என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவர்கள்"
- குன்னூர் அரசு லாரி மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர் ராமச்சந்திரன் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
- மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு மருந்துகளின் தேதி சரியாக உள்ளதா? நோயாளிகளுக்கு சரியாக மருந்துகள் வழங்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.
குன்னூர்:
குன்னூர் பகுதிகளான இன்கோசர்வ், குன்னூர் நகர மன்ற அலுவலகம் மற்றும் குன்னூர் அரசு லாரி மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர் ராமச்சந்திரன் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு மருந்துகளின் தேதி சரியாக உள்ளதா? நோயாளிகளுக்கு சரியாக மருந்துகள் வழங்கப்படுகிறதா? எத்தனை மருத்துவர்கள் உள்ளார்கள் எனவும் ஆய்வு செய்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், குன்னூர் அரசு லாரி மருத்துவமனையை மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் தனியார் மருத்துவமனைக்கு இணை–யாக வைத்துள்ளார்கள்.
மாவட்டத்தில் மருத்துவர்கள் குறைவாக உள்ளனர். சம்பந்தப்பட்ட சுகாதா–ரத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். விரைவில் மாவட்டம் முழுவதும் மருத்துவர்களுக்கு புதிதாக தங்கும் குடியிருப்புகள் கட்டி ஒதுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது அவருடன் மாவட்ட கலெக்டர் அம்ரித், குன்னூர் சப்-கலெக்டர் தீப விக்னேஷ்வரி, குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அழைத்து செல்லப்படுகின்ற நிலை உள்ளது.
- கூடுதலாக நியமிக்க பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஒகேனக்கல்,
ஒகேனக்கல் சுற்றுலா தளம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது.ஒகேனக்கல்லில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டம்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஆற்றின் கரையோரங்களில் குளிக்கும்போது குடிமகன்கள் குடித்து விட்டு வீசும் கண்ணாடி பாட்டில் இருந்தால் கால்களை கிழித்துவிடுகிறது. ஆற்றில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்களை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது.
அதே போன்று உள்ளூரில் வசிக்கும் மக்கள் தாங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஒகேனக்கல்லில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதால் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ மருத்துவமனையில் மருத்துவம் பார்த்ததற்கு செவிலியர்கள் இருப்பதில்லை என்றும், அதேபோன்று வாரந் தோறும் செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைக்காக வருவது வழக்கம்.
மருத்துவமனைக்கு செல்லும் சாலை சுமார் 500 மீட்டர் தூரம் சரியில்லாமல் குண்டும் குழியுமாக அமைந்துள்ளது.
இதனால் நிறைய கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுகின்றன
இரவு நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் வரும்போது இரவுநேர செவி லியர்கள் இல்லாததால் தவிக்கின்றனர்.
இதனால் மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அழைத்து செல்லப்படுகின்ற நிலை உள்ளது.
அவசர காலங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் அவசர சிகிச்சைக்கு வரும்போது கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் உரிய சிகிச்சையின்றி பாதிக்கப்படு வதாகவும்,உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது,
ஒகேனக்கல் பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இரவு பணியில் கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலியர் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தருமபுரி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961-ம்ஆண்டு பெற்றார்.
- இந்நாளில் எங்கள் மருத்துவ குடும்பங்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் தின வாழ்த்துக்கள்.
தருமபுரி,
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி இன்று தேசிய மருத்துவ தினத்தை ஒட்டி வாழ்த்து தெரிவித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திரராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961-ம்ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அயராது உழைத்து இங்கு வந்த அனைத்து நோயாளிகளின் உயிரை தங்கள் உயிர் என காப்பாற்றினர். அனைத்து நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சுவாசக் காற்றும் மற்றும் போதிய மருந்துகள், உணவு மற்றும் உயிர் காக்கும் கவசம் ஆகியவற்றை போதுமான அளவு எங்களுக்கு கொடுத்து எங்கள் சேவை சிறக்க உறுதுணை புரிந்த முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கல்லூரி இயக்குனர் ஆகியோருக்கு எங்களது நன்றிகள் பல. இந்நாளில் பெருந்தியாகத்தில் ஈடுபட்ட அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவ தின வாழ்த்துக்களை சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளோம்.
இந்நாளில் எங்கள் மருத்துவ குடும்பங்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் தின வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வீட்டை விட்டு வெளியே வரும்போது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் கலெக்டர் வேண்டுகோள்
- 403 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 60 பேருக்கு கொரோனா உறுதி
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளான முஞ்சிறை, மேல்புறம் ஒன்றியங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நாகர்கோவிலில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஏற்கனவே இரண்டு மருத்துவ மாணவர்கள் மற்றும் இரண்டு டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு டாக்டருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
மேலும் மருத்துவ மாணவர்கள் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்களுக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் நாகர்கோவில் மாநகரில் மட்டும் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று 403 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் முன்சிறை ஒன்றியத்தில் 20 பேரும், அகஸ்தீஸ்வரத்தில் 3 பேரும், கிள்ளியூரில் 5 பேரும், குருந்தன்கோட்டில் 7 பேரும், ராஜாக்கமங்கலத்தில் 2 பேரும், திருவட்டார், தக்கலை ஒன்றியங்களில் தலா நான்கு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 60 பேரில் 26 பேர் ஆண்கள், 34 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் நான்கு குழந்தைகளும் அடங்கும். கடந்த 25 நாட்களில் மற்றும் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 510 ஆக உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கொரோனா வேக மாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
மாவட்ட எல்லையான களியக்காவிளையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் மாநகர பகுதியிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மேயர் மகேஷ் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு 8 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து பள்ளிகளிலும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.
பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்புடன் மாணவர்கள் யாராவது வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களுக்கு செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
எனவே வீட்டை விட்டு வெளியே வரும்போது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கால்நடைகளுக்கு சிறப்பான மருத்துவ உதவி வழங்க வேண்டும்.
- விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மண்டல கால்நடை பராமரிப்புத் துறையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு புதிதாக கால்நடை உதவி மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான பயிற்சி கூட்டம் பல்லடம் வனாலயம் அடிகளார் அரங்கத்தில் நடந்தது. இணை இயக்குநர் (பொறுப்பு) கவுசல்யா தேவி முன்னிலை வகித்தார்.
வனம் அமைப்பின் தலைவர் சுவாதி கண்ணன் வரவேற்றார்.கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் பாரிவேந்தன் தலைமை வகித்து பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது.விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், கால்நடைகளின் எண்ணிக்கையை பெருக்கி, அவற்றின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டியதும் நமது பொறுப்பு.
இதற்காக கால்நடைகளுக்கு சிறப்பான மருத்துவ உதவி வழங்க வேண்டும்என்றார்.அதன்பின், வனாலயம் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மண்டல கால்நடை உதவி இயக்குனர்கள் பரிமள ராஜ்குமார், ஜெயராமன், வெங்கடேசன், உமா சங்கர் மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
- இளையான்குடி அருகே வரும்முன் காப்போம் திட்டத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- சிறப்பு மருத்துவர்கள் உட்பட20 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் , செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சாவித்திரி முருகன் தலைமை வகித்தார்.
ஒன்றியத் தலைவர் முனியாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி குத்துவிளக்கேற்றி மருந்துப்பெட்டகம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி பேசினார்.
இதில் சிவகங்கை மாவட்ட துணை இயக்குநர் ராம்கணேஷ், இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர்- முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கருணாகரன், மலைமேகு, தமிழரசன், கண்ணன், சுதர்சன், சரவணன், மற்றும் சிறப்பு மருத்துவர்கள் உட்பட20 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் , செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன், தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்