search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • சட்டவிரோதமாக மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    கரூர் மாவட்டம் குளித்தலை காவல்நி லையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதை கரூர் எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். அப்போது கோட்ட மேடு பகுதியில் வீட்டின் பின்புறம் மது விற்ற சிவானந்தம் (எ) ஊமையன் (வயது 54) மற்றும் நச்சலூரில் வீட்டின் பின்புறம் மதுவிற்ற இடும்பன் மகன் பொன்னர் (57) ஆகிய 2 பேரை பிடித்த தனிப்படை போலீசார் குளித்தலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் குளித்தலை போலீசார் 2 பேர் மீது வழக்குபதிந்து நேற்று கைது செய்தனர் மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை முத்துப்பேட்டை அருகே உள்ள அலையாத்தி காட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோட்டம் பிடித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அலையாத்தி காட்டில் 10 மூட்டை கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து 10 மூட்டை கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் விசாரணையில் அவர்கள் முத்துப்பேட்டை அருகே பேட்டையை சேர்ந்த முருகானந்தம் (வயது 43), அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (25) கோவிலூரை சேர்ந்த சசிகுமார் (20) என்பதும் அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதன் மொத்த எடை 300 கிலோ ஆகும். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • மூதாட்டி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது பக்கத்து வீட்டில் 74 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார்.

    இவரது வீடு நேற்று முழுவதும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அங்கு மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூதாட்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மூதாட்டியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மூதாட்டி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டியின் வீடு அருகே வசித்து வந்த ராஜன், அவரை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர்.
    • இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ் (56). இவரது மனைவி சாந்தி(52). இவர்கள் திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பொதிகை நகரில், ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும் தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக ஷோ ரூம்கள் அமைக்க ஏஜென்டுகள் தேவை என்றும் கடந்த 2020-ம் ஆண்டு விளம்பரம் செய்தனர்.

    இதனை நம்பி ஜவுளி விற்பனை மையம் அதைப்பதற்காக திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த வக்கீல் அரசபிரபாகரன் இவர்களை அணுகி உள்ளார். ஒரு கிளைக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்தால், தேவைப்படும் இடத்தில் கடையின் உள்அலங்காரம் செய்து கொடுப்பதுடன், தங்கள் நிறுவனத்தின் தரமான வேட்டி, சட்டை, பனியன், ஜட்டி மற்றும் மாஸ்க் உள்ளிட்ட தயாரிப்புகளை யாரும் தர முடியாத அளவில் குறைந்த விலைக்கு விற்பனைக்காக தருவதாகவும் கூறி உள்ளனர்.

    இதனை நம்பி அரசபிரபாகரன் மற்றும் அவரது 4 நண்பர்கள் சேர்ந்து 5 கிளைகள் அமைப்பதற்காக ரூ. 61 லட்சத்தை மணிராஜ்-சாந்தியிடம் கொடுத்துள்ளனர்.

    மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர். அதன் பின் ஷோரூம் அமைத்துதராமல் காலம் தாழ்த்தி வந்ததால் அரசபிரபாகரன் பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மட்டும் திருப்பி தந்துள்ளனர். மீதி தொகையாக ரூ. 59 லட்சத்து 25 ஆயிரம் தராமல் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனால் அரசபிரபாகரன் ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார், ஜவுளி நிறுவனம் அமைத்து தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த மணிராஜ் மற்றும் சாந்தியை நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்களின் மகள் மற்றும் மருமகனை தேடி வருகின்றனர். மணிராஜ் மற்றும் சாந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4.03 கிலோ எடையுள்ள யானை தந்தங்களுடன் 7 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
    • யானை தந்தங்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.7.19 கோடியாகும்.

    சென்னை:

    சென்னையில் யானை தந்தம் சட்ட விரோதமான முறையில் ரகசியமாக விற்கப்படுவதாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு கும்பல் இதில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்தது.

    அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சென்னையில் சில இடங்களில் மாறு வேடத்தில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது 4.03 கிலோ எடையுள்ள யானை தந்தங்களுடன் 7 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அந்த யானை தந்தங்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.7.19 கோடியாகும்.

    இந்த யானை தந்தங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. மேற்கண்ட தகவலை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மோதிரம், செல்போன், பணத்தை கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்.
    • போலீசார் பல்வேறு இடங்களில் தேடி மறைந்திருந்த கிறிஸ்துவராஜை பிடித்து கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    புதுக்கோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40 ). இவர் ஊர் ஊராக சென்று ஆடு கிடை போட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு விளை நிலத்தில் ஆடு கிடை போட்டார்.

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் ஆடுகளை பார்ப்பதற்காக புறப்பட்டார்.

    பள்ளி அக்ரஹாரம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை ஒரு வாலிபர் வழிமறித்து நிறுத்தினார். திடீரென அந்த வாலிபர் உங்கள் மோதிரம் ,செல்போன் பணத்தை கொடுத்து விடுங்கள்.

    இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதனால் உயிருக்கு பயந்து ரவிக்குமார், தான் அணிந்திருந்த பணம் ,செல்போன் மற்றும் ரூ.5000 ரொக்கம் ஆகியவற்றை அந்த வாலிபரிடம் கொடுத்தார்.

    இதையடுத்து வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.தொடர்ந்து இது பற்றி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் ரவிக்குமார் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெ க்டர்கள் பழனியாண்டி ,குருசாமி, செந்தில், தலைமை காவலர் அப்துல்லா ஆகியோர் அடங்கிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் தொழிலாளியை மிரட்டி பணம், மோதிரத்தை பறித்தவர் பள்ளியக்ரஹா ரத்தை சேர்ந்த கிறிஸ்துவராஜ் (22) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடி மறைந்திருந்த கிறிஸ்துவராஜை பிடித்து கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சேலம் கொண்ட லாம்பட்டி போலீசாருக்கு, நாட்டாமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பதாக கடந்த மாதம் ரகசிய தகவல் வந்தது.
    • இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அங்கி ருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு, நாட்டாமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பதாக கடந்த மாதம் ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அங்கி ருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    அதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்ட நிலையில், மீதிமுள்ள 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். பிடிபட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தப்பி யோடியவர் சேலம் நிலவாரப்பட்டி பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் யுவராஜ் என்கிற ராஜா (வயது 38) என்பது தெரியவந்தது. அவரை இன்று காலை கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தனர்.
    • வள்ளலை பணி இடைநீக்கம் செய்து இதற்கு முன்பு இருந்த கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை இணை இயக்குனராக இருந்த வள்ளலை பணி இடைநீக்கம் செய்து இதற்கு முன்பு இருந்த கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை ரத்து செய்த கனிமவளத்துறை இயக்குனர் மீண்டும் வள்ளலுக்கு அதே இடத்தில் பணி நியமனம் வழங்கி உத்தரவிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஊழலுக்கு வழிவகுக்கும் கனிமவளத்துறை இயக்குனர் மற்றும் அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று திரண்டனர். மேலும் அதிகாரி வள்ளல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விவசாயிகளை கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவில் புகழ்பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த குத்தகை காலம் முடிந்தும் சிலர் போலியாக டோக்கன் அச்சடித்து வாகனங்களை நிறுத்த பணம் வசூலித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இந்நிலையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது போலி ரசீது மூலம் பணம் வாகனங்களை நிறுத்த வந்த பக்தர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்த தாராட்சி கிராமம் புதிய காலனியைச் சேர்ந்த சூர்யா(28), தாராட்சி கிராமம், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகராஜ்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஏராளமான போலி வாகன வரி வசூல் செய்யும் டோக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர்களுடன் இருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர். மேலும் பிடிப்பட்ட இருவரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லால்குடி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கிய வியாபாரி கைது செய்யபட்டார்
    • போலீசார் 27.5 கிலோ எடை கொண்ட அந்த குட்கா பொருட்களை கைப்பற்றினர்

    திருச்சி,

    திருச்சி மாவட்ம் லால்குடி அருகே உள்ள அரியூர் காளியம்மன் கோவில் அருகாமையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக லால்குடி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஹான்ஸ், பான் மசாலா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் 27.5 கிலோ எடை கொண்ட அந்த குட்கா பொருட்களை கைப்பற்றினர். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கண்ட புகையிலைப் பொருட்களை நாள் குடி காமாட்சி நகர் அய்யன் வகைகள் பகுதியில் சேர்ந்த பக்ருதீன் 49 என்றவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யபட்டார்
    • அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கரூர்,

    பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கடைகளில் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள டீக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சேர்ந்த அசோக் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்புக் கோவில் முக்கம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பாலசுப்பிரமணியன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 13 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் தேன்கனியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுவிற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (55), பெருமாள் (46), விராலிமலை ஈஸ்வரி நகரை சேர்ந்த சண்முகம் (61), தெற்கு தெருவை சேர்ந்த இளையராஜா (31), கல்குடியை சேர்ந்த அய்யப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×