search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் சாவு"

    • பாப்பாரப்பட்டியில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • விபத்தில் காயமடைந்த முதியவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 69). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் பாப்பாரப்பட்டியில் இருந்து தருமபுரியை நோக்கி சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவரது வண்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜரத்தினம் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜரத்தினம் வரும் வழியிலேயே உயிரிழந்தார் என்று தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள ெதாகரபள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது80). இவர் நேற்று அப்பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருள்மொழிஅரசு விஷமாத்திரையை தின்று உயிருக்கு போராடினார்.
    • அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    மொடக்குறிச்சி அடுத்துள்ள அவல்பூந்துறையை சேர்ந்தவர் அருள்மொழிஅரசு (57). இவர் சித்த மருத்துவம் பார்த்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டார்.

    இதையடுத்து இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரையை தின்று சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்நிலையில் வீட்டில் இருந்த அருள்மொழிஅரசு தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் விஷமாத்திரையை தின்று உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மொழி அரசு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 நாட்களாக உடலை வாங்க யாரும் வராததால் அடக்கம் செய்வதில் சிக்கல்
    • அரசு மூலம் உடல் அடக்கம் செய்யப்படும்

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே மணலி சந்திப்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பத்மநாபபுரம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியோரின் உறவினர்களை விசாரித்து வந்தனர். இந்த நிலையில் 15 நாட்கள் ஆன பிறகும் இறந்த முதியவரை தேடி உறவினர்கள் யாரும் வரவில்லை. தற்போது முதியவரின் உடல் தக்கலை அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் உள்ளது.

    இன்னும் ஒரு வாரத்திற்குள் இவரது முகவரி கண்டு பிடிக்கப்பட்டு உடல் ஒப்படைக்கபட வில்லையெனில் அரசு மூலம் உடல் அடக்கம் செய்யப்படும் என தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தெரிவித்தார்.

    15 நாட்களாக முதியவர் உடலை உறவினர்கள் யாரும் வாங்க வராத தால் என்ன செய்வதென தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

    அணைப்பட்டிக்கு சென்று மருந்து அடித்துவிட்டு வந்தவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தை சேர்ந்தவர் கணேசன்(60). இவர் மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று அணைப்பட்டிக்கு சென்று மருந்து அடித்துவிட்டு வந்தவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    • பெரியகளம் என்ற பகுதியில் சாலையைக் கடக்க முற்படும்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பொன்னமலை மீது மோதியது.
    • இதில் படுகாயம் அடைந்த பொன்னமலையை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி அடுத்த இளங்கோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னமலை ( வயது 80). இவர் கடந்த 4-ம் தேதி பெரியகளம் என்ற பகுதியில் சாலையைக் கடக்க முற்படும்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பொன்னமலை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பொன்னமலையை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற அந்த மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கடந்த 13-ம் தேதி வீடு திரும்பிய பொன்னமலை இன்று காலை வீட்டில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனக்கோடி கடந்த 12-ந்தேதி வீட்டில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று தனக்கோடி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள கூரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனக்கோடி (வயது65).

    இந்த நிலையில் அடிக்கடி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தனக்கோடி கடந்த 12-ந்தேதி வீட்டில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தனக்கோடி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் அவர் மீதுமொதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • சேலம் மருத்துவமனை யில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள கொட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 62). கூலி தொழிலாளி.

    இவர் தனது மொபட்டில் கடத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சம்பவத்தன்று சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீதுமொதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த ராஜாமணியை கடத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாமணி மீதுமோதிய இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 73). அதே பகுதியை சேர்ந்தவர் பாலு. நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் வள்ளிமலை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    பள்ளிக்குப்பம் ரெயில்வே கேட் அருகே வந்தனர். அப்போது அங்கிருந்த வேகத்தடையில் பைக் வேகமாக ஏறி இறங்கியது. இதில் பைக் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை என்று லோகநாதன் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார் லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண்எண்ணைய் விளக்கின் தீ எதிர்பாராதவிதமாக இவர் மீது பட்டது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்துள்ள கூர்க்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது70). சம்பவத்தன்று வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது மண்எண்ணைய் விளக்கின் தீ எதிர்பாராதவிதமாக இவர் மீது பட்டது.

    இதில் உடலில் தீ பிடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்
    • வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது

    பெருந்துறை,

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் கீழேரி பாளையம் பகுதியை சார்ந்தவர் கந்தசாமி ( 72). இவர் தனது மனைவி கருணை அம்மாள், மகன் பூபதி, மகள் விஜயலட்சுமி ஆகியோருடன் குடியிருந்து வருகிறார்.

    இவரது மனைவி கருணைஅம்மாள் அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்து வருகிறார். கந்தசாமி கொளப்பலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த இரண்டு வருடங்க ளாக இவருக்கு குடல் பிரச்சனை மற்றும் அல்சர் நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்.

    அவர் மனைவி மாத்திரை சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்கும் படி கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை வீட்டில் வந்து பார்த்தபோது அவரது கணவர் கந்தசாமி வீட்டில் இல்லை.

    உடனடியாக மகன் மற்றும் மகள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் பெருந்துறை ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் மிதந்து வந்ததாகவும் அதனை தீயணைப்புத் துறையினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த தாகவும் இவர்களுக்கு தகவல் கிடைத்தது.

    கருணை அம்மாளும் அவரது மகனும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசோதா பேகம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்.

    • மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த வடக்குமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 87), விவசாயி. இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

    பச்சையப்பன் மூட்டு வலியால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனடியாக அவரது மகன் ஏகாம்பரம் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×