search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசாருக்கு தகவல் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை

    கரூர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வைபுதூர் புதுப்பாளை யம், மேல குட்டப்பட்டி, வாலாந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மது விற்ற கரிகாலன் (வயது 50), வீரமலை (57), இளங்கோவன் (50), ராமன் (52), செந்தில்குமார் (52) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 31மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 750 லட்டுகளை திருடி எடுத்துச் சென்றனர்.
    • 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தரிசனம் முடிந்து களைப்புடன் வரும் பக்தர்கள் லட்டு கவுண்டர்களிலும் நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்.

    இதனை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலையில் வெளியே விற்பனை செய்து வருகின்றனர்.

    லட்டு தயாரிக்கும் இடத்தில் இருந்து தட்டுகளில் லட்டுகளை அடுக்கி கன்வேயர் பெல்ட் மூலம் பிரசாத விற்பனை கவுண்டர் அருகே கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கிருந்து தள்ளுவண்டிகள் மூலம் பிரசாத கவுண்டர்களுக்கு லட்டு எடுத்துச் செல்கின்றனர்.

    இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இடையில் லட்டுகளை திருடி விற்பனை செய்வதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் லட்டு எடுத்துச் செல்லும் பணியை கண்காணித்தனர்.

    அப்போது தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 750 லட்டுகளை திருடி எடுத்துச் சென்றனர். அவர்களை கையும் காளவுமாக பிடித்தனர்.

    மேலும் அவர்கள் இதுவரை 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் மேலும் வேறு யாராவது ஈடுபட்டு உள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மளிகைக்கடை காரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் ரவி மற்றும் அவரது நண்பர்கள் பார்த்திபன், முருகேசன், துரைசாமி, ஆகியோரை கைது செய்தனர்.
    • போலீசார் கைது செய்யப்பட்ட தி.மு.க. கவுன்சிலர் ரவி உள்பட அவரது நண்பர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடைரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 46). இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று இவரது கடைக்கு காரமடை பஞ்சாயத்து யூனியன் தி.மு.க. கவுன்சிலர் ரவி (50), அவரது நண்பர்களான சிக்கதாசம்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (35), முருகேசன் (53), துரைசாமி ஆகியோர் வந்தனர். அவர்கள் கடையில் இருந்த ஜெயலட்சுமியிடம் சிகரெட் கேட்டு வாங்கினர். அதற்கான பணத்தை கடையின் உரிமையாளர் கணேசன் கேட்டார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்து அவரிடம் தகராறு செய்தனர்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் ரவி தனது நண்பர்களுடன் சேர்ந்து மளிகைகடைகாரர் கணேசன், அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோரை தாக்கினர். மேலும் மளிகைகடையையும் சேதப்படுத்தி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து ஜெயலட்சுமி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மளிகைக்கடை காரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் ரவி மற்றும் அவரது நண்பர்கள் பார்த்திபன், முருகேசன், துரைசாமி, ஆகியோரை கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட தி.மு.க. கவுன்சிலர் ரவி உள்பட அவரது நண்பர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.


    • நள்ளிரவு வீட்டுக்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்தார்.
    • வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை,

    கோவை அருகே உள்ள செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 50 வயது கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 20 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் தனித்தனி கட்டிலில் படுத்து தூங்கினர். நள்ளிரவு வீட்டுக்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த தொழிலாளியன் மகளை கையை பிடித்து இழுத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். இதனையடுத்து அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மலுமச்சம்பட்டியை சேர்ந்த ரவுடி பூவரசன் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, அடிதடி, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    போலீசார் கைது செய்யப்பட்ட ரவுடி பூவரசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • அங்கு வந்த பசவராஜ் தரப்பினருக்கும், லட்சுமிதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார் பசவராஜ் (43), கதிர்வேல் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உத்தனப்பள்ளி பக்கமுள்ளது கொத்தூர். இந்த ஊரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 33). இவரது சகோதரர் பசவராஜ் (43). இவர்களுக்குள் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் சகோதரி ராணியம்மாள் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக பஸ்தலப்பள்ளிக்கு கடந்த 14-ந் தேதி சென்றனர். அப்போது அங்கு வந்த பசவராஜ் தரப்பினருக்கும், லட்சுமிதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் லட்சுமி, அவரது சகோதரி ராணியம்மாள், திம்மராயப்பா (39), திம்மராஜ் (42), முருகேஷ் (37), கீர்த்தனா (8) ஆகிய 6 பேரும் தாக்கப்பட்டனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பசவராஜ் (43), கதிர்வேல் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • போலீசார் கடந்த 14-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் பலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கடந்த 14-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் 7 தனிப்படை அமைத்து போலீசார் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி விற்பனை செய்வது போன்றவற்றை தடுக்கும் விதமாக அதிரடியாக அனைத்து பகுதிகளிலும் சோதனைகளில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதியிலிருந்து நேற்று (17-ந்தேதி) வரை 199 சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தல், கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து 203 நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இதுவரை 920 லிட்டர் சாராயம் மற்றும் 2,133 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • மிளகாய் பொடி-ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் ரிங்ரோடு அம்மா திடல் பகுதியில் சென்றபோது சிலர் பதுங்கி இருப்பதை கண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர்களை சோதனை செய்தபோது 2 கத்திகள், 2 கயிறுகள், 4 கைக்குட்டைகள் மற்றும் மிளகாய் பொடி பாக்கெட்டு கள் இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில், அவர்கள் கரும்பாலை நடுத்தெரு கிருஷ்ணன் மகன் கார்த்திக் என்ற லெப்ட் கார்த்திக் (வயது27), திருப்பதி (25), கரும்பாலை நாகராஜ் மகன் விக்னேஷ் என்ற விக்கி (26), அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் கனிஷ்கர் (26), விஸ்வநாதன் மகன் சரவணன் (26), திருப்பாலை ரெட்ரோஸ் தெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அஜித்குமார் (33) என்று தெரியவந்தது.

    அவர்கள் குற்ற செயல்க ளில் ஈடுபட பதுங்கியி ருந்தது தெரியவந்ததால் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பைக் ஓட்டி சாகசம் செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை சொக்கிகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் சிறுவன் உள்பட 3 வாலிபர்கள் பைக் ஓட்டி சாகசம் செய்து கொண்டிருந்தனர். இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியதால் இதுகுறித்து பொதுமக்கள், தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட காமராஜ் நகர் ஷரீப் மகன் நியாஸ் (வயது25), செல்லூர் சக்தி மாரியம்மன் கோவில் தெரு, குருநாதன் மகன் மீனாட்சி சுந்தரம் (21), மற்றும் 17 வயது சிறுவன்ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் ஓட்டிச்சென்ற 2 பைக்குகளையும், அவர்கள் வைத்திருந்த 3 செல்போன்க ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மகன் முகமது அப்துல்லா (வயது18). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அவரை வழிமறித்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது கரும்பாலை பி.டி. காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ரவுடி அருண்பாண்டி, வினோத்குமார், பால சக்தி, தமிழ் இனியன், ராமச்சந்திரன், ஹரிவிக்னேஷ், கார்த்தி என்ற எலி கார்த்தி, சோனைமுத்து, கே.கே. நகர் சித்திரவேல் என தெரியவந்தது.

    இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பழைய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் முத்துகாமாட்சி (வயது 50), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி செல்வி (47). சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முத்துகாமாட்சி மனைவியை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

    • அண்மைக்காலங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
    • கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

    இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது. அதில் 2 பேர் மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது29), ஆறுமுகம் பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி உள்ள பாலகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவராக உள்ளார்.

    • காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணை மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழங்கினர்.

    ×