என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 229844"
- ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
- சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கடைவீதியில் செல்போன் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் சிவக்குமார் (வயது48). இவர் நேற்று முன்தினம் இரவு செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
உடனடியாக தனது கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார். அதில் மணல்மேடு மாதாகோவில் தெருவை சேர்ந்த நிலவழகன் (40) என்பவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து செல்போன்களை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து அவர் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளுடன் சென்று மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலவழகனை கைது செய்தனர்.
- பரிதா (வயது 36). குழந்தைகளை அழைத்து வருவதாற்காக நேற்று இரவு 8.30 மணியளவில் சென்றார்.
- மர்மநபர்கள், திடீரென பரிதாவின் கையில் இருந்த ஹேன்ட்பேக்கை பறித்து தப்பிச் சென்றனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் அடுத்த ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் முகமதுசரீப். இவரது மனைவி பரிதா (வயது 36). இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள பக்கத்து வீதியில், இவர்களது குழந்தைகள் டியுஷன் படித்து வருகின்றனர்.இவர்களை அழைத்து வருவதாற்காக நேற்று இரவு 8.30 மணியளவில் பரிதா சென்றார். குழந்தைகளை அழைத்துக் கொண்டு வாட்டர் டேங்க் அருகே நடந்து வந்து ெகாண்டிருந்தார். அந்த இடம் இருள் சூழ்ந்த பகுதியாகும். அப்போது பரிதாவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், திடீரென பரிதாவின் கையில் இருந்த ஹேன்ட்பேக்கை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த பரிதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். மர்மநபர்களால் பறித்து செல்லப்பட்ட ஹேன்ட்பேக்கில் ரூ.5 ஆயிரம் பணம், ஏடிஎம் கார்டு, ரேஷன் கார்டு, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பரிதா அளித்த புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான மரங்கள் ரூ.20 ஆயிரம் வருவாயாக ஏலம் விடப்பட்டது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர்.
- இன்று காலை கோயில் பூசாரி வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார்.
கடலூர்:
வேப்பூர் திருபாக்கம் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.20 ஆயிரம் வருவாயாக கோவிலுக்கு கிடைத்தது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர் இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கோவிலில் பூஜைகள் செய்து வீட்டு, கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டிற்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது ,கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார். ஊர் பொதுமக்கள் இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவில் உண்டியலில் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரே கும்பல்தான் வெட்டி கொலை செய்தனரா?
- 2 பேரின் உடல்களையும் பாலங்களின் கீழ் தனி தனியாக மர்ம நபர்கள் வீசி சென்றனர்.
தஞ்சாவூர்:
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கொத்தம்பட்டி குண்டாற்று பாலத்தின் கீழே அரிவாள் வெட்டு காயங்களுடன் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன.
இதேபோல் திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த முசிறி - துறையூர் செல்லும் மெயின் ரோட்டில் கண்ணனூர் அருகே பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இந்த 2 கொலை சம்பவங்கள் குறித்தும் தகவல் அறிந்த துறையூர் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர்களை ஒரே கும்பல்தான் வெட்டி கொலை செய்தனரா? வேறு பகுதிகளில் கொலை செய்து 2 பேரின் உடல்களை தனித்தனியாக வீசிச்சென்றார்களா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த பிரபு (வயது44), ஸ்டாலின் (46) ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் கொலை செய்து உடலை திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளுக்கு எடுத்து சென்று பாலங்களின் அடியில் வீசி சென்றது தெரியவந்தது.
இதற்கிடையே ஒரத்தநாடு அருகே தென்னமநாடு தெற்கு தெரு பாலத்தில் ரத்தக்கறை உடைந்த மதுபாட்டில்கள், செருப்புகள் சிதறி கிடப்பதை தகவல் அறிந்து ஒரத்தநாடு போலீசார் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.அதில், தென்னமநாட்டில் கொலை செய்து விட்டு 2 பேரின் உடல்களையும் திருச்சி மாவட்ட பாலங்களின் கீழ் தனி தனியாக மர்ம நபர்கள் வீசி சென்றது தெரிய வந்தது.
அவர்களை கொலை செய்தது யார் ? கொலைக்கான காரணம் என்ன ? எனபது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிதம்பரத்தை அடுத்த கண்டியாமேடு கிராமத்தில் வசிப்பவர்கள் அறிவுக்கண்ணன் லதா தம்பதியர்.
- அந்த மர்ம நபர்கள் அறிவுக்கண்ணன் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறித்து சென்றனர்..
கடலூர்:
சிதம்பரத்தை அடுத்த கண்டியாமேடு கிராமத்தில் வசிப்பவர்கள் அறிவுக்கண்ணன் லதா தம்பதியர். இவர்கள் தங்கள் குடும்ப செலவிற்காக சிதம்பரம் தெற்கு வீதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் நகையை அடமானம் வைத்தனர். இந்நிலையில் அடமானம் வைத்த நகையை மீட்க ரூ.3 லட்சம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சில்லரை பணத்தை எடுத்து வீசினர். இதனை எடுத்து அவர்களிடம் ஓப்படைக்க அறிவுக்கண்ணன், லதா தம்பதியர் முயற்சித்தனர்.
அப்போது அந்த மர்ம நபர்கள் அறிவுக்கண்ணன் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி அறிவுக்கண்ணன், லதா தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
- பா.ம.க. கொடி க்கம்பம் உளளது. இதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது.
- பா.ம.க. கொடியை இறக்கி தீ வைத்துள்ளனர். இதனால் கொடிக்கம்பத்தில் எரிந்த நிலையில் பா.ம.க. கொடி தொங்கி கொண்டிருந்தது
கடலூர்
புவனகிரி அடுத்த அழிச்சிகுடி கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. கொடி க்கம்பம் உளளது. இதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது மர்ம நபர்கள் நேற்று இரவு, கொடிக்கம்பத்திலிருந்து பா.ம.க. கொடியை இறக்கி தீ வைத்துள்ளனர். இதனால் கொடிக்கம்பத்தில் எரிந்த நிலையில் பா.ம.க. கொடி தொங்கி கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்த பா.ம.க.வினர் கொடிக்கம்பம் அருகில் திரண்டனர். தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு எரிந்த நிலையில் இருந்த பா.ம.க. கொடியை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், இது தொடர்பாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் புவனகிரி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் புவனகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அதே இடத்தில் பா.ம.க. கொடி அறுத்து எரியப்பட்டது. இது தொடர்பான வழக்கும் புவனகிரி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதே போல மற்றொரு சம்பவம் நடந்திருப்பது பா.ம.க.வினரிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல புவனகிரி சித்தேரியில் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த கொடி அறுத்து எரிந்துள்ளனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் நற்பணி மன்ற பேனரும் கிழிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. கொடியை எரித்த அதே மர்ம நபர்கள் இந்த செயலிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
- செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
வடவள்ளி,
கோவை ஓனப்பாளையம் அடுத்த பூச்சியூரில் பூபதி ராஜா நகர் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியையொட்டி அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இந்த நிலம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் மது போதையில் அருகில் இருக்கும் வீடுகளின் கதவையும் தட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செடி, கொடிகளை அகற்றினர். இருப்பினும் சமூக விரோதிகள் இங்கு இரவு நேரங்களில் சுற்றி திரிவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே இந்த இடத்தை அரசு கையகப்படுத்தி தங்கள் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கலெக்டர், பேரூர் தாசில்தாரிடம் மனு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
- கிராமங்களில் உள்ள மின்மாற்றிகளை மர்மநபர்கள் சேதப்படுத்தி அதில் இருந்த சுமார் 600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச்சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே அலியாபாத், காட்டு எடையார் பாளையம் மற்றும் காட்டுசெல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள மின்மாற்றிகளை மர்மநபர்கள் சேதப்படுத்தி அதில் இருந்த சுமார் 600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச்சென்றனர். இது குறித்து ஜி.அரியூர் மின்வாரிய இளமின்பொறியாளர் கிருபாகரன் ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- மர்மநபர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்தது தெரியவந்தது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள சாரங்கபாணி புளியம்பேட்டை கிராமத்தில் உமா மகேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சிவாச்சாரியார் பூஜை செய்து விட்டு பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறு நாள் காலையில் பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாலா திரு–விடை–மருதூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.
- நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.
குனியமுத்தூர்
கோவை சுந்தராபுரம் எஸ்.பி.டவர் பின்புறம் செங்கப்ப கோனார் லே-அவுட் அமைந்துள்ளது.
இந்த பகுதியையொட்டிய செங்கப்ப கோனார் தோட்டம் மற்றும் விநாயகர் கோவில் அமைந்துள்ள பகுதியில் தெருவிளக்கு வசதி கிடையாது.
இதனால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எதிரில் நிற்பர் யார் என்று கூட கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு கடும் இருள் நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆள் நடமாட்டம் இல்லாததால் நள்ளிரவில் விநாயகர் கோவில் முன்பு 2,3 பேர் நின்று கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கத்தி உள்ளிட்ட பயரங்கள் ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் என நினைத்து மக்கள் சென்று அவர்களிடம் எதுவும் கேட்பதில்லை.
காலையில் பார்த்தால் அந்த பகுதி முழுவதும் காலி பாட்டில்களாக கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் பதற்றாகவே காட்சியளிக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இப்பகுதி முழுவதும் தெருவிளக்கு இல்லாத காரணத்தால் சமூக விரோதிகள் அதனை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.அப்பகுதி முழுவதும் பிரகாசமான வெளிச்சம் இருந்தால் அப்பகுதியில் யாரும் நிற்க மாட்டார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்விளக்கு இல்லாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள பரதநாட்டிய பள்ளியில் சிலைகள் திருட்டு போனது. மேலும் வழிப்பறி சம்பவமும் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி முழுவதும் தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நபரை மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- மயிலாடுதுறை தனிப்படை போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து சீர்காழி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் வடக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ். ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டிணம், செம்பனார்கோவில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் கடந்த மாதம் 25-ந்தேதி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தப்பி ஓடிய மர்ம கும்பலை தனிப்படைகள் அமைத்து முக்கிய குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த சார்லஸ், மணிகண்டன் முகேஷ் சிலம்பரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இக்கொலை தொடர்பாக பாரதி, கீர்த்திகரன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
வந்து செல்லும்போது நீதிமன்றத்தின் வெளியில் காத்திருந்த மயிலாடுதுறை தனிப்படை போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து சீர்காழி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கம்பிகளை, மர்பநபர்கள் திருடி சென்றனர்.
- சி.சி.டி.வி. காமிராவில் கம்பியை திருடி சென்ற காட்சி பதிவாகியது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தஞ்சை குடந்தைதேசிய நெடு ஞ்சாலை திருப்பாலை த்துறையில் தவீடுகள் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும்கடையை முகமது நிசார் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடித்துவிட்டு இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
காலையில் கடையை திறக்க வரும்போது, முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே கடையின் உள்ளே சென்று பார்த்த போது, வீடு கட்டுவதற்காக விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 7 டன்னுக்கு மேல் எடை உள்ள 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்பிகளை, மர்பநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது லாரியை கடைக்கு உள்ளே கொண்டு வந்து கம்பியை திருடி சென்ற காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து பாபநாசம் காவல் நிலையத்தில் முகமது நிசார் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்