search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • நாகர்கோவிலில் சிந்து பதுங்கி இருப்பது தெரியவரவே, போலீசார் நாகர்கோவில் வந்து அவரை கைது செய்தனர்.
    • சிந்துவிடம் ஏமாந்தவர்கள், இது வெளியே தெரிந்தால், அவமானம் என கருதி புகார் எதுவும் கொடுக்காததால் அவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கேரளாவில் ஆண்களிடம் மயக்கும் விதத்தில் பேசி, அவர்களை தனியாக அழைத்துச் சென்று இளம்பெண் ஒருவர் நகை-பணம் பறிப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.

    ஆனால் நகை-பணத்தை இழந்தவர்கள் யாரும் புகார் எதுவும் கொடுக்காததால், இந்த சம்பவம் குறித்து போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி அருகே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார், நகை-பணத்தை பறிகொடுத்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், வெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் தன்னிடம் மயக்கும் வகையில் பேசியதாகவும் பின்னர் அவர், ஆட்டோவில் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் அந்தப் பெண் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் தான் மயங்கி விட்டதாகவும், கண் விழித்து பார்த்தபோது நகை-பணத்துடன் பெண் மாயமாகி விட்டது தெரிய வந்ததாகவும் அவர் கூறினார்.

    இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, மோசடியில் ஈடுபட்ட பெண் வெட்டிக்காடு சிந்து (வயது 34) என தெரியவந்தது. அவர், நகை-பணத்துடன் தமிழகத்திற்கு தப்பி சென்று விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஹரிலால் தலைமையிலான போலீசார், தமிழகம் சென்று ரகசியமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நாகர்கோவிலில் சிந்து பதுங்கி இருப்பது தெரியவரவே, போலீசார் நாகர்கோவில் வந்து அவரை கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த முகமது ஹாஜா (29) என்பவரும் கைது செய்யப்பட்டார். வல்லகடவு பகுதியைச் சேர்ந்த இவர், தொழில்முறை கூட்டாளி என்பதும், சிந்துவுடன் சேர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று ஆட்டோவில் அழைத்துச் சென்றவருக்கு குளிர்பானத்தில் அவருக்கு தெரியாமல் தூக்க மாத்திரைகளை சிந்து கலந்து கொடுத்ததும் அவர் மயங்கியதும் முகமது ஹாஜாவை வரவழைத்து நகை-பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளனர். நாகர்கோவில் வந்த அவர்கள், தங்கத்தை ஒரு நிறுவனத்தில் விற்று விட்டு கோவா சென்றுள்ளனர். அங்கு பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து விட்டு நாகர்கோவில் வந்த போதுதான் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். சிந்துவிடம் ஏமாந்தவர்கள், இது வெளியே தெரிந்தால், அவமானம் என கருதி புகார் எதுவும் கொடுக்காததால் அவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் எத்தனை பேரிடம் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமது சமீர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
    • விசாரணையில் மோட்டார் சைக்கிளை ராஜேஷ்ராம் திருடியது தெரியவந்தது.

    நெல்லை:

    பேட்டையை சேர்ந்தவர் முகமது சமீர் (வயது20). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரது மோட்டார் சைக்கிளை நெல்லையில் தங்கியிருந்து வேலை பார்த்துவரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்ராம் (30) என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • காரைக்கால் நகர் பகுதியில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை, நகர போலீசார் கைது செய்தனர்.
    • அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியில், புதுச்சேரி அரசால் தடை செய்ய ப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை, நகர போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். காரைக்கால் இடும்பன்செட்டி சாலையில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெ க்டர் புருசோத்தமன் உத்தரவின் பேரில், சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பெட்டி க்கடையை சோதனை செய்தபோது, புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கடை உரிமையாளர் காத்த பெருமாளை(வயது68) கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • திருச்சி நிதி நிறுவன மோசடியில் தலை மறைவாக இருந்த 2 முக்கிய புள்ளிகள் கைது செய்யபட்டனர்
    • பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஆங்காங்கே காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

    திருச்சி:

    திருச்சி மற்றும் தஞ்சாவூரை தலைமை இடமாக கொண்டு ஒரு நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதனை 9 பேர் கூட்டாக தொடங்கி நடத்தி வந்தனர். இதன் கிளை நிறுவனங்கள் புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி திருச்சி மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த நிறுவனத்தில் பல கோடி பணத்தை முதலீடு செய்தனர்.சிறிது காலம் அந்த நிறுவனம் வட்டி வழங்கியது. பின்னர் திடீர் என நிறுத்திவிட்டனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஆங்காங்கே காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.பின்னர் அந்த வழக்கு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் அந்த வழக்கு மீண்டும் தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது பல மாதங்களாக தேடப்பட்டு வந்த அந்த நிறுவனத்தைச் சேர்ந்த திருச்சி ராமநாதன் (வயது 55) தஞ்சாவூர் ராஜேஷ் (43) ஆகிய இருவரை தஞ்சாவூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தை எங்கெங்கு முதலீடு செய்து உள்ளனர் என விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும்மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.

    • போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • இவர்களிடமிருந்து ரூ.11,500 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள ஒட்டு பள்ளம் பகுதியில், முனியப்பன் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு பாலித்தின் கவரில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்த பொம்மிடி அருகே உள்ள தீ.பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் (வயது 21), சேட்டு (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஜே.சூர்யா (எ) பாண்டு என்பவர் தலைமறைவாகி விட்டார்.

    மேலும் இவர்களி டமிருந்து ரூ.11,500 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போதை ஊசி, மாத்திரைகளுடன் வாலிபர் கைது செய்யபட்டார்
    • அரியமங்கலம் வியாபாரியை பிடிக்க போலீஸ் தீவிரம்

    திருச்சி:

    திருச்சி மாநகரில் போதை ஊசி, மாத்திரைகள் விற்பனை அமோகமாக உள்ளது. இதில் குறிப்பாக அரியமங்கலம் பகுதியில் போதை ஊசி, மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுகிறது. அங்கிருந்து வாங்கி வந்து மாநகரில் பல இடங்களில் வைத்து இளைஞர்கள் ஊசி மற்றும் மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திருச்சி பழைய குட்ஷெட் ரோடு ெரயில்வே மைதானம் பகுதியில் போதை ஊசி, மாத்திரை விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போதை ஊசி மாத்திரைகளுடன் இருந்த சதாம் உசேன் என்ற வாலிபரை கைது செய்தனர்.விசாரணையில் அரியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரியிடம் வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து போதை ஊசி மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இளைஞர்களுக்கு போதை ஊசி மற்றும் மாத்திரைகள் சப்ளை செய்த அரியமங்கலம் வியாபாரியை பிடிக்க கோட்டை போலீசார் விரைந்துள்ளனர்.

    • திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்ற 6 பேர் கைது செய்யபட்டனர்
    • போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம், பாலக்கரை பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கஞ்சா விற்றதாக திருவானைக்காவல் சேர்ந்த சூரியகுமார், பாலக்கரையைச் சேர்ந்த முரளி ஆகிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஜெகன், ஆரோக்கியம், பிரபாகரன், இப்ராம்ஷா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 750 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்
    • வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற வாலிபரை மதுவிலக்கு போலீ சார் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.கரூர் பசுபதிபாளையம் அடுத்துள்ள சணப்பிரட்டி ஒட்டியுள்ள பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருர் மதுவிலக்கு போலீசார்களுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்குசென்ற போலீசார், அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்ட போது, இதே பகுதியை சேர்ந்த அரவிந்த்(வயது 21) என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்துவிற்பனை செய்து வந்தது தெரியவந் தது. இதனையடுத்து, வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சாத்தூர் அருகே மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிள்ளையார்கோவில் புரத்தை சேர்ந்தவர் வைர முத்து (வயது 38). இவரது மனைவி கவிதா. வைரமுத்துக்கு குடி பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று கோவில் திருவிழா வுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த கவிதாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கவிதா அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பி கார்த்திக்கிடம் இது பற்றி கூறினார்.

    உடனடியாக அங்கு வந்த கார்த்திக், குடித்து விட்டு ஏன் தகராறு செய்கிறீர்கள் என வைரமுத்துவிடம் தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் வாக்கு வாதம் முற்றி கை கலப்பாக மாறியது. அப்போது கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைரமுத்துவை குத்தினார். இதையடுத்து அங்கிரு ந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி வைரமுத்து கொடுத்த புகாரின்பேரில் ஏழாயிரம் பண்ணை போலீ சார் வழக்குப்பதிவு செய்து மைத்துனரை கத்தியால் குத்திய கார்த்திக்கை கைது செய்தனர்.

    • கடந்த 27-ந்தேதி வேலு, பரசுராமன் உள்பட 7 பேர் ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 பைபர் படகில் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பி உள்ளனர்.
    • பிரேத பரிசோதனையின் போது கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது.

    திருவொற்றியூர்:

    புது வண்ணாரப்பேட்டை அன்னைசத்யா நகரை சேர்ந்தவர் வேலு (வயது 47).

    இவர் காசிமேட்டில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். அதே பகுதியில் திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த பரசுராமன் (47) என்பவரும் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இருவரும் நண்பர்கள்.

    கடந்த 27-ந்தேதி வேலு, பரசுராமன் உள்பட 7 பேர் ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 பைபர் படகில் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பி உள்ளனர்.

    பின்னர் அன்றே கரைக்கு திரும்பிய வேலு, சகாயம் மற்றும் பரசுராமன் ஆகிய 3 பேரும் முத்தையா தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளனர்.

    அப்போது சகாயத்திற்கும் வேலுவுக்கும் போதை தலைக்கு ஏறியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. சகாயத்திற்கு ஆதரவாக பரசுராமன் பேசியுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    பின்னர் காசிமேடு நாகூரான் தோட்டம் பைபர் படகுகள் நிறுத்தும் வார்ப்பு பகுதியில் வேலு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பரசுராமனிடம் வேலு எதற்காக சகாயத்துக்கு ஆதரவாக பேசினாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.

    அப்போது போதையில் இருந்த பரசுராமன் ஆத்திரமடைந்து வேலுவின் கழுத்தில் தாக்கியுள்ளார். தொடர்ந்து காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    உடனே வேலுவின் உடலை இரவு முழுவதும் பைபர் படகில் உள்ள ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார். மறுநாள் காலையில் மீன் வலை பின்னும் கூடத்தில் வேலுவின் உடலை கொண்டு போட்டு விட்டு தப்பி சென்றுவிட்டார்.

    இதைப்பார்த்த காசிமேடு பகுதியைச் சேர்ந்த வீரப்பன் (52) என்பவர் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேலுவின் உடலை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனையின் போது அவர் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த பரசுராமனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • நாகர்கோவிலில் போலீசார் மடக்கினர்
    • இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி அருகே இதுபோன்ற மோசடி

    நாகர்கோவில் :

    கேரளாவில் ஆண்களிடம் மயக்கும் விதத்தில் பேசி, அவர்களை தனியாக அழைத்துச் சென்று இளம்பெண் ஒருவர் நகை-பணம் பறிப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.

    ஆனால் நகை-பணத்தை இழந்தவர்கள் யாரும் புகார் எதுவும் கொடுக்காததால், இந்த சம்பவம் குறித்து போலீசார் ரகசிய விசார ணையில் ஈடுபட்டனர். அப்போது, இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி அருகே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார், நகை-பணத்தை பறி கொடுத்தவரிடம் விசா ரணை நடத்தினர். அப்போது அவர், வெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் தன்னிடம் மயக்கும் வகையில் பேசியதாகவும் பின்னர் அவர், ஆட்டோவில் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரி வித்தார். மேலும் அந்தப் பெண் கொடுத்த குளிர்பா னத்தை குடித்ததும் தான் மயங்கி விட்டதாகவும், கண் விழித்து பார்த்தபோது நகை-பணத்துடன் பெண் மாயமாகி விட்டது தெரிய வந்ததாகவும் அவர் கூறி னார்.

    இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, மோசடியில் ஈடுபட்ட பெண் வெட்டிக்காடு சிந்து (வயது 34) என தெரியவந்தது. அவர், நகை-பணத்துடன் தமிழகத்திற்கு தப்பி சென்று விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஹரிலால் தலைமையிலான போலீசார், தமிழகம் சென்று ரகசியமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நாகர்கோவிலில் சிந்து பதுங்கி இருப்பது தெரியவரவே, போலீசார் நாகர்கோவில் வந்து அவரை கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த முகமது ஹாஜா (29) என்பவரும் கைது செய்யப்பட்டார். வல்லகடவு பகுதியைச் சேர்ந்த இவர், தொழில்முறை கூட்டாளி என்பதும், சிந்துவுடன் சேர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று ஆட்டோவில் அழைத்துச் சென்றவருக்கு குளிர்பானத்தில் அவருக்கு தெரியாமல் தூக்க மாத்திரைகளை சிந்து கலந்து கொடுத்ததும் அவர் மயங்கியதும் முகமது ஹாஜாவை வரவழைத்து நகை-பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளனர். நாகர்கோவில் வந்த அவர்கள், தங்கத்தை ஒரு நிறுவனத்தில் விற்று விட்டு கோவா சென்றுள்ள னர். அங்கு பணத்தை ஆடம் பரமாக செலவு செய்து விட்டு நாகர்கோவில் வந்த போதுதான் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். சிந்துவிடம் ஏமாந்தவர்கள், இது வெளியே தெரிந்தால், அவமானம் எனக் கருதி புகார் எதுவும் கொடுக்கா ததால் அவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் எத்தனை பேரிடம் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளார் என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்ன சேவலை பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக 2 வாலிபர்கள் பல்சர் வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனர்
    • இருவரையும் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் எந்தவித ஆவணமும் இல்லை. 2 பேரும் வந்த வாகனம் திருட்டு வாகனம் என்றும் கண்டுபிடித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்ன சேவலை பஸ் நிறுத்தம் பகுதியில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் பல்சர் வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனர் இருவரையும் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் எந்தவித ஆவணமும் இல்லை. விசாரணையில் 2 பேரும் வந்த வாகனம் திருட்டு வாகனம் எனவும், 2 பேரும் தொட்டி குடிசை சார்ந்த ரகுபதி (வயது 22) ,சஞ்சய் (21) என்பதும் தெரிய வந்தது. திருடிய மோட்டர் சைக்கிள் மேல மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் (21) என்பவரது வாகனம் என தெரிய வந்தது.இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் மணிகண்டன் ரகுபதி, சஞ்சய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    ×