search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • ராமசாமிக்கு திருமணம் ஆனதில் இருந்து மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது.
    • கைது செய்யப்பட்ட மகாலெட்சுமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 63). இவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

    இவரது மனைவி சீதாராமலெட்சுமி(58). இவருக்கு ஒரு மகளும், ராமசாமி என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு சுத்தமல்லி அருகே கொண்டாநகரத்தில் திருமணமாகி உள்ளது. ராமசாமிக்கு மகாலெட்சுமி(27) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும், 10 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் மாமியார்-மருமகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மகாலெட்சுமி, நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சீதாராமலெட்சுமியை சரமாரியாக கம்பால் தாக்கிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து சென்றார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதா கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து மகாலெட்சுமியை கைது செய்தனர்.

    இந்நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி சீதாராமலெட்சுமி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, மகாலெட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    ராமசாமிக்கு திருமணம் ஆனதில் இருந்து மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்களிடையே பிரச்சினையை போக்குவதற்காக சண்முகவேல் குடியிருக்கும் வீட்டுக்கு பின்புறத்தில் புதிதாக ஒரு வீட்டை ராமசாமிக்கு கட்டிக் கொடுத்துள்ளனர்.

    ஆனாலும் மகாலெட்சுமி அடிக்கடி மாமனார்-மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அவ்வப்போது அக்கம்பக்கத்தினர் வந்து சமாதானம் பேசி வந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி உள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மகாலெட்சுமி, தனது மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

    அதன்படி நேற்று அதிகாலை சீதாராமலெட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் அங்கு சென்று கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, தனது மாமியார் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    போலீசார் வீட்டுக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சியை பார்த்தபோது, அதில் மகாலெட்சுமி தான் மூதாட்டியை தாக்கிவிட்டு செயினை பறித்து சென்றார் என்பது தெரியவந்தது.

    மேலும் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக அவரை தாக்கிவிட்டு, செயினை பறித்துள்ளார். அவ்வாறு செய்தால் செயினை திருடவந்த மர்மநபர்கள் மூதாட்டியை தாக்கி உள்ளனர் என்று ஊரை நம்பவைத்துவிடலாம் என்று மகாலெட்சுமி நினைத்துக்கொண்டு அந்த நாடகத்தை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட மகாலெட்சுமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு திருட்டுத்தனமாக மது விற்போரை கைது செய்து வருகின்றனர்.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக மதுவிலக்கு மற்றும் காவல் துறையினர் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளில் சாராயம் தயாரித்து வைத்திருந்ததை அழித்தும் அவர்கள் கைது செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வடக்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் பகலவன் உத்தரவின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு திருட்டுத்தனமாக மது விற்போரை கைது செய்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக 33 ஆண்கள், 30 பெண்கள் என 63 நபர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 831 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டள்ளது.

    • மர்மநபர்கள் சிலர் தனபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
    • திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் தனபால் (வயது 32). கொத்தனார்.

    இவர் நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் தனபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    கொலையாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து திருநிலக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய தியாகராஜபுரம் சுந்தர் (வயது 27), முத்துப்பிள்ளை மண்டபம் அழகர் (22), மேலக்காவேரி சாதிக் பாஷா (19), பழவாத்தான்கட்டளை முருகேசன் (28) ஆகிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • 2 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    • மேலும் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வராணி (வயது35). இவருக்கும், அஜ்ஜனஅள்ளி பகுதியை சேர்ந்த செல்வராணியின் அக்கா மகன் சூரிய குமாருக்கும் நிலம் சம்மந்தமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சூரியகுமார் அவர் பயன்படுத்திய நிலத்தில் நீச்சல் குளம் கட்டுவதற்கான பணியை மேற்கொண்டுள்ளார். இதனை செல்வராணி கணவர் பெருமாள் நிலத்தை கிரயம் செய்த பின்னர் கட்டுமான பணியை மேற்கொள்ளலாம் என்று கூறி நீச்சல் குளம் கட்டும் பணியை தடுத்துள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த சூரியகுமார் வெளியூரில் இருந்து கூலிப்படை ஆட்களை அழைத்து வந்து பெருமாளை கடுமையாக அரிவாளால் தாக்கி உள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த பெருமாள் கை முறிவுடன் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக அவரது மனைவி செல்வராணி ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பெருமாளை தாக்கிய சூரியகுமார் (35), கிருஷ்ணகிரி சேர்ந்த வெற்றிவேல் (21), சேது (21), டெண்டுல்கர் (21), நாட்ராம்பள்ளியை சேர்ந்த ஆகாஷ் (22) உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தற்பொழுது சேது மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரையும் ஏரியூர் இன்ஸ்பெக்டர் யுவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோர் கிடுக்கிப்பிடி விசாரணையில் குற்றவாளிகள் ஐந்துபேர் மீது பத்துக்கும் மேற்பட்ட குற்றசம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்திருப்பது தெரியவந்தது. மேலும் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற அண்ணா நகரை சேர்ந்த குகனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற அண்ணா நகரை சேர்ந்த குகனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 40) கூலித்தொழிலாளி. கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு கொடைரோடு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் மறுநாள் ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் உள்ள புளியமரத்தோப்பில் சுந்தரேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மைய நாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரேசன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், இன்ஸ்பெக்டர் குருவத்தாய் தலைமையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் சுந்தரேசன் தலையில் வெட்டுக்காயம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுந்தரேசனின் தாய் ராஜாமணி, சகோதரர் முருகன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி தாய் மற்றும் வீட்டில் உள்ளவர்களை அடித்து தாக்கியுள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகன் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரேசன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • சிலர் செம்மரக்கட்டைகளை வெட்டி தலை மற்றும் தோளில் தூக்கி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் கடப்பா அடுத்த வாணிபெண்டா வனசரகத்திற்கு உட்பட்ட திப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிலர் செம்மரக்கட்டைகளை வெட்டி தலை மற்றும் தோளில் தூக்கி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அனந்தபுரம் மாவட்டம், கதிரியை சேர்ந்த மேகலநாகமல்லப்பா ( வயது 47), தண்டிசூரி (32), கடப்பா அடுத்த காஜிப்பேட்டை சேர்ந்த நாகேஷ்(54), நாகேஸ்வரராவ்(32), சீனிவாசலு (57), தேவல்லாசுப்பராயடு(39), தம்மிஷெட்டி வெங்கடசுப்பையா (34), ஸ்ரீபதி பிரதீபால் (21), ஸ்ரீ ராம ராஜசேகர் (34), ஸ்ரீ ராம ஜஸ்வா (25), மாமிளா நாகேந்திரா (25), இல்லூர் வினோத் (20), மல்லேலபொயினா வெங்கடேசம் (46), சத்யசாய் அடுத்த கலம் பேட்டையை சேர்ந்த எம்பாலிசேஷாத்ரி (37) என்பதும், இவர்கள் செம்மரக்கட்டைகள் கடத்தியதும் தெரிய வந்தது.

    அவர்களை கைது செய்த போலீசார், 17 செம்மரக்கட்டைகள், லோடு ஆட்டோ, 2 பைக் மற்றும் 17 கோடாரி உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்தனர்.

    அன்னமய்யா மாவட்டம், ராஜாம்பேட்டை அடுத்த சிப்பகொண்டி டோனா பகுதியில் செம்மரக்கடைகளை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் அடுத்த மோளையனூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (30), குடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவமணி (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    இதன் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாராளுமன்றம் அருகே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டம்.
    • பேரணியின் முடிவில் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வருகின்றனர்.

    பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    இன்று பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம்  நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர்.

    பேரணியின் முடிவில் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றனர்.

    அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் உள்பட முக்கிய கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

    • காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார்.இவரது மகன் காந்திராஜன் (வயது 28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மதுரை தெற்குவாசல் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காந்தி ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப் பதிந்தனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் காந்தி ராஜன் காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டதும், அவர் காதலித்து வந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரே அவரை தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவலும் வெளியானது.

    மதுரை கீரைத்துறையை சேர்ந்த மாயழகு என்பவரின் மகளை காந்திராஜன் காதலித்து வந்தள்ளார். இதற்கு மாயழகுவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருந்த போதிலும் அந்த இளம் பெண்ணுடன் காந்திராஜன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த மாயழகின் மகன் காளிதாஸ் (21), 17 வயது சிறுவனான மற்றொரு மகன் ஆகிய இருவரும் காந்திராஜனை வெட்டி கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காந்தி ராஜன் கொலை கொலை தொடர்பாக மாயழகு மற்றும் அவரது 2 மகன்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் இன்று போலீசாரிடம் சிக்கினர். கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளத்தனமாக தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.
    • மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பாடகச்சேரியை அடுத்த சொரக்குடி பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 50) என்பவர் கள்ளத்தனமாக தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், தனிப்பிரிவு காவலர் அறிவழகன், சிறப்பு தனிப்படை காவலர்கள் புகழேந்தி, முஜ்பூர் ரஹ்மான், ஐஸ்வர்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். மது பாட்டில்க ளை பறிமுதல் செய்தனர்.

    • சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் சாராய கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    மேலும் பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பூமிக்கு அடியில், பேரல்களில் 200 லிட்டர் சாராய ஊரல்கள் புதைத்து வைக்கப்ப ட்டிருந்தை கண்டு பிடித்தனர்.

    பின்னர் 200 லிட்டர் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கண்டிய ன்காடு பகுதியை சேர்ந்த குழந்தை வேல் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஹர்ஷ் சிங் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும், மேலும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மாரிமுத்து குடிப்பதற்கு பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையம் மதுரை வீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது49). கூலி தொழிலாளி. இவரது மகன் முருகானந்தம் (29). இந்நிலையில் முருகானந்தத்திற்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதனால் தினமும் அவர் மது குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து அவரது தந்தையுடன் தகராறு செய்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டிற்கு குடிபோதையில் வந்த முருகானந்தம், அவரது தந்தையிடம் குடிப்பதற்கு பணம் தரும்படி கேட்டார். ஆனால் அவர் என்னிடம் இப்போது பணம் இல்லை என கூறி மறுத்து விட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தம் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து அவரது தந்தையை குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் வலியால் கத்தினார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் வருவதற்குள் முருகானந்தம் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து காயம் அடைந்த மாரிமுத்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

    ×