என் மலர்
நீங்கள் தேடியது "#சஸ்பெண்டு"
- கோவிலை சுத்தம் செய்யும் பணியில் 16 பெண் பணியாளர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.
- பெண் ஊழியர் ஒருவர் ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு பணிகளில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொறியியல் துறையில் வரைவாளராக சதீஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார்.
கோவிலை சுத்தம் செய்யும் பணியில் 16 பெண் பணியாளர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். பெண் ஊழியர் ஒருவர் ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் சதீஷ் பெண்களிடம் ஆபாசமாக பேசி மனரீதியாகவும் தொல்லை கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அதிகாரி சதீஷ் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
- உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி திருபுவனை கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் திறப்பதிற்கான அனுமதி பெற புதுவை நகர அமைப்பு குழுமத்தில் ஒருவர் விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நகர அமைப்பு உதவியாளர் குமாரவேலு, பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கால தாமதமாக அளித்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த பெட்ரோல் பங்க்கு அனுமதிக்கு விண்ணப்பித்தவர் லஞ்சம் வாங்கியது குறித்து ஆதாரத்துடன், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.
இது தொடர்பான அறிக்கை தலைமை செயலருக்கு அனுப்பட்டது. தலைமை செயலர் உத்தரவுப்படி, குமாரவேலு சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடத்துனர் முத்துக்குமார் சிபிராஜை கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார்.
- மாற்றுத்திறனாளியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்ட நடத்துனர் முத்துக்குமாரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். பானி பூரி கடை நடத்திவரும் இவர் 80 சதவீத பார்வை குறைபாடு உடையவர் .இவருக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவரை வழி நடத்த உடன் ஒருவர் செல்லவும் பயண அட்டையில் வசதி உள்ளது. இந்நிலையில் சத்யராஜ் தனது மனைவி மற்றும் 17 வயது மகனுடன் வீரபாண்டி பிரிவில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல மாநகர பேருந்தில் ஏறி உள்ளார். மனைவிக்கு பெண்களுக்கான இலவச பயணம் என்பதால் தனக்கும் தனது மகனுக்கும் இலவச பேருந்து பயண அட்டை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் நடத்துனர் முத்துக்குமார், உங்கள் மனைவிக்கு தான் பாஸ் உள்ளது .மகனுக்கு பயண சீட்டு பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு உள்ள சலுகையை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர் 3 பேரையும் கீழே இறங்க சொல்லி உள்ளார். இதனை சத்யராஜின் 17 வயதான மகன் சிபிராஜ் வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் முத்துக்குமார் சிபிராஜை கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார். பாதிக்கப்பட்ட சத்யராஜ் இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாற்றுத்திறனாளியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்ட நடத்துனர் முத்துக்குமாரை சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மாவட்ட போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
- பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரரே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவம் நடந்த போது உடன் சென்ற பெண் போலீஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.பரிந்துரை செய்துள்ளார்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு அம்பலவயல் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர், தன்னை 2 பேர் ஊட்டிக்கு கடத்தி சென்று லாட்ஜில் அடைத்து பலாத்காரம் செய்து விட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்தார்.
சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி அம்பலவயல் போலீசார் சிறுமியை தொடர்பு கொண்டு விசாரணை நடத்துவதற்கு ஊட்டிக்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்துள்ளனர். சிறுமியும் வந்தார்.
பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபின், சப்-இன்ஸ்பெக்டர் பாபு, பெண் போலீஸ் பிரஷி ஆகியோர் சிறுமியை அழைத்து கொண்டு போலீஸ் வாகனத்தில் ஊட்டிக்கு வந்தனர்.
ஊட்டியில் சிறுமி சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட லாட்ஜூக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் அம்பலவயல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
செல்லும் வழியில் வாகனம் ஒரு இடத்தில் திடீரென நிறுத்தப்பட்டது.
அப்போது ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீசார் இறங்கி வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது. ஜீப்பில் சிறுமியும், சப்-இன்ஸ்பெக்டர் பாபுவும் மட்டும் தனியாக இருந்தனர்.
அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் பாபு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தொடக்கூடாத இடங்களில் தொட்டதுடன், அதனை தனது செல்போனில் புகைப்படமும் எடுத்து வைத்து கொண்டார். இதனை அவர்களுடன் வந்த இன்ஸ்பெக்டரோ, பெண் போலீசோ கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.
இதனால் மன வேதனை அடைந்த சிறுமி சம்பவம் குறித்து கண்ணூர் டி.ஐ.ஜி ராகுல் ஆர்.நாயரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அந்த புகாரில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனை இன்ஸ்பெக்டர் கண்டு கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை தான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாபுவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த போது உடன் சென்ற பெண் போலீஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.பரிந்துரை செய்துள்ளார்.
- அரக்கோணம் கோட்டாட்சியர் உத்தரவு
- நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதால் நடவடிக்கை
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலுார், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில், அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.
இங்கு, நெல் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன.இந்த நிலையில் வேலூர் வ சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அரக்கோணம் அடுத்த சிறுகரும்பூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் குமரவேல் பாண்டியன் மேல்பாக்கம் நிர்வாக கிராம அலுவலர் குமரவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர். குமரவேல் பாண்டியன் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்ததாக
போலியாக அடங்கல் சீட்டு கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் வழங்கியுள்ளார்.
இதனால் அவர்கள் கைத செய்யப்பட் டுள்ளனர். இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குமரவேலை தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்வதாக அரக்கோணம் கோட்டாட்சியர் பாத்திமா உத்தரவிட்டுள்ளார்.
- அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரை
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது 2-வது மகன் ஜெயபிரகாஷ். இவர் கோவையில் மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். ஜெயபிரகாஷ் நகை, பணம், சொத்துக்களை ஏமாற்றி அபகரித்ததாக, பெற்றோர் மற்றும் முதியோர் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் புகார் மனு ஒன்றை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து இருந்தார்.
சதாசிவம் கொடுத்த புகார் மனு தொடர்பாக மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. இதன் மீதான விசாரணைக்கு வந்திருந்த சதாசிவத்திடம், பெற்ற மகன் மீது புகார் கொடுத்து உள்ளீர்கள். இது தவறு என்று அதிகாரி ஒருவர் அறிவுரை கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் சதாசிவம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தா ருமான செல்வராஜன் என்பவர் மேற்கண்ட செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் செல்வராஜனை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
- அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தோப்பூரை சேர்ந்த சிவபெருமாள் மகன் அஜய்குமார் (வயது10).
அங்குள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த அஜய்குமார் கடந்த 2-ந்தேதி பள்ளி வளாகத்தில் தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்நிலையில் மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் நேற்று முன்தினம் இரவு ஆர்.டி.ஓ. புகாரி பேச்சுவார்த்தை நடத்திார். அதில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறைரீதியாகவும், காவல்துறை சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் குடும்பத்திற்கு அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்படும். மாணவரின் மரணம் குறித்து சட்டரீதியாக விசாரணை மேற்கொண்டு உண்மை தன்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவனின் உடலை பெற்று சென்று இறுதி சடங்கு செய்தனர்.
இந்நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா மருத்துவர்கள் பணிகளுக்கு சரியாக வருகிறார்களா? என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
- லஞ்சம் பெற்ற தற்காலிக பெண் ஊழியரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் நுழைவு சீட்டு பெற ரூ.100 லஞ்சம் வாங்குவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
இதையடுத்து அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் பணிகளுக்கு சரியாக வருகிறார்களா? என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருந்த தலைமை மருத்துவரிடம் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாத காரணத்தினால் இங்கு வருகிறார்கள். அவர்களிடம் லஞ்சம் வாங்கக்கூடாது. அவர்களை நன்கு கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்து சென்றார்.
இதற்கிடையே லஞ்சம் பெற்ற தற்காலிக பெண் ஊழியரை மாவட்ட சுகாதாரத்துறை (நலப்பணிகள்) துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன் 'சஸ்பெண்டு' செய்து உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி இந்த லஞ்ச பணத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை அறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
- ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களில் நெடுஞ்சாலைரோந்து படை போலீசார் கண்காணிப்பு பணி
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். காலை, மாலை நேரங்களில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு உள்ளது .
குட்கா, கஞ்சா விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களில் நெடுஞ்சாலைரோந்து படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறு வோருக்கு அபராதம் விதிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் பணம் பெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கியதாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
- இது அவருக்கு இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன் (வயது 45). வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட போலீஸ் செக்போஸ்ட் அருகே குப்பை கிடந்தது. அதை சுத்தம் செய்யுமாறு துப்புரவு ஆய்வாளர் குருசாமியும், துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தன் என்பவரும் சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் வெங்கடேசனிடம் கூறியுள்ளார். ஆனால் கடைசிவரை அவர் துப்புரவு பணியாளர்களை வைத்து அந்த பகுதியை சுத்தம் செய்யவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் குருசாமியிடம் உடனடியாக சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அங்கு துப்புரவு பணியாளர் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. இந்நிலையில் வெங்கடேசன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. அதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- குரங்கு கடத்தல் கும்பலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவியதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- ஒரே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்குன்றம்:
செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அசோக். இவர் கடந்த வாரம் போலீஸ்காரர்க்ள வல்லரசு, மகேஷ், கிருஷ்ண மூர்த்தி ஆகியோருடன் பாடிய நல்லூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது ஆந்திராவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த கும்பல் அரிய வகையான உராங்குட்டான் குரங்கை வெளிநாட்டுக்கு கடத்த சென்னை விமான நிலையம் நோக்கி செல்வது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தல் கும்பலுடன் நடத்திய பேச்சுவார்தையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் உள்பட போலீசார் 4 பேரும் கடத்தல் கும்பலை அரிய வகை குரங்குடன் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் குரங்கு கடத்தல் கும்பலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவியதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, வாகன சோதனையின் போது உராங்குட்டான் குரங்கு கடத்தல் கும்பலிடம் பணத்தை பெற்று கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் அசோக் உள்பட 4 போலீசாரும் அவர்களை அங்கிருந்து தப்பி செல்ல அனுமதித்து இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குரங்கு கடத்தல் கும்பலுக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு,மகேஷ், கிருஷ்ண மூர்த்தி ஆகிய 4 பேரையும் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
ஒரே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போக்கு வரத்து ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- 4 பேரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் புறநகர் பேருந்துகள் என சுமார் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாள் ஒன்றுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து பணிமனையில் சம்பவத்தன்று போக்கு வரத்து ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது.
அவர்கள் சண்டை யிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மோதலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகி யுவராஜ், ஓட்டுனர் ராஜா உள்ளிட்ட 4 பேரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர்.