என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்குகள்"
- மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.
- நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
- மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.
நாகர்கோவில், அக்.27-
புதிய சட்டத்திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் செட்டிகுளம் கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார், வடசேரி பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். நாகர்கோவில் நகரில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 64 பேருக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் அபராதம் விதித்துள்ளனர் .இதன் மூலமாகரூ. 64 ஆயிரம் வசூல் ஆகியுள்ளது. இதே போல் கோட்டார், வடசேரி போலீசாரும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் பலரும் சிக்கினார்கள் . பெண்களும் சிக்கி தவித்தனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இன்று காலையிலும் ஹெல்மெட் சோதனை நடந்தது. ஹெல்மெட் அணியாமல் பின்னால் இருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஜெயக்குமார் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
- கலெக்டர் உத்தரவுப்படி ஜெயக்குமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த கூடலூர் புது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 38).
இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதனால் ஜெயக்குமாரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவரை கொண்டு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி ஜெயக்குமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
- முழுவதும் தடை மீறி மது விற்றதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 570 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டம் முழுவதும் தடை மீறி மது விற்றதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 570 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக கவுந்தப்பாடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் 123 மது பாட்டிலுடன் சென்ற கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த வேலு (36), கோபியைச் சேர்ந்த கவுதம் (24), திங்கள் உரைச் சேர்ந்த கார்த்தி (26) உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- நிலுவையிலிருந்த 925 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 410 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது
- அனைத்து கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
ஊட்டி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை, நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகன் தொடங்கி வைத்தாா். நீதிபதி ஸ்ரீதரன், மகளிா் நீதிமன்ற நீதிபதி நாராயணன், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நீதித்துறை நடுவா் தமிழினியன், கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி வி.மோனிகா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனகிருஷ்ணன் ஆகியோா் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த பல்வேறு வழக்குகளுக்கு தீா்வு கண்டனா்.
கோத்தகிரி நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி ராஜ் கணேஷ், குற்றவியல் நீதிபதி வனிதா ஆகியோா் தலைமையிலும், குன்னூா் நீதிமன்றத்தில் சாா்பு நீதிபதி சந்திரசேகரன், குற்றவியல் நீதித் துறை நடுவா் இசக்கி மகேஷ்குமாா், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம் ஆகியோா் தலைமையிலும், கூடலூா் நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி பிரகாசம், குற்றவியல் நீதிபதி சசிகுமாா், பந்தலூா் நீதிமன்றத்தில் கூடுதல் உரிமையியல் நீதிபதி சிவகுமாா் ஆகியோா் தலைமையிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றன.
இதில் நிலுவையிலிருந்த 925 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 410 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 2 கோடியே 34 லட்சத்து 15,506 ஆகும். வங்கிகளின் வாராக்கடன் சம்பந்தமான 510 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 118 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. அதன் மதிப்பு ரூ. 1 கோடியே 59 லட்சத்து 82,083 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிவில், காசோலை மோசடி, குடும்ப நல வழக்குகள் என மொத்தம் 4,865 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
- தீா்வுத் தொகை ரூ. 32 கோடியே 27 லட்சமாகும்.
திருப்பூர் :
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 20 அமா்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்கு உரிய சிறிய குற்ற வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 4,865 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் 2,679 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டன. தீா்வுத் தொகை ரூ. 32 கோடியே 27 லட்சமாகும்.
திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவா்வி.பி.சுகந்தி, மோட்டாா் வாகன விபத்து தீா்ப்பாய நீதிபதி பி.ஸ்ரீகுமாா், மகளிா் நீதிமன்றநீதிபதி எஸ்.நாகராஜன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் வி.புகழேந்தி மற்றும் வக்கீல்கள் பலா் கலந்துகொண்டனா்.
- 6 பேர் மீது வழக்குப்பதிவு
- வாழை மரங்கள் வெட்டி சாய்த்ததால் ரூ. 30 ஆயிரம் இழப்பு
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி செறுகாட்டு விளையை சேர்ந்தவர் வில்சன் (வயது 58) இவருக்கு சொந்தமான நிலத்தில் 15 -ரப்பர் மரங்களும் 70 - வாழை மரங்களும் நட்டு பராமரித்து வந்துள்ளார் .
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் விரோதம் இருந்துள்ளது. இந்த முன் விரோதத்தில் உண்ணாமலைக்கடை பாண்டியன் விளையை சேர்ந்த சீமா (37), திக்குறிச்சியைச் சேர்ந்த பிரவீன் (35) திக்குறிச்சியை சேர்ந்த வசந்தா (25) ஆகியோர் நிலத்தினுள் புகுந்து வாழை மரங்களை வெட்டி சாய்த்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது
வாழை மரங்கள் வெட்டி சாய்த்ததால் ரூ. 30 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்