என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தன்னார்வலர்கள்"
- தமிழகம் முழுக்க 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.
- மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நிலையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடம் ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைக்க 2021 நவம்பரில் இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்கப்பட்டன.தமிழகம் முழுக்க 1.80 லட்சம் மையங்களில் 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.
இவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. மாலை நேர வகுப்பு மட்டுமல்லாமல், அரசுப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவிலும், தன்னார்வலர்கள் உறுப்பினராக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
இல்லம் தேடி கல்வி மைய ஆலோசகர் லெனின் பாரதி கூறுகையில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அறிவியல் கண்காட்சி, கற்பித்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றல், தனித்திறன் போட்டிகள் நடத்துதல், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு கல்விசார் பணிகள், தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஊதியத்தை 2 ஆயிரமாக உயர்த்தி தர ஆவண செய்ய வேண்டும் என்றார்.
- பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காங்கயம் :
காங்கயம் பழையகோட்டை சாலை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவருடைய தங்கை மகள் மனநலம் பாதிக்கப்பட்ட கலாமணி (33). வாடகை வீட்டில் வசித்து வந்த இருவரும் ஆதரவற்ற நிலையில் வறுமையின் கொடுமையால் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களை காங்கயம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் காங்கயம் போலீசார் அனுமதியுடன் 2 பெண்களின் உடல்களை காங்கயத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் காங்கயம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
- சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
- தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம், ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ஏப்ரல் 3 ம் தேதி பிளாஸ்டிக் விழிப்புணர்வை வலியுறுத்தி சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி சுமார் 350 கி.மீ., தூரம் ராமஜெயம்(வயது 70), ரங்கசாமி,(63), மகேஷ்(30), தரணி(19) ஆகிய 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் . தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், தங்கலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.சைக்கிள் பயணம் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், ஆறுமுகம், கதிர், திருமூர்த்தி மற்றும் தன்னார்வலர்கள், சித்தம்பலம் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.
- புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 150 கிராமங்களில் வோர்ட் தொண்டு நிறுவனம், டான்போஸ்கோ அன்பு இல்லத்தினர் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் மேம்பாடு-பாதுகாப்பு பணிகள், நூற்பாலைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.
நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, வோர்ட் மற்றும் தொன்போஸ்கோ நிறுவன செயல்பாட்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து, சிறந்த தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். இதில் நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கீதா, குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் அந்தோணி ஜெனிட், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், சி.எஸ்.சி. மேலாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் பேசினர். மாநாட்டில் தமிழ்நாடு அல்லியன்ஸ் நிறுவனர் பாலமுருகன், புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இதில் திட்ட ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அல்லியன்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிபிஜா, வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்ல பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வோர்ட் நிறுவன இயக்குனர் ரெனிடா சரளா வரவேற்றார். தொன்போஸ்கோ நிறுவன இயக்குனர் காஸ்மீர் ராஜ் நன்றி கூறினார்.
- நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.
- நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.
திருப்பூர்:
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் குறைதீர் கற்றல் பயிற்சி குறுவளமைய அளவில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. குறைதீர் கற்றல் பயிற்சிக்கு ஒவ்வொரு குறுவளமையத்துக்கு, நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும். இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் நாளை 15-ந் தேதி பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17ந் தேதி அன்று குறுவளமைய அளவில் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும். ஒரு பயிற்சியாளர் மற்றும் பயிற்றுனருக்கு நாள் ஒன்றுக்கு, 130 ரூபாய் வழங்கப்படும். தன்னார்வலர் அனைவருக்கும் பயணப்படி அவரவர் வங்கி கணக்கிற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 9 தாலுக்காவில் இருந்து 33 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
- பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு தன்னார்வலர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா 5-வது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சியில் தஞ்சாவூர் மாவட்ட த்தைச் சார்ந்த 9 தாலுக்காவில் இருந்து 33 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இப்பயிற்சி வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் தினசரி தமிழகத்தின் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு பேரிடர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி பேரிடர் கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் மாவட்ட பொருளாளர் பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் பயோகேர் முத்துக்குமார்,பேரிடர் கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பூங்கா மற்றும் திடல் பராமரிப்பு குறித்து தன்னார்வலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 183 பூங்கா உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பூங்கா மற்றும் திடல் பராமரிப்பு குறித்து தன்னார்வலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலையில் நடந்தது. மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் தனியார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 183 பூங்கா உள்ளது. இதில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பூங்கா உட்பட 18 பூங்காக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. பொது இடங்களில் உள்ள சில பூங்காக்கள், போக்குவரத்து ரவுண்டானா பூங்காக்களை சில தன்னார்வலர்கள், தனியார் நிறுவனத்தினர் பராமரித்து வருகின்றனர்.குடியிருப்பு பகுதிகள், கேட்டட் கம்யூனிட்டி பகுதிகளிலும் உள்ள பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள், குழந்தைகள் விளையாடும் வகையிலும், உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்தி உடல் நலன் பேணும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவற்றில், நமக்கு நாமே திட்டத்தில் உடற்பயிற்சிக்கான உபகரணங்கள் அமைக்கப்படும். ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை அணுகலாம் என்றார்.
- இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் 2 நாட்கள் நடந்தது.
- வட்டார கல்வி அலுவலர்கள் ஆஷா, ஜெசிந்தா தலைமை தாங்கினர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுவள மைய அளவில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் 2 நாட்கள் நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் ஆஷா, ஜெசிந்தா தலைமை தாங்கினர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ் ராஜ், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதாகர் முன்னிலை வகித்தனர். கற்றல், கற்பித்தல் உத்திகள், செயல்வழி கற்றல் முறைகள் மற்றும் தன்னார்வலர்கள் திறன் மேம்பாடு குறித்து கருத்தாளர்கள் ஆடம்சன், முனீஸ்வரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
- மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.
- பள்ளி முடிந்ததும் 2 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.
குடிமங்கலம் :
கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8-ம்வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. தன்னார்வலர்கள் மூலம், தினமும் பள்ளி முடிந்ததும் மாலை நேரத்தில், 2 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 255 மையங்கள் செயல்படுகின்றன.
ஒவ்வொரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர் கற்பித்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் குடியிருப்பு பகுதிக்கே நேரில் சென்று வகுப்பு எடுக்கப்படுவதால் மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு அடைகின்றனர்.தன்னார்வலர்களுக்கு அந்தந்த குறுவள மையங்களில் பயிற்சி துவங்கியுள்ளது. வருகிற 26-ந்தேதி வரை நடக்கும் பயிற்சியில் 1 முதல் 5 வகுப்புகளை கையாள்பவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் பயிற்சி வழங்கப்படுவதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் கரோலின் தெரிவித்தார்.
- இல்லம் தேடி கல்வி திட்ட பெண் தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சிவகாசி கோட்டாட்சியர் பிரிதிவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலராக இருப்பவர் சிவகாமி.
இவர் சமீபத்தில் தனது மையத்திற்கு வரும் மாணவர்களை அரசு நூலகத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள நடைமுறைகளை விளக்கியதுடன், அவர்களை உறுப்பினராகவும் சேர்த்தார்.
மேலும் மாணவர்களை பல்வேறு கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்தி, ஓய்வு நேரத்தை மாணவர்கள் பயனுள்ளதாக செலவு செய்ய ஆலோசனை வழங்கினார். இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தேரோட்ட முன்னேற்பாடு கூட்டத்திற்கு வருகை தந்த போது, தன்னார்வலர்கள் சிவகாமி மற்றும் லாவண்யாதேவியை ஆகியோரை அழைத்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இவர்களின் சிறந்த பணியை பாராட்டி, கலந்துரையாடி, ஊக்கம் அளித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சிவகாசி கோட்டாட்சியர் பிரிதிவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
- மழை, வெள்ள பாதிப்பு, பேரிடர் காலங்களில் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார்.
- பேரிடர் காலத்தில் பிறருக்கு எப்படியெல்லாம் உதவ முடியும் என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் மூலம் கூட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டது.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்புக்குழு கிராம அளவிலான அறிமுகக்கூட்டம் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். மெலட்டூர் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு, பேரிடர் காலங்களில் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும், பேரிடர் காலத்தில் பிறருக்கு எப்படியெல்லாம் உதவ முடியும் என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் கூட்டத்தில் எடுத்துரைத்தனர். கூட்டத்தில் மெலட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், இரும்புதலை ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி, கோவத்தகுடி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கருப்பையன் மற்றும் மெலட்டூரை சுற்றியுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல்து–றையினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வருவா ய்துறை மற்றும் பேரிடர் மீட்புத்துறையினர் செய்திருந்தனர்.
- வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும்.
- தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர்.
திருப்பூர் :
ஊரடங்கில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நிரப்ப இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்தது. திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 142 மையங்கள் திறக்க அரசு நிர்ணயித்தது. தற்போது வரை 7 ஆயிரத்து 255 மையங்கள் திறக்கப்பட்டு விட்டன. இதன்கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, பள்ளிகளின் நேரம் போக மாலை 5மணி முதல் 7மணி வரை தன்னார்வலர்கள் வழியே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர், வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் போன்ற கட்டுபாடுகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதங்களாக இவர்களில் பலர் பணியில் இருந்து விலகிவருகின்றனர். சுமார் 170க்கும் மேற்பட்ட மையங்களில் தன்னார்வலர்கள் இல்லை.
இது குறித்து தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், இத்திட்டம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக உள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், வறுமையில் உள்ளோருக்கு கூடுதல் வருவாய் அளிக்கிறது.அறிவுறுத்தியபடி தவறாமல் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறோம். இதற்கான சம்பளம் நாளுக்கு நாள் தாமதமாகி வருகிறது. கடந்த மார்ச் மாத சம்பளமே மே மாதம்தான் கிடைத்தது.இதன்காரணமாகவும் தன்னார்வலர் சிலர் விலகிவிட்டனர். கோடை விடுமுறையில் பயிற்சி நடக்கவில்லை. அதற்கு சம்பளம் வருமா என்பதும் தெரியவில்லை. வழங்குவது ஆயிரம் ரூபாய் என்றாலும் அதை காலம் தாழ்த்தாமல் வழங்கினால் நல்லது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.
இந்த மையங்களில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த, ரீடிங் மராத்தான் போட்டி ஜூன் 1-ந்தேதி துவங்கி 12-ந் தேதி வரை நடந்தது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் செல்போன் செயலி மூலம் மாணவர்களை குறிப்பிட்ட வார்த்தைகளை வாசிக்க வைக்க வேண்டும்.அதிக வார்த்தைகள் வாசித்ததன் அடிப்படையில் மாவட்டம், ஒன்றியம் வாரியாக ரேங்க் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் 6 கோடியே 82 லட்சம் சொற்களை சரியாக வாசித்து முதலிடம் பிடித்தது.திருப்பூரில்ஊத்துக்குளி வட்டாரம் 413 வட்டாரங்களில் மாநில அளவில் 92வது இடத்தில் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 974 செல்போன்களில் இருந்து 1.52 லட்சம் நிமிடங்களில் 76 லட்சம் சொற்கள் சரியாக வாசிக்கப்பட்டுள்ளன.ரீடிங் மராத்தானில் திருப்பூர் பின்தங்க தன்னார்வலர்கள் பற்றாக்குறையால் இல்லம் தேடி கல்வி செயல்பாடுகள் குறைந்ததும் முக்கிய காரணமாக இருக்கலாம்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர். தன்னார்வலர் சிலரின் தகவல்கள் முறையாக கல்வித்துறைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அவர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க தாமதிக்கிறது. தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் சரிசெய்யப்பட்டு விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்