search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234243"

    • சரவணன் (வயது 37) விவசாயி குடிசை‌ வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
    • இந்நிலையில் நேற்று இரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே மாணிக்கநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 37) விவசாயி.

    இவர் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்த மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க தொடங்கினர்.

    மேலும் இது குறித்து நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் குடிசை வீட்டில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பீரோ, மின்விசிறி, கிரைண்டர், மிக்சி மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், ரொக்கம் ரூ.25 ஆயிரம், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமானது.

    மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. தீ விபத்து குறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அருகே உள்ள வீடுகளுக்கு தீ பரவி பொருட்கள் எரிந்து நாசம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் மேல் மிட்டாளம் பகுதியில் வீடுகளுக்கு அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது.

    நேற்று இரவு அந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. இதனால் அருகே உள்ள வீடுகளில் தீப்பிடித்து மள மளவென எறிய தொடங்கியது.

    பின்னர் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் வீட்டின் மாடியில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. பின்னர் இது குறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சென்னையில் இருந்து வாணியம்பாடியில் உள்ள கடைகளுக்கு அரிசி பருப்பு, நெய் மளிகை பொருட்கள் சைக்கிள் உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு லாரி ஒன்று வேலூர் வழியாக சென்றது.

    லாரியை ஆம்பூரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஓட்டி வந்தார். இன்று காலை வேலூர் அடுத்த கொணவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது லாரியின் பின்பகுதியில் லேசான புகை வந்தது.

    லாரியின் பின்னால் வந்த அரசு பஸ் டிரைவர் இதனைக் கண்டு உடனடியாக லாரி டிரைவருக்கு தகவல் தெரிவித்தார். லாரி சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது. அதற்குள் தீ மளமளவென லாரி முழுவதும் பரவி பற்றி எரிய தொடங்கியது.

    இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வேலூர் தீயணைப்பு நிலையத்தில் வாகனங்கள் இல்லாததால் காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் லாரியில் இருந்த ரூ 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுதும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்த்து அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

    தீ விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.
    • இந்த மாதத்தில் மட்டும் 3-வது முறையாக தீ விபத்து நடந்துள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் உள்ள கணுவாய் அருகே வனப்பகுதியை ஒட்டிய காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீப்பிடித்த பகுதிகளில் தண்ணீரை பீய்சி அடித்தும்,

    தீயணைப்பு வண்டி செல்ல இயலாத பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நடந்து சென்று இலை, தழைகளை பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அந்த பகுதியில் யாரோ பீடி, சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு வீசிய நெருப்பால் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த காப்புக்காடு பகுதியில் இந்த மாதத்தில் மட்டும் 3-வது முறையாக தீ விபத்து நடந்துள்ளது.

    வனத்துறையினர் இந்த பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்றும், காப்புக்காடு பகுதியில் விழிப்புணர்வு போர்டு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடீரென கருப்பு தோட்டத்தில் தீப்பிடித்து கரும்புகள் எரிந்து கொண்டு இருந்தன.
    • தீயணைப்பு வீரர்கள் உடனே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த அய்யகவுண்டன் பாளையம் அருகே உள்ள சாணங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அன்னக்கொடி (47). விவசாயி. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.

    இந்நிலையில் திடீரென கருப்பு தோட்டத்தில் தீப்பிடித்து கரும்புகள் எரிந்து கொண்டு இருந்தன. இதனைக்கண்ட அன்னக்கொடி பதறி அடித்து அக்கம் பக்கத்தினரை அழைத்து சத்தமிட்டார்.

    அதற்குள் தீ மள மள கரும்புத் தோட்டத்தில் பரவியது. தீப்பிடித்த சம்பவம் குறித்து உடனே அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் லெமர் தம்பையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கரும்பு தோட்டத்திற்கு மேல் சென்ற மின் கம்பிகள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் தீயில் 3½ ஏக்கர் கரும்பு எரிந்து சேதமானதுடன் தண்ணீர் பைப்புகளும் தீயில் கருகி போனது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    • குளத்துப்பாளையத்தில் தேசிய மையமாகப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.
    • மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது தெரிய வந்தது.

    தாராபுரம் :

    தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையத்தில் தேசிய மையமாகப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள் நேற்று வழக்கு போல் பணியை முடித்து வங்கியை மூடிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வங்கியில் இருந்து கரும்புகள் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வங்கியின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது வங்கியின் மேலாளர் அறையில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தி அணைத்தனர். இருந்த போதிலும் மேலாளர் அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது.

    தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பல பல லட்சம் நகை, பணம் தப்பியது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தின போது மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது தெரிய வந்தது.

    • மின்கசிவால் குளிர்சாதன பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • ெபரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

    கரூர்

    கரூர் திருமாநிலையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் நேற்று மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இந்தநிலையில் வீட்டின் உள்பகுதியில் கரும்புகை வந்துள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், ஈஸ்வரனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டினுள் இருந்த குளிர்சாதனை பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் ெபரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

    • பழனி அருகே காகித ஆலையில் பழைய பேப்பர்கள் வைத்திருந்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • இதில் பல கோடி மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமாயின

    பழனி:

    பழனி அருகே உள்ள சாமிநாதபுரத்தில் தனியார் காகித ஆலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். காகித உற்பத்திக்காக ஆலை வளாகத்தில் பழைய பேப்பர்கள் டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில் நேற்று பழைய பேப்பர்கள் வைத்திருந்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை. அடுத்தடுத்து மற்ற பேப்பர் வைத்திருந்த பகுதிகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து உடனடியாக ஆலய நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. எனினும் அங்கு இருந்த பல டன் பழைய பேப்பர்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆலை நிர்வாகம் கூறுகையில், எரிந்துபோன பேப்பரின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவித்தனர்.

    ×