என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண்ணிடம்"
- மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் வாழைநார் பயிற்சி வகுப்பிற்கு சென்றார்.
- 2 பேர் ராஜஸ்ரீயின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் ராஜஸ்ரீ (வயது 37). இவர் மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் வாழைநார் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ராஜஸ்ரீயின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து ராஜஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
- சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் 17-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி வசந்தா (65).
துணிக்கடை
இவர் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார். இதையடுத்து மூதாட்டி துண்டை எடுத்து அவரிடம் காண்பித்தக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்ச லிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து வசந்தா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இரவு வீட்டின் போர்டிகோவில் சரண்யா செல்போன் பேசிக்கொண்டு இருந்தார்.
- வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு முதுகில் குத்திவிட்டு ஓடிவிட்டார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி செரமிட்டாம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விசைத்தறி அதிபர். இவரது மனைவி சரண்யா (வயது 36).
கடந்த 14-ந் தேதி இரவு வீட்டின் போர்டிகோவில் சரண்யா செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த மகன் ஷர்ஷித் (12) சத்தம் போட்டு உள்ளான்.
முகமூடி கொள்ளையன்
சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்ற சரண்யாவை முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு முதுகில் குத்திவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து காயம் அடைந்த சரண்யாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து சரண்யா, திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிடிபட்டார்
இந்தநிலையில் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குமாரமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், நாமக்கல் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த பாண்டி என்கிற ராஜன் (வயது 38) என்பதும் செரமிட்டாம் பாளையம்புதூர் பகுதியில் சரண்யாவிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது.
25-க்கும் மேற்பட்ட வழக்குகள்
தொடர்ந்து அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. பாண்டி மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்துமே அடிதடி, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் ஆகும்.
இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சொகுசு வாழ்க்கை நடத்தினர்.
- பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் காப்பிகாடு பகுதியை சேர்ந்த டயானா என்ற பெண்ணிடம், 16½ பவுன் தங்க சங்கிலியை கடந்த 4-ந் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக மார்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த சாலையோரம் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.
அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் டயானாவிடம் நகை பறித்ததாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த செய்யது அலிகான் (வயது 24), அப்துல் ராசிக்(29) ஆகியோரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பல் தலைவனாக சேக்ஜாமான் மைதீன் என்பவர் செயல்பட்டதும் இந்தக் கும்பல் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள சேக்ஜாமான் மைதீனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள், அதில் கிடைக்கும் பணத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று சொகுசாக வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர், விஜயாவிடம் பொருட்கள் கேட்டுள்ளார்.
- அவர் அதை எடுக்க திரும்பியபோது விஜயா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.
சேலம்:
சேலம் மாமாங்கம் அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இவரது மனைவி விஜயா (வயது 53), மாளிகை கடை வியாபாரத்தை பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர், விஜயாவிடம் பொருட்கள் கேட்டுள்ளார்.
அவர் அதை எடுக்க திரும்பியபோது விஜயா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து விஜயா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டிவி காமிராவை ஆய்வு செய்தனர். அதில், வாலிபரின் மோட்டார் சைக்கிள் எண் பதிவாகி இருந்தது.
அதனை வைத்து விசாரித்தபோது, அந்த மோட்டார் சைக்கிள் ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த விஜயகுமாருடையது என்பதும், அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என ஏற்கனவே பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதும் தெரியவந்தது.
விஜயகுமாரின் மோட்டார் சைக்கிளை திருடி வந்த அந்த வாலிபர், விஜயாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல வந்து கொண்டிருந்தார்.
- 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள ஓட்டேரி பாளையத்தை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி சத்யா( வயது 29.) இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ந் தேதி தனது ஸ்கூட்டியில் ஓட்டேரிபாளையத்தில் இருந்து செஞ்சி நோக்கி தனது தோழியின் மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல வந்து கொண்டிருந்தார். குண்டலப்புலியூர் அருகே வரும்போது அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்2 பேர் சத்யா கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து சத்யா கொடுத்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை எடுத்து செஞ்சி டி.எஸ்.பி. கவினா தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. அந்த அடையாளத்தை வைத்து நகை பறித்த வாலிபர்களான திருவண்ணாமலையை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் முபாரக் (வயது 30) மற்றும் சாகித் அலி மகன் பாரூக் அப்துல்லா (வயது 23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- 17 வயது சிறுவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 58).
இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகள் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நெல்லை டவுனை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவனுக்கு நகை திருட்டு வழக்கில் தொடர்பு தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அய்யப்பனையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கைது செய்யப்பட்ட அய்யப்பனிடம் விசாரணை நடத்திய போது, அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அய்யப்பனின் தாயார் வீடு ஆசாரிபள்ளத்தில் உள்ளது. அவர் அடிக்கடி இங்கு வந்து சென்றுள்ளார். சம்பவத் தத்தன்று வந்தபோது செலவுக்கு பணம் தேவைப்பட்ட தால் வசந்தா வின் நகையை பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவருக்கும் குமரி மாவட்டத்தில் வேறு வழக்குகளில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார்.
- மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார். மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, கயிற்றில் கட்டி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீசார், அங்கு வந்து மர்ம நபரை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் சிறுவாச்சூரை சேர்ந்த முத்துக்கண்ணன (வயது 57) என தெரியவந்தது. இதேபோல் வேறு எங்கெல்லாம் திருடி உள்ளார் ? என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை வாங்கி தருவதாக கூறி சரஸ்வதியுடம் மோசடி ெசய்தது தெரிய வந்தது.
- இது குறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.
பவானி:
பவானி மேற்கு தெரு 3-வது வீதிைய சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சரஸ்வதி. பவானி கீரைக்கார வீதியை சேர்ந்தவர் முகமது. இவரது மகன் சலீம் (28).
இந்த நிலையில் சலீம், சரஸ்வதியிடம் ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதவி அலுவலர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இைதயடுத்து சலீம் பல மாதங்களாகியும் வேலை வாங்கி தரவில்லை எனவும், சரஸ்வதி, சலீமிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டும் அவர் கொடுக்க வில்லை என சரஸ்வதி புகார் கூறினார்.
இது குறித்து சரஸ்வதி பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். இதில் சலீம் ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதவி அலுவலர் பணி வேலை வாங்கி தருவதாக கூறி சரஸ்வதியுடம் மோசடி ெசய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மோசடி செய்த குற்றத்தி ற்காக சலீமை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ேபாலீசார் பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
- சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.
- விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை கருப்புசாமி என்பவர் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.
சென்னிமலை:
சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ள கிராமம் எம்.பி.என்.புரம் நெசவாளர் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய மகன் கவின் குமார்.
கடந்த 3 மாத்திற்கு முன்பு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.
இதனையடுத்து 1½ பவுன் தங்க செயின் திருட்டு போனதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் என்றும் இச்சம்பவம் குறித்து கவின்குமார் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கருப்புசாமி (35) என்பவர் இந்த பெண்ணிடம் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.
போலீசார் அவரை கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- குருமூர்த்தி திடீரென ஜீவிதாவின் கழுத்தை பிடித்து கத்தியை காட்டி காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலை பறித்து கொண்டார்.
- இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி சாரணர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜீவிதா (28). மணிகண்டன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மணிகண்டன் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். ஜீவிதா வீட்டில் குழந்தைகளுடன் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு திங்களூர் ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த உறவினர் குருமூர்த்தி (32) என்பவர் திடீரென வந்தார்.
பின்னர் குருமூர்த்தி திடீரென ஜீவிதாவின் கழுத்தை பிடித்து கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி ஜீவிதாவை கீழே தள்ளி விட்டு காலால் எட்டி உதைத்து அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலை பறித்து கொண்டார்.
வலி தாங்க முடியாமல் ஜீவிதா அலற அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அவர்களையும் குருமூர்த்தி தாக்கினார். இதைனயடுத்து பொது மக்கள் ஒன்று சேர்ந்து குர்மூர்த்தியை மடக்கி பிடித்தனர்.
பின்னர் குருமூர்த்தியை பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர்.
- கடந்த சில நாட்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பஸ் நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவருகிறது.
- பஸ் நிலையத்தில் குடிமகன்களால் தினம் தினம் பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தாளவாடி:
தாளவாடி மலைப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.இப்பகுதி மக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர், ஆகிய பகுதிகளுக்குச் செல்ல தாளவாடி பஸ் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும்.
இதனால் தாளவாடி பஸ் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பஸ் நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவருகிறது.
அதேபோல் காலை பஸ் நிலையத்தில் ஆண்கள் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்பொழுது அங்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடியே பஸ் நிலையத்தில் நுழைந்தார்.
அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது தள்ளாடியபடி விழுந்து தகாத வார்த்தையில் பேசினார்.
பின்னர் அங்கு நின்று இருந்த பெண்ணிடம் தகராறு செய்தார். இதை பார்த்த வயதான மூதாட்டி ஒருவர் குச்சியை எடுத்து அவரை விரட்டினார். ஆனால் போதையில் தள்ளாடியபடியே இருந்தார்.
ஆனால் அங்கு இருந்த மற்றவர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவே இல்லை.
பஸ் நிலையத்தில் குடிமகன்களால் தினம் தினம் பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்