search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233552"

    • நாளை சந்திரபிரபை, 27-ந்தேதி பூத வாகனம் நடைபெற உள்ளது.
    • வருகிற 5-ந் தேதி ஏழூர் கண்ணாடி பல்லக்கில் உள்ள இறைவனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் கரந்தை சன்னதி தெருவில் புகழ்பெற்ற கருணாசாமி கோவில் அமைந்துள்ளது.

    வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் வசிஷ்டே ஸ்வரர் கோவில் எனவும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

    இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்றும், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி என்றும், திருபுரசுந்தரி என்றும் அழைப்பது உண்டு.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு விழா தொடங்கியது.

    இவ்விழா வருகின்ற ஜூன் 5-ம்தேதி வரை நடக்கிறது.

    விழாவில் இன்று சூரிய பிரபை நடைபெற்றது.

    நாளை சந்திரபிரபை, 27-ம்தேதி பூத வாகனம், 28-ம்தேதி ரிஷப வாகனம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 29-ம்தேதி யானை வாகனம், 30-ம்தேதி கைலாச வாகனம், 31-ம்தேதி குதிரை வாகனம், ஜுன் 1-ம்தேதி திருத்தேர், 2-ம்தேதி காலை வைகாசி தீர்த்தவாரி, மாலை பந்தற்காட்சி, 3-ம்தேதி காலை பிக்ஷாண்டவர், 4-ம்தேதி காலை 5 மணிக்கு சப்தஸ்தான விழா ஏமூர் கண்ணாடி பல்லக்கு புறப்படுதல், 5-ம் தேதி இரவு 7 மணிக்கு ஏழூர் கண்ணாடி பல்லக்கில் உள்ள இறைவனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன், கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றார்கள்.

    • விழாவையொட்டி கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும் நடைபெற்றது.
    • 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பு கலூரில் அக்னீசுவரசாமி கோவில் உள்ளது. தேவார ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் இந்த கோவிலில் தான் ஐக்கியமானார்.

    ஆதலால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் அப்பர் ஐக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு அப்பர் ஐக்கிய திருவிழா 10 நாட்கள் நடை பெற்றது.

    விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும், 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதைதொடர்ந்து இரவு நடைபெற்ற திருமுறை கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமை தாங்கினார்.

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் காரைக்கால் முனைவர் ராஜேஸ்வரன், திருவாரூர் புலவர் விவேகா னந்தன், கவிஞர் நாகை நாகராஜன், புலவர் நாகை வேம்புமாலா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

    இதை த்தொடர்ந்து நேற்று அதிகாலை அப்பர் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சித்திரை மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
    • அனுமார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

    இந்த நிலையில் சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    மூலை அனுமார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    • மதுரைக்கு பவளக்கனிவாய் பெருமாள்-சுப்பிரமணியசுவாமி இன்று புறப்பாடாகிறார்கள்.
    • மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுப்ப தற்காக பவளக்கனிவாய் பெருமாளும் உடன் செல்கிறார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை சித்திரை திருவிழாவையொட்டி நாளை (2-ந் தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. பெற்றோர் திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் இன்று மாலை 5 மணிய ளவில் மதுரைக்கு புறப்பாடாகிறார்கள்.

    அவர்களுடன் மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுப்ப தற்காக பவளக்கனிவாய் பெருமாளும் உடன் செல்கிறார்.

    மதுரை செல்லும் சுப்பிரமணிய சுவாமி வருகிற 4-ந் தேதி வரை ஆவணி மூல வீதிகளில் தெய்வானையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    5-ந் தேதி மாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் வந்தடைவார். அவருடன் பூ பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தடைவார்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணத்தில் பங்கேற்க வருகிற 1-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகன்-தெய்வானை புறப்பாடாகின்றனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    மதுரை

    அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மற்றும் புட்டு திருவிழா ஆகிய 2 விழாக்களுக்கு சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் மதுரைக்கு செல்வது வழக்கம்.

    மதுரையில் சித்திரைத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் 1-ந்தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு செல்கிறார்.

    இந்த திருமணத்தில் மீனாட்சி அம்மனை சொக்க நாதருக்கு தாரைவாத்துக் கொடுப்பதற்காக திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாளும் மதுரைக்கு செல்கிறார். மறுநாள் 2-ந்தேதி திருமண வைபவத்தில் பங்கேற்கும் சுவாமிகள் மே 5-ந்தேதி வரை மதுரையில் தங்கியிருந்து ஆவணி வீதி பகுதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். 5-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை, பவளக்கனி வாய் பெருமாள் ஆகியோர் இருப்பிடம் சேருகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • சிறப்பு மலர் அலங்காரத்தில் நான்கு ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அய்யங்க டைத் தெருவில் அமை ந்துள்ள பஜார் ராமர் கோவிலில் இராம நவமியை முன்னிட்டு சீதா தேவி சமேதராக இராமபிரான் பட்டாபிஷேகம் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ராமாபிராண் அருகில் லெட்சுமணன், பரதன், சத்ருகன் மற்றும் அனுமன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

    இதேபோல் தஞ்சாவூர் மேலவீதி விஜய ராமர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் நான்கு ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    • தொடர்ந்து, 8-ந்தேதி காலை அரசலாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் வருகிற 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு 4-ந்தேதி காலை வள்ளி தேவசேனா, சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு வெள்ளி ரதத்தில் வீதி உலா மற்றும் நாட்டிய குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, 6-ந்தேதி இரவு விக்னேஸ்வர பூஜையும், 7-ந் தேதி காலை வள்ளி தேவசேனா, சண்முக பெருமாள், வேடமூர்த்தி, வள்ளிநாயகி நாரதர், நம்பிராஜன், நந்தமோகினி உற்சவ மண்டபம் எழுந்தருளுகின்றனர்.

    8-ந்தேதி காலை அரச லாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி, அளவந்திபுரம் நடுத்தெருவில் இருந்து சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், சண்முக பெருமாள், வள்ளிநாயகியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து, 9, 10 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சியும், 11-ந்தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், வள்ளிதேவசேனா, சண்மு கசாமிபுறப்படுதல், வேடமூர்த்தி, வள்ளிநா யகியார் பல்லக்கில் வீதி உலா காட்சி நடைபெறுகிறது.

    பின்னர், 12-ந்தேதி காலை சண்முக பெருமாளுக்கு 108 சங்காபிஷேகமும், இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 13 முதல் 18 வரை 45 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.
    • தண்டவாளம் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்சூர், இடப்பள்ளி, மாவேலிக்கரா மற்றும் கருநாகப்பள்ளி ரெயில் நிலைய எல்லைகளிலும், மாவேலிகரா-செங்கனூர் மற்றும் சாஸ்தான் கோட்டா கருநாகப்பள்ளி பிரிவு களிலும் தண்டவாளம் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது. ரெயில் எண்: 16382 கன்னியாகுமரி-புனே சந்திப்பு தினசரி எக்ஸ் பிரஸ் அக்டோபர் 18, 21,24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (4 நாட்கள்) கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவது காயங்குளம் சந்திப்பு மற்றும் ஆலப்புழா வழியாக எர்ணாகுளம் சந் திப்பு செல்லும். இந்த ரெயில் மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் நிறுத்தத்தைத் தவிர்க்கும்.

    அம்பலப்புழா, ஹரிபாட், ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் தற்காலிக நிறுத்தம் வழங்கப்படும்.

    ரெயில் எண்:16382 கன்னியாகுமரி-புனே சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படுவது அக்டோபர் 15 முதல் 21 வரை (7 நாட்கள்) கன்னியாகுமரியில் இருந்து காலை 09.40 மணிக்கு (1 மணி நேரம் தாமதமாக) புறப்படும்.

    ரெயில் எண்:16127 சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 13 முதல் 18 வரை (6 நாட்கள்) வழித்தடத்தில் 45 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்கும் நிகழ்வு
    • வழிநெடுக பக்தர்கள் வரவேற்பு

    நாகர்கோவில்:

    தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநக ராக, குமரி மாவட்டம் பத்மநாபபுரம் இருந்தபோது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது. பின்னர், தென் திருவிதாங்கூர் தலைநகர் திருவனந்த புரத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்த நவராத்திரி விழாவும், திருவ னந்தபுரம் அரண்மனைக்கு மாறியது.

    இதற்காக ஆண்டுதோ றும் குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசுவாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சாமி விக்ரகங்கள் திருவனந்தபு ரம் சென்று வருவது காலந் தொட்டு நடந்து வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி விக்ரகங்கள் வரும் 23-ந் தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன.

    இந்த விழாவில் பங்கேற்க நாளை (22-ந் தேதி) சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம் மன் விக்ரகம் பத்மநாபபு ரம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது வரும் 23-ந் தேதி காலையில் வேளிமலை குமாரசுவாமி விக்ரகம் பதம நாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும்.

    பின்னர் அங்கிருந்து கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் விக்ரகங்கள் பவனி தொடங்கும் முன்ன தாக பவனியின் முன்னே கொண்டு செல்லும் மன்ன ரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில் வரும் 23-ந் தேதி காலை 7.30-க்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக, கேரள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    உடைவாள் கைமாறியதும் அரண்மனை தேவாரக்கெட்டு வந்தடையும் சரஸ்வதியம்மன் ஆலயம் கொண்டுவரப்பட்டு பூஜை கள் செய்யப்படும். அங்கி ருந்து அரண்மனை தேவா ரக்கட்டு சரஸ்வதி தேவி யானை மீது அமர, பல்லக்கில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை வேளிமலை முருகன் ஆகியோர் வீற்றிருக்க பெண் களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும்.

    இந்த பவனி வரும் 25-ந் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங்கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட்டைக்ககம் நவராத் திரி மண்டபத்திலும், வேளி மலைமுருகன் ஆரியசாலை கோவி லிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவிலும் வைத்து பூஜைகள் செய்யப்படும். பின்னர் விஜ யதசமி முடிந்து அங்கிருந்து விக்ரகங்கள் பவனியாக புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தடையும்.

    நாளை (22-ந் தேதி) காலை சுசீந்திரம முன்னுதித்த நங்கையம்மன் பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. தமிழக போலீசார்துப்பாக்கி அணிவ குப்பு மரியாதையுடன், அம் மன் புறப்பாடு நடைபெறும். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் வழி நெடுக மக்கள் வரவேற்பு அளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரியமுறைப்படி சுவாமி விக்ரகங்களுக்கு பக்தர்கள் வழி நெடுக வரவேற்பு அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அறநிலையத்துறை அதிகா ரிகள் செய்துள்ளனர்.

    • தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
    • நவராத்திரி விழா பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது.

    கன்னியாகுமரி:

    தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்த போது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது.

    பின்னர் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது சில ஆண்டுகள் மட்டுமே இங்கு விழா நடந்தது. பின்னர் விழா திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது. இதற்காக குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம்சென்று வருவது காலந்தொட்டு நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி சுவாமி விக்ரகங்கள் 23-ந்தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன. விழாவில் பங்கேற்க 22-ந்தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்து சேர்கிறது. 23-ந்தேதி காலையில் வேளிமலை குமாரசாமி பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும்.

    பின்னர் அங்கிருந்து பவனி கேரள போலீசாரின் அணி வகுப்பு மரியாதையு டன் தொடங்கும்.முன்ன தாக பவனியின் முன்னே கொண்டு செல் லும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்ம னையில் உள்ள உப்பரிகை மாளிகையில் 23-ந்தேதி 7.30 முதல் 8.30-க்குள் நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்நுட்பத்துறை தகவல் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தமிழக கேரள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    உடைவாள் கைமாறிய தும் அரண்மனை தேவா ரக்கட்டு சரஸ்வதியம் மன் ஆலயம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய் யப்படும். அங்கிருந்து அரண் மனை தேவாரக்கட்டு சரஸ் வதிதேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளி மலை முருகன் ஆகியோர் வீற்றிருக்க பெண்களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும். இந்த பவனி

    அக்.25-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங் கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட் டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளி மலைமுருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவி லிலும் பங்கேற்ககின்றனர்.

    பின்னர் விஜயதசமிக்கு முடிந்து நல்லிருப்பை அடுத்து அங்கிருந்து விக்ரகங்கள் பவனியாக புறப்பட்டு பத்மனாபபுரம் வந்தடையும்.

    • வெண்ணாற்றங்களை ஸ்ரீநரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
    • வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சனசபா இணைந்து நடத்தும் 88-ம் ஆண்டு 24 கருட சேவை நாளையும் (19-ந் தேதி), 15 நவநீத சேவை நாளை மறுநாளும் (20-ந் தேதி) தஞ்சையின் 4 ராஜவீதிகளில் நடைபெற உள்ளது.

    இதற்கான உற்சவர்கள் இன்று மதியம் 12 மணிக்கு மேல் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக வெண்ணாற்றங்களை ஸ்ரீநரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.

    நாளை காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 12 மணி வரை தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கீழராஜவீதி, தெற்குவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி ஆகிய 4 ராஜவீதிகளில் சேவை உற்சவம் நடைபெற உள்ளது.நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து நவநீத சேவையில் புறப்பட்டு காலை 7.30 மணி முதல் 11 மணி வரை சேவையில் மேற்கூறிய 4 ராஜவீதிகளில் உற்சவம் நடைபெறுகிறது.

    21-ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் சனனதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதனை தவிர நாளை மதியம் 3 மணிக்கு ராஜராஜ சமய சங்கத்தில் திருவாய்மொழி தொடக்கமும், 20-ம் தேதி இரவு 8 மணிக்கு சாற்றுமுறை உற்சவமும் நடைபெறுகிறது.ததியாராதனைகள் மேலவீதி கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி அருகில் சக்காநாயக்கன் தெருவில் உள்ள ராஜராஜ சமய சங்கத்தில் நடைபெற உள்ளது.

    இந்த உற்சவங்களில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பெருமாளை சேவித்து பயன்பெறவும், உற்சவ விவரங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கும்படியும் விழா அமைப்பாளர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.இந்த 24 கருட சேவையும், 15 நவநீத சேவையும் கடந்த பல ஆண்டுகளாக தஞ்சையில் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×