search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது
    • ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே தேளூரில், ஊர் நாட்டாரும் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் தலைவருமாகிய கோவிந்தசாமி குடும்பத்தினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ 1.85லட்சம் மதிப்பீட்டில் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி மற்றும் போர்வெல் உடன் மோட்டார் அமைத்து கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். ஆசிரியர் எழில் வரவேற்றார். அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுந்தரவடிவேல்,ஊராட்சி மன்ற தலைவி அழகம்மாள் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஏகேம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் கதிர் கணேசன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து மாணவர்களுக்கு குடிநீரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ,மாணவி கள்,நல்லாசிரியர் விளாங்குடி தியாகராஜன் ,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொறியாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அதிக திறன் கொண்ட மினி லாரி வாகனத்தை பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் வழங்கினார்.
    • மருங்கூர் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், எல்.என்.புரம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்

    கடலூர்:

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருங்கூர், எல்.என்.புரம் ஆகிய 2 ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அதிக திறன் கொண்ட மினி லாரி வாகனத்தை பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் வழங்கினார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீரா கோமதி, சக்தி, மேலாளர் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் சசிகலா ஜெயசெழியன், மருங்கூர் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், எல்.என்.புரம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்

    • அம்பேத்காரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
    • திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில்

    திருச்சி:

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், அம்பேத்காரின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி இ.பி.ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், வன்னை அரங்கநாதன், மாமன்ற உறுப்பினர் செந்தில். மாவட்ட துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, மாநகர துணைச் செயலாளர் சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி, துணை மேயர் திவ்யா, மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா, பகுதிசெயலாளர் பாபு மற்றும் மாவட்ட, மாநில, மாநகர ஒன்றிய கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூர் சேர்மன்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்சி பாலக்கரையில் நடைபெற்றது
    • அமைப்பு செயலாளர் ரத்தினவேல கலந்து கொண்டார்

    திருச்சி, 

    திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது . இதில் அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல் சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குப்தா, அன்பழகன், பூபதி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, கலைவாணன், ஏர்போர்ட் விஜி, வெல்ல மண்டி பெருமாள், திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க. தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, முன்னாள் பகுதி செயலாளர் கலிலுல் ரகுமான்,நிர்வாகிகள் அருள்ஜோதி, தொழிற்சங்கம் ராஜேந்திரன், தொழிலதிபர் என்ஜினியர் இப்ராம்ஷா, எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் அப்பாக்குட்டி, வெல்லமண்டி கன்னியப்பன், தர்கா காஜா, கல்லுக்குழி முருகன், ஜெயஸ்ரீ, பொன்.அகிலாண்டம், மலைக்கோட்டை ஜெகதீசன், வசந்தம் செல்வமணி, அரப்ஷா, ரவீந்திரன், சிந்தை ராமச்சந்திரன், கேபிள் முஸ்தபா, என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், பாலாஜி, ரோஜர், வரகனேரி சதீஷ், டைமண்ட் தாமோதரன், இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் ஆர். வெங்கட்பிரபு, சந்தோ ஷ்ராஜ், வண்ணாரப்பேட்டை ராஜன், மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 804 பெண் விவசாய உறுப்பினர்கள் உள்ளனர்
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி, கூழையான் விடுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ், பெண் விவசாயிகளை கொண்ட தொண்டைமான் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பெண் விவசாயிகளை கொண்டு உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொண்டைமான் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமானது, முழுவதும் பெண் விவசாயிகளை கொண்டு பெருங்கொண்டான் விடுதி ஊராட்சி, கூழையான்விடுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை, திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட உற்பத்தியாளர் குழுக்களை சார்ந்த 804 பெண் விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். இதன் இயக்குனர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் அனைவரும் பெண்களே.இந்நிறுவனத்திற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் தொடக்க நிதி மானியமாகவும், ரூ.10 லட்சம் வணிக விரிவாக்க நிதி மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது. வணிக விரிவாக்க நிதியினை பயன்படுத்தி கடலை தோல் பிரிக்கும் எந்திரம் மற்றும் எண்ணெய் செக்கு எந்திரம், வேளாண் பொறியியல் துறை உதவியுடன் வாங்கப்பட்டு எண்ணெய் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலையின் மூலம் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை உற்பத்தி செய்ய முடியும்.இந்த நிகழ்ச்சியில் திட்ட மாவட்ட செயல் அலுவலார் ஜெய்கணேஷ், செயற்பொறியாளர் (வேளாண் பொறியி யல்துறை) செல்வம், செயல் அலுவலார் கிருபாகரன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
    • திருச்சி அரசு மருத்துவமனை குழந்தை நல டாக்டர் பங்கேற்பு

    விராலிமலை,

    விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவில், குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவரும், உதவி பேராசிரியருமான பத்மபிரியா பங்கேற்று மழலையர் பிரிவு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டி பேசினார். தொடர்ந்து மாணவர்களுடன் கல்வி தொடர்பான கேள்வி பதில் கேட்டு கலந்துரையாடினார். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வெல்கம் மோகன் தலைமை வகித்தார்.இயக்குனர் அருண் பிரசாத் மோகன் முன்னிலை வகித்தார் ஏற்பாடுகளை முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் ஜோசப், ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • சௌடாம்பிகை அம்மன் கோயிலில் நடைபெற்றது
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை

    பொன்னமராவதி, 

    பொன்னமராவதி உள்ள சௌடாம்பிகை அம்மன் கோயிலில் கரகம் எடுப்பு பொங்கல் அபிஷேக ஆராதனை சக்திவேல் அழைத்து வணங்கும் விழா தேவாங்கர் மகா ஜன சபையின் சார்பாக நடைபெற்றது. பொன்னமராவதியில் உள்ள இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோயிலில் கரகமஹோத்சவ விழாவை முன்னிட்டு பொன்னமராவதி சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று சௌடாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் மகா அபிஷேக, ஆராதனை, அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் மலையாண்டி கோவிலில் இருந்து கரகம் எடுத்தல், ரதி சேர்த்தல் என்னும் கத்தி போடும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதில் ஏராளமானோர் விரதம் இருந்து பங்குனி திருவிழாவில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்வர். அதனைத் தொடர்ந்து நாளை மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமும் எடுத்துச் சென்று சாமியை வழிபாடு செய்யப்படும்.

    • புதுக்கோட்டை இரும்பாநாடு சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா இரும்பாநாடு கிராமத்தில் உள்ள பூமி நீளா சுந்தரவள்ளி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இவ்வாலயத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் ஏற்பாட்டில் பேரில் கடந்த சனிக்கிழமை உபய வேத பாராயணத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.அதனை தொடர்ந்து 3 நாட்களாக யாக வேள்விகள் நடைபெற்று வந்தது. யாக சாலை பூஜைகள் முடிந்த பின்னர், பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாசுதேவ பட்டாசார்யார் தலைமையில் ஆச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் சாமி அருள் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஜெய்மகா காளீஸ்வரி கோவிலின் 30-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
    • வருடாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சஞ்சீவி மலை கிழக்கு அடிவாரத்தில் உள்ள ஜெய்மகா காளீஸ்வரி கோவிலின் 30-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி பொன்னுசாமி தலைமை தாங்கினார். சேலம் உதவி ஆணையாளர் ராமசாமி, டாக்டர் கோதண்டராமன், தொழிலதிபர்கள் என்.ஆர். சுப்பிரமணியராஜா, பீமராஜா, கே.ஏ.சுப்பராஜா, ஹரிஹரன், தர்மகிருஷ்ண ராஜா ஆகியோரது குடும்ப வகையறாக்கள் முன்னிலை வகித்தனர். அம்மனுக்கு வருடாபிஷேகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன. மேலும் ஓம் சக்தி வழி விடு விநாயகர், பாலசுப்பிரமணியசுவாமி, சந்தனகருப்புசாமி, பீம பைரவர், காரிய சித்தி விநாயகர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள், விசேஷ பூஜைகளும் நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வருடாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. தர்மகர்த்தா டாக்டர் செந்திலாதிபன் அன்னதானத்தை ெதாடங்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் செந்திலாதிபன்,டாக்டர் மணிகண்ணன் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • பால்குடம், அக்னிசட்டி, தொட்டில், அலகு குத்தி வந்தனர்

    திருமானூர்,

    திருமானூர் கொள்ளிடகரையின் வடபுறரம் அமைந்துள்ள மகாமாரியம்மன் 56 வது ஆண்டு பால்குட திருவிழா அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடக்கறையின் வடபுறம் அமைந்துள்ள மகா மாரியம்மன் 56வது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தனர் .இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகோடிகல் பால் குடம் அக்கினி சட்டி.தொட்டில். அலகு குத்தி. முக்கிய நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தகோடிகள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.மேலும் இரவு 7 மணி அளவில் மாவிளக்கு ஏற்றி தீபமஆராதனை கண்டு களித்தனர் அது சமயம் மங்கள இசை மற்றும் வாண வேடிக்கை நடைபெற்றது இரவு 11 மணி அளவில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

    • புரவி எடுப்பு விழா நடந்தது.
    • மகிழம்பூ அய்யனார் கோவில் சென்றடைந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கே.வைரவன்பட்டி மகிழம்பூ அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் கொடுக்கப்பட்டு குலாளர்களால் புரவிகள் செய்யப்பட்டது. கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டு விரதம் மேற்கொள்ளப்பட்டது.

    புரவி எடுப்பு நாளில் குதிரைகள் ஊர் நடுவேயுள்ள அய்யனார் திடல் புரவிப் பொட்டலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இரவு முழுவதும் கோலாட்டம், கும்மியாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. புரவிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    ஊர் நடுவேயுள்ள அய்யனார் திடலில் இருந்து புரவிகள் ஊர்வலமாகப் புறப்பட்டு 2 பெரிய புரவிகளைத் தொடர்ந்து சிறிய புரவிகளுடன் 50-க்கும் மேற்பட்ட மதலைகள் நேர்த்திக்கடனாக மகிழம்பூ அய்யனார் கோயில் சென்றடைந்தது. இதில் கே.வைரவன்புட்டி மற்றும் அதன் சுற்றப்புர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • ஜி-20 உச்சிமாநாடு விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது.
    • 22 கிராமங்களை சேர்ந்த 35 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 2.75 கோடி கடனுதவி.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவன த்தில் டாக்டர் அம்பேத்கரின் 132 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா ஜி20 உச்சிமாநாடு விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது.

    வருகை தந்த அனைவரையும் கவ்டெசி தொண்டு நிறுவன தலைவர் மாவடியான் வரவேற்றார்.மதுரை பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கி தஞ்சாவூர், கரந்தை, திருச்சென்னம்பூண்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, மைக்கேல்பட்டி, மாத்தூர் உள்ளிட்ட 22- கிராமங்களைச் சார்ந்த 35 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ2.75 கோடி வங்கி மதிப்பிலான கடனு தவிகளை வழங்கி பேசினார்.

    விழாவில் பூண்டி வெங்கடேசன், பூதலூர், தங்க.கென்னடி, திருப்பூந்துருத்தி சிவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

    விழா நிகழ்ச்சியை கவ்டெசி நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி தொகுத்து வழங்கினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கவ்டெசி நிறுவன பணியாளர்கள் கோமதி, சுபாஷினி, கனேஷ்வரி, ஆர்த்தி, ரூபன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    ×