search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் ஜோ பைடன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
    • இஸ்ரேல், பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றார்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது.

    காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் மும்முனை தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு இஸ்ரேல் பிரதமருடன் பேச்சு நடத்தினார்.

    இந்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இஸ்ரேல் போர் தொடர்பாக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    இஸ்ரேல் போரில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும். இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. காசாவில் உள்ள அப்பாவி மக்கள் குடிதண்ணீர், மருந்து இல்லாமல் தவிப்பது தெரிய வந்துள்ளது.

    மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு இஸ்ரேல் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். உடனடியாக காசா மக்களுக்கு குடிதண்ணீரை வழங்கும்படி இஸ்ரேலுக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

    ஆயுதம் ஏந்திப் போராடும் ஹமாஸ் படையினரை முழுமையாக ஒடுக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஹமாஸ் படையினர் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். அதற்காக காசாவை ஆக்கிரமித்து அந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று இஸ்ரேல் நினைப்பது சரியல்ல.

    இஸ்ரேலில் தரைவழி தாக்குதல் மிகப்பெரிய தவறாக முடிந்துவிடும். அந்த தவறை இஸ்ரேல் செய்யாது என்று நம்புகிறேன். காசா பகுதி முழுக்க முழுக்க பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். அதில் அமெரிக்கா தெளிவான கொள்கை முடிவுடன் இருக்கிறது.

    காசாவில் உள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால் அருகில் உள்ள நாடுகளுக்கு இடம்பெயர உதவி செய்யவேண்டும். காசா வடக்கு பகுதி மக்கள் எகிப்து நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

    அவர்களை எகிப்து நாடு அரவணைத்து உதவவேண்டும். இதற்காக நாங்கள் எகிப்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். காசாவில் உள்ள பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும்.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள போரை தொடர்ந்து அமெரிக்கா அந்தப் பகுதிக்கு மேலும் ஒரு கப்பலை அனுப்பி இருக்கிறது. இந்தப் போரில் இதுவரை 30 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

    என்றாலும் இந்தப் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட விரும்பவில்லை. அதற்கான காரணமும் இல்லை. இஸ்ரேலுக்கு கூடுதல் உதவிகள் செய்ய அமெரிக்காவில் கோரிக்கை எழுந்துள்ளது. அதுபற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.
    • வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21-ம் தேதி அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெள்ளை மாளிகை வந்தார். அவரை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

    இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார்.
    • வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21ம் தேதி அமெரிக்கா வருகிறார். வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்கிறார். அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க அதிபர் பைடனின் பாதுகாப்பு வாகன ஓட்டுநர் விதிமீறலில் ஈடுபட்டார்.
    • இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    இதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துகொண்டார். அவரின் பாதுகாப்பு வாகனங்களில் ஒரு கார் நேராக தாஜ் ஓட்டலுக்குள் நுழைந்துள்ளது.

    அந்த ஓட்டலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹியான் தங்கியிருந்துள்ளார். அந்தக் காரில் பல்வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. உஷாரான பாதுகாப்பு அதிகாரிகள் கார் ஓட்டுநரை பிடித்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது, கார் ஓட்டுநர் அவர்களிடம், ஜோ பைடன் தங்கியுள்ள ஐ.டி.சி. மவுரியாவுக்குச் செல்லவேண்டும் என கூறியுள்ளார். எனினும், தாஜ் ஓட்டலில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் இருந்து ஏற்றிச்சென்ற தொழில் அதிபரை திருப்பிக் கொண்டு வந்து விடவேண்டி இருந்தது. அதற்காக தாஜ் ஓட்டலுக்கு வந்தேன் என தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி நிரல் பற்றி அறிந்திருக்கவில்லை எனவும் கூறினார். விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் அவரை விடுவித்தனர்.

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தடைந்தார்.
    • டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது. இதனிடையே, ஜி20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.

    ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    இதுதொடர்பாக, அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதம மந்திரி, உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. வரலாற்றில் எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் அமெரிக்கா, இந்தியா கூட்டாண்மை வலுவானது, நெருக்கமானது மற்றும் ஆற்றல்மிக்கது என்பதை உறுதிப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
    • இரு நாடுகளிடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றார்.

    வாஷிங்டன்:

    ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா நிச்சயம் ஆதரவளிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    • உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.
    • பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி இடையே பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

    ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர். இதேபோன்று, அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்தது.

     

    இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். அவருடன் உயர் அதிகாரிகளும் அதிபர் பைடனை வரவேற்றனர்.

    புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு செல்கிறார். பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற இருக்கிறது. இன்றைய சந்திப்பைத் தொடா்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா புறப்பட்டார்.
    • அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

    வாஷிங்டன்:

    ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.

    இதற்கிடையே, அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்தது.

    இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடன் இடையேயான இரு தரப்பு பேச்சுவாா்த்தை 8-ம் தேதி நடக்கிறது.

    தொடா்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் அவா் பங்கேற்க உள்ளார்.

    • ஜி20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் புதுடெல்லி பிரகதி மைதானத்தில் நடக்க உள்ளது.
    • ஜி20 மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஜி20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இசைந்துள்ளனர்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7-ம் தேதி இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனவே அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், இன்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் ஜோ பைடனுக்கு இரு தினங்களாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. இதையடுத்து, திட்டமிட்டபடி அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்கிறார். அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு நட்புறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார் என தெரிவித்துள்ளது.

    • டெல்லியில் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
    • ஜி20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வாஷிங்டன்:

    ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது.

    ஜி 20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ம் தேதி இந்தியா வரவுள்ளார் என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

    மேலும், அதிபர் பைடன் மற்றும் ஜி 20 தலைவர்கள் உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிப்பார்கள். சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    ஜோபைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர்.
    • ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலானது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்று மவுயி தீவு. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 12,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்தனர். வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

    இந்நிலையில், ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பெரிய பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தை அனுப்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

    • விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.
    • அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க வந்தார். அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். உடனே பேச எழுந்த பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.

    உடனே அருகிலிருந்த விமானப்படை வீரர்கள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதன்பின், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    விழா மேடையில் போடப்பட்டிருந்த மணல் மூட்டை ஒன்றை மிதித்தபோது கால் தடுமாறி அதிபர் ஜோ பைடன் கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விழாவில் அதிபர் ஜோ பைடன் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளித்ததுடன், கைகுலுக்கி பாராட்டும் தெரிவித்தார்.

    ×