search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • வழக்கம் போல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் வலம் வந்து கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
    • கொள்ளையடிப்பது மட்டுமின்றி நகை பறிப்பு போன்ற சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இரண்டு திருடர்களை டெல்லி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைதான இரு கொள்ளையர்களும், தாங்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்களை வீடியோ பதிவு செய்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் அதிக இளைஞர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ள இந்த திருடர்கள் திட்டம் தீட்டினர்.

    ஸ்வரூப் நகரை சேர்ந்த பண்டி (23 வயது) மற்றும் ராகுல் (22 வயது) ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் வலம் வந்து கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்று டெல்லி வடமேற்கு பகுதிக்கான காவல் துறை துணை ஆணையர் ஜிதேந்திர குமார் மீனா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும் ஸ்வரூப் நகர், முகுந்த்பூர் மற்றும் நகரின் எல்லை பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையடிப்பது மட்டுமின்றி நகை பறிப்பு போன்ற சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    • மகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
    • மகேந்திர பாண்டே மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பீகார் மாநிலம் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திர பாண்டே. 40 வயதான அவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்திருக்கிறார்.

    இந்த கடனை அந்த பெண் நீண்ட நாட்களாக கொடுக்காமல் இருந்திருக்கிறார்.

    இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தாததால் அந்த பெண்ணின் 11 வயது மகளை அவர் திருமணம் செய்துக் கொண்டார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். தனது 11 வயது மகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

    மகேந்திர பாண்டே மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளை சந்தேகப்படும்படியான 2 பேர் தள்ளிச் சென்ற போது அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் சக்திவேல், அவர்களை பிடித்து விசாரித்தார்.
    • அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி இருவரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.


    சென்னை சூளைமேடு பாரி தெரு அவ்வை நகரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (38). சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்தார். சேப்பாக்கம் ரெயில் நிலையம் அருகில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளை சந்தேகப்படும்படியான 2 பேர் தள்ளிச் சென்ற போது அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் சக்திவேல், அவர்களை பிடித்து விசாரித்தார். இருவரும் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அண்ணாசதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி இருவரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட சுரேஷ்ராஜன் (55) திருநெல்வேலியையும், மணி (40) தூத்துக்குடியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    • கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கரிமேடு போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் நூர் முகமது (வயது 18). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நூர் முகமது ரம்ஜான் விடு முறைக்காக, மதுரை பழங்காநத்தத்தில் வசிக்கும் மாமா-சித்திக் வீட்டுக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் பைபாஸ் ரோடு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் 2 பேர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி நூர் முகமது வைத்திருந்த 'செல்போனை கொடு' என்று கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரை கத்தியால் குத்தி காயப்படுத்தினர்.

    இதனை தொடர்ந்து அந்த கும்பல் நூர் முகமது விடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி நூர் முகமது கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரது உருவங்கள் பதிவாகி இருந்தன. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட அருள்தாஸ்புரம் தவளை என்ற சரவணன் (22), கரிமேடு யோகானந்த சாமி மடம் தெரு, ஹனிபா மகன் சல்மான் அகமது (19) ஆகியோரை கைது செய்தனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர்.
    • மாவட்டம் முழுவதும் 6 பேரை கைது செய்த போலீசார், ரூ.1200 மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், முழுவதும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி, ஓசூர், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், மகராஜகடை உள்பட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,700 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அநத வகையில் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ததாக மாவட்டம் முழுவதும் 6 பேரை கைது செய்த போலீசார், ரூ.1200 மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல வேப்பனப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், அஞ்செட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1,630 பறிமுதல் செய்யப்பட்டது.

    • மதுக்கடைகளில் அதிக மதுபாட்டில்களை வாங்கி கொண்டு செல்லும் போது போலீசார் 24 பேரை பிடித்து கைது செய்துள்ளனர்.
    • 20 லிட்டர் கள்ளச்சாராயமும், 1000 ஊறல்களையும் அழிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தொழிலாளர்கள் தினத்தையொட்டி இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாந்தி அறிக்கை மூலம் தெரிவித்தார்.

    இதனால் மதுக்கடைகள் விடுமுறை நாட்களில் கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பவர்கள் மதுபாட்டி ல்களை பெட்டி பெட்டியாக வாங்குவது வழக்கம்.

    அதனை தடுக்க நேற்று மாவட்டம் முழுவதும் எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டார்.

    இதனால் போலீசார் மதுக்கடையில் அதிக மது பாட்டில்களை வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மதுக்கடைகளில் அதிக மதுபாட்டில்களை வாங்கி கொண்டு செல்லும் போது போலீசார் 24 பேரை பிடித்து கைது செய்துள்ளனர். இதில் 7 இருசக்கர வாகனமும், 750 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 20 லிட்டர் கள்ளச்சாராயமும், 1000 ஊறல்களையும் அழிக்கப்பட்டது.

    • மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ராஜமாணிக்கத்தை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாவந்தூரில் ஒரு வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது சேவி மகன் ராஜமாணிக்கம்(55) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சேலைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 8 சேலைகள் பறிமுதல் செய்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் கடைவீதியில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடைக்கு சம்பவத்தன்று மதியம் துணிகள் வாங்குவதுபோல் வந்த பெண்களில் 2 பேர் சேலைகளை திருடிக்கொண்டு கடையை விட்டு அவசர அவசரமாக வெளியே செல்ல முயன்றனர். இதனை கண்ட ஜவுளிக்கடையின் மேலாளர் வித்யா சாகர் அந்த பெண்களை பிடித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒருவர் பெரம்பலூர் மாவட்டம், பொம்மனபாடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முருகேசனின் மனைவி ஜெயலெட்சுமி (வயது 37), மற்றொருவர் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிலம்பரசனின் மனைவி பிரியதர்ஷினி (20) என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு ஜெயலெட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 8 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


    • மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தேவகி (வயது 57) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜா மனைவி ஜெயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • ஜெயா அரிவாளால் தனது கணவரை சரமாரியாக வெட்டினார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மாகாளிபாறையைச் சேர்ந்தவர் ராஜா (வயது 44). விவசாயி. இவரது மனைவி ஜெயா (35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மதுரையில் தங்கி இருந்து 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    தற்போது விடுமுறை என்பதால் இவர்களும் வீட்டில் இருந்தனர். ராஜா குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்ததுடன் அவரை அடித்து மிரட்டி வந்துள்ளார். நேற்று இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜா மனைவி ஜெயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜெயா அரிவாளால் தனது கணவரை சரமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். அப்போது பதறிப்போன ஜெயா அருகில் இருந்த தனது உறவினரான ஆட்டோ டிரைவர் தருண்கோபியை வரவழைத்து ராஜாவை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

    ஆனால் வழியிலேயே அவர் இறந்து விடவே மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து விடவே ராஜா குடிபோதையில் தன்னை வெட்ட வந்ததாகவும், தான் தடுத்ததால் தனக்குத்தானே அரிவாளால் வெட்டிக் கொண்டதாகவும் கூறினார்.

    ஆனால் அவரது பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால் ராஜாவின் தாய் அன்னத்தாய் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரிடமும் அதே போல் தெரிவித்த நிலையில் அதன் பின்னர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதனையடுத்து கடமலைக்குண்டு போலீசார் அவரை கைது செய்தனர்.

    கொலையும் செய்வாள் பத்தினி என்பதற்கு ஏற்ப கணவரையே மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வழிப்பறி குறித்து நகை வியாபாரிகள் 2 பேரும் க.க.சாவடி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கூட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் (வயது 25). அதே பகுதியைச் சேர்ந்தவர் பரத் (50). இவர்கள் 2 பேரும் தங்க நகை வியாபாரிகள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் நகை விற்பதற்காக கோவை வந்தனர். ராஜவீதியில் உள்ள ஒரு கடையில் நகையை விற்று விட்டு அதற்கான பணம் ரூ.4 லட்சத்தை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    க.க.சாவடியில் இருந்து வேலந்தாவளம் ரோட்டில் பிச்சனூர் அருகே சென்றபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் 6 பேர் வந்தனர். அவர்கள் பணத்துடன் சென்ற பரத் மற்றும் ரோகித்தை கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கினர். பின்னர் ரூ.4 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இந்த வழிப்பறி குறித்து நகை வியாபாரிகள் 2 பேரும் க.க.சாவடி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    விசாரணையில் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த ரஞ்சித் (22), அபினேஷ் (27), ரஞ்சித்குமார் (32) ஆகியோருக்கு இந்த வழிப்பறியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது நகை வியாபாரிகளை தாக்கி பணம் பறித்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்கள் 3 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அங்கு உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பல்லலர் மேடு, சி.எஸ்.எம்.தோப்பு தெரு பிள்ளையார்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகாஞ்சீ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அங்கு உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையொட்டி, கோவிந்தம்மாள் (வயது 62), விசாலாட்சி (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ×