search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • முதலில் யாரும் இல்லாத தெருக்களில் சந்தேகம் வராதபடி பிரவீன் பாத்திமா நோட்டமிட்டு காத்திருப்பார்.
    • மூதாட்டிகள் யாரேனும் நகை அணிந்து வந்தால் பார்த்து சொல்வதும் இதன் பிறகு அக்பர்பாட்ஷா செயினை பறித்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

    அறியா பருவத்தில் ஏற்படும் கண்மூடித்தனமான காதலால் 18 வயது வாலிபர் ஒருவர் செயின் பறிப்பு கொள்ளையனாக மாறி இருக்கிறார். தன்னை விட 20 வயது மூத்த பெண்ணுடன் ஏற்பட்ட வயதுக்கு மீறிய வில்லங்க காதலால் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் வாலிபரின் பெயர் அக்பர் பாஷா.

    பல்லாவரத்தை சேர்ந்த இவருக்கும் நெல்லையை சேர்ந்த பிரவின் பாத்திமா என்ற 38 வயது பெண்ணுக்கும் இடையே 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரவின் பாத்திமா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்தித்து பேசி தங்களது வில்லங்க காதலை வளர்த்து கொண்டனர். அக்பர்பாட்ஷா, பிரவின் பாத்திமாவை பார்க்க நெல்லைக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் ஒன்றாக சென்னை வந்து பழைய பல்லாவரம் அம்மன் நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். அதே பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் ஒன்றாக... ஒரே பிரிவில் வேலைக்கு சேர்ந்தனர்.

    இருவரும் வேலை முடிந்து ஒன்றாக ஊர் சுற்றுவது... உல்லாசமாக இருப்பது என கணவன்-மனைவியாகவே வாழ்ந்து வந்தனர். இவர்களது "கூடுதல்" செலவுக்கு சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லை. அக்பர்பாட்ஷா பிரவின் பாத்திமாவுக்காக கொள்ளையனாக மாறினார். இவர் செயின் பறிப்பில் ஈடுபடும் இடங்களுக்கு கள்ளக்காதலியான பர்வின் பாத்திமா உடன் செல்வார்.

    ரெயில் நிலையங்களையொட்டி உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத சிறிய சந்து பகுதிகளை தேர்வு செய்து தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளை குறி வைத்து செயின் பறிப்பதை இருவரும் வழக்கமாக வைத்திருந்தனர்.

    அந்த வகையில் கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே காய்கறி வாங்கிக் கொண்டு தனியாக சென்ற கனிகா (58) என்ற பெண்ணிடம் நேற்று காலையில் அக்பர்பாட்ஷா செயினை பறித்தார். அப்போதுதான் இருவரும் போலீசில் சிக்கினர். செயினை பறிக்கும் இடங்களில் அக்பர்பாட்ஷா கைவரிசை காட்டிய பின்னர் பிரவின் பாத்திமா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஓடிச்சென்று உதவுவது போல நடிப்பார்.

    நேற்றைய செயின் பறிப்பு சம்பவத்தின் போதும் பிரவின் பாத்திமாவும், அக்பர் பாட்ஷாவும் அதே போன்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களுக்கு பிரவின் பாத்திமா மீது சந்தேகம் ஏற்பட்டது. செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய அக்பர் பாட்ஷாவை விரட்டிய போது அவர் அருகில் உள்ள வீட்டில் போய் பதுங்கினார்.

    இதையடுத்து கோடம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அக்பர் பாட்ஷாவை ஆட்டோ டிரைவர்கள் உதவியுடன் மடக்கி பிடித்தனர். பிரவின் பாத்திமாவையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போதுதான் இருவரது குற்றச்செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

    பிரவின் பாத்திமாவுக்கு நெல்லையில் 2 குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகளின் செலவுக்காகவும், அக்பர் பாட்ஷாவுடன் சென்னையில் குடும்பம் நடத்துவதற்கும் இது போன்ற செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக பிரவின் பாத்திமா வாக்குமூலம் அளித்துள்ளார். செயினை பறிக்கும் இடங்களில் அக்பர் பாட்ஷா இதற்கு முன்பும் பலமுறை சிக்கி உள்ளார். அப்போதெல்லாம், பிரவின் பாத்திமா தெரியாத ஆள் போல கூட்டத்தில் புகுந்து "பாவம் பையன் தெரியாமல் திருடி விட்டான்" என்று பேசி தப்பிக்கவும் வைத்துள்ளார்.

    முதலில் யாரும் இல்லாத தெருக்களில் சந்தேகம் வராதபடி பிரவீன் பாத்திமா நோட்டமிட்டு காத்திருப்பார். அதன் பின்னர் மூதாட்டிகள் யாரேனும் நகை அணிந்து வந்தால் பார்த்து சொல்வதும் இதன் பிறகு அக்பர்பாட்ஷா செயினை பறித்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

    அக்பர் பாட்ஷா தப்பி ஓடும் போது திருடனை பிடிப்பது போல் பிரவீன் பாத்திமா கூச்சலிட்டபடி ஓடுவதும், யாரேனும் பிடிக்க வந்தால் அவர்களை திசை திருப்பி, அக்பர் பாட்ஷாவை தப்ப வைப்பதிலும் கை தேர்ந்தவராக செயல்பட்டுள்ளார்.

    செயினை பறி கொடுத்தவர்களுக்கு ஆறுதல் கூறுவது போல நடித்து போலீசிடம் செல்லாமல் காலம் தாழ்த்தி அக்பர் பாட்ஷாவை தப்ப வைத்து தானும் தப்பிச் செல்வதும் அவரது வேலையாக இருந்துள்ளது.

    ரெயில் நிலையங்கள் அருகில் இருக்கும் தெருக்களில் மட்டுமே இது போன்று நாடகம் ஆடி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு ரெயிலில் ஏறிக்கொண்டு தப்பிச் செல்வதே தங்களது திட்டம் என அக்பர் பாட்ஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கோடம்பாக்கம் போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புதிய வீட்டில் பொருட்கள் திருடிய 6 பேரை கைது செய்தனர்.
    • கே.கே. நகரில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டார்.

    மதுரை

    எஸ்.ஆலங்குளம், குமரன் நகரை சேர்ந்தவர் பால் பெஞ்சமின் (30). இவர் கட்டுமான மேற்பார்வையாளராக உள்ளார். கே.கே. நகரில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டார். சம்பவத்தன்று காலை ஊழியர்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த இரும்பு வெட்டும் எந்திரம், டைல்ஸ் வெட்டும் எந்திரம் ஆகிவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் டைல்ஸ் வெட்டும் மிஷின், இரும்பு வெட்டும் எந்திரம் பறிமுதல் செய்யப்ப ட்டது. இதுதொ டர்பாக ஆழ்வார்புரம் ஆசைதம்பி (27), ஜெய்ஹிந்த்பு ரம் மணிகண்டன் (29), நாராய ணசெட்டி தெரு விஜய் (37), காக்கா தோப்பு கண்ணன் (40), ராஜகம்பீரம் பாலமுருகன் (8), ஒத்தக்கடை செல்வராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர்.

    • மதுரையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.
    • தமிழக அரசின் தொழிற் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    மதுரை

    மதுரை மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசின் 12 நேர வேலை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி பெரியார் பஸ் நிலையம், கட்டபொம்மன் சிலை அருகில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் பாவேல்சிந்தன், செயலாளர் செல்வா, நிர்வாகிகள் வேல்தேவா, நிருபனா, நவீன், கவுதம், பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தமிழக அரசின் தொழிற் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • ரூ. 3 லட்சம் மோசடி செய்த ஆடிட்டர் கைது செய்யப்பட்டார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடிட்டர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்க லத்தை சேர்ந்தவர் ஜெகன். இவரது மகள் கேத்தரின் (வயது39). இவர் மதுரையில் புகழ்பெற்ற ரப்பர் நிறுவனத்திற்கு ரப்பர் புஷ் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனிக்கு ஆடிட்டராக திருப்பரங்கு ன்றத்தை அடுத்துள்ள ஹார்வி பட்டியை சேர்ந்த செந்தி ல்குமார்(39) உள்ளார். இவர் கேத்தரின் நிறுவனத்திற்கு 2021 முதல் 2023வரையில் ஜி.எஸ்.டி. வரி கட்டுவதாக கூறி ரூ.5 லட்சம் பணம் வாங்கி யுள்ளார்.

    அதில் ரூ.3.5 லட்சத்தை கட்டாமல் மோசடி செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த கேத்தரின் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் செய்தார். அதன் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடிட்டர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

    • கொலையுண்ட கருப்பு குமார் பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியாவார்.
    • தந்தையின் கொலைக்கு பழிவாங்க மகன் 10 ஆண்டு காத்திருந்து ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    பழைய வண்ணாரப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற கருப்பு குமார் (வயது 45). இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆரணி கெங்கன் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் குமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்து தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட கருப்பு குமார் பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியாவார். கடந்த 2013-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி வெங்கட்டா கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் குமார் சம்பந்தப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக வெங்கட்டாவின் மகன் ஆகாஷ் (வயது23) தனது நண்பர்களுடன் சேர்ந்து குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஆகாஷ், அவரது நண்பர்களான கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி குட்டிப்பாவின் மகனான ரவுடி பூபதி(29), புளியந்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த பார்த்திபன் (24), புளியந்தோப்பு பார்த்தசாரதி தெருவை சேர்ந்த முரளி (26), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக கைதான ஆகாஷ் போலீசாரிடம் கூறும்போது, எனது தந்தை வெங்கட்டாவை கொலை செய்ததால் குமாரை பழிவாங்க கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்தேன். தொடர்ந்து கருப்பு குமாரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தேன்.

    கடந்த சில நாட்களாக கருப்பு குமாரை கண்காணித்து கொலை செய்ய நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன். அதன் படி நேற்று காலை தனியாக குமார் வந்ததை நோட்டமிட்டு அவரை வெட்டி கொலை செய்தோம் என்று கூறி உள்ளார்.

    கைதான ஆகாஷ் உள்பட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையின் கொலைக்கு பழிவாங்க மகன் 10 ஆண்டு காத்திருந்து ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.
    • மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் வனமுத்து, கழிவுநீர் லாரி உரிமையாளர் யுவராஜ், டிரைவர் குப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த புது கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிஷ் (வயது22). இவர் அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவருடன் வடநெம்மேலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 18-ந் தேதி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றார். இருவரும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு திருப்போரூர் அடுத்த அம்மாபேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் வனமுத்து, கழிவுநீர் லாரி உரிமையாளர் யுவராஜ், டிரைவர் குப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • ஆந்திராவில் இருந்து அந்த வழியே சந்தேகத்திற்கு இடமான ஒரு டிப்பர் லாரி வந்தது.
    • போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் உரிய அனுமதி இன்றி ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    பாதிரிவேடு:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து அந்த வழியே சந்தேகத்திற்கு இடமான ஒரு டிப்பர் லாரி வந்தது. அதை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் உரிய அனுமதி இன்றி ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான பரணம்பேடு கிராமத்தை சேர்ந்த தங்கபிரகாசம் (வயது 38), அல்லிப்பூகுளத்தை சேர்ந்த கிளீனரான நாகராஜ் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அங்குள்ள தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்த சுவாரியிடம் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து மோதுவது போல் வண்டியை நிறுத்தினர்
    • அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் சுவாரியை 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை மத்திகிரி மிடுகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் சுவாரி (வயது 25). போட்டோ கிராபர்.

    மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சுவாரி நேற்று அந்த கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த பழைய மத்திகிரியைச் சேர்ந்த கவுதம் (25), முரளி (21), ரஞ்சித்குமார் (20), அஜீத் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து சுவாரியிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானமப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்குள்ள தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்த சுவாரியிடம் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து மோதுவது போல் வண்டியை நிறுத்தினர். இதனால் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் சுவாரியை 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.

    இதுகுறித்து சுவாரி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு ெசய்து முரளி, ரஞ்சித்குமார். அஜீத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள கவுதமை போலீசார் தேடிவருகின்றனர்.

    • 3பேர் ராகுலை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர்.
    • போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூரை அடுத்த பழைய மத்தியகிரியைச் சேர்ந்தவர் ராகுல் (வயது19). இவர் அதே பகுதியில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாற்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒன்னல்வாடியைச் சேர்ந்த ராஜேஷ் (20), மிடிகிரியைச் ேசர்ந்த வெங்கடேஷ் (26), மகேஷ்குமார் (25) ஆகிய 3பேரும் ராகுலை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • கல்லூரி மாணவர் தனது ஆசைக்காக செக்ஸ் விருந்துக்கு அழகிய பெண் வேண்டுமென கேட்டுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பயன்படுத்திய நபரை பிடித்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கத்தை சேர்ந்தவர் எம்.எஸ்.சி. படித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் (வயது23). இவர் தனது செல்போன் காணாமல் போய்விட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் கீர்த்தி இது தொடர்பாக விசாரணை நடத்தி மாணவனின் செல்போனை பயன்படுத்திய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் செல்போன் எவ்வாறு காணாமல் போனது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. எம்.எஸ்.சி. படித்து வரும் மாணவர் சமூக வலைதள மூலம் பலருக்கு நண்பர் ஆகி உள்ளார். லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரியில் படித்து வரும் வில்லியனூர் ஜி.என்.பாளையத்தைச் சேர்ந்த சஞ்சய்குமாருக்கு (22) பேஸ்புக் மூலம் நண்பர் ஆகி உள்ளார். ஒரு நாள் கல்லூரி மாணவரும், சஞ்சய் குமாரும் சாட் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது கல்லூரி மாணவர் தனது ஆசைக்காக செக்ஸ் விருந்துக்கு அழகிய பெண் வேண்டுமென கேட்டுள்ளார். சஞ்சய் குமாரும் பெண்ணை அழைத்து வருவதாக கூறி திருக்காஞ்சி ரோடு ஒதியம்பட்டு அருகே உள்ள ஒரு காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு கல்லூரி மாணவரை, சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர் பாலா என்ற சரவணன் (23) இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.

    அவரிடம் இருந்து ரூ. 8500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானாமாகிவிடும் என்று கருதிய கல்லூரி மாணவர் செல்போன் மட்டும் கிடைத்தால் போதும் என சைபர் கிரைம் போலீசில் செல்போன் தொலைந்து விட்டதாக புகார் அளித்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பயன்படுத்திய நபரை பிடித்தனர். அப்போது சஞ்சய்குமாரும், பாலா என்ற சரவணனும் ஓ.எல்.எக்ஸ்-இல் செல்போனை விற்பனை செய்தது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு விசாரணை நடத்தி சஞ்சய்குமார், பாலா 2 பேரையும் கைது செய்தனர்.

    • சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு ஸ்டேன்லி சாம்ராஜூடன் அறிமுகமாகி உள்ளார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம், ஸ்டேன்லி சாம்ராஜ் புகார் அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவருடைய மகன் ஸ்டேன்லி சாம்ராஜ் (வயது 47). இவர் சிமெண்ட், உப்பு மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

    ரூ.8 கோடி மோசடி

    இவரது பள்ளி நண்பரான தூத்துக்குடி தாமோதரநகரை சேர்ந்த சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகமாகி தான் உப்பு மற்றும் இரும்பு பொருட்களை வியாபாரம் செய்து வருவதாகவும், அவர் ஸ்டேன்லி சாம்ராஜூடன் சேர்ந்து வியாபாரம் செய்ய விரும்புவதாகவும் கூறி உள்ளார். மேலும் சீலன் செல்வராஜ் அவருடன் வியாபாரம் செய்துவரும் தூத்துக்குடியை சேர்ந்த விஜய் என்பவரையும் ஸ்டேன்லி சாம்ராஜ்க்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

    பின்னர் சீலன் செல்வராஜ், விஜய் ஆகியோர் ஸ்டேன்லி சாம்ராஜ் நிறுவனத்துக்கு உப்பு, இரும்புபொருட்கள் வாங்குவதாக போலியான கொள்முதல் ஆணையை காண்பித்தும், வியாபாரத்துக்காக பணம் தேவைப்படுவதாகவும் கூறி 2020-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை ரூ.8 கோடியே 29 லட்சத்து 18 ஆயிரத்து 741 பணத்தை பெற்றுக் கொண்டு, எந்தவித வியாபாரமும் செய்யாமல் ஏமாற்றி உள்ளனர்.

    கைது

    இதுகுறித்து அறிந்த ஸ்டேன்லி சாம்ராஜ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில், மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை நடத்தி சீலன்செல்வராஜ், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் இருவரும் இதுபோல வேறு யாரிடமும் மோசடி செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோலார் பேனல் திருடிய 3 பேரை கைது செய்தனர்.
    • பாக்கியம் மகன் பூபதி (20), தினேஷ்குமார் (26), முருகேசன் மகன் கார்த்திக் (18) என்பது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள எரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் மாடியில் சோலார் பேனல் அமைக்கப்பட்டிருந்தது. இதனை சம்பவத்தன்று மர்ம நபர்கள் திருடினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் திருடர்களை விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், மைக்கேல் பாளையம், பாக்கியம் மகன் பூபதி (20), தினேஷ்குமார் (26), முருகேசன் மகன் கார்த்திக் (18) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்தில் சோலார் பேனல் திருடியதாக, மேற்கண்ட 3 பேரையும் விக்கிரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் மதுரை வளையப்பட்டி யாதவர் தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் தோட்டத்தில் மின்மோட்டாரை திருடியதாக சத்திர வெள்ளாளபட்டியை சேர்ந்த சுமலி என்பவரை பாலமேடு போலீசார் கைது செய்தனர்.

    ×