என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 232828"
- அக்னிபத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
- ராணுவத்தில் கூலியாக ஆட்களை சோ்ப்பது கண்டனத்துக்குரியதாகும்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் அக்னிபத் திட்ட ஆள்சோ்ப்பு முகாமுக்கு உள்ளாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட ரூ.36.50 லட்சத்தை மத்திய அரசு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்ட செயலாளா் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்திய நாட்டை பாதுகாக்கும் உயா்ந்த பணியைச் செய்யும் ராணுவத்தில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இந்தியாவில் பல கோடி இளைஞா்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத்தில் கூலியாக ஆட்களை சோ்ப்பது கண்டனத்துக்குரியதாகும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கும் மத்திய அரசு, இதற்கான நிதி ஒதுக்கீட்டைக்கூட தேசப் பாதுகாப்புக்கான நிதியில் இருந்து செலவிடாமல், நகா்ப்புற உள்ளாட்சிகளின் நிதியை ஒதுக்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் நடைபெற்றஅக்னிபத் ஆள் சோ்ப்பு முகாமுக்கான செலவுக்கு திருப்பூா் மாநகராட்சி ரூ.12 லட்சம், 6 நகராட்சிகள் தலா ரூ.3 லட்சம் வீதமும், 15 பேரூராட்சிகளில் 11 பேரூராட்சிகள் தலா ரூ. 50 ஆயிரம் வீதமும், 4 பேரூராட்சிகள் தலா ரூ.25 ஆயிரம் வீதமும் நிதி வழங்கியுள்ளன. ஏற்கெனவே மாநில அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டைக்கூட முழுமையாக வழங்காமல் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வளா்ச்சிப் பணிகளுக்கு நிதியில்லாமல் சிக்கித் தவிக்கிறது. ஆகவே, அக்னிபத் திட்டத்துக்காக உள்ளாட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட ரூ.36.50 லட்சத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவில் இருந்து தொடங்க உள்ளது.
- 17 ½ வயதில் இருந்து 22 வயது வரை உள்ள இளைஞர்கள் அக்னி பத் திட்டம் மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.
அனுப்பர்பாளையம் :
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அணைபுதூர் டீ-பப்ளிக் பள்ளியில் அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவில் இருந்து தொடங்க உள்ளது.
இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்ப பணி, கிளர்க்,ஸ்டோர் கீப்பர்உள்ளிட்ட பதவிகளுக்கு 17 ½ வயதில் இருந்து 22 வயது வரை உள்ள இளைஞர்கள் அக்னி பத் திட்டம் மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.
நாளை தொடங்கி வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் கோவை,ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல்,மதுரை,தேனி ,நீலகிரி,நாமக்கல்,தர்மபுரி கிருஷ்ணகிரி, சேலம் என 11 மாவட்டங்களில் இருந்து தினமும் 3 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அவிநாசி வட்டாட்சியர் ராஜேஷ் முகாம் இறுதி கட்டப்பணிகளை ஆய்வு செய்தார். முகாம் நடைபெறும் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- வெளி மாவட்டங்களில் இருந்து வந்த இளைஞர்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குவிந்தனர்
- செப்டம்பர் 1-ந் தேதி வரை ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த 36 ஆயிரம் இளைஞர்களுக்கு அழைப்பு அனுப்ப்பட்டு, தினமும் 3 ஆயிரம் பேர் தேர்வுக்கு அழைக்க ப்பட்டு உள்ளனர்.போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த தேர்வு நள்ளிரவில் மட்டுமே நடக்கிறது.
நேற்று முன்தினம் தொடங்கிய ஆட்கள் தேர்வு, இன்று ( திங்கட்கிழமை) 3-வது நாளாக நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்ப தற்காக வெளிமாவட்ட இளைஞர்கள் தினமும் ரெயில் மூலம் நாகர்கோவில் வருகின்றனர்.
அவர்கள் தேர்வு முகாமில் பங்கேற்று விட்டு மீண்டும் ரெயில் மூலம் ஊருக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.
இரவில் தேர்வில் பங்கேற்று விட்டு காலையில் ரெயில் நிலையம் வருபவர்களுக்கு இரவில் தான் ரெயில் உள்ளது என்பதால் அங்கேயே தங்கி ஓய்வு எடுக்கின்றனர்.
இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையம் கடந்த சில நாட்களாக களை கட்டி காணப்படுகிறது. செப்டம்பர் 1-ந் தேதி வரை ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.
- விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
- கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் (அக்னிபத்) நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவர்கள் தேர்விற்கு வரும்போது அசல் கல்விச்சான்று (8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு) மற்றும் அதன் நகல், கடந்த ஜூலை மாதத் தில் www.joinindianarmy.nic.in என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளபடி குறிப்பிட்ட படிவத்தில் தயார் செய்யப்பட்ட உறுதிமொழி பத்திரம் (அபிடவிட்) மற்றும் இதர ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும்.
மேலும் இது தொடர்பான முழு விவரங்களையும் www.joinindianarmy.nic.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகர்கோவிலில் இன்று நள்ளிரவு முதல் 12 நாட்கள் நடக்கிறது
- அண்ணா விளையாட்டரங்கத்தை வீரர்கள் 4 முறை சுற்றி வரவேண்டும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவு தொடங்குகிறது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், விருது நகர், காரைக்கால், பெரம் பலூர் உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளை ஞர்கள் பங்கேற்க உள்ள னர்.
இதற்காக ஆன்லைன் மூலமாக 36 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப் பித்ததாக கூறப்படுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. தினமும் 3000 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை, திருவனந்தபுரம், சென்னையிலிருந்து 140-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் ராணுவ உயர் அதிகாரிகளும் நேற்று இரவு வந்தனர். ராணுவ வீரர்கள் தேர்வு இன்று இரவு நடைபெறுவதையடுத்து இன்று காலையிலேயே பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் வர தொடங்கினார்கள்.
இதனால் வடசேரி பகுதி யில் காலை முதலே இளை ஞர்களின் கூட்டம் அதிக மாக இருந்தது. ராணு வத்திற்கு ஆள் சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு வருகை தரும் இளைஞர்கள் அமர வசதியாக மூன்று இடங்களில் பந்தல் அமைக் கப்பட்டு உள்ளது.
உழவர் சந்தை திடல், மாநகராட்சி புதிய அலு வலக கட்டிட வளாகம், அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து நீச்சல் குளத்திற்கு செல்லும் பகுதி ஆகிய பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வசதியாக குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இன்று தொடங்கும் ஆள் சேர்ப்பு முகாம்வருகிற 1-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு வசதியாகவும் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வின்போது அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கு வருபவர்களுக்கு உடல் தகுதி மேற்கொள் ளப்படும்.
மேலும் 1600 மீட்டர் தூரத்தை ஓடும் வகை யில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.நாகர்கோவில் அண்ணா விளை யாட்டரங்கத்தின் ஓடு தளம் 400 மீட்டர் நீளம் கொண்டதாகும்.இத னால் அண்ணா விளை யாட்டரங்கத்தை வீரர்கள் 4 முறை சுற்றி வரவேண்டும். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் ஆள் சேர்ப்பு முகாம் அதிகாலை வரை நடைபெறும்.
பின்னர் மறுநாள் நள்ளிரவு நடத்தப்படும். நள்ளிரவு ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதால் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடை பெறும் அண்ணா விளை யாட்டு அரங்கம் முன் பகுதியில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
- ஆகஸ்ட் 3 ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- ராணுவத்தில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேர்வதற்கான வயது, கல்வித் தகுதி மற்றும் பிற அளவுகோல்கள் பற்றிய விவரங்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
திருப்பூர் :
அக்னிபத் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு பணி அவினாசியில் செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கி உள்ளது .ஆகஸ்ட் 3 ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர் அவிநாசி அருகே உள்ள டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 20ந் தேதி முதல் அக்டோபர் 1ந் தேதி வரை ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் கோயம்புத்தூர், திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, மதுரை, நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அக்னிவீர் கிளார்க்-ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ராணுவத்தில் சேர்வதற்காக இந்த ஆள்சேர்ப்பு பணி நடத்தப்படுகிறது. ராணுவத்தில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேர்வதற்கான வயது, கல்வித் தகுதி மற்றும் பிற அளவுகோல்கள் பற்றிய விவரங்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அதிலேயே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் பதிவு கட்டாயம் என்றும் மற்றும் 14 ஆகஸ்டுக்கு பிறகு ஆன்லைனில் அட்மிட் கார்டு வழங்கப்படும். இந்த ஆள்சேர்ப்பு பணியை கோவையில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் நடத்துகிறது என்று கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- காங்கிரஸ் சார்பாக அக்னிபாத் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராமசாமி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி:
கீழப்பாவூர் நகர காங்கிரஸ் சார்பாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பழி வாங்கும் நோக்குடன் அமலாக்கத்துறை நடத்தி வருவதாகவும், அதனை கண்டித்தும், மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கீழப்பாவூர் சென்ட்ரல் பாங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி என்ற குமரேசன் தலைமையில், கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் ராஜசேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் இசக்கி ராஜ், கோடீஸ்வரன், வட்டார பொருளாளர் மாரிமுத்து, பாவூர்சத்திரம் நகர தலைவர் ஆனந்த், ராமராஜா, சிவசுப்ரமணியமுதலியார், சின்னராஜா, நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராமசாமி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் பொன்கணேசன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மதியழகன், வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் ஞானச்செல்வன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் பாக்கியராஜ்,ஆசீர்வாதம், சுப்பையா, பரமசிவன், தொண்டன் ராஜேந்திரன், சௌந்தரபாண்டியன், பரமசிவன், ராமசாமி நாடார், கணேசன், காளி தேவர், மாரியப்பன், பழநி, பெரியசாமி, செல்வன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர், முடிவில் வட்டார செயலாளர் குமார் பாண்டியன் நன்றி கூறினார்.
- போரா–ட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
- ரெயில் நிலையத்திற்குள் திடீரென நுழைந்து மாணவ, மாணவிகள் போ–ராட்டத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று இந்திய மாணவர் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் போ–ராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் 40க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்தின் பின்புற வழியாக ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை- நாகர்கோவில் ரெயில் முன்பாக மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.
ரெயில் நிலையத்திற்குள் திடீரென நுழைந்து மாணவ, மாணவிகள் போ–ராட்டத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சியடைந்த ரெயில்வே போலீசாரும், கோவை மாநகர போலீசாரும் போராட்ட–த்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய முயன்றனர்.
ஆனால் மாணவர்கள் கைது நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கவே போரா–ட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது அவர்களுக்கிடையே இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.
ரெயில் நிலைய வளாகத்தில் நடை–பாதையில் முழக்கங்கள் எழுப்பியபடி வந்த மாணவர்கள் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் முயற்சியே இந்த திட்டம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில் நிலையம் முன்பு திரண்ட அவர்கள் மத்திய அரசிற்கு எதிராகவும், அக்னிபத் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியபடி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினா்.
அப்போது போரா–ட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ரெயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், இந்திய மாணவர் சங்கத்தினரும் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்கள் காரணமாக கோவை ரெயில் நிலைய வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பில் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அவினாசி :
அவினாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பில் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் மற்றும் சிஐடியு.
விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் முத்துசாமி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சங்கராபுரத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- ஒன்றிய தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை கண்டித்து, கடைவீதி மும்முனை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். பாஸ்கர், பகத்சிங் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏழுமலை, தலைவர் பழனி, துணை செயலாளர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினர்.
- ரெயில் நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியது.
- பீகார் மாநிலம் சாப்ராவில் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் போராட்டம் தொடருகிறது.
புதிய ராணுவ ஆள்சேர்ப்பு கொள்கையான அக்னிபத் திட்டம் மீதான போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இன்று காலை ஒரு கும்பல் ரயில்களுக்கு தீ வைத்தது.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் பாஜக ஆளும் அரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் போராட்டம் பரவியுள்ளது.
பீகார் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் ரெயிலை தீவைத்து எரித்துள்ளனர். லக்கிசராய் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். நேற்று பீகார் மாநிலம் சாப்ராவில் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் போராட்டம் தொடருகிறது.
இதேபோல், உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் இன்று காலை ஒரு கும்பல் ரெயிலுக்கு தீ வைத்தது. மேலும், ரெயில் நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியது.
கிழக்கு உ.பி. மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்திற்கு வெளியே தெருக்களில் தடிகளை ஏந்திய மற்றொரு போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ரயில் நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பெஞ்சுகளை இளைஞர்கள் லத்திகளைக் கொண்டு உடைக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்