search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • அவிநாசி பாளையத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார்.
    • ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் :

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி நல்லசெல்லி பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர்,47; பருப்பு வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம்,45 என்பவரிடம் பொள்ளாச்சியில் பருப்பு விற்ற பணத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இவர் கடந்த மாதம், 27ல் பொள்ளாச்சி சென்று பணத்தை வசூல் செய்து விட்டு வரும் வழியில், பொங்கலுார், அவிநாசி பாளையத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார். பின், வந்து பார்த்த பொழுது வேனில் வைத்திருந்த, 19.54 லட்சம் ரூபாயை காணவில்லை.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த மே, 5ல் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபு, 26 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவருடன் பணத்தை திருடி சென்ற மேலும் இருவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவிநாசிபாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் மேலும் விசாரித்ததில், அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் ராமு, 25 என்பதும், பணம் திருடிய வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • பதுங்கி இருந்த சுஜிமோகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • போதை கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் ஸ்ரீதரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாநகரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைபொருட்களை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ரத்தினபுரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கும்பல் தலைவன் சுஜிமோகன் உள்பட 7 பேரை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் தலைமறைவாக இருந்தனர். விசாரணையில் போதை கும்பல் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து உதவி கமிஷனர் கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் பெங்களூருக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சுஜிமோகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 50 கிராம் மெத்தபெட்டமின் எனப்படும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் கோவைக்கு அழைத்து வந்து சுஜிமோகன் உள்பட 7 பேரையும் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    7 பேரின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போது அதில் வாட்ஸ்அப் அழைப்பு மூலமாக ஒருவர் பல முறை பேசியது கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த நபர் பேசிய 30-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இருந்தது. அந்த ஆடியோவில் போதைப்பொருளை போலீசிடம் சிக்காமல் எப்படி விற்பனை செய்வது, அவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தது. போலீசார் யார் யாரை, எங்கெல்லாம் தேடுகிறார்கள் என்ற தகவல்களும் இருந்தது.

    இவ்வாறு போதை கும்பலுக்கு தகவல்கள் தெரிவித்து அவர்களுக்கு வழிகாட்டிபோல் இருந்தது ஒரு போலீஸ்காரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த அப்புசாமி என்பவரது மகன் ஸ்ரீதர் (வயது 24) என்பதும், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. போதை கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் ஸ்ரீதரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த கும்பலுக்கு போதைப்பொருள் விற்பனையில் கிடைக்கும் பணத்தை பங்கு போட்டு பிரித்து கொடுத்து வந்த போத்தனூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த வக்கீல் ஆசிக் (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் மதுபான பாட்டில்களை சிலர் சட்டவிரோமாக பதுக்கிவைத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது மதுபானம் பதுக்கி விற்ற சிலர் போலீசாரிடம் சிக்கினர்.

    போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் போது பேரையூரை சேர்ந்த கண்ணன்(வயது42) என்பவரிடம் இருந்து 72 மதுபாட்டில்கள், ரூ.600, டி.குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(63) என்பவரிடம் இருந்து 36 மதுபாட்டில்கள் ரூ.1270, டி.கல்லுப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து பாண்டியன்(48) என்பவரிடம் இருந்து 23 மதுபாட்டில்கள் ரூ.1,610 ரொக்கம், அதேபகுதியை சேர்ந்த காசிபாண்டி(31) என்பவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களையும் ரூ.300 பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பேரையூர் மல்லபுரத்தை சேர்ந்த கேசரி(43) என்பவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள், ரூ.3 ஆயிரத்து 930, வில்லூர் பகுதியை சேர்ந்த பொன்னு சாமி(36) என்பவரிடம் இருந்து 148 மதுபாட்டில்கள், ரூ.1,260 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மதுபாட்டி ல்களுடன் சிக்கிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களில் தங்கபாண்டி என்பவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சிறுமியும், பிளஸ்-2 மாணவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக தெரிகிறது.
    • மாணவரின் தொல்லை அத்துமீறவே தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை பசுமலையைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் 13 வயதுடைய 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சிறுமியும், பிளஸ்-2 மாணவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக தெரிகிறது. அப்போது மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சிறுமி கண்டித்துள்ளார். ஆனாலும் மாணவரின் தொல்லை அத்துமீறவே தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிளஸ்-2 மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • 17 வயது சிறுவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 58).

    இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சூழலில் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகள் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நெல்லை டவுனை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவனுக்கு நகை திருட்டு வழக்கில் தொடர்பு தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அய்யப்பனையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கைது செய்யப்பட்ட அய்யப்பனிடம் விசாரணை நடத்திய போது, அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அய்யப்பனின் தாயார் வீடு ஆசாரிபள்ளத்தில் உள்ளது. அவர் அடிக்கடி இங்கு வந்து சென்றுள்ளார். சம்பவத் தத்தன்று வந்தபோது செலவுக்கு பணம் தேவைப்பட்ட தால் வசந்தா வின் நகையை பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவருக்கும் குமரி மாவட்டத்தில் வேறு வழக்குகளில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனைவியை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமாரியப்பனை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ராஜாஜி மேற்கு தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 40). இவரது கணவர் மாயாண்டி (41). இவருக்கும் சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருக்கும் தொடர்பு இருந்ததன் காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாயாண்டி மனைவியை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவ்வப்போது மது போதையில் விஜயலட்சுமியின் வீட்டிற்கு வந்து மாயாண்டி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மது போதையில் வந்த மாயாண்டி விஜயலட்சுமி உடன் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த மாயாண்டி தான் வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்ட முயன்றார். அப்போது தடுப்பதற்காக ஓடி வந்த அவர்களது மகன் கருப்பசாமிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதை பார்த்த மாயாண்டி மனைவிக்கும் மகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    இது குறித்து சாத்தூர் டவுன் போலீசில் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் அமுதா (40). இவரது கணவர் பூமாரியப்பன். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பூமாரியப்பன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவியிடம் பூமாரியப்பன் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டார்.

    இப்போது பூ மாரியப்பன் தான் வைத்திருந்த கத்தியால் அமுதாவை தாக்க முயற்சித்தார். இப்போது அருகில் வசிப்பவர்கள் அங்கு வந்து சத்தம் போட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு பூமாரியப்பன் தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமாரியப்பனை கைது செய்தனர்.

    • தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்ஊழல் நடப்பதாக கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சிதலைவர் தேவா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
    • இதனைத் தொடர்ந்து,பண்ருட்டி இன்ஸ்பெக்டர் இன்று காலை கைது செய்தார்.

    கடலூர்:

    தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்ஊழல் நடப்பதாக கூறிபண்ருட்டி தாசில்தாரை நேரில் சந்தித்து மனு அளிக்க போவதாக கடலூர் மாவட்ட இந்து மக்கள்கட்சிதலைவர் தேவா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கைநடவடிக்கையாகஅவரைபண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் இன்று காலை கைது செய்தார்.

    • போலீசார் , சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதிலிருந்து ஒரு நபர் தப்பி ஓட முயன்றார்.
    • போலீசார் அவரை மடக்கி பிடித்து காரை சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து சாராயம் கடத்தப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.     அதையடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னக் கமணன் தலைமையான போலீசார் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்தற்ககிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதிலிருந்து நபர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 300 லிட்டர் விஷ எரிச்சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திண்டிவனம் கலால் துறையிடம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து திண்டிவனம் கலால் துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து புதுவை மாநிலத்தை சேர்ந்த கவிநீலவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது சம்பந்தமாக கலால் டி.எஸ்.பி. பழனி விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் கவிநீலவனிடம் இருந்த 300 சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 8 லட்சம் மதிப்பிலான கார் பறிமுதல் செய்ய ப்பட்டது. கலைநீலவன் புதுவையில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து தமிழகப் பகுதியில் விற்பனை செய்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • நரிக்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார்.
    • இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    திருச்சுழி

    நரிக்குடி அருகே உள்ள உவர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாக்கிளி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை, ரூ. 21 ஆயிரம் கொள்ளை போனது. மேலும் நரிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் முடுக்கன்குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் முடுக்கன்குளத்தை சேர்ந்த திருமேனி மகன் பிரவீண்குமார் (18) எனவும், இவர் உவர்க்குளம் வீட்டில் கொள்ளையடித்தது மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • கொள்ளை வழக்கில் தொடர்புடைய நெல்லை டவுனை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்தனர்.
    • கைது செய்யப்பட்ட அய்யப்பனையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 58).

    இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சூழலில் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகள் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நெல்லை டவுனை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவனுக்கு நகை திருட்டு வழக்கில் தொடர்பு தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அய்யப்பனையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட அய்யப்பனிடம் விசாரணை நடத்திய போது, அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அய்யப்பனின் தாயார் வீடு ஆசாரிபள்ளத்தில் உள்ளது. அவர் அடிக்கடி இங்கு வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்று வந்தபோது செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் வசந்தாவின் நகையை பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவருக்கும் குமரி மாவட்டத்தில் வேறு வழக்குகளில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது செய்யபட்டார்
    • இதுகுறித்து சுரேஷன் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    கரூர்,

    கரூர் வடக்கு காந்திகிராமம் காலனியை சேர்ந்தவர் சுரேஷன் (வயது 52). கூலி தொழிலாளியான இவர் கரூர் ெரயில்வே ஸ்டேஷன் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சுரேஷன் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தியதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில் (28) இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இரு சக்கர வாகனத்தை மீட்டு போலீசார் அவரை கைது செய்தனர்.

    • கரூர் அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது செய்யபட்டார்
    • அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

    கரூர்,

    கரூர்-திண்டுக்கல் சாலை மணவாடி பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கரூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கருர் தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 64) என்பவர் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த முதியவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவருக்கு கஞ்சா எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×