search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
    • அமெரிக்க நபரை அதிகாரிகள் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மே மாதம் 22ம் தேதி அன்று அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கிக்கு விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்திருந்தார்.

    அங்கு அந்த நபரிடம் சிஐஎஸ்எப் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது பையில் பயன்படக்கூடிய 6 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, அந்த நபரை அதிகாரிகள் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த நபரை கைது செய்த போலீசார் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம், ஐதரபாத்தில் உள்ள முசி ஆறு அருகே கடந்த 17ம் தேதி அன்று பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த உள்ளூர் குடிமைப் பணியாளர்கள் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியையும், உடல் பாகங்களையும் கண்டுபிடிக்க 8 போலீஸ் குழுக்களை அமைத்தனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில், ஐதரபாத்தை சேர்ந்த 48 வயது நபர் 55 வயதான பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததும், ரூ.7 லட்சம் கடனை கேட்டதற்காக பெண்ணை கொலை செய்து தலையை துண்டித்து வீசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (தென் கிழக்கு மண்டலம்) சி.எச்.ரூபேஷ் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட நபர், உள்ளூர் நிதி முகவராக இருந்த 55 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் அவர் செலுத்த வேண்டிய ரூ.7 லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு அந்த பெண் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நபர் பெண்ணை கத்தியால் கொடூரமாகக் குத்தி கொன்றுள்ளார்.

    பின்னர், அந்த நபர் பெண்ணின் தலையை துண்டித்து, உடற்பகுதியில் இருந்து கால்கள் மற்றும் கைகள் மற்றும் உறுப்புகளை வெட்டி, தனது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வந்துள்ளார்.

    பின்னர், மே 15ம் தேதி பெண்ணின் தலையை கருப்பு கவரில் வைத்து முசி ஆறு கரை அருகே உள்ள குப்பை கிடங்கில் வீசியுள்ளார்.

    மேலும், அந்த நபர் தான் தங்கியிருந்த பகுதியில் துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் போலீசாரிடம் சம்பந்தப்பட்ட நபர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்" என்றார்.

    • கேசவராஜ் சாலடியூர் சந்திப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தார்.
    • சுடலையாண்டி அந்த பகுதியில் கையில் 176 லாட்டரி சீட்டுகளுடன் நின்றார்.

    நெல்லை:

    பாவூர்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலக தெருவை சேர்ந்தவர் கேசவராஜ்(வயது 51). இவர் அங்குள்ள சாலடியூர் சந்திப்பு பகுதியில் நின்று லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயற்சித்தார்.

    உடனே அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 460 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். தென்காசி அருகே கீழப்புலியூரை சேர்ந்த சுடலையாண்டி(66) என்பவர் கையில் 176 லாட்டரி சீட்டுகளுடன் அந்த பகுதியில் நின்றார். அவரை தென்காசி போலீசார் கைது செய்து லாட்டரியை பறிமுதல் செய்தனர்.

    • கரூரில் பைக் திருடிய வட மாநில வாலிபர் கைது செய்யபட்டார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரித்தனர்.

    கரூர்,

    கரூர் தேர்வீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது29). காய்கறி வியாபாரியான இவர் கரூர் பஸ் ஸ்டாண்டில் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து வெங்டேஷ் அளித்த புகாரின்படி கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரித்தனர். விசாரணையில் பைக் திருடியவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிபின்குமார் (28) என தெரியவந்தது. இதையடுத்து பிபின் குமாரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

    • ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
    • போலீசுார் அவரிடமிருந்து சுமார் 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை :

    புதுகோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் திருவப்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டில் வந்த புதுகோட்டை வடக்கு மூன்றாம் வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 44) என்பவரை மறித்து விசாரித்தனர். இதில் ரேஷன் அரிசியை மூட்டைகளில் அவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, சுமார் 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பெரம்பலூரில் ஆசை வார்த்தை கூறி ரூ.8 கோடி மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்
    • இந்த வழக்கில் தொடர்புடைய ராதிகாவை அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த தனவேல் என்பவர், ஜேஎன்ஆர் டிரேடிங் என்ற என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறியதை நம்பி பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்துவிசாரணை நடத்தியதில், கன்னியா குமரி மாவட்டம், கடியா ப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஸ்டனிஸ்லாஸ் மகன் ஜெயபால், தோவாலை தாலுகா, விஷ்ணுபுரத்தை சேர்ந்த மதன் என்பவரின் மனைவி ராதிகா (வயது 28), அதே நிறுவனத்தை சேர்ந்த தர்மராஜ் ஆகியோர் புகார்தாரர் தனவேல் மற்றும் சில நபர்களிடமிருந்து ரூ. 8 கோடியே ஒரு லட்சத்தை ஆசை வார்த்தை கூறி பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவி ன்பேரில், ஏடிஎஸ்பி மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவி டிஎஸ்பி தங்கவேல் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜய லெட்சுமி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராதிகாவை அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உடையார்பாளையத்தில் மது விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • போலீசார் அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் எஸ்.ஐ. திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு காலனி தெருவை சேர்ந்த சூர்யா (25) என்பவர், இடையார் சாலையில் உள்ள டாஸ்மாக் பார் அருகே மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்துள்ளனர்.

    • கைதான பாலமுருகன் மீது சென்னை அம்பத்தூர் புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
    • திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்று வெளியே வந்த மறுநாளே அவன் திருமுல்லைவாயல் பகுதியில் நர்சு வீட்டில் கைவரிசை காட்டி சிக்கி உள்ளான்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயல், சோழம்பேடு கண்ணன் தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகத்தாய். இவர், ஈ.எஸ். ஐ. அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். கடந்த 10-ந்தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான கோவில்பட்டிக்கு தனது தாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டான்.

    இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்த போது நர்சு வீட்டில் கைவரிசை காட்டியது, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டை பாலா என்கிற பாலமுருகன் என்பது தெரிந்தது. அவனை சவுகார்பேட்டை அருகே நகையை விற்க முயன்ற போது போலீசார் கைது செய்தனர்.

    கைதான பாலமுருகன் மீது சென்னை அம்பத்தூர் புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்று வெளியே வந்த மறுநாளே அவன் திருமுல்லைவாயல் பகுதியில் நர்சு வீட்டில் கைவரிசை காட்டி சிக்கி உள்ளான்.

    கொள்ளையடித்த நகைகளை விற்று ஊத்துக்கோட்டை அருகே உள்ள கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. அவனிடம் இருந்து 57 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பாலமுருகனை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் கடையின் முன்பு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
    • வாலிபர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலாளி முருகேசனை அங்கிருத்த பொதுமக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணாசிலை அருகே தமிழ்செல்வன் என்பவர் அட்சயபாத்திரம் என்ற பெயரில் மதிய வேலையில் கட்டணமின்றி இலவச உணவு வழங்கும் உணவகத்தை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் இரவு நேர காவலாளியாக தோப்புபாளையத்தை சேர்ந்த முருகேசன் (50) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் இரவு சாப்பிட்டுவிட்டு கடையில் பணியில் இருந்தார்.

    அப்போது குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் கடையின் முன்பு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதைப்பார்த்த காவலாளி முருகேசன் அவர்களிடம் சென்று ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்டார்.

    இதனையடுத்து 3 வாலிபர்களும் சேர்ந்து காவலாளி முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

    வாலிபர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலாளி முருகேசனை அங்கிருத்த பொதுமக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து முருகேசன் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் ஓட்டல் முன்பு இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது காவலாளி முருகேசனை 3 பேர் தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது காவலாளியை தாக்கியது மேக்கூர் பகுதியை சேர்ந்த பெருந்துறை பேரூர் தி.மு.க. இளைஞர் அணி துணைச்செயலாளர் சந்தோஷ்குமார் என்கிற ரகுமான் (27), எண்ணவன்னாங்காடு பகுதியை சேர்ந்த வினோத் (25) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் தலைமறைவான அவர்களை தேடி வந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அவர்கள் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சந்தோஷ்குமார் என்கிற ரகுமான், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இதுதொடர்பாக ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஓட்டல் காவலாளியை தி.மு.க. பிரமுகர் சந்தோஷ்குமார் என்கிற ரகுமான், வினோத் ஆகியோர் தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பிணமாக கிடந்த அமலோற்பவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சொத்து பிரச்சினையில் தாய், தந்தையரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பெருங்கடை தெரு பகுதியை சேர்ந்தவர் பவுல். இவரது மனைவி அமலோற்பவம் (வயது 68). இவர்களுக்கு மோகன்தாஸ் (50) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. மோகன்தாஸ் மனைவி குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார்.

    பவுல், அமலோற்பவம் இருவரும் வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வந்தனர். தந்தை-மகனுக்கு இடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மோகன்தாஸ் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கீழ் பகுதியில் தாய்-தந்தை வசித்து வந்த வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த பவுல், அமலோற்பவத்திடம் தனக்கு சொத்து தருமாறு கேட்டு தகராறு செய்தார்.

    அப்போது அவர்கள் மோகன்தாஸிற்கு சொத்து கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மோகன்தாஸ், தந்தை பவுல், தாய் அமலோற்பவம் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அமலோற்பவத்திற்கு கழுத்து, முதுகு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பவுலுக்கு முதுகு, கழுத்து, தோள்பட்டை பகுதியில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த அமலோற்பவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாயாரை வெட்டி கொலை செய்த மோகன்தாஸ் பூதப்பாண்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    நான் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இது எனது தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரது சொத்துக்களை எனக்கு தர மறுத்தார். எனது சகோதரிகளுக்கு சொத்துக்களை கொடுத்தார். மேலும் சொத்துக்களை விற்று வந்த பணத்தையும் எனக்கு தரவில்லை.

    கடந்த 10-ந்தேதி சிறமடம் பகுதியில் 5 ஏக்கர் சொத்தை ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதில் கிடைத்த ரூ.15 லட்சம் பணத்தை எனது சகோதரிகளுக்கு கொடுத்தார். எனக்கு பணம் தராதது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எனது தாய், தந்தையிடம் எனக்கும் சொத்தில் பங்கு தரவேண்டும். சொத்து விற்பனை செய்து வந்த பணத்தை எனக்கு தர வேண்டும் என்று கேட்டேன்.

    ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவர்களை அரிவாளால் வெட்டினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் தொடர்ந்து மோகன்தாசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து பிரச்சினையில் தாய், தந்தையரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சட்ட விரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 52 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ,9,800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளகிணர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளகிணர் தனியார் நூற்பாலை அருகே மீன் கடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த மீன் கடையில் தர்மபுரியை சேர்ந்த பழனி என்பவரது மகன் அம்மு(வயது 22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 52 மதுபான பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ,9,800 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • விபத்து பகுதியில் இருந்து நாஜிக்களின் கொடி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
    • விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் லாரி ஒன்று தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதையடுத்து, லபாயெட் சதுக்க பகுதியில் உள்ள சாலை மற்றும் நடைபாதையை அதிகாரிகள் மூடினர். மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை அமெரிக்க உளவு துறை அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவுக்கான உளவு துறையின் தலைமை தகவல் தொடர்பு தலைவர் அந்தோணி குக்லியெம்லி கூறினார்.

    பாதுகாப்பு குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனை அமெரிக்காவுக்கான உளவு துறையின் தலைமை தகவல் தொடர்பு தலைவர் அந்தோணி குக்லியெல்மி கூறியுள்ளார்.

    மேலும், விபத்து பகுதியில் இருந்து நாஜிக்களின் கொடி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதுபற்றியும், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் இந்திய வம்சாவளியான மிசோரி, செஸ்டர்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், கைது செய்யப்பட்ட நபர் மீது ஆபத்தான ஆயுதத்தால் தாக்குதல், மோட்டார் வாகனத்தை பொறுப்பற்ற முறையில் இயக்குதல், ஜனாதிபதி, துணைத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர் மீது கொலை மிரட்டல் அல்லது கடத்தல் அல்லது தீங்கு விளைவித்தல், கூட்டாட்சி சொத்துகளை அழித்தல் மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×