search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
    • போலீசார் கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்று காட்டு பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினத்தையொட்டி மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதனை நோட்டமிட்ட மர்மகும்பல், டாஸ்மாக் விற்பனை நேரம் முடிந்து ஊழியர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது கடைக்குள் புகுந்து, வீச்சரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி ஊழியர்களிடமி ருந்து ரூ.6லட்சத்து 47ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    கொள்ளையர்கள் வெட்டியதில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் 3பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    கொள்ளையர்களை அடையாளம் காண சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி, அதில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா மேலாயூர் பகுதியை சேர்ந்த தர்ஷிக் சரண்(வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் மற்ற கொள்ளையர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலில் பேரில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பொது வினியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது வினியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

    அதனைத்தொடர்ந்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்துப் பணி மேற்கொண்டு அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980-ன்படி தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 3 லட்சத்து 29 ஆயிரத்து 300 கிலோ அரிசி, 152 எரிவாயு சிலிண்டர்கள், 90 கிலோ கோதுமை, 250 கிலோ துவரம்பருப்பு, 251 லிட்டர் மண்எண்ணெய் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.23 லட்சத்து 61 ஆயிரத்து 969 ஆகும். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட 529 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

    இதுதவிர கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க 18005995950 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    • அகில இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூசன் சரண்சிங்கை கைது செய்ய வேண்டும்.
    • தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    இந்திய மல்யுத்த வீராங்க னைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியுள்ள அகில இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க எம்.பி.யுமான பிரிட்ஜ் பூசன் சரண்சிங் கைது செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் காரல்மார்க்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆர்ப்பா ட்த்தி னை தொடக்கி வைத்து உரையாற்றினார்.

    ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் ஆர்ப்பா ட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

    கோரிக்கைகளை விளக்கி கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மாதர் சங்க மாவட்ட தலைவர் தனசீலி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளன நிர்வாகிகள் ராஜலெட்சுமி, மீனா, சந்திரகலா, பானுமதி, சிலம்பரசி, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் பிரகாஷ், சந்தோஷ், அருள்மொழி ஈசுவரன், கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் பிரபாகர், துணை செயலாளர் முத்துக்குமரன், மூத்த தலைவர் கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், ஆசிரியர் ஓய்வு சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • கைதான முனியப்பனை பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்துவுக்கு புகார்கள் சென்றன.

    இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பாலக்கோடு அருகே கொல்லுப்பட்டியில் முனியப்பன் (வயது60) என்பவர் வீட்டில் வைத்து அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து பிராந்தி, பீர் பாட்டில்கள் என 7ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கைதான முனியப்பனை பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 3 நாட்களில் இது தொடர்பாக 2,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
    • 3-வது நாள் நடந்த சோதனையில் திருட்டுதனமாக விற்கப்பட்ட 17ஆயிரத்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை:

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து இதுவரை 19 பேர் இறந்து விட்டனர். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் போலீசார் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கினார்கள். இதனால் கடந்த 3 நாட்களில் இது தொடர்பாக 2,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 2,461 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பெண்களும் அடங்குவார்கள். 2 நாட்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. 3-வது நாள் நடந்த சோதனையில் திருட்டுதனமாக விற்கப்பட்ட 17ஆயிரத்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2,583 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.

    சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கரவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து போலீசார் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு கூறும் போது, "தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இந்த நடவடிக்கைகள் தொடரும்" என்று தெரிவித்தார்.

    • கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    • சுமார் 5 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பாப்பாரப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பிக்கம்பட்டி அருகே உள்ள திப்பட்டி பள்ளத்தை சேர்ந்தவர் கண்ணாமணி (வயது 59 ).

    இவர் வீட்டில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சென்று கண்ணாமணி வீட்டில் சோதனை செய்தனர்.

    அப்போது சுமார் 5 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் கண்ணாமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பூட்டியிருந்த வீடுகள், தனியாக செல்வோரை குறி வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்லால் மற்றும் போலீசார் ராமையா தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்ேபாது 13-வது சந்திப்பு அருகே பதுங்கியிருந்த சில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர்.

    உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று பிடித்தனர். இதில் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். ஒருவர் தப்பி விட்டார்.

    ஆயுதங்கள் பறிமுதல்

    பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது 3 கத்திகள், கயிறுகள், மிளகாய் பொடி பாக்கெட் ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த போலீசார் 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சோலைய ழகுபுரம் பகவதி அம்மன் கோவில் 3-வது தெரு சேகர் மகன் உமையாகுமார் என்ற பெரிய எலி (23), ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு பாண்டியன் குறுக்கு தெரு பாண்டி மகன் அருண் பாண்டி (23), சோலை யழகுபுரம் முதல் தெரு ராமமூர்த்தி நகர் 4-வது தெரு மீனாட்சி சுந்தரம் மகன் சின்ன எலி (21), சோலைஅழகுபுரம் அன்வர் உசேன் மகன் அஜிஸ் (21), சோலையழகுபுரம் 3-வது தெரு ராஜேந்திரன் மகன் ஜீவானந்தம் என்ற சிவா (22) என்று தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் பூட்டியிருந்த வீடுகள், தனியாக செல்வோரை குறி வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

    • அருகில் வசிக்கும் பெண் ஒருவர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
    • 12 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொடூரமாக கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவனை சக நண்பர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12 வயது சிறுவனை 3 சிறுவர்கள் சைக்கிள் சங்கிலியால் கழுத்தை நெறித்து பெரிய கல்லால் மண்டையை உடைத்து, கத்தியால் தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

    பின்னர் உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து தங்கள் வீட்டு அருகே உள்ள குப்பை தொட்டியில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இதை அருகில் வசிக்கும் பெண் ஒருவர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக 3 சிறுவர்களை கைது செய்தனர். இதில் ஒருவனுக்கு 11 வயதுதான் ஆகிறது. மற்றவர்களுக்கு முறையே 14, 16 வயதாகிறது.

    3 சிறுவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு 14 நாட்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்னா சர்மா கூறியதாவது:-

    பணத் தகராறில் 12 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் திட்டமிட்டு ஒதுக்குப் புறமான இடத்துக்கு வரவழைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்கள். ஆடுகளை வெட்ட பயன்படுத்தும் கூர்மையான கத்தியால் தொண்டையை அறுத்துள்ளனர். 3 சிறுவர்களும் பழக்கமான கொலையாளிகளை போல இந்த கொலையை செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    12 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொடூரமாக கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
    • குற்றசம்பவத்தில் ஈடுப ட்டால் குண்டாஸ் பாயும் என உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின் ரோட்டில் கஞ்சா விற்பதாக உளுந்தூ ர்பேட்டை உட்கோ ட்டை டிஎஸ்பி மகேசுக்கு கிடைத்த ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வா ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவரை மடக்கி பிடித்து போலீசார் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். மேலும் இதேபோல் இடைக்கால் பகுதியில் கள்ளத்தனமாக பூ மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த பிரியதர்ஷினி இளம் ஆசிரியர் கோட்டை பகுதியில் எரியூர் கிராம த்தைச் சேர்ந்தவர் சின்ன ப்பையன் நம்பிக்கை மேரி திடீர்குப்பம் ராஜா ஆகியோர்களை கைது செய்தனர். மேலும் இந்த குற்றசம்பவத்தில் ஈடுப ட்டால் குண்டாஸ் பாயும் என உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தெரிவித்தார்.

    • சாராய பாக்கெட் விற்பனைக்காக வைத்திருந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்
    • 11 லிட்டர் 300 மில்லி சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, காரியானூரில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை பாக்கெட் போட்டு விற்பனைக்காக வைத்திருந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, வைத்தியநாதபுரத்தை சேர்ந்த அருள்பாண்டியனின் மனைவி தனம் என்ற தனலெட்சுமி (வயது 32), காரியானூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமியின் மனைவி பவுனாம்பாள் (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 11 லிட்டர் 300 மில்லி சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

    • திருச்சி முக்கொம்பு சுற்றுலாதலத்தில் இடையூறு
    • 3 வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரணை

    திருச்சி,

    கோவை கே.கே.புதூர் மணியன் மருதகுட்டி வீதி பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 35). இவர் தனது உறவினர்களுடன் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அணைக்கட்டு பகுதி, பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 வாலிபர்கள் அவரிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட முத்துலட்சுமியின் உறவினர்களிடமும் தகராறு செய்தனர். மேலும் முத்துலட்சுமியை கைகளால் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து மூன்று வாலிபர்களையும் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் திருச்சி எலமனூர் பகுதியைச் சேர்ந்த சங்கிலி என்கிற தேவா (19), முனீஸ்வரா (19), வினித் (19) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • போலீசார் நெடுமானூர், விரியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 287 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி மற்றும் போலீசார் சேஷசமுத்திரம், தியாகராஜபுரம், சிவபுரம், நெடுமானூர், விரியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்(வயது 42), சுப்பிரமணி்(43), தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன்(45), கோபால் (48), நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு(37), திருமுருகன்(32), சிவபுரம் கிராமம் பச்சையப்பன்(36), விரியூர் கிராமம் டேவிட்ஆனந்தராஜ்(41) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 287 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ×