search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • முத்தமிழ்விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா நடைபெற்றது
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டு

    பெரம்பலூர்

    குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. இதற்கு கல்லூரியின் முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வர் விஜயலெட்சுமி கலந்து கொண்டு நுண்கலை போட்டிகளில் வெற்றிபெற்ற 120 மாணவ-மாணவிகளுக்கும், பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற 17 மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார். கடந்த 1-ந்தேதி நடைபெற்ற கல்லூரியின் முத்தமிழ் விழாவில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியின் முதல்வர் பானுமதி இலக்கியத்தில் அறம் என்ற தலைப்பில் பேசி, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் அன்றைய தினம் மதியம் நடந்த கல்லூரி விளையாட்டு விழாவில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் கலந்து கொண்டு பேசி விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 151 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    • கடந்த 24ம்தேதிமுகூர்த்தகால் நடும் விழாவுடன் தொடங்கி தேரோட்டம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந் தேதி முகூர்த்தகால் நடும் விழாவுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 28 - ந் தேதி வேத மந்திரம் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அரங்கரிக்கப்பட்டு திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் கடந்த 3- ந் தேதி நடந்தது.நேற்று (5ம்தேதி) பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடந்தது. பிரபாகரன் எம்.எல்.எ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் கோயில் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று இரவு நிலை நின்றது. அலங்கரிக்கப்பட்டு தேரில் பூமாதேவி, ஸ்ரீதேவி சமேத ஸ்ரீமதனகோபாலசாமி அமர்ந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    • 173 மையங்களில் 37,534 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்
    • காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

    திருச்சி,

    எஸ்.எஸ்.எல்.சி. எனப் படும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 173 மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 6 மையங்களில் 1,600 தனித்தேர்வர்கள் தேர்வை எழுதினர். அதேபோல் திருச்சி மத்திய சிறை கைதிகள் 40 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினார்கள்.இந்த தேர்வுகள் வரு–கிற 20-ந்தேதி வரை நடை–பெறுகிறது. இன்று தமிழ் தேர்வை எழுதுவதில் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு மையங்களுக்கு வந் திருந்தனர்.முன்னதாக காலையிலேயே பெற்றோர்களிடமும், பெரியோர்களிடமும் காலில் விழுந்து ஆசி வாங் கிய மாண–வர்கள் வரும் வழியில் உள்ள கோவிலிலும் தரிசனம் செய்துவிட்டு வந்தனர். அதேபோல் தேர்வு மையங்களில் கடைசி நேரத்தில் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து தேர்வை எதிர்கொள்வது குறித்து ஒருவருக்கொருவர் ஆலோசனைகளை பகிர்ந்துகொண் டனர்.மேலும் வகுப்பு ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் தைரியம் கூறி தேர்வு மையங்களுக்குள் அனுப்பி வைத்தனர். இந்த தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 350 நிலையான குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு இருந் தனர். அவர்கள் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட் டார்கள். அத்துடன் 20 பேருக்கு ஒரு தேர்வுக்கூட கண்காணிப்பாளர் பணியில் இருந்தார். திருச்சி மாவட்டத்தில் வினாத்தாள் கட்டுக்காப்பகத்துக்கு 9 இடங்கள் அமைக் கப்பட்டிருந்தன. இந்த காப்பகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் வழித்தட அலுவலர்களாக 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு தொடங் கிய தமிழ் தேர்வை மாணவ, மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்.அதேபோல் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி தேர்வு எழுத சிறப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அவர்கள் சொல் வதை எழுதுவதற்காக 400 பேர் பணியில் இருந் தனர். இந்த தேர்வு மிகவும் எளிதாக இருந்தாக அவர் கள் மகிழ்ச்சியுடன் தெரி–வித்தனர்.

    • தான்தோன்றி மலையில் ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா நடைபெற்றது
    • ரத்ததான முகாம், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் தான்தோன்றிமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில், முப்பெரும் விழா நடந்தது. வட்டார தலைவர் பரணிதரன் தலைமை வகித்தார். ரத்ததான முகாம், விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா, மாநில பொறுப்பு பெற்ற பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை நடந்தது. கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலர் சகுந்தலா, வட்டார செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் ராமநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தலைக்கு மூன்று கிலோ வரை அள்ளி சென்றனர்
    • வேடிக்கை பார்க்க வந்த வெளியூர்வாசிகளும் மீன் பிடித்து சென்றனர்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசா யம் தழைக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெற்றது.அதிகாலையிலேயே பொது மக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா,வலை,பரி,கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். ஜாதி மதம் பாராமல் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. தூரி என்ற மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர். முன்ன தாக ஊர் பெரிய வர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வந்த வெளியூர் நபர்களும் கண்மாய்க்கு வந்து ஆர்வத்தோடு மீன்பிடித்தனர்.ஒரு சிலர் கைகளுக்கு இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரை எடை கொண்ட கட்லா வகை மீன்கள் கிடைத்தன.

    • கீழப்பலூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
    • பொதுமக்களுக்கு பழங்கள் விநியோகம்

    திருமானூர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் முன்னாள் தலைமை அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.இந் நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பளிகாநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அக்பர் ஷரீஃப், தனசெல்வி சக்திவேல், தனலட்சுமி மருதமுத்து, கமலக்கண்ணன், மலர்விழி நல்லதம்பி, சேட் ராஜேந்திரன், தவமணி, செந்தில்குமார், மலர்விழி நல்ல தம்பி, பாவேந்தன், இளையராஜா, மணிவேல், சித்ரா உதயகுமார், அய்யாக்கண்ணு, இலந்தை தேவர், தில்லை திருவாசகம் மணி, சரவணன், முருகேசன், சௌந்தர், சபரிநாதன், மாரியப்பன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தொடர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
    • மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் இன்று (5-ந் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் கால யாக சாலை பூஜை கடந்த 2-ந் தேதி முதல் தொடங்கியது. 20- ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ.3 ே காடி செலவில் கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதில் கோயில் ராஜநிலை கதவுகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் தங்க முலாம் பூசப்பட்டுளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 3 யாக சாலைகள் மொத்தம் 61 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடத்துவதுற்று கடந்த மாதம் 27-ந் தேதி கோவிலில் யானை முகத்தான் வழிபாடு நடத்தி, இற அனுமதி பெற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 30-ந் தேதி யானை முகத்தான் வழிபாடு, செல்வ வழிபாடு, நவகோள்கள் வழிபாடு, பசு வழிபாடு நடத்தி இறை அனுமதியும், மறையோர் அனுமதியும் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து பூமி வழிபாடும், லட்சுமி வேள்வியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாகசாலை பூஜை கடந்த 2-ந் தேதி மாலை தொடங்கியது. அதனை தொடர்ந்து 2 மற்றும் 3 -ம் கால யாக சாலை ாபூஜைகளும், நேற்று (4-ந் தேதி) 4 மற்றும் 5-ம் கால யாக சா லை பூகைளும் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்குடமுழக்கு விழாவை முன்னிட்டு இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் விமானம், ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றியும், மதுரகாளியம்மன், அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • கோலப்போட்டியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசு
    • முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது

    புதுக்கோட்டை

    வடக்கு மாவட்ட திமுக மகளிரனி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோலப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கேகே செல்ல பாண்டியன் பரிசு வழங்கினார். அருகில் மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ரவி,வடுகபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குமார், ஒன்றிய இளைஞரனி சிவக்குமார், விராலிமலை தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சுகி என்கிற சுகுமாரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் வசந்தி பிரபு, அரசு ஒப்பந்தக்காரர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்திரான்பட்டு அரசு தொடக்க பள்ளி ஆண்டுவிழாவில் வழங்கப்பட்டது
    • பல்சுவை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் குழந்திரான்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் யோகா, பரதநாட்டியம், நடன நிகழ்ச்சிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நாடகங்கள் கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளையின் தலைவரும் பெரும் தொழில் அதிபருமான கரிகாலன் தேவர் சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கினார். பரிசு பொருட்களை வழங்கிய கரிகாலன் விழாவில் பேசும்போது, இந்தப் பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளை என்றும் துணை நிற்கும். நன்றாக படித்து அதிக மதிப்பெண்களை பெறும் மாணவ மாணவியர்களுக்கு மேல் படிப்புக்கான செலவுகளை அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும் பேசினார். இந்த அறிவிப்பினை கேட்டு பெற்றோர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, வட்டார கல்வி அலுவலர், ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சிவ திருமேனிநாதன், பட்டிமன்ற நடுவரும் பழனி ஆண்டவர் கலை கல்லூரியின் பேராசிரியருமான முனைவர் தங்க ரவிசங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள், பள்ளியின் இருபால்ஆசிரிய திரளாக கலந்து கொண்டனர்.

    • பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது
    • பால்,வேலை காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்

    ஜெயங்கொண்டம், 

    ஜெயங்கொண்டம் அருகிலுள்ள வாணதிரய ன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்த முருகன் கோவிலுக்கு அருகில் உள்ள கிராமங்களான இடையார், பிலிச்சிகுழி, ஒக்கநத்தம், பருக்கல், உடையார்பாளையம், சில கால், பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பலவகையான காவடிகள்எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக முருகன் வள்ளி தெய்வானைக்கு திரவியப்பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் ஆன சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. காவடி திருவிழாவை காணவும், சாமி தரிசனம் செய்திடவும் வானதிராயன்பட்டிணம் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள்ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர். விழாவி ற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் விழா கமிட்டியினர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • மாநில பொதுச்செயலாளர் கலந்து கொண்டு பேசினார்
    • ஓய்வு பெற்ற பொறுப்பாளர்களுக்கு பாராட்டு நடைபெற்றது

    அரியலூர், 

    அரியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தென்னிந்தியாவின் மூத்த ஆசிரியர்கள் சங்கம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் வட்டாரம் சார்பில் இயக்க பவள விழா, பொதுச்செயலாளா; பாராட்டு விழா, ஓய்வுபெற்ற பொறுப்பாளர்கள் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது, வட்டாரதலைவர் அருள்ஜோதி தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபாக்கியம், மகளிர் அமைப்பாளர்அம்சவள்ளி முன்னிலையில் மாவட்ட துணைதலைவர், வட்டாரசெயலாளர் சண்முகம் ஆகியோர் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாநிலதுணைதலைவர், மாவட்ட செயலாளராகிய எழில், மாவட்டபொருளாளர் தங்கசிவமூர்த்தி, மாநிலசெயற்குழு உறுப்பினர் வேலுமணி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற பொறுப்பாளர்களை பாராட்டினார்கள், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன், மாநிலதுணை பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்கள், விழா முடிவில் வட்டாரப்பொருளாளர் நன்றி கூறினார்.

    • கல்லங்குறிச்சி குறைதீர்க்கும் குமரன் கோயிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது
    • பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் முருகனுக்கு நடைபெற்றது

    அரியலூர், 

    அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி சாலையிலுள்ள குறைதீர்க்கும் குமரன் கோயிலில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள முருகனுக்கு பால், தயிர்,பன்னீர், சந்தனம், தீருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் கோயிலில் அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    ×