search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையநல்லூர்"

    • சின்னதம்பி நாடாரூர் விலக்கில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
    • மாணவ, மாணவிகள் அவ்வழியே செல்வதற்கு பெரிதும் அச்சப்படுகின்றனர் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னத்தம்பி நாடாரூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினர்.

    அதில் கள்ளம்புளி-சேர்ந்தமரம் சாலையில் சின்னதம்பி நாடாரூர் விலக்கில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைக்கு செல்லும் மது அருந்துபவர்களால் அப்பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்படுவதாகவும், கடை தொடங்கியதில் இருந்து இதுவரையில் 8 பேர் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளனர் எனவும் சின்னத்தம்பி நாடாரூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவ்வழியே செல்வதற்கு பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை மூடிவிட்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் ரூ.25 கோடி மதிப்பில் நகர்புற காடுவளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
    • கடையநல்லூர் நகராட்சி போகநல்லூர் உரக்கிடங்கில் ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் வேம்பு, கொடுக்காபுள்ளி, நாவல், நெல்லி, புளிய மரம் மற்றும் பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் ரூ.25 கோடி மதிப்பில் நகர்புற காடுவளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

    அதன்படி கடையநல்லூர் நகராட்சி போகநல்லூர் உரக்கிடங்கில் ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் வேம்பு, கொடுக்காபுள்ளி, நாவல், நெல்லி, புளிய மரம் மற்றும் பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் 2698 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவிற்கு கடைய நல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, இள நிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அய்யாபுரம் கூட்டுறவு சங்க தலைவரும், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பா ளருமான செல்லத்துரை மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, முருகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப் பாளர் மூவன்னா மசூது, மற்றும் தி.மு.க. பிரமுகர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
    • கடையநல்லூர் அருகே உள்ள அனைத்து கல் குவாரிகளையும் கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சொக்கம்பட்டி, புன்னையாபுரம், போகநல்லூர், திரிகூடபுரம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளின் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெறும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளில், மண்வரப்பு, அங்கன்வாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அனைத்து கிராமம் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் சொக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் என பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் கடையநல்லூர் அருகே உள்ள அனைத்து கல் குவாரிகளையும் கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமம் ஊராட்சி) ராதா, உதவி பொறியாளர் ஜான் சுனிர்தராஜ், கவுன்சிலர் சிங்கிலி பட்டி மணிகண்டன், பஞ்சாயத்து தலைவர்கள் திரிகூடபுரம் முத்தையா பாண்டியன், சொக்கம்பட்டி பச்சைமால், போக நல்லூர் சண்முகப்பிரியா, புண்ணியாபுரம் திலகவதி கண்ணன், பஞ்சாயத்து கிளர்க் முருகேசன், தங்கத்துரை, மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தினை குத்தகை அடிப்படையில் நகராட்சிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
    • பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு தீர்மானம் கைவிடப்பட்டது என நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் எனது தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில். என்னால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் எண் 166 படி நகராட்சியில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாததால் தினம்தோறும் வந்து செல்லும் வெளியூர் மக்கள் நலன் கருதி பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் நிறுத்தி வைக்கும் நிலையில், போதிய இட வசதிகளுடன் கூடிய அனைத்து அடிப்படை வசதிகளுடன் நவீன பஸ் நிலையம் அமைப்பதற்கு தேவையான இடம், இதற்காக தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பண்பொழி சாலை அருகில் அமைந்துள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 8.84 ஏக்கர் பரப்பளவில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய பயன்பாட்டில் உள்ள நிலத்தினை பொது நோக்கத்திற்காக இந்நகராட்சிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் கடையநல்லூர் நகராட்சிக்கு வழங்குவதற்காக தீர்மானத்தினை நகர் மன்றத்தில் நானே கொண்டு வந்தேன். ஆனால் தற்போது நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் வேண்டுகோள் படி பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு மேற்கண்ட விவசாய பயன்பாடு உள்ள நிலத்தினை அறநிலையத்துறையிடம் இருந்து கடையநல்லூர் நகராட்சிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்ற தீர்மானம் கைவிடப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொல்லி மாடசாமி மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • போலீசார் கொல்லி மாடசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள கொல்லி மாடசாமி என்பவர் கடந்த 2020 -ம் ஆண்டு இடப்பிரச்சனை காலமாக அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரை கூட்டாளியுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். இவர் மீது கடையநல்லூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்து குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு படுத்திருந்த அவர் நள்ளிரவில் திடீரென மலம் கழிப்பதற்காக வெளியில் சென்றார்.

    அதன் பின்னர் அவர் வீடு திரும்பி வராததால் காலையில் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்பொழுது அருகில் உள்ள மரம் அருகே இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே இது குறித்து கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் கொல்லி மாடசாமியின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா? அல்லது இயற்கை மரணம் அடைந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர் 

    • கோமு- பேச்சியம்மாளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.
    • மனவேதனை அடைந்த கோமு பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள பேட்டை மலம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கோமு. இவரது மனைவி பேச்சியம்மாள்(வயது 26).

    இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கோமு அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் பேச்சியம்மாள் திருவேட்டநல்லூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த கோமு பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நம்பர் பலகை இல்லாமல் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • தொடர் விசாரணையில் அவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரியவந்தது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அட்டைகுளம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக நம்பர் பலகை இல்லாமல் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கடையநல்லூரை சேர்ந்த அக்பர் அலி என்பதும், அது திருடிவரப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

    மேலும் தொடர் விசாரணையில் அவர் கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதும், அதனை அவர் பொட்டல்புதூரை சேர்ந்த ஷேக் அலி என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.   

    • தமிழகம் முழுவதும் அ.திமு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கடையநல்லூர்:

    மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை ஆகிய காரணங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அ.திமு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடையநல்லூர் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ் சாலை மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    மாவட்ட அவைத் தலைவர் வி.பி.மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையா பாண்டியன், கடையநல்லூர் நகர செயலாளர் முருகன், அச்சன்புதூர் பேரூர் செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான சுசீகரன் உட்பட நகர, பேரூர், ஒன்றிய செயலாளர்கள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். 

    • ஊர் பொதுமக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் அமைச்சர் மெய்யநாதனுக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி தூசிமாடன் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் அழைப்பு விடுக்க ப்பட்டிருந்தது. ஆனால் கும்பாபிஷேகத்தன்று அமைச்சர் அலுவலகப் பணி காரணமாக பங்கேற்க முடியவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவில் அமைச்சர் மெய்ய நாதன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தூசிமாடன் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

    விழாவில் சொக்கம்பட்டி வலையர் குடியிருப்பு மூத்தகுடி வளரி வளையல் முத்தரையர் உறவின்முறை தூசிமாடன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூசைப்பாண்டியன், நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ஊராட்சி மன்ற தலைவர் பச்சைமால், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசல பாண்டியன், சிங்கிலி பட்டி மணிகண்டன்,கிளை செய லாளர்கள் மணிகண்டன் கருப் பண்ணன், சுப்பிரமணியன், சுரேஷ், கவுன்சிலர்கள் முருகன், முகைதீன்கனி, திவான்மைதீன், கார்த்திக், மைதீன் ஒலி, வக்கீல்கள் அருணாசலம், சசிகுமார், நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, வேலுச்சாமி பாண்டியன், வெங்கட்ராமன், முதலியான்கான், இலத்தூர் பரமசிவன், பூரண சந்திரன், பிள்ளையார்பாண்டியன், தங்கபாண்டியன், முத்துராஜ், பாலாஜி, முருகானந்தம், ஞான பண்டிதன், மாரித்துரை, ராஜ், சேகர், செல்லச்சாமி, ரத்தினம், முருகேஷ் , பிச்சையா, கதிரேசன், செல்லச்சாமி, பகவதிபாண்டியன், ராஜா, மணிமாறன், மருதப்பன், ஆனந்தராஜ், விக்ரம் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கருப்பாநதி அணை கடையநல்லூர் நகராட்சி, சொக்கம்பட்டி ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
    • ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 2 டன் மீன்கள் இறந்துவிட்டதாக குத்தகை எடுத்த முருகன் வேதனையுடன் தெரிவித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய பகுதியில் கருப்பாநதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 72 அடியாகும்.

    இந்த அணை கடையநல்லூர் நகராட்சி, சொக்கம்பட்டி ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இந்த அணையில் இருந்து பெருங்கால்வாய், பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய், இடைகால் கால்வாய், கிளாங்காடு கால்வாய், ஊர்மேலழகியான் கால்வாய் ஆகியவற்றின் மூலம் 72 குளங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு அதன் மூலம் சுமார் 9,514.7 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் மழை பொய்த்ததால் கருப்பாநதி அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக அணை வறண்டு விட்டது. இதன் காரணமாக கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    இதற்கிடையே மீன்பாசி குத்தகைக்காக அணையில் வளர்க்கப்பட்ட மீன்கள் நீர் இல்லாத காரணத்தால் செத்து மிதந்தன. ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 2 டன் மீன்கள் இறந்துவிட்டதாக குத்தகை எடுத்த முருகன் வேதனையுடன் தெரிவித்தார்.

    தற்போது இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம் பிரிவு வன திருப்பதி பகுதியில் வனவராக தனது முதல் பணியை தொடங்கினார்.
    • வனத்துறையில் உயர்பதவியில் அமர வேண்டும் என்று விரும்பிய சுப்புராஜ் கடந்த 4 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் தேர்வு எழுதி வந்தார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் செவல் விளை தெருவில் வசிக்கும் குருசாமி-முனியம்மாள் தம்பதியரின் மூத்த மகன் சுப்புராஜ்(வயது 27).

    வனவர்

    என்ஜினீயரிங் முடித்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு சென்னைக்கு சென்றார். அங்கு சக நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடியபோது தான் வனத்துறையின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது.

    இதனால் எப்படியாவது அரசு வேலையில் அதுவும் வனத்துறை பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்த சுப்புராஜ் சென்னையில் உள்ள அரசின் அகில இந்திய குடிமை பணிகள் தேர்வாணையத்தில் 2 ஆண்டுகள் படித்தார்.அதனை தொடர்ந்து அரசு தேர்வு எழுதிய சுப்புராஜ் கடந்த 2019-ம் ஆண்டு வனவர் தேர்வில் வெற்றி பெற்றார். அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம் பிரிவு வன திருப்பதி பகுதியில் வனவராக தனது முதல் பணியை தொடங்கினார். தற்போது அங்கேயே பணி செய்து வருகிறார்

    வன அதிகாரி

    ஆனாலும் அதே வனத்துறையில் உயர்பதவியில் அமர வேண்டும் என்று விரும்பிய சுப்புராஜ் கடந்த 4 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் தேர்வு எழுதி வந்தார். சமீபத்தில் அவர் டி.எஸ்.பி. தரத்திலான பணிக்கு தேர்வாகி உள்ளார். இதற்காக ஏற்கனவே 5 முறை தேர்வு எழுதிய அவர் 6-வது முறையாக சமீபத்தில் தேர்வெழுதி வனத்துறை அதிகாரியாக வெற்றி பெற்றுள்ளார்.

    இதையறிந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சுப்புராஜை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதனை தனது முகநூல் பக்கத்தில் பாராட்டி டி.ஜி.பி. பதிவிட்டார். அதில், கடையநல்லூர் சிறு வியாபாரி குருசாமியின் மகன் சுப்புராஜ். முதல் பட்டதாரியான இவர் இன்று இந்திய வனப்பணியில் சேருகிறார். முயற்சி திருவினையாக்கும். முதல் பட்டதாரியான சுப்புராஜ் ஐ.எப்.எஸ். வாழ்த்துகள் என பாராட்டி தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

    • கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டு குறைகள் குறித்து பேசினர். அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ராஜையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் , சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர் சக்திவேல், சிவா முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு மாரியப்பன் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி அட்டைகுளம் தெரு ஊரணிக்கு கீழ்புறம் உள்ள காலி இடத்தில் சுற்றுச்சுவர் அமைப்பது, தேரடி தெரு முதல் தெருவில் மழைநீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பது,

    பேட்டை மலம் பாட்டை ரோடு மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைப்பது, அட்டை குளம் ஊரணியை புணரமைத்து மேம்படுத்துவது, குமந்தாபுரம் கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள கலைமான்நகர் குடியிருப்பு தெருக்களுக்கு பேவர் பிளாக் சாலை அமைத்தல், அணுகு சாலை அமைத்தல் , கருப்பாநதி அணை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுதல்,

    மேலக்கடையநல்லூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மீத்திறன் வகுப்பறை, கழிவுநீர் மற்றும் கழிப்பறை கட்டுவது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரேவதிபாலீஸ்வரன், பூங்கோதை தாஸ், சுபா ராஜேந்திரபிரசாத், தனலெட்சுமி, பாலசுப்பிரமணியன், அப்துல் வஹாப், வளர்மதி, மாலதி, சந்திரா, முருகன், முகையதீன் கனி, மீராள்பீவி, வேல்சங்கரி முத்துக்குமார், சங்கரநாராயணன், பாத்திமா பீவி, நிலோபர், பீரம்மாள், அக்பர்அலி, யாசர்கான், முகமது அலி, மகேஸ்வரி, துர்காதேவி, முகமது முகைதீன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரி, முத்துலெட்சுமி, மாவடி க்கால் சுந்தரமகாலிங்கம், தங்கராஜ், செய்யதலி பாத்திமா பங்கேற்றனர்.

    முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டு குறைகள் குறித்து பேசினர். அதற்கு நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    ×