search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229437"

    • 108 திவ்யதேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது
    • அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ண புரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்ப டுகிறது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதுவழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவையும், சவுரிராஜ பெருமாள் ஓலை சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை யொட்டி, வருகிற 2-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சித்ரா பௌர்ணமியையொட்டி கருட சேவை வீதி உலா நடைபெற்றது
    • திருவீதி உலா வெளிபிரகாலத்தில் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம்

    மண்ணச்சநல்லூர்,

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருச்சிக்கு அருகில் துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.108 வைணவத் திருத்தலங்களில் நான்காவது திவ்ய தேசமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று கருட சேவை திருவீதி உலா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கருடசேவையைத் தரிசிப்பது பாவம் போக்கும், நாக தோஷம் போக்கும் என்பது ஐதீகம். மேலும் திருமணமான பெண்கள் கருட பஞ்சமி நாளில் கருடனை தரிசித்து பூஜை செய்தால் பிறக்கும் குழந்தைகள் அறிவும், வீரமும் உடையவர்களாக விளங்குவர் என்று நம்பப்படுகிறது.இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நாளல் மாலை கருடசேவை திருவீதிஉலா நடைபெறும் கோவில் வெளிப்பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் மழை பெய்யும் என்ற காரணத்தால் கோயில் உட்பிரகாரத்தில் மட்டுமே கருடசேவை நடைபெற்றது. இதனால் கருடசேவை வெளிப்பிரகாரத்தில் திருவீதிஉலா நடைபெறாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    • இவர்களுக்கு நேரே தனி பந்தலில் ஆஞ்சநேயர் எழுந்தருளி எதிர்சேவை சாதித்தார்.
    • ஒரே நேரத்தில் 14 பெருமாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சுவாமிமலை:

    ஆண்டுதோறும் சித்திரை மாத வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 14 வைணவ கோவில்களிலிருந்து 14 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் புறப்பட்டு ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

    14 கருட சேவை நிகழ்ச்சி

    அதேபோல், இந்த ஆண்டு கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய தெருவில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் 14 கருட சேவை நிகழ்ச்சி இன்று மதியம் நடந்தது.

    இதில் சாரங்கபாணி, சக்ரபாணி, ஆதிவராக பெருமாள், ராமசாமி, ராஜகோபாலசாமி, அகோபில மடம் லட்சுமி நரசிம்ம பெருமாள், சீனிவாசப்பெருமாள், கொட்டையூர் நவநீதகிருஷ்ணன், வேணுகோபாலசாமி, பட்டாச்சாரியார் தெரு நவநீதகி ருஷ்ணன், சோலைப்பன்தெரு ராமசாமி, மேலக்காவேரி வரதராஜபெருமாள், பிர்மன்கோவில் வேதநாராயண பெருமாள், பிர்மன்கோவில் வரதராஜ பெருமாள் என 14 கோவில்களில் இருந்து உற்சவ பெருமாள்கள் தனித்தனி கருட வாகனங்களில் ஒருசேர ஒரே இடத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    மகா தீபாராதனை

    இவர்களுக்கு நேரே தனி பந்தலில் ஆஞ்சநேயர் எழுந்தருளி எதிர்சேவை சாதித்தார்.

    பெருமாள்கள் கருட வாகனத்தில்எழுந்த ருளியவுடன், திருமங்கை யாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஒரே நேரத்தில் 14 பெருமாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    இதனை காண கும்பகோணம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • நேற்று 5 -வது நாள் திருவிழாவை முன்னிட்டு இரட்டை திருப்பதி கோவிலில் கருடசேவை நடந்தது.
    • மாலையில் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் 4-வது தலமான தொலைவில்லிமங்கலத்தின் உள்ள இரட்டை திருப்பதி கோவிலில் பிரமோற்சவ திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 5 -வது நாள் திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. காலை 8 மணிக்கு விஸ்வரூபம். யாகசாலை ஹோமம் முடிந்து 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்தம் கூறப்பட்டு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு உற்சவர் செந்தாமரைக் கண்ணன். உற்சவர் தேவர் பிரான் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தொடர்ந்து 16-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான அலங்காரம் ஏற்பாடுகள் அர்ச்சகர்கள் சுந்தர ராஜன், ரகு செய்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ராமானுஜ சுவாமிகள், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர், சந்தானம், வாசு, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி. உபயதார் திருமலை, சீனிவாச சேவைகள் அறக்கட்டளை முதுநிலை செயல் அலுவலர் கசங்காத்த பெருமாள், கள இயக்குனர் விஜயகுமார், பொறியாளர் சுப்பிரமணியம் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
    • புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு உதயகருட சேவை நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப் பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் கோவில் செயல் அலுவலர் பரமானந்தம், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, வருகிற 9-ம் தேதி தங்க கருடசேவையும், 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களா–சாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, வருகிற 9-ம் தேதி தங்க கருடசேவையும், 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×