண்டு அறுபத்து மூவர் விழா நடந்தது.
    • அறுபத்து மூவர் திருமேனிகள் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிவகண வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவிலான நிலத்தம்பிரான் கோவில் எனப்படும் சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோவிலில் 10-ம் ஆண்டு அறுபத்து மூவர் விழா நடந்தது.

    இதனை ஒட்டி நேற்று முன்தினம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், கடன் சுமை, உடல் நலக் குறைபாடுகள் நீங்க மல்லிகை, முல்லை, தும்பை, அரளி, தாமரைப்பூ, எருக்கன் பூ, சங்குப்பூ, ஜாதிப்பூ, விரிச்சி பூ, சிகப்பு அரளி, நொச்சி ஆகியவற்றை கொண்டு பூச்சொரிதல் விழா நடந்தது.

    நேற்று காலை கணபதி வழிபாடு, கலச ஆவாகனம், மூலமந்திர ஹோமம், தொடர்ந்து மூலவர் திருமேனிகள், ஐம்பெரும் மூர்த்திகள், அறுபத்து மூவர் மற்றும் தொகை அடியார்கள், உற்சவர் திருமேனிகளுக்கு திருமஞ்சனம் மகா அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    இதில் ஐம்பெரும் மூர்த்திகள், அறுபத்து மூவர் திருமேனிகள் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிவகண வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்து வழிபாடு செய்தனர்.

    • கந்தர்வகோட்டையில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
    • விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருள்மிகு அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


    • பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
    • விழாவையொட்டி வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க வேதபுரீஸ்வரர் வேதநாயகி திருக்கல்யாணம் நடைபெற்றது.

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க வேதபுரீஸ்வரர் வேதநாயகி திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று வெள்ளிகிழமை காலை கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி நடராஜருக்கு பால், பழம், சந்தனம், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருவாதிரை பிரசாதம் வழங்கப்பட்டது.




    • 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது
    • நூலகத்திற்கு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை அரசு கிளை நூலகத்திற்கு ரோட்டரி சங்கம் சார்பில் இரும்பு அலமாரிகள், இருக்கைகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு அலமாரிகள், இருக்கைகள், மற்றும் மின்விசிறிகளை கிளை நூலகர் வனிதாவிடம் வழங்கப்பட்டது. விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பெப்சி முருகேசன், பால் குணசீலன், உறுப்பினர்கள் பரமசிவம், ஆறுமுகம் ,சேட்டு, வைர மூர்த்தி ,முனியராஜ், தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





    • கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளி உள்ள சாய்பாபாவிற்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 4 கால ஆரத்தி விழா நடைபெற்றது.
    • இந்த அன்னதானம் தினந்தோறும் காலை முதல் இரவு வரை 3 வேளையும் நடைபெறும். நித்ய அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளி உள்ள சாய்பாபாவிற்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 4 கால ஆரத்தி விழா மற்றும் நித்ய அன்னதானம் நேற்று நடைபெற்றது. இதில் காலை 6 மணிக்கு ஆரத்தி, 7 மணிக்கு புனித தீர்த்த நீராடல் நிகழ்ச்சி, 8 மணிக்கு நெய்வேத்தியம், சங்கல்ப பூஜை, சிறப்பு ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு நித்ய அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    இந்த அன்னதானம் தினந்தோறும் காலை முதல் இரவு வரை 3 வேளையும் நடைபெறும். நித்ய அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    மதியம் மற்றும் மாலையிலும் ஆரத்தி நடைபெற்றது. இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டிபட்டி சாய் தபோவன கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • திருமானூர் அருகில் நோய் தீர்க்கும்
    • பாரம்பரிய அரிசியில் பழையசோறு வழங்கும் விழா நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாரணவாசி கிராமத்தில் நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய அரிசியான பூங்கார் அரிசியில் பழையசோறு வழங்கும் விழா அரியலூர் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தில் பழைய இயற்கை பாரம்பரிய உணவுமுறையை ஊக்கப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பாரம்பரிய அரிசியான பூங்கார் அரிசியை, முதல் நாள் இரவே மழை நீரில் மண்பானையில் வேகவைத்து, பின்னர் கஞ்சி வடித்து, ஆறவைத்த சோற்றில் ஆறிய கஞ்சி தண்ணீரை ஊற்றி சிறிது வெண்ணெய் நீக்கிய நாட்டு மாட்டுப் பாலை காய்ச்சி உறை ஊற்றி மோர் தயாரித்து அதனை கஞ்சி நீர் கலந்த பூங்கார் அரிசியில் சமைத்த சோற்றுடன் கலந்து ஊறவைத்து காலையில் தேவையான அளவு மோர் கலந்து தயாரிப்பதுவே பழையசோறு .இந்த பழைய சோறு வயிற்றுப்புண்ணை ஆற்றும். நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், பெண்களுக்கான கருப்பை நோய் குழந்தைப்பேரின்மை, சுகப்பிரசவம் முதலியவற்றிற்கு உதவும். மேலும் செல்போனிலும் கணினி எனப்படும் கம்ப்யூட்டரில் தொடர்ந்து அதிக நேரம் பணிபுரிவதால் ஏற்படும் உடற்சூட்டைத் தணிக்கவல்லது. ரத்தசோகையை நீக்கி புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும் ஆற்றலும் பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு உண்டு என நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.பழையசோறுடன் நாட்டு சின்ன வெங்காயம், பிரண்டை, இஞ்சி, கொத்தமல்லி, புளி வைத்து அம்மியில் அரைத்த துவையல், நார்த்தங்காய் ஊறுகாயும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டு பழையசோற்றினை தயாரிக்கும் முறைகளை விளக்கினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சுமதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கொள்கையில் இயங்கும் செயற்பாட்டாளர்களுக்கு நம்மாழ்வார் உருவப்படம் பொறித்த துணிப்பை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில்தமிழ்க்களம் இளவரசன், ஆசிரியை செங்கொடி, எழுத்தாளர் சோபனா உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்று இயற்கை உணவின் சிறப்பை பற்றி எடுத்துரைத்தனர்.


    • நாமக்கலில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளது.
    • குடைவறை கோயிலான இந்த கோவிலில் உள்ள சுவாமி ஸ்ரீரங்கத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கலில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளது .குடைவறை கோயிலான இந்த கோவிலில் உள்ள சுவாமி ஸ்ரீரங்கத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது.

    இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டில் ஜனவரி 2-ந் தேதி நடைபெறும் ஏகாதசி விழாவை ஒட்டி அதிகாலை 4:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நெரிசலின்றி செல்லவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக கோவிலுக்கு முன்பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தர்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்க மேற்கூரையும் பொருத்தப்பட்டுள்ளன. சுவாமி தரிசனத்துக்கு இலவச கட்டண முறையில் அனுமதி உண்டு. மேலும் பக்தர்கள் தடுப்புகள் வழியாக செல்லாமல் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு பாதையின் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வைகுண்ட ஏகாதசி நாள் அன்று கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    ×